Jump to content

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்

Recommended Posts

இத்தலைப்பில் மனம் திருந்தி அல்ல மனம் வருந்தி கருத்தெழுத வேண்டிய அளவிற்கு இன்றைய யாழ் கள உறவுகள் சிலரின் செயற்பாடுகள் இருந்து கொண்டிருக்குது..! நேசக்கரத்திற்கு 5 சதம் ஈயாதவங்க கூட.. நாளை இங்கு கேள்வி கேட்பாங்க போல இருக்கே. அதற்கு சாந்தி அக்கா பதில் சொல்ல வேண்டிய நிலமை..! இப்படியே போய்க்கிட்டு இருந்தா.. ஒரு தொண்டு அமைப்பை நடத்த முடியாது.. தெருவால போறவன் வாறவன் கேட்கிற கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருப்பதை தான் செய்ய முடியும்..! :lol::icon_idea:

நேசக்கரம் மீதான எங்களின் கடந்த காலக் குற்றச்சாட்டுக்கள் என்பன.. அதன் செயற்பாடுகள் தொடர்பானதல்ல. அதன் செயற்திட்டங்கள் தொடர்பானது. அதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கூட.. இதில் கருத்தெழுவது வேடிக்கையாக உள்ளது. இன்று நேசக்கரம் பன்முகத் தன்மையுள்ள செயற்திட்டங்களைச் செய்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அது இலக்கை எட்ட தொடர்ந்து பயணிக்க வேண்டியும் கொள்கிறோம்..!

இத்தோடு இத்தலைப்பில் எங்கள் கருத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறோம்.

நன்றி. :)

செயற்திட்டங்கள் பிழையாக இருந்தால் நீங்கள் முன்மாதிரியான திட்டங்களை

முன்மொழிந்தது உதவியிருக்கலாம் .

விமர்சனங்கள் மனிதனை அல்லது அமைப்புகளை நல்வழிப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செயற்திட்டங்கள் பிழையாக இருந்தால் நீங்கள் முன்மாதிரியான திட்டங்களை

முன்மொழிந்தது உதவியிருக்கலாம் .

விமர்சனங்கள் மனிதனை அல்லது அமைப்புகளை நல்வழிப்படுத்தவேண்டும்.

நீங்கள் மேற்படி தலைப்புக்களைத் தேடிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதைப் படிக்காமல்..இப்படி சகட்டு மேனிக்கு எழுதப்படாது. அதில் பிரேரணைகளையும் செய்தே உள்ளோம்..! :D

விடுங்க மருதங்கேணி. நேசக்கரத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பங்களிப்புச் செய்யப் போகினம் போல இருக்குது. அதுதான் அக்கிரிமெண்ட் போட கிளியரன்ஸ் போய்க்கிட்டு இருக்காமில்ல..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கப்படும் கேள்விக்கு கொடுக்கும் பதில் நேர்மையாக இருந்தால் இன்று 5 சதம் கொடுக்காதவன் கூட நாளைக்கு மனம் மாறி உதவக் கூடும்.இன்னும்,இன்னும் ஆட்களை சேர்க்க வேண்டுமே ஒழிய நீ நேசகரத்திற்கு 5 சதம் தரவில்லை அதனால் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்.சாந்தி அக்கா அப்படி முட்டாள்தனமான வேலை செய்ய மாட்டார்.ஏனென்டால் உங்களை விட ஒரு அமைப்பை கொண்டு நடத்துவது எவ்வளவு கஸ்டம் என்று அவவுக்குத் தெரியும்.

நேசக்கரத்தின் செயற்திட்டத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் நே.கரத்தின் மீதான குற்றச்சாட்டு தான்...உங்களுக்கு செயற்திட்டத்தில் குறை தெரிந்த மாதிரித் தான் இத் திரியில் எழுதிய மற்றவர்களுக்கும் சில பிழைகள்,குறைகள் கண்ணுக்குத் தெரியலாம்.தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை.

"பறவைகள் பலவிதம்"[/size]

மனிதர்களும் அப்படியே ............. உங்களுடைய  கருத்துக்கள் உண்மையானவை.

ஆனால் அனுபவரீதியாக பார்க்கும்போது.

எதையும் கொடுக்க விருப்மாதவர்கள். ஒரு சதமும் ஈயாதவர்கள்.............. எதோ எல்லாம் உளுங்காக இருந்துவிட்டால் அள்ளிகொடுத்திருப்போம் என்ற தோரணையில் கதை விட்டு கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்கையில் இப்படியான ஜென்மங்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.

மனம் இருப்பவனுக்கு தெரியும் ...... பலதும் நடக்கும் என்று.

எமது போராட்டத்தில் அன்று யார் கொடுத்தானோ அவனே இன்றும் கொடுக்கிறான்.

இந்த போராட்டத்தை வைத்து யார் வயிறு வளர்த்தானோ அவன் இன்றும் அதைதான் செய்கிறான்.

சுயவிளம்பரம் தேடி யார் போராட போனானோ அவனுக்கு இணையம் வந்தது பரலோகத்தில் இருந்து  பால் வந்த மாதிரி துள்ளி குதிக்கிறான்.

(எங்காவது ஒரு 5 வீதம் மாறியிருக்கலாம்)

விதை விதைப்பவனுக்கு தெரியும் தான் நீர் பாய்ச்சும்போது அது சில புல்லுக்கும் போகும் என்று. அதற்காக விதையே விதைக்காமல் நின்று கொண்டு கேள்வி மட்டும் கேட்டால்? யாருக்கு என்ன பயன்.

சில தெளிவு படுத்தல்கள் இருக்க வேண்டும். எமது நாட்டை பொருத்தமட்டில்  சரியானதை  திரைக்கு பின்னால் இருந்தே செய்ய முடியும்.

சந்தியகாவின் உயிருக்கு உலை வைத்துவிட்டு............ அவரிடம் கேள்வி கேட்க என்ன யோக்கிதம் இருக்கிறது ?

நாளை பூசா சிறையில் யாருக்கு உதவி வேண்டும் என்று. நேரில்  சென்று அவர்களிடம் அவர்களே எழுதிய கடிதங்களையும் வாங்கி வாருங்கள்  என்று என்னையோ ..... உங்களையோ  சாந்தியக்கா கேட்டால் போகவா போகிறோம்????   

