Jump to content

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்.

நேசக்கரம் அமைப்பும் அதன் வளர்ச்சியிலும் தங்கள் ஆதரவை நல்கும் அனைத்து கருணையாளர்களும் இப்பகுதியில் தங்கள் சந்தேகங்கள் கேள்விகளை கேட்க முடியும். உங்கள் கேள்விகளுக்கு பதில்களை வழங்க காத்திருக்கிறோம்.

 

உங்கள் கேள்விகள் மென்மேலும் நேசக்கரத்தின் வளர்ச்சியில் பாரிய மாற்றத்தையும் பயனையும் தரும்.

நேசக்கரம் பண உதவிகள் பற்றிய சகல தரவுகளும் மற்றும் உதவுவோரின் உதவிகளை பெறும் பயனாளிகளின் கடிதங்கள் மாதாந்த கணக்கறிக்கைகள் யாவும் எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்படுவதில்லை பொதுவெளியில். உதவுகிறவருக்கு மட்டும் பயனாளியின் படம் கடிதங்கள் தொடர்பு வசதிகள் வழங்கப்படும்.

 

யாழ்இணையம் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  2007 ஓகஸ்ட் உருவாகிய நேசக்கரம் 2009 ஈழப்போர் முடிவடைந்த பின்னர் தாயக மக்களுக்கான அவசர அவசிய தேவைகளை நிறைவேற்றும்  நிறுவனமாக இயங்கத் தொடங்கி 2010இல் சட்டபூர்வமாக அமைப்பாக பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ் பிரதேசங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாக மாறியிருக்கிறது.

 

மட்டுப்படுத்தப்பட்ட அவசர உதவிகளோடு தொடங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் கல்வி , சுகாதாரம் , கலாசராம் , அனர்த்தம் ,  தொழில் நிறுவனம் , கிராமிய முன்னேற்ற மையங்கள் என பல்வகையில் தேவைகளை ஓரளவுக்கு கிடைக்கிற வளங்கள் மூலம் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

 

இப்பணியில் தாயகத்தில் பலநூறு இளைஞர்களும் , கல்விமான்களும் தங்கள் ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் சம்பளம் பெறாத சமூக சேவை அடிப்படையிலேயே தங்கள் உழைப்பை வழங்குகிறார்கள்.

 

உங்களுக்குத் தேவையான விபரங்களை மேலும் பெற்றுக் கொள்ள கீழ்வரும் தொலைபேசியிலக்கங்களில் அல்லது மின்னஞ்சல் ஸ்கைப் ஊடாக பெற்றுக் கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

 

www.nesakkaram.org

 

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

Email :- nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Germany

 

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/

Link to comment
Share on other sites

 • Replies 86
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
மிகச் சரியான அணுகுமுறை. 
 
உங்கள் சேவைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

'நேசக்கரம்'எமது காலத்தின் தேவையாகும்!

 

திரைச்சீலை, தேவையில்லாத வீடாக அது இருக்கட்டும்!

 

தங்கள் மானிட சேவை தொடர வாழ்த்துக்கள், சாந்தி!

Link to comment
Share on other sites

பலரின் நேசக்கரம் சம்பந்தமான கருத்துகளை உள்வாங்கிய அளவில் பண உதவி மற்றும் எத்தகைய உதவி செய்யப்பட்டவர்களின் பெயர் , தொகை போன்ற விபரங்களை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை வாங்கி வெளியிடுங்கள்.அத்துடன் நேசக்கரம் சம்பந்தமான எவ்வித உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருங்கள். 
 
மேற்கூறிய கருத்துக்கள் பற்றி சாந்தி அக்கா என்ன நினைக்கிறீர்கள்?
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்.

யாழ்இணையம் கருத்துக்களத்தில் கருத்துக்கள உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  2007 ஓகஸ்ட் உருவாகிய நேசக்கரம் 2009 ஈழப்போர் முடிவடைந்த பின்னர் தாயக மக்களுக்கான அவசர அவசிய தேவைகளை நிறைவேற்றும்  நிறுவனமாக இயங்கத் தொடங்கி 2010இல் சட்டபூர்வமாக அமைப்பாக பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ் பிரதேசங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாக மாறியிருக்கிறது.

 

 

 

தாயகத்தில் உங்கள்  செயற்பாடுகளை எடுத்து செல்லும் கட்டமைப்புகளை சொல்ல முடியுமா? அவர்களுடைய சமூக, அரசியல் பின் புலத்தை சொல்ல முடியுமா அப்படி ஏதும் இருந்தால்?

 

இந்த கேள்வி உங்களுக்கு சங்கடங்களை கொடுக்கும் என்றால் பதில் சொல்லத் தேவையில்லை. 

 

இன்று இயங்குகிற இன்னுமொரு நிறுவனம் ஒன்று- அங்குள்ள கட்சி ஒன்றின் நிழல்/மாணவர்/இளையர் அமைப்பாக உள்ளது என்று நான் கருதுகிறேன்.-அவர்களும் சொல்லுவதில்லை நானும் கேட்பதில்லை. 

உங்களுக்கு அப்படியான அமைப்புகள் எதுவும் உண்டா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேபி, கருணாகரன் ஆகியோருடன் நேசக் கரம் இணைந்து வேலை செய்கிறதா?

 

இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது இவர்களை இயக்கவைக்கும் சக்திகளின் அரசியல்/இராணுவ உளவியல் நோக்கங்களுக்காக நேசக் கரம் அமைப்பு பயன் படுத்தப்படக் கூடிய , நிலை இருக்கிறதா?

 

இவர்களுடன் தொடர்பு உண்டெனில், இந்தத் தொடர்பு அற்று , தாயகத்தில் இயங்க முடியாதா?

 

இவை அண்மைய கருத்துக்கள் தொடர்பில் என்னுள் எழுந்த கேள்விகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

மிகச் சரியான அணுகுமுறை. 
 
உங்கள் சேவைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.

 

 

மிக்க நன்றிகள் நாதமுனி. உங்கள் போன்ற பலரை நேசக்கரத்திற்கு அறிமுகமாக்கிய ஐஎல்சி வானொலிக்கு இந்நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

 

இப்படியொரு திரியை 2013 தைமாதம் ஏற்படுத்தலாமோ என யோசித்தேன். ஆனால் எந்தளவு வரவேற்பு வருமென்று தெரியாது விட்டுவிட்டேன். இப்போது 4மாதம் கழித்து கட்டாயம் இப்பகுதி தேவையென்றதை காலம் முடிவு செய்துவிட்டது.

 

திரைச்சீலை, தேவையில்லாத வீடாக அது இருக்கட்டும்!

 

 

திரைச்சீலை ஒருவரது தனிப்பட்ட அந்தரக்கத்தை வெளியாருக்கு தெரிவிக்காமல் இருக்கவே ஒருகாலம் இருந்தது. இப்போது அது அழகியல் பொருளாகிவிட்டது.

நேசக்கரம் பொதுவான அமைப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறு அணிலாக உதவிகளை கொண்டு சேர்க்கும் அமைப்பு. இங்கு மௌனம் திரைச்சீலையாக இருந்தது. இப்போ  அந்த மௌனமும் தேவையில்லை.

 

பங்காளர்களுக்கும் பயனாளிகளுக்கும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதால் தேவையற்ற விவாதங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கலாம். அதன் மூலம் 3ம் 4ம் நபர்களின் வலிந்த திணிப்பு சந்தேகங்களை தவிர்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

பலரின் நேசக்கரம் சம்பந்தமான கருத்துகளை உள்வாங்கிய அளவில் பண உதவி மற்றும் எத்தகைய உதவி செய்யப்பட்டவர்களின் பெயர் , தொகை போன்ற விபரங்களை சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை வாங்கி வெளியிடுங்கள்.அத்துடன் நேசக்கரம் சம்பந்தமான எவ்வித உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருங்கள். 
 
மேற்கூறிய கருத்துக்கள் பற்றி சாந்தி அக்கா என்ன நினைக்கிறீர்கள்?

 

 

மிக்க நன்றிகள் நுணாவிலான்.

தனிப்பட்ட விபரங்களை வெளியிடுவதில் 20சதவீதம் அளவினர்தான் உடன்படுகிறார்கள். காரணம் ஒன்று பலர் இன்னொருவரிடம் கையேந்தி வாழ்கிறோம் என்பதனை மனச்சங்கடத்துடன் தான் வாழ்கிறார்கள். அவர்களை வெளிப்படுத்துவதால் தங்கள் சுய கௌரவம் பாதிக்குமென அஞ்சி எக்காரணம் கொண்டும் தங்களை அடையாளப்படுத்த வேண்டாமென வேண்டியே உதவிகளை பெற்றுள்ளார்கள்.

