Jump to content

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :
01 ஜூன் 2013
sivalingam%20sivanathan_CI.jpg

 

அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.  யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம்,  இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
 
கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது.  அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன்,  அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லாடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்.
 
பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம்,  அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர்.  அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92393/language/ta-IN/article.aspx

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்
ஊடகவியாளருக்கு ஏன் இந்த கொலை வெறி......அவர் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.....பின்லாடனை கொலை செய்ய திட்டமிட்டது அமெரிக்கா இராணுவம்...ஏன் தேவையில்லாமல் ஒரு விஞ்ஞானியை கொலையாளி ஆக்கின்றீர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வகை அபத்தமான எழுத்துகளினால் தான், பத்திரிகைகள் வாசகர்கள் இன்றி, இலவசமாக கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன.
 
செலவு குறைத்தல் என்ற பெயரில், எழுத்துகளின் தரத்தினை குறைத்து, இறுதியில் பத்திரிகை, கோவிலில் புக்கை சுத்த பாவிக்கும் நிலையில் உள்ளது.
 
மேலும் முக்கியமான பிரச்னை இடத்தினை நிரப்ப, யார் எழுதிக் கொடுத்தாலும் போடுவது. மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததும் அடுத்த பிரச்னை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வகை அபத்தமான எழுத்துகளினால் தான், பத்திரிகைகள் வாசகர்கள் இன்றி, இலவசமாக கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன.
 
செலவு குறைத்தல் என்ற பெயரில், எழுத்துகளின் தரத்தினை குறைத்து, இறுதியில் பத்திரிகை, கோவிலில் புக்கை சுத்த பாவிக்கும் நிலையில் உள்ளது.
 
மேலும் முக்கியமான பிரச்னை இடத்தினை நிரப்ப, யார் எழுதிக் கொடுத்தாலும் போடுவது. மொழிபெயர்ப்பு செய்யும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததும் அடுத்த பிரச்னை.

 

 

இப்படியான பத்திரிகைகளை.... புட்டு, இடியப்பத்துக்கு... மா அரிக்கவும்,

பொரிச்ச மீனை, எண்ணை ஊற போடவும்... பாவிக்கலாம் நாதமுனி. :lol:

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

இலனோய் பல்கலைக்கழக செய்தி வெளியீட்டில் இரவுப்பார்வை தொழில்நுட்பத்தில் முன்னேற்றகரமான கண்டுபிடிப்பிற்காகவும், அது "நாட்டைக் காப்பாற்றுபவர்களைக்" காப்பாற்றுவதாலும் இந்தச் சிறப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறது..

 

http://news.uic.edu/uic-physics-professor-named-white-house-champion-of-change

 

Sivananthan’s work with a semiconductor material, mercury cadmium telluride or MCT, is at the heart of the night vision technology that keeps our troops safe when they go into harm’s way. Developing technology that “protects our protectors” has given Sivananthan the opportunity to give back to his adopted country, he said.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :
 
 
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன்,  அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லாடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்.
 

 

இதன் மூலம் தமிழர்கள் உலக பயங்கர வாதத்திர்ற்கு எதிரானவர்கள் என்கிற உண்மை நெற்றிப் பொட்டில் அடித்தது போல சொல்லப்பட்டிருக்கு. இதனால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விரைவாக முடிவடையகூடிய சந்தர்பங்கள் ஏற்பட்டுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், தமிழ்சிறி,

புகழ்பூத்த ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் ஆங்கில கட்டுரைகளை தமிழ் பத்திரிகை மொழிபெயர்த்து வெளியிட்டது.

அவர் பயன்படுத்திய சில ஆங்கில வியாக்கியான வசனங்களை (phrases and idioms) பொருள் விளங்கி மொழிபெயர்க்குமாறு பல முறை கேட்டும் பயன் இன்றி, கடைசியில் தானே தமிழிழும் எழுதினார்.

அவர் பாவித்த வசனம் ஒன்று: don't miss the wood for the tree. இதன் மொழிபெயர்பே

அவரை வெறுத்துப் போக வைத்தது.

wood என்பதன் அர்த்தம் இங்கே தோப்பு. மரத்தினை மட்டுமே கவனத்தில் கொண்டு, அது இருந்த தோப்பினை கவனிக்காமல் விட்ட ஒரு சம்பவத்தை, (விசாலமான பார்வை இல்லாமைமையை குறித்த) தமிழ் மொழி பெய்ர்தவரோ, விறகுக்காக (நல்ல) மரத்தை இழக்கக் கூடாது என, தராக்கி தலையில் அடித்துக் கொள்ளுமாறு சொல்லி இருந்தார்