*****

****

*****

நாங்கள் அடிகளை நின்றவன் போனவன் என்று எல்லோரிடமும் வாங்கிவிட்டோம். அருகில் யார் வந்து நின்றாலும் இப்போ ஒரு  அச்சம் சந்தேகம் எம் மனதில் வருகிறது.  எமது மனநிலை பாதிப்பு அடைந்துவிட்டதோ என்னமோ. சாந்தியக்கா மேல் சந்தேகம் வருவதை நான்  பிழை என  சொல்ல முடியவில்லை. ................ குறித்த கேள்விகள்  அவர் இங்கு எழுதும் பதிலுடன்  முடியுமெனில். 

இதை ஒரு தீர்வாக என்னால் பார்க்கமுடியவில்லை. வெறும் குழப்பகரமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

நியானி:  ஒரு பந்தி தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நாளை 23.06.2013 GTVஇல் சாந்தியுடன் நான் நடத்திய நேர்காணல் ஐரோப்பிய நேரம் மு.ப. 10:30இற்கு ஒளிபரப்பாகும். எழுத்து மற்றும் நேசக்கரத்தின் செயற்பாடுகள் பற்றி உரையாடியிருக்கிறோம்.

இந்தப் பிரச்சனை இங்கே ஆரம்பிப்பதற்கு முதலே இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டு விட்டது. இல்லையென்றால் இன்னும் பரபரப்பாகவும் சூடாகவும் என்னுடைய கேள்விகளை தொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • 7 months later...
நீண்டகாலம் இப்பகுதியில் எவ்வித கேள்விகளையும் இணைக்கவில்லை. இவ்வருடம் தொடக்கத்தில் நேசக்கரம்அமைப்பில் நீண்டகால பங்களிப்பாளராக இருந்து வரும் ஆரூரன் என்ற உறவு 2கேள்விகளை அண்மையில் மின்னஞ்சலில் தந்திருந்தார். அவர் உலவும் இடங்களில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகம் மிக்க வினாக்கள் அவையெனவும் அதற்கான பதிலை யாழில் தருவது சிறப்பாக இருக்கும் எனவும் கேட்டு  கேள்விகளை  தந்திருக்கிறார்.
 
இதுவரையில் ஆரூரன் தனது பெயரை வெளியிடாமல் செய்த உதவிகள் நிறைய. ஆனால் தனது கேள்வியில் தனது பெயரை வெளியிடலாம் என்ற அனுமதியையும் தந்துள்ளார்.
 
1)  நேசக்கரம்  உப அமைப்புகளை ஆரம்பித்துள்ளீர்கள் ? இவற்றின் நோக்கம் என்ன ? இதற்குள் ஏதாவது அரசியல் நோக்கம் இருக்கிறதா அக்கா ?
 
உப அமைப்புக்களை ஆரம்பித்ததன் நோக்கம் வேலைத்திட்டங்களை எங்கும் விரிவுபுடுத்தவும் நிருவாக ஒழுங்குகளை இலகுவாக மேற்கொள்ளவுமே. மற்றும் ஒவ்வொரு உப அமைப்பும் ஒவ்வொரு விடயங்களுக்கு சிறப்பான ஆற்றலாளர்களை உள்வாங்கி செயற்படுகிறது. 
 
உதாரணம் :- மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம். இதில் அங்கத்துவம் வகிப்போர் பல்கலைக்கழக மாணவர்கள். இவ்வமைப்பானது முதலில் பல்கலைக்கழகமாணவர்களை மையப்படுத்தி ஆரம்பித்தோம். தற்போது ஒட்டுமொத்த கல்விக்கான அமைப்பாக மாற்றியுள்ளோம். இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் கல்வி தொடர்பான பணிகளை சரியாக செய்யக்கூடியவர்கள்.
 
இதேபோல தேன்சிட்டு உளவள அமைப்பானது உளவள மேம்பாடு தொடர்பான சகல வேலைகளையும் செய்கிறது.
 
குறிப்பாக தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாடு அதிகம் மக்களுடன் செயற்படும் அவர்களோடு நேரில் உறவாடி அந்தந்த இடங்களில் முகாமிட்டு செயற்படவுள்ளது. ஆரசியல் எதுவும் உப அமைப்பகளின் உருவாக்கத்தில் இல்லை ஆரூரன். புதிலில் மேலும் தெளிவுகள் இருப்பின் அறியத்தாருங்கள்.
 
Link to comment
Share on other sites

ஆரூரனின் 2வது கேள்வி :-
 
3) நேசக்கரம் இணையத்தில் உங்கள் பணியாளர்கள் என அறிமுகமானவர்கள் உங்கள் உதவி வழங்கல் படங்களில் இருந்தவர்கள் பலர் ஏன் தற்போது இல்லை ? ஒருவரை பணியிலிருந்து விலக்குவதற்கான காரணங்கள் என்ன ?
 
தாயகத்தில் இயங்கிய சிலர் தங்கள் பணிகள் நிமித்தம் விலகியுள்ளார்கள். 2010 எம்முடன் இணைந்து பல்கலைக்கழகமாணவர்கள் உதவி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதில் பங்காற்றிய தீபச்செல்வன் தனது கல்வியைத் தொடர வேண்டிய நிலமையில் ஒதுங்கிக்கொண்டார். எனினும் தீபச்செல்வன் தன்னால் திரும்ப இணைய விரும்புகிற போது வந்து இணைய வேண்டுமென்ற விருப்பில் நேசக்கரம் காத்திருக்கிறது. தீபச்செல்வனுக்கான இடம் எப்போதும் இருக்கிறது. 
 
ஆரம்பத்தில் எம்மோடு சேர்ந்து இயங்கிய கமலாதேவியை விலக்கியமைக்கான காரணம் எமது நிர்வாக ஒழுங்குகளுக்கு மாறாக செயற்பட்டமையால் கமலாதேவியை விலக்கினோம். சுயவிருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல் அல்லது அதிகாரத்தை பாதிக்கப்பட்டவர்கள் மீது செலுத்தும் எந்த பணியாளரையும் எவ்வித கருணையும் இன்றி விலக்குவோம். அதன் அடிப்படையிலேயே கமலாதேவி விலக்கப்பட்டார். கமலதேவி அவர்கள் அண்மையில் தொடர்பு கொண்டு தனது தவறுகளை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொண்டு நேசக்கரத்தில் இணைக்குமாறு கோரி தொடர்பு கொண்டிருந்தார். விதிமுறை எல்லோருக்கும் பொதுவானது. விதியை மீறுவோருக்கான நடவடிக்கைகளும் பொதுவானதே. ஆக கமலாதேவியை மீண்டும் இணைத்துக் கொள்ளமாட்டோம்.
 