ஒருகாலம் நல்ல வாழ்வு வாழ்ந்தவர்களின் மனநிலமை இப்படி இருப்பதில் தவறில்லைத்தானே.

 

நேசக்கரம் தொடர்பாகவும் பயனாளிகளுடனான தொடர்புகளும் எழுத்து மூலமும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒலிப்பதிவும் செய்கிறேன். ஆரம்பத்தில் 2010வரை உதவி பெற்றவர்களின் குரல்களையும் ஒலிபரப்பியதை அறிவீர்கள். தொலைபேசியில் தான் இப்பதிவுகளை செய்ய வேண்டும். அதிக தொலைபேசி செலவை சமாளிக்க முடியாது போகவே உதவுவோருடன் பேசி அவர்களை தங்கள் உதவி பற்றி நேரடியாக பேசவைத்துக் கொண்டு பெற்ற உதவிக்கான கடிதங்கள் படங்களை எடுத்து வைத்துள்ளேன்.

கடந்த வருடம் டிசம்பரில் இதுவரையான நேசக்கரம் செய்த உதவிகள் விபரங்களை ஆண்டு அடிப்படையில் ஒரு தொகுப்பாக செய்து கொண்டிருக்கிறேன்.இவ்வருடம் ஓகஸ்ட் வெளியிடும் நோக்கில் ஆனால் இன்னும் அந்த தொகுப்பு முழுமையடையவில்லை.முழுமையானதும் மின்னூலாக வெளியிடப்படும்.

 

மற்றும் தனிப்பட விபரங்களை பெற்று உதவுகிறவர்கள் அதாவது நேசக்கரம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யாமல் நேரடியாக உதவுகிறவர்களின் பணபரிமாற்றம் விபரங்கள் அவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற தொகை எதுவும் விபரம் பெற்றுக் கொள்வதில்லை. காரணம் அதை எல்லோரும் விரும்பமாட்டார்கள். ஆகையால் குறித்த குடும்பம் அல்லது மாணவர்களின் விபரங்களை மட்டும் வைத்திருக்கிறேன். சிலருக்கு இடையில் தொடர்ந்து உதவ முடியாத சூழல் வந்தால் பயனாளி அறியத்தருவார். அவர்களுக்கான மாற்று உதவியை மீண்டும் ஒழுங்கு செய்யப்படும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உங்கள்  செயற்பாடுகளை எடுத்து செல்லும் கட்டமைப்புகளை சொல்ல முடியுமா? அவர்களுடைய சமூக, அரசியல் பின் புலத்தை சொல்ல முடியுமா அப்படி ஏதும் இருந்தால்?

 

இந்த கேள்வி உங்களுக்கு சங்கடங்களை கொடுக்கும் என்றால் பதில் சொல்லத் தேவையில்லை. 

இதில் எவ்வித சங்கடமும் இல்லை வொல்கானோ.

இக்கேள்விக்கு மேலதிகமான சில விளக்கங்களை தந்துவிட்டே உங்கள் கேள்விக்குள் வருகிறேன்.

தாயகத்தில் எங்களுடன் பிற நிறுவனங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ இணைவில் இல்லை.

 

2009  2010 வரையும் வெளிப்படையாய் இங்கிருந்து யாராலும் இயங்க முடியாத ஒரு நிலமை காணப்பட்டது. அப்போது ஆரம்பத்தில் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், சிறீதரன் ,  செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் மூலம் உதவிகளை செய்ய முயன்றதில் அதிக பலன் கிடைக்கவில்லை. 

 

அவர்கள் மூலம் சென்ற உதவிகள் நாங்கள் தெரிவு செய்த குடும்பங்களுக்கு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து அவர்கள் தங்களது அரசியலுக்கு பயன்படுத்த முனைந்தார்கள். இதில் செல்வம் அடைக்கலநாதன் எவ்வித அரசியலையும் புகுத்தமாமல் நட்போடு பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

சிவசக்தி ஆனந்தன், சிறீதரன் இருவரும் நேசக்கரத்தை பயன்படுத்திய விதம் மாறுபட்டது. இதனால் அவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் ஊடக வெளியிலும் வெளிப்படுத்தப்பட்டதை அறிவீர்கள்.

 

அரசியல் செயற்பாடுகளுக்கு நிதியுதவிகளையே சிவசக்தி ஆனந்தன் எதிர்பார்த்தார். மற்றும் தனது இயக்கம் சார்ந்த தன்னோடு தொடர்பில் இருக்கிற குடும்பங்களுக்கு உதவிகளை வேண்டியிருந்தார். தியாகிகள் தினத்தில் நமது உதவிகளை வழங்க விரும்பினார். இதில் பல முரண்பாடுகள் ஆனந்தனுடன்.

மற்றும் ஆனந்தன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பல முன்னாள் போராளிகள் குடும்பங்கள் உதவி கோரி செல்வது வளமை. இது கிஷோர் , செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன் என பெரும்பாலுமான அரசியல்வாதிகளிடம் மக்கள் போவது உண்மை.

இப்படி சென்ற போராளிகள், ஊனமுற்று வவுனியா பம்பைமடுவில் இருந்த போராளிகள் பலர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். அவர்களில் பலரை நானும் தேடிக்கொண்டிருந்த காலம். ஆனந்தனிடம் சில பெயர்களை கொடுத்து அந்த இடங்களில் விசாரிக்குமாறு கேட்டிருந்தேன். அப்படி ஆனந்தன் விசாரித்த இடங்களில் ஏற்கனவே அவர்களும் பலர் எனது தொடர்பை தேடியிருக்கிறார்கள். அப்போது ஆனந்தன் மூலம் அவர்கள் எனது இலக்கத்தை பெற்று தொடர்புக்கு வந்த பின்னரே பலருக்கான உதவிகளை அவரவர்க்கு நேரடியாக செய்யக்கூடியதாக இருந்தது. இந்த இணைப்பை ஏற்படுத்தித் தந்த ஆனந்தனுக்கு இவ்விடத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

 

நேரடித் தொடர்புகள் அதிகரிக்க ஆனந்தனின் ஆதரவு தேவைப்படாது போனது. இக்கட்டத்தில் ஆனந்தன் அவர்கள் நான் கொடுத்த விபரங்கள் அடிப்படையில் தொடர்பில் வந்தவர்களிடம் தொடர்பு கொண்டு தன்மூலமே எமது உதவிகள் வந்ததாகவும் தனக்கு இங்கிருந்து பெற்ற உதவிகள் எவ்வளவு போன்ற விபரங்களை தனக்கு விபரம் தருமாறும் கேட்டு சில ஊனமுற்றவர்களுடன் முரண்பட்டார்.

உதவியை நேரடியாக செய்கிறவர்களிடம் நான் எவ்வளவு காசு அனுப்புகிறீர்கள் என்று கேட்பதில்லை. சிலர் தாங்கள் இவ்வளவு அனுப்புகிறோம் என்று சொல்வார்கள். இவ்விடயத்தை ஆனந்தனுக்கும் தெரிவித்திருந்தேன்.

 

பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திருக்கப்பட்ட ஊனமுற்ற முள்ளந்தண்டு வடம்பாதிப்புற்றவர்கள் ஆரம்பத்தில் கோத்தபாயவின் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இங்கு வெளியார் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அப்போது ஒரு வெளிநாட்டு அமைப்பில் பணியாற்றிய ஒருவரின் தொடர்பு எதிர்பாராத வகையில் ஒரு நோயாளி மூலம் கிடைத்தது: அந்த  உறவு மூலம் அடிப்படை உதவிகள் சிலவற்றை கொஞ்ச நாள் செய்ய முடிந்தது. அங்கிருந்த அனேகமானவர்களுக்கு எனது தொலைபேசியிலக்கத்தையும் மின்னஞ்சலையும் கொடுக்குமாறு அந்த வெளிநாட்டு அமைப்பின் தொண்டருக்கு கொடுத்திருந்தேன். அவர் மூலமே பலர் நேரடியான தொடர்பை என்னுடன் மேற்கொண்டார்.

 

இத்தகைய தொடர்பாடல்கள் மற்றும் உதவிகோருவோரின் விபரங்களையும் அவர்களுக்கு உதவியவர்களின் விபரங்களையும் நான் மட்டுமே வைத்திருந்தேன். நேசக்கர செயற்பாட்டில் இயங்குவதாக வந்தவருக்கும் முழுமையான விபரங்கோர்வைகளை வழங்கவில்லை. காரணம் காலம் எப்போதும் ஒரேமாதிரியிருக்காது சிலவேளை ஒரு முரண்பாடு வந்தால் அது வெளியிடப்பட்டு பயனாளிகளுக்கும் பங்காளிகளுக்கும் என்மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தை மனதில் வைத்திருந்தேன்.