Link to comment
Share on other sites

 

அவர் பாவித்த வசனம் ஒன்று: don't miss the wood for the tree. இதன் மொழிபெயர்பே

அவரை வெறுத்துப் போக வைத்தது.

wood என்பதன் அர்த்தம் இங்கே தோப்பு. மரத்தினை மட்டுமே கவனத்தில் கொண்டு, அது இருந்த தோப்பினை கவனிக்காமல் விட்ட ஒரு சம்பவத்தை, (விசாலமான பார்வை இல்லாமைமையை குறித்த) தமிழ் மொழி பெய்ர்தவரோ, விறகுக்காக (நல்ல) மரத்தை இழக்கக் கூடாது என, தராக்கி தலையில் அடித்துக் கொள்ளுமாறு சொல்லி இருந்தார்

 

இந்த மொழிபெயர்ப்பிலேயே எனக்கு ஒரு இலக்கியம் தெரிகிறது.. அது உங்களுக்குத் தெரியவில்லையா நாதமுனி? :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈனத் தனம் மிக்க பத்திரிகைகளினால், ஒரு தமிழன் வளர்வதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளது!  :icon_mrgreen:

 

இவரது குடும்பத்தினரை நான் நன்றாக அறிவேன் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் பங்காற்றும் பேராசியருக்குப் பாராட்டுக்கள். தலைப்பையும் செய்தியையும் பார்த்தால் அவருக்கு தனது திறமை இப்படியான செய்தி வெளிவர உதவியிருக்கின்றதே என்று கவலை வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் நுட்பத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் பங்காற்றும் பேராசியருக்குப் பாராட்டுக்கள். தலைப்பையும் செய்தியையும் பார்த்தால் அவருக்கு தனது திறமை இப்படியான செய்தி வெளிவர உதவியிருக்கின்றதே என்று கவலை வரலாம்.

 

கவலை வரலாம்...........யாழில் பின்னூட்டத்தை வாசித்தபின்பு வாசகர் சரியாக புரிந்து கொண்டார்கள் என சந்தோசப்படலாம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை வீரகேசரியும் பிரசுரித்துள்ளது. அதுவும் சிங்கள - முஸ்லீம் பிரிவினைகள் ஊக்கம் பெற்றுள்ள இவ்வேளையில் இச்செய்தி இந்த வடிவில் பிரசுரிக்கப்பட்டதில் நிச்சயம் உள்நோக்கங்கள் இருக்கவே செய்கின்றன..! தமிழ் - முஸ்லீம் பிரிவினைக்கு இன்னும் இன்னும் தூபமிடும் நோக்கம் இதில் இருக்கக் கூடும். சர்வதேச அளவில் முஸ்லீம் நாடுகள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இவை சிங்களவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும்.. உதவும்..!

 

இவை கண்டிக்கத்தக்க ஊடக அணுகுமுறைகளாகும்..!

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4968

 

Link to comment
Share on other sites

தெரிஞ்சோ தெரியாமலோ இதே technology தான் Raytheon Company வேவு விமானங்களில் பாவிக்கிறார்கள் அதை  பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதனே சொல்லுறார். ஸ்ரீ லங்கா அந்த விமானகளை தான் வன்னியில் பாவித்தார்கள்  :icon_mrgreen: 

 

Link to comment
Share on other sites

US Honours Sivalingam Sivananthan for Technology Contribution to Raid in Which Osama Bin Laden was Killed
1 June 2013, 2:40 pm

Illinois University Physics Prof Sivalingam Sivananthan Named White House Champion of Change

By Jeanne Galatzer-Levy

DG12_09_27_220-200x300.jpg

Siva Sivananthan at the Sivananthan Laboratories in Bolingbrook

Sivalingam Sivananthan, professor of physics at the University of Illinois at Chicago, has been named a White House Champion of Change. He was presented with the honor at a ceremony this morning (May 29, 2013) at the White House.

The honor recognizes immigrant innovators and entrepreneurs—”the best and brightest from around the world who are helping create American jobs, grow the economy and make our nation competitive in the world,” the White House said in a press release.

Sivananthan’s work with a semiconductor material, mercury cadmium telluride or MCT, is at the heart of night vision technology and made the raid that took down Osama Bin Laden on a moonless night possible. Developing “technology that protects our protectors” has given him the opportunity to give back to his adopted country, said Sivananthan.

 

“Immigrants have long made America more prosperous and innovative, and the Champions we are celebrating today represent very best in leadership, entrepreneurship, and public service,” said U.S. Chief Technology Officer Todd Park. “We are proud to recognize these leaders who work every day to grow our economy, advance science and technology, and support their home communities.”