இதேபோல 2013 இறுதியில் கூட தாயகத்தில் இயங்கிய 4பேரை பணிநீக்கம் செய்துள்ளோம். நிர்வாக ஒழுங்குகளை மீறி சுயதேவைகளுக்காக எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியது மட்டுமன்றி எம்மால் வழங்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செயற்படுத்தாமல் அறிக்கைகள் சமர்ப்பிக்காமல் விட்டமைக்காகவும் மற்றும் விதிமுறைகளை மீறிய செயற்பாடுகளுக்காகவும் மேற்படி 4பேரையும் விலக்கியுள்ளோம். எம்மால் விலக்கப்படுவோர் மீண்டும் இணைக்கப்படமாட்டார்கள்.
 
ஆரூரன் நீங்கள் குறிப்பிட்டவர்களின் பெயர்கள் சில இங்கே தவிர்க்கப்படுகிறது. 
 
Link to comment
Share on other sites

  • 5 weeks later...

மதிப்பிற்குரிய சகோதரி சாந்தி

உங்களிடம் ஒரு கேள்வி உண்டு.

இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும்

புலிகளுக்கு வெளிப்படையாக 

சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு

எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது?

இதனால்

நேசக்கரத்துடன் இணைந்து இலங்கையில் செயல்படும் கள உறுப்பினர்களுக்கு

பிரச்சனைகள் வராதோ?

அல்லது நேசக்கரத்தின் மூலம் பயன் பெறுகின்றவர்களுக்கு

பிரச்சனைகள் ஏற்படாதோ

இல்லை,

பாம்புக்கு தலையும்

மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களைப் போன்று

நீங்களுமோ?

அக்காச்சி கோபிக்காமல் பதில் சொல்லுவீங்கள் என நினைக்கின்றன்.

நானும் பலமுறை உங்களைப்போல் இந்தமாதிரி யோசித்திருக்கின்றேன் ஒருநாளும் எழுதி கேட்டதில்லை பூச்சி நீங்கள் சம்மந்தப்பட்டவர்களிடத்தில் நேரடியாக கேட்டுள்ளீர்கள் இதனூடாக எமது சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நல்லதுக்கு காலம் இல்லை என்பது. நல்லவற்றுக்குத்தான் சோதனையும் வரும்.
என்றாலும் தங்கத்தை சுட சுடத்தான் ஒளிரும்.

எனினும் சந்தேகங்கள் அர்த்தமற்றவை. அவரது சேவைகள் பெறுமதியானவை. 

உங்கள் சந்தேகங்களுக்கு நிச்சயமாக விடை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய சகோதரி சாந்தி

உங்களிடம் ஒரு கேள்வி உண்டு.

இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும்

புலிகளுக்கு வெளிப்படையாக 

சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு

எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது?

இதனால்

நேசக்கரத்துடன் இணைந்து இலங்கையில் செயல்படும் கள உறுப்பினர்களுக்கு

பிரச்சனைகள் வராதோ?

அல்லது நேசக்கரத்தின் மூலம் பயன் பெறுகின்றவர்களுக்கு

பிரச்சனைகள் ஏற்படாதோ

இல்லை,

பாம்புக்கு தலையும்

மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களைப் போன்று

நீங்களுமோ?

அக்காச்சி கோபிக்காமல் பதில் சொல்லுவீங்கள் என நினைக்கின்றன்.

பூச்சியண்ணா (என்னிலும் 3வயது கூடின அண்ணா நீங்கள் அண்ணா என விழித்தல் தான் பொருத்தம்)
எப்படா கல்லெறியலாம் என காத்திருந்து கருத்தெழுவோரை விட உங்களது  நேர்மை பிடித்திருக்கிறது. முதுகுக்குப் பின்னால் வதந்திகளை பரப்புகிறவர்களை விடவும் நீங்கள் ஆயிரம் மடங்கு உயந்தவராக தெரிகிறீர்கள். . இது உண்மையாகவே எழுதுகிறேன்.
 
கடந்தவருடம் நேசக்கரம் பற்றியும் எனது எழுத்துகள் பற்றியும் இதே களத்தில் ஒருவர் எழுதித்தள்ளியிருந்தார். அப்போதுதான் நேசக்கரம் கேள்வி பதில் என்றொரு பகுதியை ஆரம்பித்தேன். துளித்துளியாய் பகுதியில் பாருங்கள் கேள்வி பதிலில் நீங்கள் சந்தேகிக்கும் சந்தேகங்களுக்கெல்லாம் பதில் இருக்கிறது. பலர் தங்கள் சந்தேகங்களை கேட்டிருந்தார்கள் கேள்விகளாக. அவற்றுக்கான பதில்கள் முழுவதையும் நீங்கள் வாசித்தால் தற்போதைய உங்கள் சந்தேகத்துக்கான பதில் கிடைக்கும். 
 
ஒரு போதும் ஈரூடகவாசியாய் வாழமாட்டேன். எனக்கு அந்தளவு துணிச்சல் இல்லை. பத்துச்சதத்துக்கும் பெறுமதியில்லாதவர்களையெல்லாம் பெறுமதியாக்கியது நாங்கள் தான். அதுபோலத்தான் நானும். நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு சதமும் பெறுமதியற்ற சாதாரமான ஒரு தாய் நான். 
 
அன்னை தெரேசா 12வயதில் தனது வசந்தத்தை துறந்து துறவியாகி உலகில் பலகோடி பெறுமதியான பணிகளைச் செய்துவிட்டு இறந்து போனார். ஆனால் இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்னும் பலரும் அந்தத் தாயை பெயருக்காக மயங்கியவரென்றும் பலகோடி பணத்தை வத்திக்கானின் பிரத்தியேக வங்கியில் வைப்பிலிட்டு விட்டுப்போனார் என்றும் சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டுமே இருக்கிறது.
 
இறுதி வரையும் அன்னை தெரேசா விமர்சனங்கள் மீது தனது எதிர்வினையைப் பதிவு செய்யவேயில்லை. காரணம் ஒவ்வொரு மனித மனமும் வேறு வேறு எண்ணங்களையும் கொண்டது. ஒவ்வொருவருக்கும் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப சந்தேகங்கள் வரும் கேள்விகள் வரும் அந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் இன்று உலகில் பல்லாயிரம் உயிர்கள் பயனடைந்திருக்கமாட்டார்கள்.
 
நான் அன்னை தெரேசாவை இங்கு குறிப்பிடுவது என்னை நியாயப்படுத்துவது  இல்லை இப்போது எதைச் சொன்னாலும் அதை சந்தேகத்தோடு மட்டுமே பார்க்கப்பழகிவிட்ட தமிழ் மனநிலையில் தான் நீங்களும் இருக்கிறீங்கள்.
 