 

ஆனால் துணையாக செயற்பட வந்த யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் பொதுவாக உதவி கோரியவர்களின் அதாவது எமது இணையத்தில் வெளிப்படுத்தப்பட்டவர்களின் விபரங்களை அவர்களும் பெறக்கூடிய வகையில் வைத்திருந்தேன்.

 

மற்றும் நேசக்கரம் மின்னஞ்சலின் ஒரு கொப்பி சம  நேரத்தில் எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும் வரச் செய்திருந்தேன். நேசக்கரத்தில் 2010இல் வந்து இணைந்து கொண்ட நபருக்கு பொது மின்னஞ்சலையும் கடவுச்சொல்லையும் கொடுத்திருந்தேன். ஆனால் அந்த மெயிலுக்கு பொதுவான மடல்களே வரும். இரகசியம் காக்க பொது மின்னஞ்சலில் எவ்வித ஆவணங்களும் சேமிக்கப்படுவதில்லை. தாயகத்தில் என்னால் நியமிக்கப்பட்ட அனைத்து தொடர்பாளர்களும் எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கே விபரங்களை தருவார்கள்.

 

இதனால் தரவுகள் 2ம் நபருக்கு சென்றடையாமல் நானே பாதுகாத்திருந்தேன். இப்போது வரையும் சுய விபரக்கோவைகள் உதவுகிறவர்களின் விபரங்களும் தனித்து நான் மட்டுமே பார்க்கவும் சேமிக்கவும் கூடியதாக வைத்திருக்கிறேன்.

 

2010 இறுதிப்பகுதியில் இருந்து சிறைகளில் இருந்து அதிக அழைப்புகள் வரத் தொடங்கிய நேரம் அவர்களது தரவுகள் வெளிப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டிய தேவையினால் நேசக்கரம் பொது மின்னஞ்சல் பாதுகாப்புச் சொல்லை மாற்றிவிட்டேன். ஏற்கனவே பாதுகாப்புச் சொல்லை வைத்திருந்தவர் மின்னஞ்சலை பார்வையிட முயன்று மின்னஞ்சல் இயங்கவில்லை ஏனென்ற போது நான் பாதுகாப்புச்சொல் மாற்றப்பட்டதை கூறாமல் அது கூகிளின் பிரச்சனை போல என சமாளித்துவிட்டேன்.

இக்கட்டத்தில் பேபால் மூலம் யாழ் கள உறவுகள் பலரும் இதர தனிப்பட்ட நண்பர்களும் உதவத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது தனிப்பட்ட விபரங்களையும் பாதுகாக்க வேண்டிய தேவையிருந்தது. பலர் தங்கள் விவரங்களை தருகிறது போது தங்கள் விவரங்கள் வெளிவராது பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் உணர்த்தியே தந்தார்கள்.

 

மற்றும் சட்டரீதியாக யேர்மனியில் பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தபடியால் 2010இன் பின்னர் சட்டரீதியான பிரச்சனைகள் ஏற்படின் அல்லது உதவுகிறவர்களின் விபரங்கள் 2ம் 3ம் நபர்கள் மூலம் வெளியில் போய் அவர்களுக்கு ஏதும் இடைஞ்சல்கள் ஏற்பாட்டாலோ சட்ட ரீதியான பதிவுக்குள் இருக்கும் அமைப்பாளர் அங்கத்தவர்களே சட்டரீதியான பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும். அதனால் யாரின் மனசையும் நோகடிக்காமல் அவர்களையும் சமாளித்து கொண்டு தரவுகளையும் பாதுகாத்து செல்ல வேண்டியிருந்தது. இதற்காக பல மனவருத்தங்களையும் அதிகார செலுத்தல்களையும் தாங்க வேண்டி வந்தது.

 

-----------------------------------------------------------

 

இனி வொல்கானோ உங்கள் கேள்விக்கு பதில் :-

பல சமூக சேவையில் இருந்தவர்கள் , கல்விமான்கள் ,என பலரை நாடி ஆரம்பத்தில் செயற்படத் தொடங்கி அதில் பலரால் ஏமாற்றப்பட்டு நம்பிக்கைத் துரோகம் என அடைந்த மனவுளைச்சல் பண இழப்பு அதிகம். பண இழப்பு என இங்கு நான் சொல்வது நான் தனிப்பட நம்பிக்கை அடிப்படையில் கொடுத்து ஏமாந்தது.நேசக்கரம் அமைப்பை இலங்கையில் சட்ட ரீதியாக பதிவு செய்து தருகிறோம் என்று நம்பிக்கை தந்து ஏமாற்றியவர்களுக்கு நான் கடன்பட்டு எவ்வளவோ சிரமப்பட்டு கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றியவர்கள் பலர்.

ஒரு விடயத்தை முன்னெடுப்பதானால் முதலில் அதனை முன்னெடுப்பவரே உதாரணமாக வேண்டும்.

 

பெரியவர்கள் என்று வந்தவர்களில் நம்பிக்கையற்றுப் போக 2011இல் உதவி பெற்ற குடும்பங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களை உள்வாங்கி அவர்கள் மூலும் ஒரு நிருவாகத்தை உருவாக்கக் கூடிய இளைஞர்கள் பலர் முன் வந்தார்கள். இவர்களில் பலர் சொல்வார்கள். உயிர் ஒருமுறை தான் அக்கா போகும. எங்கடை சனத்துக்கு சோறு குடுத்துப் போனால் போகட்டுமென்பார்கள். இந்த இளைஞர்களை அவர்களது பின்னணிகளை ஆராய்ந்ததில் போரின் பாதிப்பு மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. இவர்களிடம் அரசியல் இல்லை. மனிதாபிமானமே இருப்பதை அவர்களது செயற்பாடும் இருந்தது. அதுவும் தங்களுக்காக வருமானத்தை எதிர்பார்க்காமல் இலவசமாகவே தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தந்து இயங்குகிறார்கள். இந்த நல்லுள்ளங்களே இன்று வரையும் நேசக்கரத்தின் தாயக முதுகாக மூளையாக முழுதுமாக இருக்கிறது.

 

நேசக்கரத்தோடு பிறைற் பியூச்சர் என்ற பெயரையும் இணைத்து இலங்கையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கான சகல சட்ட வரையறைகளுக்கும் அமைவாகவே பதிவு செய்து இயங்குகிறது.

 

இலங்கையரசும் இப்போது இத்தகைய அமைப்புகள் மீதான இறுக்கங்களை தளர்த்திவிட்டிருக்கிறது. (இலங்கையரசை நல்லவர்களாக எப்படி எழுத முடியுமென யாரும் கோவிக்க வேண்டாம். சமகால உண்மை இதுதான்)

இந்த நோக்கம் எதற்காக என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒட்டுமொத்தமாக நமது செயற்பாட்டை அரசு நிறுத்த விரும்பினால் அவர்களுக்கு கன நேரம் எடுக்காதுதானே.

 

நாளை நேசக்கரம் என்பது இலங்கையில் இயங்க முடியாது போனால் நேசக்கரம் என்ற பெயர் மட்டும் மிஞ்ச வேண்டும். மற்றும் அரசியல் அரசாங்க பழிகள் எம்மீதும் எம்முடன் இணைந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வரக்கூடாதென்ற விடயத்தில் ஒவ்வொரு பணியாளரும் அக்கறையோடும் கவனத்தோடும் செயற்படுகிறார்கள்.

ஒருவர் எங்களது விதிகளுக்கு மாறாக செயற்பட்டால் அவரை உடனடியாக நிர்வாகத்தை விட்டு வெளியேற்றும் முறையை நட்பு கருணை என்ற எவ்வித அடிப்படையுமின்றி நீக்கப்படுவார் என்பதனை வலியுறுத்தியுள்ளோம். இதில் சிலரை அவர்களது அரசியல் தொடர்புகள் காரணமாக நீக்கியும் உள்ளோம்.

இதுவரையில் எவ்வித அரசியல் சாயமும் பின்னணியும் இல்லாது இல்லாது போகிறது.

மற்றும் நேசக்கரத்திற்கான முழுமையான நிதியுதவியும் புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களாலும் , ஈழ ஆதரவாளர்களாலும் , சில வெளிநாட்டவர்களாலும் மட்டுமே கிடைக்கிறது. அவர்களது விருப்பங்கள் எதிர்பார்ப்புகளையும் இயன்றவரை நிறைவேற்றியே போகிறோம்.