Sivananthan is the founder of the high-tech, Bell-Labs-styled incubator, Sivananthan Laboratories, Inc. in Bolingbrook, Ill. The Laboratories’ focus is on infared technology, radiation detection, materials research and biosensors.

Because, at its most fundamental, MCT technology is about transforming light into electricity, Sivananthan is also leading an effort to develop next-generation solar power. To that end, he helped found InSPIRE (the non-profit Institute for Solar Photovoltaic Innovation, Research, and Edu-training), whose mission is training Illinois’s workforce and exciting Illinois undergraduate and high school students to create a renewable energy and solar eco-system in Illinois.

In Sivananthan Laboratories Sivananthan is promoting economic growth by fostering cutting-edge, fundamental research and development that bridges the gap between academia and industry.

Sivananthan credits much of his success to the support he received from UIC from his days as a student to his continuing engagement on the faculty.

“UIC is a community of individuals that has treated me with respect for who I am,” he said.

“I have been blessed with having talented people around me,” said Sivananthan. “I can take credit only for hiring them. Our success has been and always will be a product of team work.”

Immigrants make America more prosperous and entrepreneurial. Immigrants are more than twice as likely to start a business in the United States as the native-born, and more than 40 percent of Fortune 500 companies – from GE and Ford to Google and Yahoo! – were founded by immigrants or the children of immigrants, according to the White House.

The White House ceremony can be viewed at the White House websitecourtesy: UIC News

http://dbsjeyaraj.com/dbsj/archives/21723

 

Link to comment
Share on other sites

 

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :

01 ஜூன் 2013

sivalingam%20sivanathan_CI.jpg

 

அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.  யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம்,  இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.

 

கடந்த

 

ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

 

 

ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது.

 

 

டக்ளசுக்கு முக்கியமாக ஞாபகபடுத்த வேண்டாம். அந்தாளுக்கு கோபம் வந்து ஏதாவது முஸ்லிம்களுக்கு உதைச்சு போடப்போகிறார். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 

டக்ளசுக்கு முக்கியமாக ஞாபகபடுத்த வேண்டாம். அந்தாளுக்கு கோபம் வந்து ஏதாவது முஸ்லிம்களுக்கு உதைச்சு போடப்போகிறார். :icon_mrgreen:

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

Link to comment
Share on other sites

 

 

சர்வ மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜனநாயகவாதி ஒருபோதும் இவ்வாறான காரியங்களை எண்ணிப்பார்க்கவே மாட்டார்.

 

அலன் தம்பதிகள் நாத்திகர்கள் என்பதால் முன்னர் கடத்திவிட்டார்.. சென்னையிலும் நாத்திகரைச் சுட்டு கொலைப்பழிக்கு ஆளாகியவர்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி அற்புதமாக எழுதப் பட்டு உள்ளது. எவ்வளவு   வித்தியாசம்.

 

வாசிப்போருக்கு புரிகின்றது: அவரது கண்டுபிடிப்பினை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

 

ஏதோ அவருக்கு சொல்லி செய்வித்த  மாதிரி முதல் வந்த செய்தி இருக்கிறது.

 

நியூயார்க்: அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் டெக்னாலஜியை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சாம்பியன் ஆப் சேஞ்ச்' விருது வழங்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவாக ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிச் சென்று அதிரடி ரெய்ட் நடத்தி சுட்டுக் கொலை செய்தனர்.இந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.
 
இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது.
 
இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும்.இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது.யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர்.
 
பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி டாட் பார்க் கூறுகையில், பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/06/world-osama-killing-us-names-tamil-scientist-176715.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரான பேராசிரியர் 'சிவலிங்கம் சிவானந்தன்'க்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது . ஈழத்தமிழரான பேராசிரியர் 'சிவலிங்கம் சிவானந்தன்' அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார். தனது முயற்சியினால் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பேராசிரியர் சிவநாதனைப் பற்றி . சென்ற வாரம் இந்த செய்தியை தமிழ்முரசு பிரசுரித்திருந்தது இவர் சிட்னியில் வசிக்கும் சிவபாலகன் அவர்களுடைய சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது ஆசிரியர் குழு EPIR Personnel headshots - December, 2009 அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முயற்சியாளர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அமெரிக்கப் படைகளுக்காக பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பம், மேர்க்கியூரி கட்மியம் ரெலுரைட் என்ற குறைகடத்தி மூலப் பொருளை மையமாகக் கொண்டது. அவர் தம்மை வரித்துக் கொண்ட தேசத்தின் ஷகாவலர்களாக அமைந்துள்ளவர்களை பாதுகாக்கும்| தொழில்நுட்பத்தை உருவாக்கியமைக்காக கௌரவிக்கப்படுகிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இலினொய்ஸ் மாநிலத்தில் சிவநாதன் லெபோரட்டரிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் சிவநாதன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரது நிறுவனம் புற ஊதாக் கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் சீல் படையணி, பாகிஸ்தானின் அபோத்தாபாத் நகரில் அல்கொய்தா வலைப்பின்னலின் தலைவர் ஒஸாமா பின் லாடனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில், பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது முக்கியமான விஷயம். பேராசிரியர் சிவநாதனைப் பற்றி EPIR Personnel headshots - December, 2009 எட்டு பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் (வல்வெட்டித்துறை), தாயார்: சமய, விஞ்ஞான ஆசிரியர் ஆரம்பக்கல்வி: சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபகத் தலைவர்: சிவநாதன் லெபோரட்டரீஸ், இன்ஸ்பையர் வேறு பதவிகள்: இலினொய்ஸ் பல்கலைக்கழக நுண்பௌதீகவியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளர், புற ஊதாக் கதிர் மற்றும் மில்லிமீற்றர் அலைவரிசைகள் சஞ்சிகையின் ஆசிரியர் பீட அங்கத்தவர் கௌரவ பட்டங்கள்: இரவின் நண்பன் – அமெரிக்க இராணுவத்தின் பட்டம் (2005) நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா......இந்த தலையங்கம் மிகவும் நன்றாக உள்ளது........

Link to comment
Share on other sites

 

 

ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமரிக்கா மட்டும் எதிரியில்லை இலங்கைத் தமிழரும் எதிரி.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு உதை கொடுக்க மறக்கவேண்டாம் என்பதை தமிழ்த்தேசீயம் நினைவுபடுத்தியுள்ளது.

 

நன்றாகத்தான் வலிக்கிறது சண்டமாருதனுக்கு. அவரைப் பார்க எனக்கே கைகால், உடம்பு எல்லாம் வலிக்கிறது. :(

 

அமெரிக்க மெல்ல மெல்ல இலங்கைக்குள் காலை வைக்கிறது. இது சண்டமாருதன் இவ்வாளவு காலமும் யாழில் முறி முறி என்று முறிந்து ஏற்படுத்தியிருந்த தமிழ்- முஸ்லீம் ஒற்றுமையை அமெரிக்க உடைத்தெறிய சந்தர்பம் வழங்கியத்தாக போகிறது. சிவநந்தன் இந்த் பரிசை ஏற்க மறுக்காவிட்டால் முஸ்லீம் சமுதாயம் இலங்கையில் அமெரிக்காவால் அழித்தொழிக்கப்பட போகிறது என்பதை தேசியவாதிகள் கவனிக்க மறுக்கிரார்கள். தேசியவாதிகள் கக்கீமுடன் இணைந்து  இணக்க அரசியல் பேசி அரசு ஆதரவு கொடுத்தால் மட்டும்தான் அரசு கலாலை திரும்பக்கொண்டுவந்த்து அமெரிக்கவை விரட்டும். <_<

 

(என்ன ஆச்சரியமான ஒற்றுமை என்றால் தயான் ஜெயதிலகாவும், அமெரிக்கா இந்த பரிசை, இலங்கை அரசை சீண்ட, தகுதி இல்லாத தமிழருக்கு கொடுத்திருக்கலாம் என்று பொருள்பட அறிக்கை விட்டிருக்கிறார். அதே செய்தியை சண்டமாருதனும் சொல்கிறார். இலங்கை அரசின் பிரச்சார அறிவுறுத்தல்க் கடிதங்கள் எல்லோருக்கும் ஒன்றாகவா அனுப்பி வைக்கப்படுகிறது?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம்

ஆம், பேராசிரியர் அவர்களே! அமெரிக்க இராணுவத்துக்குத் தாங்கள் பங்களித்தமைக்காக, குறிப்பாக அமெரிக்கப்படைகளால் அல்கெய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட படை நடவடிக்கையில் தங்களுக்கு நேரடியான பங்களிப்பு இருந்ததாகவும், அதற்காகவே இந்த விருது கிடைத்ததாகவும் பேசப்படுகிறதே….. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

இது முற்றிலும் தவறானது. அமெரிக்காவின் படைத்துறைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் அநுமதி கூட எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

அமெரிக்கப் படைத்துறையினரும் எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் தான். அவர்கள் மட்டுமல்ல இராணுவ நோக்கங்களுக்காக எனது “நைட் விஷன்” (Night Vision Technology) தொழில் நுட்பத்தைப் பாவித்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்கும் எனக்கும் சம்ந்தமில்லை.