எனது நிலைப்பாடு இதுதான் என்று என்னால் துணிந்து சொல்லவும் செயற்படவும் முடிகிறது. இதுவொரு சாகிறேன் பந்தயம் பிடிபாப்பமெண்ட நிலமைதான். இதில் தடையிடும் நிலமை ஒருநாள் வரும் அப்போது எல்லாப்பணிகளுக்கும் இலங்கையரசு தடைகளையிடும். அப்போது நீங்கள் கூட ஒரு கண்டனத்தைக்கூட எழுதக்கூடும்.
 
நான் ஒருவேளை இல்லாது போனால் நேசக்கரம் மட்டுமே செயலிழக்கும்  ஆனால் நேசக்கரத்துக்கு நிகராக நிகரானவர்கள் ஒரு 300பேர் வரையில் கடந்த 5வருடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு எப்போதும் ஏதோவொரு வகையில் மக்கள் பணி செய்யத் தயாராகவே இருக்கிறார்கள்.
 
இந்த வளர்ச்சியில் அடைந்து ஏமாற்றங்கள் தடைகள் தொல்லைகள் பல. ஆனால்  முடியும் என்ற வேகத்தில் இங்கியே இந்த நிலமை உருவாகியிருக்கிறது. இதனை நேசக்கரத்தின் செய்திகள் மற்றும் முன்னேறத்தினை நீங்கள் அவதானித்தால் நிச்சயம் புரியும். 
 
நான் புலியென்று எங்கும் என்னை நிலைநாட்டவில்லை. ஏதாவது நான் பிறந்த இனத்திற்காகவும் நாட்டிற்காகவும் செய்ய விரும்புகிறேன். அதற்கான சிறு அணிலாய் என பங்கு. ஒரு கொஞ்சப் பிள்ளைகளுக்கு கல்வியும், கொஞ்சப்பேருக்கு நிம்மதியான உணவும் இன்னும் கொஞ்சப்பேருக்கு வாழ வழியையும் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்திருக்கிறது.
 
மாவீரர்கள் வரலாறுகள் இன்னும் கொஞ்சக்காலத்தில் இராமாயணம் போலவும் , மகாபாரதம் போலவும் ஆகிவிடாமலிருக்க மாவீரர்கள் குறிப்புகளையும் அவ்வப்போது எழுதுகிறேன். இதனை விட என்னிடம் எந்த பெரிய பலமோ சக்தியோ இல்லை. காலம் ஒருநாள் உங்களது சந்தேகங்கள் தேவையற்றது என்பதனை புரிய வைக்கும். 
 
துளித்துளியாய் பகுதியில் நேசக்கரம் கேள்வி பதில் பகுதியை முழுமையாக வாசியுங்கள். அனைத்து சந்தேகத்திற்குமான பதில்கள் இருக்கிறது. இங்கே ஒரு மாவீரரின் நினைவுநாளில் அதைக் கொண்டு வந்து நான் ஒட்ட பிறகு பல்முகங்கள் வந்து குதற நியானி கத்தியெடுக்க கடைசியில இந்தத் திரிக்கு பூட்டு விழும். அதைவிட துளித்துளியாய் பகுதியில் உங்கள் சந்தேகங்களை கேட்டால் இது பலருக்கும் பயனாக இருக்கும்.
 
Link to comment
Share on other sites

நானும் பலமுறை உங்களைப்போல் இந்தமாதிரி யோசித்திருக்கின்றேன் ஒருநாளும் எழுதி கேட்டதில்லை பூச்சி நீங்கள் சம்மந்தப்பட்டவர்களிடத்தில் நேரடியாக கேட்டுள்ளீர்கள் இதனூடாக எமது சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 

துளித்துளியாய் பகுதியில் கூட பல செய்திகளை ஒட்டியிருக்கிறீங்கள். அங்:கெல்லாம் ஏனோ சந்தேகம் வராமல் இருந்ததோ தெரியவில்லை. அண்மையில் அனந்தியின் மக்கள் பணிகள் பற்றி ஒட்டியிருந்தீங்கள். அனந்தி நாட்டிலும் நிற்கிறார் அதேவேளை புலத்தில் இயங்கும் அனைத்துலக செயலகத்தினாலும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்கப்பட்டுள்ளார். 

ஓடியோடி செய்திகளை மட்டும் ஒட்டி ஒப்பாரி வைத்தால் மட்டும் போதாது பூச்சி போல நேர்மையான மனமும் துணிச்சலும் வேணும். பாரதியாரின் பாடல் ஒன்று :- நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி. என் பாடல் தான் நினைவில் வருகிறது. 

உங்கள் போன்ற தேசியத்தூண்களின் சந்தேகங்கள் தொல்லைகள்  செயற்பட சலிப்பாக ஏன்  மன அமைதியைக் கெடுத்து ஒரு சவமும் வேண்டாம் என ஒதுங்கக்கூட பலமுறை தள்ளியிருக்கிறது. ஆனால் சாவின் நுனிவரை சென்று மீண்ட ஒவ்வொரு உயரின் குரலும் , உயிரைத்தந்த ஒவ்வொரு மாவீரரின் கனவுமே எல்லாத்தையும் தள்ளிவிட்டு வேகமாய் இயங்கத் தக்க பலத்தை தந்தது.
 
அந்தப் புனிதங்களின் ஆசியும் ஆன்ம பலமும் உள்ளவரை இப்படியே புலியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் எனது வெளிப்பாட்டையும் முடிந்த மக்களுக்கான உதவிகளையும் செய்து கொண்டேயிருப்பேன். இதையும் நிறுத்த ஒருநாளைக்கு நிச்சயம் தடைவிழும் அப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்களைப்போல செய்திகளை மட்டும் ஒட்டிக் கொண்டு தேசியம் வளர்க்கமாட்டேன் அப்போதும் போராடுவேன். 
 
மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்கு.

துளி துளியாக பகுதியில் நான் இணைத்த இணைப்புக்களில் அவர்கள் தமது சொந்தப்பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள்.
நீங்கள் நடத்தும் நேசக்கரம் அப்படி இல்லை புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து கிடைக்கும் பண உதவியினால் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவுகின்றீர்கள் ஆனந்தி சசிதரனுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் அவரிடம்தான் கேட்க்கவேண்டும். 
புலத்தில் இருந்து தாயக விடுதலைக்கு பங்களிப்பு செய்தவர்களை சிலரை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிரர் பிடித்து சிறையில் வைத்து இருக்கிறார்கள் அதில் சமீபத்தில் ஒருவர் சிறைக்குள் கொல்லவும் பட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறு சிறிலங்காவில் இறுக்கமான நிலை இருக்கும்போது நீங்கள் இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும் புலிகளுக்கு வெளிப்படையாக 
சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு
எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது? என்பதுதான் எனது கேள்வி இதற்க்கு பதில் கூறுவதற்கு பதிலாக என்னை முடிந்தவரைக்கும் திட்டி தீர்த்து உள்ளீர்கள் இதில் இருந்து தெரிகின்றது உங்களின் பெரியமனசு .. 
 