நாரதர் உங்கள் கேள்விகளுக்கு இரவு பதில் தருகிறேன். மதியம் ஆகிவிட்டது வீட்டு வேலைகள் செய்யப் போகிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி உங்கள் பதில்களுக்கு.

இந்த பதில்கள் எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் உதவிருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை நன்றி.

Link to comment
Share on other sites

நேசக்கரத்தின் பயனாளிகள் தரும் நன்றிக்கடிதங்கள் ஒரே எழுத்து வடிவத்தைக் கொண்டிருப்பதை நான் முன்பே அவதானித்திருக்கிறேன். இது அண்மையில் கூட ஒரு விமர்சனமாக வெளிவந்தது. இன்னார் எழுதிக் கொடுக்க கையெழுத்திடப்பட்டது என்பது மாதிரி ஒரு வசனத்தை அடியில் போடலாமே?

Link to comment
Share on other sites

எழுத முடியாதவர்கள்,எழுத தெரியாதவர்கள், எழுத விரும்பாதவர்களின் குரலை ஒலிப்பதிவு செய்து இணைத்தால் ஏனையவர்களின் சந்தேகம் குறையும்.அத்தோடு எதிர்பிரச்சாரத்துக்கும் வழி வகுக்காது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய  இந்த முயற்சியை  வாழ்த்தமுடியவில்லை  சாந்தியக்கா.

 

எம்மவர்களுக்கு பதிலளித்து

அதை அவர்கள் புரிந்து கொண்டு 
ஏற்றுக்கொண்டு........

தெளிவு  பெற்று.........

 

இதெல்லாம்  நடக்கிற  காரியமா?

ஆனால் இப்படி திறந்த களத்திலும் பதிலளித்து சேவை செய்யமுடியும் என்ற உங்களது துணிவுக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேபி, கருணாகரன் ஆகியோருடன் நேசக் கரம் இணைந்து வேலை செய்கிறதா?

 

இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது இவர்களை இயக்கவைக்கும் சக்திகளின் அரசியல்/இராணுவ உளவியல் நோக்கங்களுக்காக நேசக் கரம் அமைப்பு பயன் படுத்தப்படக் கூடிய , நிலை இருக்கிறதா?

 

இவர்களுடன் தொடர்பு உண்டெனில், இந்தத் தொடர்பு அற்று , தாயகத்தில் இயங்க முடியாதா?

 

இவை அண்மைய கருத்துக்கள் தொடர்பில் என்னுள் எழுந்த கேள்விகள்.

 

கருணாகரன் கேபி இருவருடனும் இணைந்து நேசக்கரம் இயங்கவில்லை.

கருணாகரன் பற்றி :- கருணாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியது கவிஞர் திரு.புதுவை இரத்தினதுரை அவர்கள். வெளிச்சம் சஞ்சிகை ஆசிரியராகவே கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார்.

 

சிலர் எமது குடும்ப உறவுகள் போன்றதொரு உறவு நிலையில் எம்மோடு வந்துவிடுவார்கள். பலர் பார்வைக்கு இப்படியான குடும்ப உறவு அல்லது சிறந்த நட்பு போல தோற்றமளிப்பார்கள். ஆனால் கருணாகரன் அண்ணாவும் அவரது மனைவி வசந்தியக்காவும் எனது குடும்ப உறுப்பினர் போன்றதொரு உறவை முதல் சந்திப்பிலேயே தந்தார்கள்.

 

நான் வன்னியில் நின்ற காலங்களில் வெளியில் தொடர்ந்து அலைகின்ற தேவைகள் இருந்தது. அப்போது

எனது பிள்ளைகள் இருவரும் மிகவும் சிறு பிள்ளைகள். அவர்கள் இருவரையும் வசந்தியக்கா தனது பிள்ளைகள் போல எனது பிள்ளைகளை சில நேரங்களில் கவனித்திருக்கிறார். பிள்ளைகளை கழுவித்துடைத்து பார்த்திருக்கிறா. தனது கையால் எனது பிள்ளைக்கு உணவு கொடுத்திருக்கிறா. அதேபோல எனக்கும் அந்தக் கை சோறு தந்தது. அந்த நன்றியை என்றும் நான் மறக்கமாட்டேன்.

கருணாகரன் அண்ணாவும் என்னை தங்கைச்சியென்று தான் சொல்லி பலவிடயங்கள் பற்றி பேசுவார். சில மனத்தாங்கல்களைக்கூட என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அந்த உறவு தவிர நாங்கள் எவ்வித அரசியலையும் பேசிக்கொள்வதில்லை. இன்றுவரையிலும் அதாவது 2009 யுத்த முடிவின் பின்னர் இன்று வரை கருணாகரன்அண்ணா பற்றி பல விமர்சனங்கள் வருகிறது. அவைபற்றி நான் ஒரு போதும் சிலாகித்ததும் கிடையாது. கேள்வி கேட்டதும் கிடையாது. அரசியல் தவிர்ந்து நான் வன்னியில் அந்த வீட்டில் எப்படியான உறவோடு போனேனோ அதேயுறவோடுதான் இன்றுவரையும் தொடர்போடு உள்ளேன்.

இடையிடை முகப்புத்தகத்தில் இப்போது உரையாடுவோம். அவை அவர்களது குடும்பம் குழந்தைகள் பற்றியதாக நானும் எனது குடும்பம் குழந்தைகள் பற்றியதாக அவர்களது விசாரிப்புகளோடும் மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்து செல்கிறது.

 

அண்மையில் கூட கருணாகரன் அண்ணா அவர்கள் மனைவி சுகயீனப்பட்டு மருத்துவத்தோடு இருப்பதாக கூறி மிகவும் வேதனைப்பட்டார். அந்த மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் அளவு பணபலம் இல்லாது அவதிப்படுகிற துயரத்தை பகிர்ந்து கொண்டார். என்னால் தனிப்பட ஏதாவது அந்தக்குடும்பத்திற்கு செய்ய நினைத்தாலும் எனது பொருளாதார நிலமை எதையும் செய்ய முடியாத நிலமை.

அவர்கள் கூட தவிர்க்க முடியாதவொரு சூழலில் வாழ்வது போலவே நான் உணர்ந்துள்ளேன்.

 

இங்கிருந்து நாங்கள் கேபி  கருணாகரன் என்று பெரிதுபடுத்தி அவர்களை அரசியல்வாதிகளாக்குவது போல அங்கு நிலமையிருப்பது போல தெரியவில்லை. அரசாங்கம் ஒரு தமிழனையும் இன்னொரு தமிழனையும் ஒற்றுமையாக இயங்க விடுவது போலவும் தெரியவில்லை. மாற்றம் ஏதும் நிகழின் தமிழர்கள் ஒன்றாகிவிடுவார்களோ என்ற காரணமோ என்னவோ.

 

பல விடயங்களை அவதானித்ததில்  இருந்து  கிடைக்கும் அனுமானம் நாங்கள் தான் சிலரை பெரிதுபடுத்தி பெரிதாக்கிவிட்டது போலவிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் பயனாளிகள் தரும் நன்றிக்கடிதங்கள் ஒரே எழுத்து வடிவத்தைக் கொண்டிருப்பதை நான் முன்பே அவதானித்திருக்கிறேன். இது அண்மையில் கூட ஒரு விமர்சனமாக வெளிவந்தது. இன்னார் எழுதிக் கொடுக்க கையெழுத்திடப்பட்டது என்பது மாதிரி ஒரு வசனத்தை அடியில் போடலாமே?

 

நன்றிகள் இசை இந்த விடயத்தை இங்கு கேட்டமைக்கு.

ஏற்கனவே கடந்த வருடம் சகாரா கேட்டிருந்த கேள்வி ஒரேமாதிரியான கையெழுத்தில் கடிதங்கள் வருவதாக.

இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் விட்டது எனது தவறு. காரணம் அதிகம் சிறையில் இருந்த வந்த கடிதங்களில் இந்த ஒரேமாதிரியான எழுத்தும் கையெழுத்து குறித்த உதவி பெற்றவரினதாகவும் இருந்தது. நான் கடிதங்கள் வருகிற போது அவற்றை இணையத்திலும் பதிவு செய்து உதவியவர்களுக்கும் அனுப்பிவிடுவேன்.அந்த போராளிகளை குடும்பங்களை நான் சந்தேகித்து பார்க்கவில்லை. இதனால் எனது கவனக்குறைவே சந்தேகத்துக்கு மற்றவர்களை ஆளாக்கியது.

 

சகாரா இப்பிரச்சனையை களத்தில் முதல் முதல் கொண்டு வரும் வரை இவ்விடயத்தை நான் நினைத்தே பார்க்கவில்லை.