உதாரணமாக – சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கண்டுபிடித்த போது, நோய் தீர்ப்பதற்கான சத்திர சிகிச்சைக்காகத்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே கத்தியைக் கொண்டு கொலை ஒன்றைச் செய்தால், அதைக் கண்டு பிடித்தவர் பாத்திரவாளியாக முடியுமா?

இதற்கு மேலாக விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளின் போது, சந்திரனில் நீர் இருப்பு தொடர்பான ஆய்வுக்கும், செவ்வாய்க் கிரகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கும் எனது இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் மிகப் பெரிய கட்டடத்தொகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களின் போதும், கப்பல்கள் காணாமல் போகின்ற சந்தர்ப்பங்களிலும் மீட்புப் பணிகளுக்கு – குறிப்பாக மனிதர்களைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு இந்த “இன்ப்ஃரா ரெட் சென்ஸர்” தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

பொதுவாக விஞ்ஞானத்தில் கண்டுபிடிப்புக்கள் பொது மக்களுக்கு நன்மைபயப்பதற்காகவே கண்டுபிடிக்கப் படுகின்றன. அதனை நன்மை கருதியும் பயன்படுத்தலாம், தீமையை விளைவிக்கவும் பயன்படுத்தலாம்.

 

http://www.tamilaustralian.com.au/web/2013/06/09/interview-sivananthan/

Link to comment
Share on other sites

 

நன்றாகத்தான் வலிக்கிறது சண்டமாருதனுக்கு. அவரைப் பார்க எனக்கே கைகால், உடம்பு எல்லாம் வலிக்கிறது. :(

 

அமெரிக்க மெல்ல மெல்ல இலங்கைக்குள் காலை வைக்கிறது. இது சண்டமாருதன் இவ்வாளவு காலமும் யாழில் முறி முறி என்று முறிந்து ஏற்படுத்தியிருந்த தமிழ்- முஸ்லீம் ஒற்றுமையை அமெரிக்க உடைத்தெறிய சந்தர்பம் வழங்கியத்தாக போகிறது. சிவநந்தன் இந்த் பரிசை ஏற்க மறுக்காவிட்டால் முஸ்லீம் சமுதாயம் இலங்கையில் அமெரிக்காவால் அழித்தொழிக்கப்பட போகிறது என்பதை தேசியவாதிகள் கவனிக்க மறுக்கிரார்கள். தேசியவாதிகள் கக்கீமுடன் இணைந்து  இணக்க அரசியல் பேசி அரசு ஆதரவு கொடுத்தால் மட்டும்தான் அரசு கலாலை திரும்பக்கொண்டுவந்த்து அமெரிக்கவை விரட்டும். <_<

 

(என்ன ஆச்சரியமான ஒற்றுமை என்றால் தயான் ஜெயதிலகாவும், அமெரிக்கா இந்த பரிசை, இலங்கை அரசை சீண்ட, தகுதி இல்லாத தமிழருக்கு கொடுத்திருக்கலாம் என்று பொருள்பட அறிக்கை விட்டிருக்கிறார். அதே செய்தியை சண்டமாருதனும் சொல்கிறார். இலங்கை அரசின் பிரச்சார அறிவுறுத்தல்க் கடிதங்கள் எல்லோருக்கும் ஒன்றாகவா அனுப்பி வைக்கப்படுகிறது?)

 

இந்த தலைப்பு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அடயாளம் தேடும் பெறுக்கித்தனத்தின் வெளிப்பாடு. அதற்கே எனது பதில்.

இந்த தமிழரின் மூளை இல்லாட்டில் ஒசாமா நீ்ண்ட ஆயுளோட இருந்திருப்பார்? ஒரு நபர் ஒரு துறைசார்ந்து கண்டுபிடிப்பை செய்தால் அவரின் முயற்சியை பாராட்டுவதே அறிவு. அதைவிடுத்து அவரை தேசிய வெறிக்கு பயன்படுத்துவதும் இன முரண்பாடுகளை வலிய இழுப்பதும் எந்தவிதத்திலும் சமூகத்துக்கு நன்மை பயக்காது. மாறாக அழிவே மிஞ்சும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரக் கடிதங்கள் ஒன்றாகவா அனுப்பி வைக்கப்படுகின்றது என்ற உங்கள் அறிவுபூர்வமான கேள்வியை நீங்கள் நாடு கடந்த அரிசிடம் கேட்பதே சாலவும் பொருத்தமானது. யுத்த முடிவுக்குப் பின் அவர்களே பேரினவாதத்தின் திட்டங்களை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.