உங்களைப்போல் பந்தி பந்தியாக எழுதும் தன்மை என்னிடம் இல்லை இதற்க்கு மேல் இதைப்பற்றி எழுதுவதாக இல்லை ..

துளித்துளியாய் பகுதியில் நீங்கள் இணைத்த செய்திகளில் நான் குறித்தது அனந்தியின் உங்கள் வெட்டு ஒட்டுபற்றி. அனந்தி அவர்களை உங்களுக்கு அரசியல்வாதியாய் தெரியலாம். அனந்தி எனக்கு நண்பர் எழிலனின் மனைவியாகவும் துணிச்சல் மிக்க மக்கள் பணிசெய்யும் சிறந்த சமூகத்தாயாகவும் தெரியும்.  செய்தியில் எழுதி அறிவித்துவிட்டு அனந்தியுடன் நட்பை பேணும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை தமிழரசு. வளமைபோன்ற கூட்டத்தோடு கூட்டமாக கல்லெறிந்து யாரையாவது சிண்டு முடிஞ்சு கூத்துப்பார்க்கும் உங்கள் பணியில் அனந்தியையம் என்னையும் சிண்டு முடிஞ்சுவிடும் உங்கள் முயற்சி திருவினையாகாது. 
 
அனந்தியை உதாரணம் காட்டியமைக்கான காரணம் யாதெனில் :- எல்லா எதிர்ப்புகள் தடைகளையும் தாண்டி அனந்தி அவர்கள் இயங்குகிறார் என்பதனை விளக்கவே. இதிலிருந்து ஏதாவது உங்கள் தமிழரச அறிவுக்கு புரியும் என நினைத்தே எழுதினேன். 
 
நேசக்கரம் மக்கள் அமைப்பு. அதாகப்பட்டது அனந்தியின் பணிபோல. இந்த நேசக்கரத்தில் ஒரு பங்களிப்பாளர் மட்டுமே இங்கு நீங்கள் வயிற்றுவலியில் துடித்து சந்தேகப்படும் சாந்தியென்கிற தனி மனிசி இதில் ஒரு பாகம் மட்டுமே. கடந்த 5வருடத்தில் தனிப்பட்ட எனது உழைப்பிலிருந்தும் வங்கியில் கடனெடுத்து சில போராளிகளுக்கு உதவியதில் நான் அடைந்திருக்கும் கடனின் தொகை 14ஆயிரம் யூரோக்கள். தனியே உதவி செய்பவர்களின் உதவிகளை மட்டும் கொடுத்துவிட்டு நான் சும்மா இருக்கவில்லை ஐயா. இதுவும் சிலவேளை உங்கள் அகராதியில் அர்த்தம் மாறுபடலாம். 
 
ஒரு சதத்துக்கும் பயனில்லாத என்னையெல்லாம் வைச்சு ஒரு ஆணியும் புடுங்கேலாதென்பதையும் உங்கள் தேசிய அறிவில் நான் பெரிய புள்ளியாக தெரிந்தால் அது உங்கள் குற்றமே.நேசக்கரம் ஐரொப்பிய சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு ஆபிரிக்காவிலும் இயங்க முடியும். இலங்கையின் உதவி அமைப்புகளின் சட்ட வரையறைகளுக்கு எந்த இடைஞ்சலும் நேசக்கரம் இதுவரை கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மட்டுமே செய்கிறது. 
 
நேசக்கரத்தின் பணியாளர் ஒருவர் 8மாதங்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. எனினும் அந்த நபர் இன்னும் தனது பணியை கடமையை விட்டு ஒதுங்கவில்லை. இன்னும் சிலர் மனிதவுரிமை அமைப்புகள் வரை செல்ல வேண்டிய நிலமைகள் கூட வந்தது. பலருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் இடைஞ்சல்களில் பணியாளர்கள் பலரது பாதுகாப்பு தொடர்பில் மனிதவுரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டு சிலர் நாட்டைவிட்டுக்கூட வெளியேறி ஆசிய நாடுகளில் அலைகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தான் நேசித்து மக்களுக்கு பணி செய்ய நேசக்கரத்தின் பணியாளர்களாக இயங்கியது மட்டும்தான். இதையெல்லாம் உங்களுக்கு விளக்கி நீங்கள் புரிந்து இரக்கம் தர வேண்டுமென்றல்ல. உங்களது நஞ்சுத்தனமான எண்ணம் எங்களிடம் இல்லையென்பதனை தெளிவுபடுத்தவே.
 
இலக்கில் தெளிவிருந்தால் வெற்றியடைவேன் என்ற துணிச்சல் இருந்தால் நீங்களோ அல்லது பூச்சி பூரான் புழுக்கள் கூட எந்தத்தடையையும் தாண்ட முடியும். புலியை நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஆதரிக்கிறேன் நேசிக்கிறேன். என்னால் உதவியமைப்பிலும் இயங்கிக் கொண்டு தாயகக்கனவோடு மடிந்த மாவீரர்கள் வரலாற்றையும் எழுத முடியும். நேசக்கரம் புலிகளின் பிரதியில்ல எனது எழுத்தும் நேசக்கரமும் இருவேறு பாதையில் பயணிக்கின்றன. என்னால் இவ்விரண்டு பாதையிலும் இலக்குத் தவறாமல் பயணிக்க முடியும்.
 
தமிழனுக்கு தமிழன் காட்டிக்கொடுப்பாளன் துரோகம் வஞ்சம்  பிற இனத்தவரால் இல்லை. எங்களால் தான் எங்களின் அழிவு. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள். 
 
இங்கு உங்களை திட்டித் தீர்த்ததாக அலுத்து கொள்ளாமாட்டீர்கள். பந்தி பந்தியாய் விளக்கியும் விளங்காமல் திரும்பவும் வந்து சந்தேகம் என்று வந்த போது திருக்குறள் போல விளக்கம் தர என்னிடம் அந்தளவு தமிழரச அறிவு இல்லையென்பதால் நீண்ட விளக்கமாய் தந்துள்ளேன்.
 
எனக்கெல்லாம் பெரீய மனசென்று உங்கள் பெரிய மனசால் யோசிக்காதையுங்கோ. அவ்வளவு நான் பெரீய ஆளில்லை.
 