 

சகாரா எழுப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து சிறையில் தொடர்பில் வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் தான் கடிதங்களில் ஒரே எழுத்துக்கான காரணத்தை சொன்னார்கள். உதவி பெற்ற எல்லாரும் எழுதக்கூடியவர்கள் அல்ல. தங்கள் எழுத்துப்பிழையான கடிதங்களை அவர்கள் அனுப்ப தயங்கியிருந்தார்கள். பலருக்கு எழுதக்கூடிய தன்மையில்லை.

 

ஒரு கடிதத்தை எழுதினால் அதனை உடனடியாக அனுப்பிவிட்டு அதனை அழித்துவிட வேண்டிய நிலமை சிறையில். அவை பிடிபட்டால் அவர்களது நிலமை மிகவும் பாதகமாகிவிடும் என்ற பயம். இதனால் எழுதக்கூடியவர்களுக்கு இன்ன விடயத்தை எழுதுங்கள் என உதவி பெற்றவர் சொல்லச் சொல்ல கடிதத்தை எழுதிக் கொடுப்பார்கள்.

கட்டாயம் உதவி பெற்றவரின் கையெடுத்துடன் தான் கடிதம் வேண்டுமென்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாதிருந்தது. அவர்களது உண்மை நிலமையை குறித்த கைதிகளே சொன்ன பின்னர் என்னால் அவர்களை மாற்றுக் கையெழுத்தில் கடிதம் தந்தமைக்கு கோவிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை.

 

கொழும்புச் சிறையொன்றில் எழுதக்கூடிய சிலரையே எல்லா கைதிகளும் நாடுவார்கள். அவர்கள் நாட்கணக்காக தங்களுக்கு கடிதம் எழுத காத்திருப்பதாகவும் கடிதம் எழுதுவோர் சொல்வார்கள்.

 

சிலர் அவர்கள் எழுதிக் கொடுப்பதை பார்த்து எழுதியனுப்பியுள்ளார்கள். சிலர் இன்னொருவரை பிடித்து எழுதுவித்து தங்கள் கையொப்பங்களை இட்டு அனுப்பியுள்ளார்கள்.இக்கடிதங்களை எழுதியவர்களை விசாரித்த போது அவர்கள் என்னிடம் கேட்டார்கள் வேண்டுமானால் கேள்வியெழுப்பிய சகாராவுக்கு தங்கள் தொடர்பிலக்கத்தையும் கொடுத்து தங்கள் குரலில் அக்கடிதங்கள் தொடர்பான விளங்களையும் கொடுக்க முடியுமென.

 

ஆனால் அவர்கள் தங்களது தவறு பற்றியொரு எழுத்து மூலமான அல்லது குரல் மூலமான பதிவைத் தந்துவிட்டு அதுவே  எதிர்காலத்தில் அவர்களது வழக்கு அல்லது அவர்களது விடுதலையில் குறுக்கீடாகக்கூட அமைந்து விடின் அதற்கான பொறுப்பையும் நானே சுமக்க வேண்டும்.

 

அதனால் அத்தகைய தவறை இனிமேல் செய்யாமல் குறித்த குடும்பங்களின் குடும்ப உறவுகள் மூலமே கடிதங்களை அனுப்பக்கூறுமாறு கேட்டிருந்தேன். அதன்படி பின்னர் குறித்த குடும்பங்களிடம் இருந்தே நன்றிக்கடிதங்கள் கிடைத்தன.

இதுபோல அம்பாறையில் செஞ்சோலை மாணவிகள் 3பேருக்கும் காந்தரூபன் அறிவுச்சோலையில் வளர்ந்த மாணவர்கள் இருவருக்குமான உதவி தேவைப்பட்ட போது அவர்களுக்கான உதவியை தனியேதான் உடன் செய்ய முடிந்தது.

 

பிள்ளைகள் கடிதம் எழுத வேண்டும் என்றதும் பின்னடித்தார்கள். தங்களது எழுத்து அழகு மற்றும் எழுத்துப் பிழைகளை எல்லாரும் பார்க்கும் பொதுவெளியில் போடுவதால் தங்கள் தமிழ்ப்பிழையை அவமானமாக கருதி பின்னின்றார்கள். அப்பிள்ளைகளின் முதல் கடிதத்தை அவர்களுக்கு பொறுப்பாக நியமித்த பெண்போராளி அவர்கள் சொல்லச் சொல்ல கடிதத்தை எழுதி அவர்கள் ஒப்பத்தோடு அனுப்பியிருந்தார்கள். குறித்த பெண் போராளியும் இவ்விடயம் பற்றி சொல்லவில்லை.

 

ஏற்கனவே சகாராவிடம் வாங்கிய சூடு நினைவில் இருந்தது. அதன் பின்னர் கடிதங்களை அவதானித்தே வெளியிடுவென். உரியவர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் தமிழ் பிழையாகவோ அழகின்றியோ இருந்தாலும் பறவாயில்லை. நீங்களாக உங்கள் விண்ணப்பங்களை கடிதங்களை எழுதுமாறு.

பின்னர் இந்த மாணவிகள்  தனியாக எழுதியனுப்பியவற்றை பார்க்க எனக்கும் ஒரே எழுத்துமாதிரியே இருந்தது. அதனால் திரும்ப பிள்ளைகளை அழைத்து விசாரித்த போது அவர்கள் தாங்களாகவே எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களது எழுத்து ஒரே சாயல் போன்றே தெரிந்தது.

 

பிள்ளைகளுக்கும் கையெழுத்து பிரச்சனை பற்றி தெளிவுபடுத்தி இனிமேல் இவ்விடயத்தில் கவனமாக இருக்குமாறு வேண்டிக் கொண்டேன். இப்பிள்ளைகளை இப்போது கள உறவு சபேசன் குடும்பம் பொறுப்பேற்று பராமரிக்கிறார்கள்.

 

நான் ஒருவரின் அழகான கையெழுத்தை பார்த்து அவர் போல எழுதக்கற்றுக் கொண்டேன். பலரால் அந்து எழுத்து எனதா அல்லது நான் மாற்றிக் கொண்ட எழுத்துக்கு உரியவரின் தாக்கமா என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவு எனது எழுத்து அமைந்ததை நினைத்து சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களும்  எழுத்து ஒற்றுமை வந்திருக்கலாமென சகாராவுடன் விவாதித்தேன்.

 

ஆனால் உண்மை உரியவர்களிடம் கேட்டுத் தெளியும் வரை என்னால் அக்கையெழுத்துக்களை பிரித்தறிய முடியாது போனமைக்காக சகாராவிடமும் சந்தேகித்த அனைவரிடமும் மன்னிப்புக்கோருகிறேன்.

 

கடந்த வருடம் ஏப்றலில் இருந்து இக்கடிதங்களில் மிகவும் அவதானமாகவும் உதவி பெறுகிறவர்கள் அவர்களது கையெழுத்திலேயே கடிதங்கள் தர வேண்டுமென்ற கட்டாயத்தையும் விதித்து கடிதங்கள் பெறப்பட்டது. இவ்வருடம் இதிலும்  மேலும் ஒருமாற்றம் உதவி கோரும் ஒருவர் தனது பிரதேசத்தின் கிராமசேவகர் மூலம் அவரது குடும்ப நிலமை உறுதிப்படுத்தப்பட்டே உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற நடைமுறையையும் கொண்டு வந்துள்ளொம். அண்மையில் கூட வந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கும் மற்றும் மூளைப்புற்றுநோயாளிக்கு கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் பெறப்பட்ட கடிதம் வந்திருந்தது. அவர்களது கடிதத்தை தங்கள் நண்பர்கள் உறவினர்கள் மூலம் எழுதியதை தொலைபேசியில் தெரிவித்திருந்தார்கள்.

 

வெளிநாட்டுக்கு தங்கள் கடிதங்கள் போகிறது அதனை பலர் படிப்பார்கள் தங்கள் கடிதங்களில் உள்ள பிழைகளை நாங்கள் பரிகசிக்கலாம் என்ற குற்ற உணர்வில் மட்டுமே சிலர் தங்கள் கடிதங்களை எழுதக்கூடிய ஒருவர் மூலம் எழுதுவித்து தங்கள் கையொப்பத்தை இட்டு அனுப்புகிறார்கள்.

இன்றிலிருந்து இசையின் ஆலோசனைப்படி இனிமேல் இன்னொருவரின் மூலம் எழுதி உரியவர் ஒப்பமிட்டு வரும் கடிதங்களின் கீழ் இவ்விடயம் பற்றி சிறு குறிப்பொன்று இடப்படும். ஆரம்பத்தில் அவதானித்தவர்கள் யாராவது இதனை எனக்கு தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயம் இத்தவறை குறித்திருப்பேன்.