பி.கு :- துளித்துளியாய் பகுதியில் உங்கள் சந்தேகங்கள் போல பலரது சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இருக்கிறது. அங்கே போய் வாசித்திருந்தால் இங்கு வந்து ஒரு மாவீரரின் நினைவுநாளில் வந்து நின்று எழுதியிருக்கமாட்டீர்கள். 
 
நன்றிகள் தமிழரசு. இத்தகைய உங்கள் வஞ்சத்தினை அறிகிற போதெல்லாம் மீள மீள நிறையச் செய்ய வேண்டுமென்ற எண்ணமே வலுக்கிறது. இப்படி இடைக்கிடை வந்து ஏதாவது எழுதுங்கோ அப்பதான் இன்னும் பலநூறு பணிகளைச் செய்ய தூண்டுதலாக இருக்கும்.
 
இறுதியாக :- வாழ்க உங்கள் வெட்டு ஒட்டும் பணி. எனினும் ஒருநாளைக்கு நிச்சயம் தடைவிழும் அப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்களைப்போல செய்திகளை மட்டும் ஒட்டிக் கொண்டு தேசியம் வளர்க்கமாட்டேன் அப்போதும் போராடுவேன். 
 
உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது உங்கள் சோற்றில் மண் அள்ளி போட்டுவிட்டேனா அல்லது பிழைப்பை கெடுத்து விட்டேனா இப்படி கோபம் கொள்ளும் அளவுக்கு நான் ஒ ன்றும் பெரிதாக சொல்லவில்லையே எனக்குள்ள சந்தேகங்களை உங்கள் முன் வைத்தேன் அதைத்தவிர வேறு நான் என்ன செய்தேன் நீங்கள் தேசியத்துக்கு செய்தவற்றை   கூவி கூவி வியாபாரம் செய்கின்றீர்கள் உண்மையில் தேசியத்துக்கு அற்பனித்தவர்கள் பலர் மௌனமாக வாழ்ந்து வருகின்றார்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்கள் அதை சொல்லி தற்பெருமை தேடிக்கொள்ள மாட்டார்கள் நீங்கள் எப்படி புனிதமான புலிகள் அமைப்புடன் ... எனக்கு சத்தியமாக புரியவில்லை உங்களின் தொடர்பு பற்றி சொல்வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் எழுதுகின்றீர்களா இதெல்லாவற்றுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் அதுவரைக்கும் உங்களின் பாணி இல்லை பனி தொடரட்டும் 

பி;கு : வெட்டி ஒட்டுவதுதான் எனக்கு தெரியும் உங்களைப்போல பந்தி பந்தியாக எழுதி பிழைப்பு நடத்தவேண்டிய தேவை எனக்கு இல்லை 

Link to comment
Share on other sites

இந்த திரியை வாசிக்கின்ற அனைவரிடமும் கேட்கின்றேன் ஒரு கேள்வியை

இவர் என் கேள்விகளுக்கு சரியாக பதில் தந்துள்ளாரா என்று?

என் கேள்வி

எப்படி புலிகளுக்கு ஆதரவை வெளிப்படையாகக் கொடுத்துக் கொண்டு இலங்கையில் இயங்கும் ஒரு அமைப்பை நடாத்த முனைகின்றது?

இது தான் என் கேள்வி

தன்னை திரேசாவாகவும் (நல்ல வேளை அவர் உயிருடன் இல்லை. பாவம் இருந்து இருந்தால் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி அதில் விழுந்தாவது தற்கொலை செய்து இருப்பார்)

என் கேள்விக்கு இவர் எழுதிய சளம்பல்களை வாசித்துப் பாருங்கள்.

இவரது முன்னால் 'உடன் பிறவா சகோதரம் சாத்திரியின்' இன்றைய நிலை அனைவரும் அறிந்தது. ஜேர்மனுக்கு தொலைபேசி எடுத்தால் பிரான்ஸின் நீசில் அதனை ஒலிப்பதிவு செய்யும் அளவுக்கு இவர்கள் சகோதர்கள். இன்று வெளி உலகுக்கு எதிரிகள்.

இன்று தன் பழைய பதிவுகளுக்கு உயிர் ஊட்டி தன்னை தேசிய வாதியாக்குகின்றார். இவர் 2010, 2011, 2012, 2013  இல் இதே திரிகளில் ஒரு வணக்கம் கூட செலுத்தவில்லை. இதே சாந்தி தமிழ் செல்வன் அண்ணர் செத்தவுடன் வன்னியில் அவருக்கு எதிராக மக்கள் சுவரொட்டி ஒட்டினார்கள் என்று (அது உண்மை) எழுதியவர்

நேர்மையும் நெஞ்சில் துணிவும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்

1. புலிகளுக்கு நேரடி ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டு எப்படி இலங்கையில் புனர்வாழ்வு அமைப்பை நடத்த முனைகின்றது?

1.1. மகிந்த அந்தளவுக்கு ஜனநாயக மனிதரா? புலி ஆதரவு என்றாலும் மக்களின் துயர் துடைக்கும் அமைப்புகளை தன் மண்ணில் இயங்க வைக்க?

1.2. அப்படி என்றால் என்ன ..ருக்கு போர்க் குற்ற விசாரணை?

2. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டுவதால் உங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுபெடுப்பீர்களா?

3. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டி பெறும் உதவிகளால் நன்மை அடையும் அப்பாவிகளுக்கு இலங்கை இராணுவத்தால் பிரச்சனை வராதா

இல்லை

இதை எல்லாம் சிந்திக்க முடியாத அடி முட்டாளா நீங்கள்?

ஐயா இதில எங்கைப்பா கோவம் உங்களில ? உண்மையைச் சொல்லியிருக்கிறேன். நான் உங்களைப்போல கதிரையிலிருந்து தண்டச்சோறு சாப்பிடேல்ல. 2வேலை உடலை வருத்தி உழைக்கிறேன். அதேநேரம் என்னால் முடிந்தவரை 8மாணவர்களை எனது தனித்த உழைப்பில் கல்வி கற்க உதவுகிறேன். இதுமட்டுமில்லை எனது சக்திக்கு அப்பாற்பட்டு உங்கள் போன்ற தேசியவாதிகளால் கைவிடப்பட்ட போராளிகளுக்கு சோறுபோடுகிறேன்.அவர்களே இதனை நீ யாருக்கும் முன்னால் துணிந்து சொல்லு என அனுமதி தந்துள்ளார்கள். இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு பிடிக்காது நீங்கள் சொல்லாமல்  செய்கிறேன் என்று சொல்லுவீங்கள். 

உங்கள் சந்தேகத்துக்கான நாகரீகமான பதிலே நான் தந்தது. அதையே புரிந்து கொள்ள முடியாமல் கூவி கூவி விற்பனை மொழியில் பதில் தேவையென்ற உங்கள் புரிதலுக்கு இப்படித்தானெ பதில் தர முடியும்.

புனிதமான அமைப்பு புலிகளை புனிதத்தோடு இன்றுவரையும் நேசிக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு இன்னும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கெல்லாம் செய்த எதையும் தேசியத்தை காக்க மறைத்து மௌனப்பணி செய்யிறீங்கள். ஆனால் வெளிப்படையாக இயங்க வேண்டிய காலத்தின் தேவையை ஆயிரத்தெட்டு தொல்லைகள் சவால்களோடு முன்னெடுக்கிற நான் மட்டும் உங்களுக்கு எல்லாத்தையும் மறைச்சு மௌனமா உங்கள் வஞ்சம் முழுவதையும் ஏற்க வேணும். இது எந்த உலக நியாயமோ தெரியேல்ல.

என்னைப்பற்றி சொல்ல பல புலிகள் வாழ்கிறார்கள். இன்னும் சாகவில்லை. ஆனால் உங்களோடு நின்று விவாதிக்க அவர்களால் முடியாதுள்ளது. ஏன் இதே யாழ் களத்தில் கூட இருக்கிறார்கள் கருத்தாளர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேண்டிக் கொள்கிறார்கள். இங்கே விவாதித்து நேரத்தை வீணாக்காமல் உனது பணியைச் செய்யென்பதே.
 
நீங்கள் சொல்வது போல விரைவில் விடை கிடைக்கும் அப்போது முகத்தை மறைக்க இடமின்றி நீங்கள் ஒளிச்சு இன்னொரு முகமூடியோடு வரப்போவதும் நிச்சயம்.
 
நீங்களோ இல்லை பூச்சி பூரான் தேள் என்னதான் குத்தி முறிஞ்சாலும் நேசக்கரம் சாகாது. அது தனது இனத்துக்கான பணிகளில் தனது இலக்கில் தவறாது பயணித்துக் கொண்டேயிருக்கும். 
 
இதற்கு மேல் உங்களுக்காக எனது நேரத்தை செலவிடமாட்டேன் மன்னிக்கவும். உங்களுக்கு தந்த பதிலில் நாகரீகமாகவே பதில்கள் இருக்கிறது அவற்றை புரிந்து கொள்ள முடியாததால் தொடர்ந்து உங்களுடன் விவாதித்து எனது நேரத்தை விரலாமாக்காமல் விடுகிறேன்.
Link to comment
Share on other sites

இந்த திரியை வாசிக்கின்ற அனைவரிடமும் கேட்கின்றேன் ஒரு கேள்வியை

இவர் என் கேள்விகளுக்கு சரியாக பதில் தந்துள்ளாரா என்று?

என் கேள்வி

எப்படி புலிகளுக்கு ஆதரவை வெளிப்படையாகக் கொடுத்துக் கொண்டு இலங்கையில் இயங்கும் ஒரு அமைப்பை நடாத்த முனைகின்றது?

அரசியல் நாகரீகம் கருத்து நாகரீகம் என்றொன்று இருக்கிறது பூச்சியண்ணே அந்த நாகரீக அடிப்படையில் உங்கள் கேள்விக்கான பதில் தந்தாச்சு. அதை உங்களால் விளங்க முடியேல்ல என்றால் என்ன செய்யிறது. 
 
புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவை கொடுத்து எழுதிக் கொண்டு சமநேரத்தில் என்னால் சமூகப்பணியையும் செய்ய முடியும். சமூகப்பணி , எழுத்து இவ்விரண்டு பாதைகளிலும் இலக்குத் தவறாமல் என்னால் இயங்க முடியும் இங்குகிறேன். இதன்படியே நேசக்கரத்தை இயக்க முடிகிறது.

தன்னை திரேசாவாகவும் (நல்ல வேளை அவர் உயிருடன் இல்லை. பாவம் இருந்து இருந்தால் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி அதில் விழுந்தாவது தற்கொலை செய்து இருப்பார்)

பொதுப்பணிகளில் உலகில் எல்லா இனங்களும் எல்லா மனிதர்களும் ஒரேமாதிரியான சிந்தனையுள்ளவர்கள் என்றதை சுட்டிக்காட்டவே அன்னைதெரேசாவை உதாரணம் காட்டினேன். இதைப் புரிந்து கொள்ளாமல் என்னை அன்னை தெரேசாவாக எழுதியதாக புரிந்த உங்கள் எண்ணத்தில் தான் தவறு.

Link to comment
Share on other sites

இவரது முன்னால் 'உடன் பிறவா சகோதரம் சாத்திரியின்' இன்றைய நிலை அனைவரும் அறிந்தது. ஜேர்மனுக்கு தொலைபேசி எடுத்தால் பிரான்ஸின் நீசில் அதனை ஒலிப்பதிவு செய்யும் அளவுக்கு இவர்கள் சகோதர்கள். இன்று வெளி உலகுக்கு எதிரிகள்.

சாத்திரியுடன் உங்களுக்கு ஏதும் தீர்க்கமுடியாத நோயிருந்தால் சாத்திரியிடம் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள். இங்கு எனது எழுத்துக்குள் தொடர்பில்லாத ஆட்களை செருகி உங்கள் பெருந்தன்மையை நிலைநிறுத்தாதீர்கள்.

எனக்கு உடனே பிறந்த பின்னரே பிறந்த சகோதர சகோதரிகள் நிறையப்பேர். அதுபோல உங்கள் கற்பனையில் ஒரு உடன்பிறவா சகோதரத்தவத்தை தந்தமைக்கு நன்றிகள். ஏற்கனவே நெல்லையன் என்ற முன்னால் கருத்தாளர் தனக்குள்ளே ஒரு கற்பிதத்தை வைத்திருந்தார் தனது குரலை பதிவு செய்வதாக. அப்படி யாரின் குரலையும் பதிவு செய்து ரசிக்க இவர்கள் யாரும் அந்தளவு பெரியபுலனாய்வாளர்களோ அமெரிக்க உளவு நிறுவனமோ அல்ல.

ஆனால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒலிப்பதிவு செய்து உங்களது குரலை பரப்புவதற்கு நீங்களோ அல்லது நெல்லையனோ அமெரிக்க உளவு நிறுவனம் இல்லை. தனக்குள்ளே தன்னை பெருமைப்படுத்த சிலர் இத்தகைய உள(ழ)வு உழலாம். இங்கு சாத்திரியும் உங்களைப்போல ஒரு கருத்தாளர் மட்டுமே எனக்கு. 
 