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எழுத முடியாதவர்கள்,எழுத தெரியாதவர்கள், எழுத விரும்பாதவர்களின் குரலை ஒலிப்பதிவு செய்து இணைத்தால் ஏனையவர்களின் சந்தேகம் குறையும்.அத்தோடு எதிர்பிரச்சாரத்துக்கும் வழி வகுக்காது.

 

இனிவரும் காலங்களில் இந்த விடயத்தையும் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்படுகிறது. நன்றிகள் நுணாவிலான்.

 

 

உங்களுடைய  இந்த முயற்சியை  வாழ்த்தமுடியவில்லை  சாந்தியக்கா.

 

எம்மவர்களுக்கு பதிலளித்து

அதை அவர்கள் புரிந்து கொண்டு 

ஏற்றுக்கொண்டு........

தெளிவு  பெற்று.........

 

இதெல்லாம்  நடக்கிற  காரியமா?

ஆனால் இப்படி திறந்த களத்திலும் பதிலளித்து சேவை செய்யமுடியும் என்ற உங்களது துணிவுக்கு வாழ்த்துக்கள்.

 

பதில்கள் கொடுப்பதில் எனது நேரம் அதிகமாக விரயமாகும். ஆனால் பல புரளிகள் சந்தேகங்களை தீர்க்குமென்ற நம்பிக்கையில் தான் இந்த சோதனையை எடுத்துள்ளேன்.

சில சந்தேகங்கள் ஆயுள் வரையும் தீயில் சாகடிக்கும் வகையில் இருக்கும். அவ்வப்போது சந்தேகங்களுக்கு முடிந்தளவு பதிலைக் கொடுத்து விடுவது நாளை நேசக்கரம் என்ற அமைப்பு அழிந்தால் இயங்காது போனாலும் இயன்றவரை உண்மையோடு இயங்கியிருக்கிறது என்ற நிம்மதியில் ஒதுங்கிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய  இந்த முயற்சியை  வாழ்த்தமுடியவில்லை  சாந்தியக்கா.

 

எம்மவர்களுக்கு பதிலளித்து

அதை அவர்கள் புரிந்து கொண்டு 

ஏற்றுக்கொண்டு........

தெளிவு  பெற்று.........

 

இதெல்லாம்  நடக்கிற  காரியமா?

ஆனால் இப்படி திறந்த களத்திலும் பதிலளித்து சேவை செய்யமுடியும் என்ற உங்களது துணிவுக்கு வாழ்த்துக்கள்.

 

 

 

விசுகு அண்ணாவின் அதே மனநிலையில் உங்களையும் ,நேசக்கர அமைப்பையும் பார்க்கிறேன் .தொடர்ந்து பயணியுங்கள் அக்கா .....

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் உருக்கொடுத்தாலும்.. அதனை பதிவு செய்து ஒரு உருப்படியான குழந்தையாக நேசக்கரத்தை.. பிரசவித்த ஒருவரை நோக்கி 5ம் 10ம் கொடுக்கிற நாங்கள் லைனில நின்று கேள்விக் கணைகளைத் தொடுக்கிறதைப் பார்க்கிறப்போ... பல்வேறு ஆதங்கங்களே மேலிடுகின்றன..!

 

நேசக்கரத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டுதலையும் பங்களிப்பையும் நல்க வேண்டிய நாம்.. அதைச் செய்யாமல்.. தெளிவு படுத்தினால் தான்.. எங்கள் மனிதாபிமானத்தைக் காட்டுவோம் என்று நிற்பதிலும்.. நாங்கள் உதவுகிறோம்.. வழிகாட்டுகின்றோம்.. நீங்கள் தெளிவோடு செயற்படுங்கள் என்று சொல்வது தான் சிறந்தது. அதைச் செய்யாமல்.. என்னைப் பொறுத்த வரை நான் நேசக்கரத்தை நோக்கி கேள்விகளை எழுப்பமாட்டேன்..! :icon_idea:இப்பதிவு சாந்தி அக்கா மீது மேலதிக வேலைப்பழுவையே அதிகரிக்கச் செய்யும். நாங்கள்.. சும்மா நாலு கேள்வி கேட்டிட்டுப் போகலாம். அதற்கு லைக்கும் போட்டிட்டு.. குறட்டை விடுவம். அதற்கு மதிப்பளிச்சு.. ஒரு அமைப்பின் சார்ப்பில் அந்த அமைப்புக்குரிய வேலைகள்.. தனது குடும்ப வேலைகள்.. என்று இருக்கும் ஒருவர் இவற்றிற்கு பதிலளிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல. நாங்கள் கேள்விகளைத் தொடுக்க முன்னர்.. அதற்கான அத்தியாவசியம் என்ன என்பதை எமக்குள் முதலில் வினவிக் கொள்ளுதல் நன்று..! :icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் உருக்கொடுத்தாலும்.. அதனை பதிவு செய்து ஒரு உருப்படியான குழந்தையாக நேசக்கரத்தை.. பிரசவித்த ஒருவரை நோக்கி 5ம் 10ம் கொடுக்கிற நாங்கள் லைனில நின்று கேள்விக் கணைகளைத் தொடுக்கிறதைப் பார்க்கிறப்போ... பல்வேறு ஆதங்கங்களே மேலிடுகின்றன..!

 

நேசக்கரத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டுதலையும் பங்களிப்பையும் நல்க வேண்டிய நாம்.. அதைச் செய்யாமல்.. தெளிவு படுத்தினால் தான்.. எங்கள் மனிதாபிமானத்தைக் காட்டுவோம் என்று நிற்பதிலும்.. நாங்கள் உதவுகிறோம்.. வழிகாட்டுகின்றோம்.. நீங்கள் தெளிவோடு செயற்படுங்கள் என்று சொல்வது தான் சிறந்தது. அதைச் செய்யாமல்.. என்னைப் பொறுத்த வரை நான் நேசக்கரத்தை நோக்கி கேள்விகளை எழுப்பமாட்டேன்..! :icon_idea:

இப்பதிவு சாந்தி அக்கா மீது மேலதிக வேலைப்பழுவையே அதிகரிக்கச் செய்யும். நாங்கள்.. சும்மா நாலு கேள்வி கேட்டிட்டுப் போகலாம். அதற்கு லைக்கும் போட்டிட்டு.. குறட்டை விடுவம். அதற்கு மதிப்பளிச்சு.. ஒரு அமைப்பின் சார்ப்பில் அந்த அமைப்புக்குரிய வேலைகள்.. தனது குடும்ப வேலைகள்.. என்று இருக்கும் ஒருவர் இவற்றிற்கு பதிலளிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல. நாங்கள் கேள்விகளைத் தொடுக்க முன்னர்.. அதற்கான அத்தியாவசியம் என்ன என்பதை எமக்குள் முதலில் வினவிக் கொள்ளுதல் நன்று..! :icon_idea:

 

நேசக்கரத்தையும்,சாந்தி அக்காவையும் எவ்வளவு கேவலமாக எழுதேழுமோ அவ்வளவு கேவலமாய் எழுதிப் போட்டு இப்ப வந்து நின்று கொண்டு "ஆடு நனையுது என்று ஓநாய் கவலைபடுதாம்" என்ட மாதிரி இரட்டை வேசம் போட உங்களை மாதிரி ஒரு சிலரால் தான் முடியும்

Link to comment
Share on other sites

ஒரே குறிக்கோள்கள் கொண்டவர்கள் மத்தியில் அரசியல் கருத்துமுரண்பாடுகள்
இருந்தாலும் நாங்கள் எல்லோரும் இணைந்து நேசக்கரத்தினை (அமைப்பை )
பாதுகாப்பதோடு ,சாந்தியின் வேலைப்பளுவையும் குறைக்கவேண்டும் .
 
என்னுடைய ஒத்துழைப்பும் ,பங்களிப்பும் எப்பொழுது இருக்கும் .
தொடர்ந்து பயணியுங்கள் .வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தையும்,சாந்தி அக்காவையும் எவ்வளவு கேவலமாக எழுதேழுமோ அவ்வளவு கேவலமாய் எழுதிப் போட்டு இப்ப வந்து நின்று கொண்டு "ஆடு நனையுது என்று ஓநாய் கவலைபடுதாம்" என்ட மாதிரி இரட்டை வேசம் போட உங்களை மாதிரி ஒரு சிலரால் தான் முடியும்

 

உங்களுக்கு கருத்துக்களைப் புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனைக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்லிட்டு இருந்தா நமக்குத் தான்.. கேடு. அதாவது நேரக் கேடு. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நேசக்கரத்தையும்,சாந்தி அக்காவையும் எவ்வளவு கேவலமாக எழுதேழுமோ அவ்வளவு கேவலமாய் எழுதிப் போட்டு இப்ப வந்து நின்று கொண்டு "ஆடு நனையுது என்று ஓநாய் கவலைபடுதாம்" என்ட மாதிரி இரட்டை வேசம் போட உங்களை மாதிரி ஒரு சிலரால் தான் முடியும்

மனம் திருந்தி வருவவர்களை ஏற்கவேண்டும் .அதனால் தான் நெடுக்கின் 

கருத்திக்கு லைக் போட்டுள்ளேன் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பொறுத்த வரை சாந்தியக்கா வெளிப்படையாக,நேசக்கரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்வதில் தப்பே இல்லை.இவ்வளவு நாளும் பதில் சொல்லாமல் இருந்த படியால் தான் கூட அமைப்பில் இருந்தவர் அக்கா மேல் தப்பு சொல்லும் போது அது உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைத்திருக்க கூடும்.இப்படி வெளிப்படையாக எழுதும் போது பலருக்கு உண்மை நிலவரம் புரியும்.
 
இதுவரை நேசக்கரத்தின் மூலம் உதவாதவர்கள் கூட இத் திரியைப் பார்த்து உதவக் கூடும்.சந்தேகப்பட்டுக் கொண்டு உதவாமல் இடையில் விட்டவர்கள் அல்லது சந்தேகப்பட்டுக் கொண்டே உதவி செய்பவர்களுக்கு இத் திரி மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.
 
வெளிப்படையாக,உண்மையாக பதில் சொல்வதன் மூலம் இன்னும் பலர் நே.கரத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் மனம் திருந்தி அல்ல மனம் வருந்தி கருத்தெழுத வேண்டிய அளவிற்கு இன்றைய யாழ் கள உறவுகள் சிலரின் செயற்பாடுகள் இருந்து கொண்டிருக்குது..! நேசக்கரத்திற்கு 5 சதம் ஈயாதவங்க கூட.. நாளை இங்கு கேள்வி கேட்பாங்க போல இருக்கே. அதற்கு சாந்தி அக்கா பதில் சொல்ல வேண்டிய நிலமை..! இப்படியே போய்க்கிட்டு இருந்தா.. ஒரு தொண்டு அமைப்பை நடத்த முடியாது.. தெருவால போறவன் வாறவன் கேட்கிற கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருப்பதை தான் செய்ய முடியும்..! :lol::icon_idea:

 

நேசக்கரம் மீதான எங்களின் கடந்த காலக் குற்றச்சாட்டுக்கள் என்பன.. அதன் செயற்பாடுகள் தொடர்பானதல்ல. அதன் செயற்திட்டங்கள் தொடர்பானது. அதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கூட.. இதில் கருத்தெழுவது வேடிக்கையாக உள்ளது. இன்று நேசக்கரம் பன்முகத் தன்மையுள்ள செயற்திட்டங்களைச் செய்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அது இலக்கை எட்ட தொடர்ந்து பயணிக்க வேண்டியும் கொள்கிறோம்..!

 

இத்தோடு இத்தலைப்பில் எங்கள் கருத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறோம்.

 

நன்றி. :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் மனம் திருந்தி அல்ல மனம் வருந்தி கருத்தெழுத வேண்டிய அளவிற்கு இன்றைய யாழ் கள உறவுகள் சிலரின் செயற்பாடுகள் இருந்து கொண்டிருக்குது..! நேசக்கரத்திற்கு 5 சதம் ஈயாதவங்க கூட.. நாளை இங்கு கேள்வி கேட்பாங்க போல இருக்கே. அதற்கு சாந்தி அக்கா பதில் சொல்ல வேண்டிய நிலமை..! இப்படியே போய்க்கிட்டு இருந்தா.. ஒரு தொண்டு அமைப்பை நடத்த முடியாது.. தெருவால போறவன் வாறவன் கேட்கிற கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருப்பதை தான் செய்ய முடியும்..! :lol::icon_idea:

 

நேசக்கரம் மீதான எங்களின் கடந்த காலக் குற்றச்சாட்டுக்கள் என்பன.. அதன் செயற்பாடுகள் தொடர்பானதல்ல. அதன் செயற்திட்டங்கள் தொடர்பானது. அதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கூட.. இதில் கருத்தெழுவது வேடிக்கையாக உள்ளது. இன்று நேசக்கரம் பன்முகத் தன்மையுள்ள செயற்திட்டங்களைச் செய்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அது இலக்கை எட்ட தொடர்ந்து பயணிக்க வேண்டியும் கொள்கிறோம்..!

 

இத்தோடு இத்தலைப்பில் எங்கள் கருத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறோம்.

 

நன்றி. :)

 
கேட்கப்படும் கேள்விக்கு கொடுக்கும் பதில் நேர்மையாக இருந்தால் இன்று 5 சதம் கொடுக்காதவன் கூட நாளைக்கு மனம் மாறி உதவக் கூடும்.இன்னும்,இன்னும் ஆட்களை சேர்க்க வேண்டுமே ஒழிய நீ நேசகரத்திற்கு 5 சதம் தரவில்லை அதனால் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்.சாந்தி அக்கா அப்படி முட்டாள்தனமான வேலை செய்ய மாட்டார்.ஏனென்டால் உங்களை விட ஒரு அமைப்பை கொண்டு நடத்துவது எவ்வளவு கஸ்டம் என்று அவவுக்குத் தெரியும்.
 
நேசக்கரத்தின் செயற்திட்டத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் நே.கரத்தின் மீதான குற்றச்சாட்டு தான்...உங்களுக்கு செயற்திட்டத்தில் குறை தெரிந்த மாதிரித் தான் இத் திரியில் எழுதிய மற்றவர்களுக்கும் சில பிழைகள்,குறைகள் கண்ணுக்குத் தெரியலாம்.தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை.
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம் – இந்திய இராணுவம் குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்போது, நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். அதன்பின்னர், ஜனவரி 29ஆம் திகதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர், டெல்லிக்கு வந்திருந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்கு விருப்பமான ‘என்னுடன் இருங்கள்’ என்ற பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பித்தானிய நாட்டை சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையிலேயே, இந்த ஆண்டு பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா ‘ (ஒட்டுமொத்த உலகத்தையும் விட இந்தியா மேலானது) என்ற பாடல் இசைக்கப்படவுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.   https://athavannews.com/2022/1263242  
  • அவுஸ்ரேலியா ,கனடா  வரிசையில் இனி ஜெர்மனும் 
  • கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்? கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிதாக திறக்கப்பட்ட துறைமுக நகர மெரினா உல்லாச நடைபாதையைப் பயன்படுத்த பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிகப் படமாக்கல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படமாக்கல், புகைப்படம் எடுப்பது தடையாக இருந்ததாகவும் மேலும் உலா வருபவர்களின் தனியுரிமையை மீறுவதாகவும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் பொது பாதுகாப்பு மற்றும் நடந்து வரும் கட்டுமானத்தை கருத்திற்கொண்டு கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற தொழில்முறை படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதில் ஈடுபட விரும்பும் எவருக்கும் பணம் செலுத்தும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெரினா நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்றும் கட்டணப் படப்பிடிப்பையும் புகைப்படக்கலையையும் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது கோரப்பட்ட ஏனைய நேரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்திற்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் அல்லது கேமராக்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சமூக அல்லது பிரதான ஊடக நிலையங்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதியுடன் செய்திகள் அல்லது நடப்பு விவகாரங்களை (வணிக நோக்கங்கள் அல்லாதது) படமாக்குதல், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விழாக்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது பேஷன் விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது வேறு வகையான வணிகப் படப்பிடிப்பின் படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் பொருந்தும் என்றும் போர்ட் சிட்டி கொழும்பு தெரிவித்துள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் எனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.   https://athavannews.com/2022/1263245  
  • பதவிக்காலத்தை நீட்டிக்க முயற்சியா ? நாமல் கருத்து ! தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானமில்லை. நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார் . அடுத்த 3 வருடங்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவோம் .  எங்களுக்கு பதவி காலத்தை நீடிக்க எந்த அவசியமும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.   https://athavannews.com/2022/1263246  
  • பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்! நிலாந்தன்.   கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும். அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினர் சிறைக்கைதிகளின் உடைகளோடு காணப்பட்டார்கள். அதை ஒழுங்கு படுத்தியது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “குரலற்றவர்களின் குரல்” என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு அதற்கு முதல்நாள் யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது. தாம் இவ்வாறு ஒரு பொங்கலை வித்தியாசமாக நடத்த இருப்பதனை அறிவித்தது. அவ்வமைப்பு தமது கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களின் ஆதரவை கேட்டிருந்தது. எனினும் முத்த வெளியில் அந்த நிகழ்வில் மிகச்சில அரசியல்வாதிகளே பங்குபற்றியிருந்தார்கள். யாழ் நகரபிதா மணிவண்ணன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், சிவாஜிலிங்கம், பார்த்திபன் உள்ளிட்ட மிகச்சில அரசியல்வாதிகளே அங்கே வந்திருந்தார்கள். தவிர சமயப் பெரியார்களும் வந்திருந்தார்கள். மிகக் கைக்கடக்கமான நபர்களோடு அந்த வித்தியாசமான பொங்கல் செய்யப்பட்டது. அது ஒரு கவன ஈர்ப்பு முயற்சி. அரசியலில் கவனயீர்ப்பு போராட்டம் என்பது பெருமளவுக்கு ஒரு சடங்காக மாறிவிட்டது. நகர மையத்தில் வீதியின் இரு மருங்கிலும் சுலோக அட்டைகளை தாங்கியபடி நிற்பதே நமது அரசியல்வாதிகளுக்கு கவன ஈர்ப்பாக தெரிகிறது. அது அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வருவதற்கும் அப்பால் பெருமளவுக்கு பொது சனங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. எனவே அரசியல் கைதிகளுக்கான போராட்டத்தை வித்தியாசமான விதத்தில், இதற்கு முன் யாரும் செய்திராத விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே மேற்படி விடுதலைப் பொங்கல் ஆகும். எனினும் வழமையான கவனயீர்ப்பு போராட்டங்களைப் போலவே அந்நிகழ்வு அடுத்தநாள் ஊடகங்களில் செய்திகளாக வந்ததோடு சரி. அதேசமயம் அதே நாளில் அதாவது பொங்கலுக்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தின் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் தோறும் சனங்கள் நிரம்பி வழிந்தார்கள். மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் ஒரு நாடா இது என்று கேட்குமளவுக்கு ஜனங்கள் நகரங்களில் பிதுங்கி வழிந்தார்கள். சனங்களுக்கு கொண்டாட்டங்கள் தேவையாக இருக்கின்றன. அவர்கள் கொண்டாடும் மனநிலையோடு இருக்கிறார்கள். அது தவறல்ல. மக்கள் கொண்டாடட்டும். சந்தோஷமாக இருக்கட்டும். அதேநேரம் தங்களுக்காக போராட புறப்பட்டு சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் தரப்புக்களோடு மக்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு அரசியல் கைதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான போராட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கு வித்தியாசமான கவனயீர்ப்பு போராட்டங்கள் தேவை. வழமையான, பாரம்பரியமான கவனயீர்ப்பு போராட்டங்கள் இப்போதுள்ள அவசர உலகில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இல்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான் அரசியல் கைதிகளுக்காக போராடும் அமைப்பு அப்படி ஒரு பொங்கலை செய்தது. இவ்வாறு வித்தியாசமாக கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு பொங்கலை ஒழுங்குபடுத்துமாறு அவர்களுக்கு கடந்த ஆண்டிலேயே ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிகிறது. அரசியல் கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் மட்டும் போராடும் ஒரு துர்ப்பாக்கியச் சூழலில் கைதிகளுக்கான போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று சிந்தித்த செயற்பாட்டாளர்கள் சிலர் மேற்கண்ட ஆலோசனைகளை வழங்கியதாக தெரியவருகிறது. அவ்வாறு ஆலோசனை வழங்கிய செயற்பாட்டாளர்கள் வேறு சில ஆலோசனைகளையும் கூறியதாக தெரிய வருகிறது. அவற்றின்படி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் கைதிகளின் உடைகளோடும் சிறையில் கைதிகள் பயன்படுத்தும் சாப்பாட்டு கோப்பைகளோடும் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தால் என்ன என்று கேட்கப்பட்டது. அதோடு நீதிமன்றங்களில் அரசியல் செயற்பாட்டாளர்களாக காணப்படும் சட்டவாளர்களும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான சட்டவாளர்களும் ஒருநாள் கைதிகளின் உடையோடு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை செய்யலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இவ்வாறான வித்தியாசமான போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம், வெளி உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களின் காலத்தில் பொது மக்களின் கவனத்தையும் வெளி நாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு புதிதாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதிகம் கற்பனைத்திறன் தேவையாக இருக்கிறது. அதிர்ச்சியூட்டும் விதத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள் உண்டு. இந்தியாவின் வடபகுதி தலைநகரங்களில் ஒன்று என்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை. நகரத்தின் பிரதான சாலைகளில் காணப்பட்ட பள்ளங்களை அடைக்குமாறு நகரசபை நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வற்புறுத்தி சலிப்படைந்த ஒரு செயற்பாட்டாளர், நகர சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கு வித்தியாசமாக சிந்தித்தார். ஒரு மழைநாளில் சாலையின் பள்ளங்களில் தேங்கி நின்ற நீரில் மினுங்கும் வர்ண கலவைகளை கலந்து விட்டார். அதன்பின் அங்கே கடல்வாழ் உயிர்களின் பொம்மைகளை வைத்தார். இது ஊடகங்களின் கவனத்தையும் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளின் கவனத்தையும் உடனடியாக கவர்ந்தது. அடுத்த சில நாட்களுக்குள் வீதிகள் செப்பனிடப்பட்டன. இதைப்போலவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்களின் ஆடைகளை பகிரங்கமாக கொடிகளில் தொங்கவிட்டு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்தார்கள். இலங்கைத் தீவிலும் பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கியதும் இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களின் ஜனாசா அடக்க உரிமையை மறுத்தது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக கபன் துணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அது ஒரு வித்தியாசமான படைப்பு திறன்மிக்க போராட்டம். அது அதன் அடுத்த கட்டத்துக்கு வளரவில்லை. அந்த வெற்றிடம் காரணமாகத்தான் முஸ்லிம்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டத்தில் தமது பங்களிப்பைச் செலுத்தினார்கள். மேற்கண்ட அனைத்து உதாரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தகவல் யுகத்தில் பொது சனங்களின் கவனத்தையும் வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு கவனயீர்ப்பு போராட்டங்கள் வித்தியாசமாகவும் படைப்புத் திறனோடும் வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு சிந்தித்து வடிவமைக்கப்பட்டதே விடுதலைப் பொங்கல் நிகழ்வு ஆகும். ஆனால் அது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. வழமையாக கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஏனைய போராட்டங்களிலும் பங்கு பற்றும் ஒரு தொகுதி அரசியல்வாதிகள் கூட அதில் காணப்படவில்லை. அதை ஒழுங்கு படுத்திய குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் போதிய வளங்களும் இல்லை, ஆட்களும் இல்லை. விடுதலைப் பொங்கலுக்கு முதல் நாள் அவர்கள் ஊடகச் சந்திப்புக்காக யாழ் ஊடக அமையத்திற்கு வந்திருந்த வேலை அங்கே ஒரு தமிழ் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரை கண்டிருக்கிறார்கள். அவரோடு தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக உரையாட முற்பட்ட வேளை அவர் தங்களை பொருட்படுத்தவில்லை என்றும் மனம் நொந்து சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட சில அரசியல் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றபோது அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார் என்பதை நினைவூட்டினார்கள். அச்சந்திப்பின்போது சம்பந்தர் தன்னை சந்திக்க வந்த முன்னாள் கைதிகளை முகம் கொடுத்து பார்க்காமல் ஒரு பேப்பரை வாசித்தபடி அவர்களோடு உரையாடினார். “திறப்பு என்னிடம் இல்லை” என்றும் கூறினார். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை புதிதாக சிந்திக்க வேண்டியதும் வழிநடத்த வேண்டியதும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் பொறுப்பு. கைதிகளுக்காக கைதிகளும் விடுவிக்கப்பட்ட கைதிகளும்தான் போராடுவது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையைக் காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தான் போராட வேண்டியிருப்பது என்பது தமிழ் அரசியலின் கையறு நிலையை காட்டுகிறது. இந்த லட்சணத்தில் போராடுவோம் போராடுவோம் என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பது யார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட மக்கள்தான். அவர்களுடன் நிற்பது யார் என்று பார்த்தால் மிகச் சில அரசியல்வாதிகள்தான்.   https://athavannews.com/2022/1263234
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.