ஏற்கனவே சாத்திரி கடந்த வருடம் இதே பகுதியில் தனது உளவுத்திறனை பூச்சியின் கேள்விகள் போலே கேட்டு தனது முகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை அனைத்து யாழ் கள உறவுகளும் அறிவர். 
 
ஏற்கனவே சாத்திரி இங்கு களத்தில் நேசக்கரத்தை அழிப்பேன் புலிகளை அழித்தது போல என எழுதிய நேரமே யாழில் பலர் சாத்திரி என்றவரை அறிந்திருந்தார்கள். சாத்திரிக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை பூச்சியண்ணே. நீசிற்கு நீங்களும் போய் உங்கள் ஆருயிர் நண்பர் சாத்திரியுடன் தண்ணியடித்து நட்பை பரிமாறியது போல எனக்கு நட்பு உறவு எதுவுமில்லை. சக கருத்தாளர் மட்டுமே. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்மை செய்வோரை குழப்புவதற்கு எங்கும் ஒரு கூட்டம் இருக்கும். ஒரு கதிரையில் இருந்து தகவல்களை வெட்டி ஒட்டுவதற்கும், செய்கையில் காட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த களத்தில் நேசக்கரம் தொடர்பான கருத்துகளில், அவர் என்ன செய்கிறார், எவ்வாறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுகிறார் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது. இன்று பேச்சளவில் மட்டும் ஒருவித நாகரீகமாக எமது தேசியமும் போராட்டமும் பெரும்பாலாரோரால் முன்னெடுக்கப்படும்போது செயலில் சிலவற்றையேனும் செய்து, அது சம்பந்தமான வரவு செலவுகளை இங்கு பகிரங்கமாக வைப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விடுத்து நன்மை செய்பவர்கள்மீது வெறும் அவதூறுகளை சொல்லுவோரால் எதுவும் நடைபெறாப் போவதில்லை. ஒரு சிலரின் தனி மனித தாக்குதலால் நேசக்கரத்தின் பணிகள் முடங்காமல், மேலும் மேலும் பலருக்கும் பயன்பட்டு சிறக்க வேண்டும்.

போற்றுவார் போர்ரட்டும் தூற்றுவார் தூற்றட்டும்! நாம் எமது பாதையில் துணிவுடன் நடப்போம்!!

Link to comment
Share on other sites

இன்று தன் பழைய பதிவுகளுக்கு உயிர் ஊட்டி தன்னை தேசிய வாதியாக்குகின்றார். இவர் 2010, 2011, 2012, 2013  இல் இதே திரிகளில் ஒரு வணக்கம் கூட செலுத்தவில்லை. இதே சாந்தி தமிழ் செல்வன் அண்ணர் செத்தவுடன் வன்னியில் அவருக்கு எதிராக மக்கள் சுவரொட்டி ஒட்டினார்கள் என்று (அது உண்மை) எழுதியவர்

நேர்மையும் நெஞ்சில் துணிவும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்

என்னை தேசியவாதியென்று நீங்கள் மதிப்பு தந்தமைக்கு நன்றி. நான் தேசியத்துரோகி. தமிழ்ச்செல்வண்ணாவின் மரணம் பற்றி வந்த செய்தியொன்றில் பலர் எழுதிய கருத்துக்களில் எனது கருத்தையும் பதிவு செய்தேன் ஐயா. அப்போது வந்த சுவரொட்டி உண்மையென்று நீங்கள் அடைப்புக்குறியிட்டு எழுதியிருக்கிறீங்கள். 
 
புலிகளை ஒருகாலம் ஊடகங்கள் முதல் எதிர்த்த புளொட் சிவராம் புலிகளால் மாமனிதராக கௌரவிக்கப்பட்டார். புலிகளின் அரசியல் இராஜதந்திரியாகக்கூட ஏற்கும் அளவு மாமனிதர் சிவராம் இருந்தார். சிவராம் அளவுக்கு நான் உயரவோ தாழவோ இல்லை. ஆனால்  ஒரு செய்தியில் எனது கருத்தை பதிவு செய்தேன். ஏன் இப்போதும் முரண்படும் செய்திகள் கருத்துக்களில் எனது எதிர்புகளை பதிவு செய்கிறேன்.
 
நேர்மையும் துணிவும் என்னோடு கூடப்பிறந்தது. நீங்கள் எதிர்பார்க்கும் அதே வடிவங்களோடுதான் பதில் தந்துள்ளேன். அதாகப்பட்டது அரசியல் ,கருத்து நாகரீகத்தின் உட்பட்டு. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கிக் கொண்டு எவ்வாறு உதவி செய்யமுடியும் என்று சந்தேகம் தெரிவிக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது. அவர் இறந்த புலிகளூக்கு அஞ்சலி செலுத்துகிறார். அவர்களின் வாழ்க்கையை நினைவு கூருகிறார். புலிகளூக்கு ஆதரவு கொடுப்பதற்கும் அவர்களைப்பற்றி எழுதுவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அது இவர்களுக்கு புரியாவிட்டாலும் சிங்கள அரசுக்கு புரியும்.

Link to comment
Share on other sites

1. புலிகளுக்கு நேரடி ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டு எப்படி இலங்கையில் புனர்வாழ்வு அமைப்பை நடத்த முனைகின்றது?

1.1. மகிந்த அந்தளவுக்கு ஜனநாயக மனிதரா? புலி ஆதரவு என்றாலும் மக்களின் துயர் துடைக்கும் அமைப்புகளை தன் மண்ணில் இயங்க வைக்க?

நேசக்கரம் புனர்வாழ்வு அமைப்பல்ல. மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் அமைப்பு. இலங்கையில் மட்டுமல்ல ஆபிரிக்காவில் அமெரிக்காவில் ஏன் உலகில் எங்குமே இயங்கக்கூடிய  தன்னார்வ தொண்டு அமைப்பு. இது ஐரொப்பிய சட்ட விதிகளுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அதுபோலவே இலங்கையில் தனது கிளையமைப்பை உருவாக்கி இயங்குகிறது. அதாகப்பட்டது செஞ்சிலுவைச்சங்கம்,IOM,American aid, un இத்தகைய அமைப்புகள் போலவே இயங்குகிறது.
 
இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு உதவினால் அதில் 99சதவீதமானவர்கள் புலிகளுடன் தொடர்புபட்டவர்களே இருக்கிறார்கள். அதாவது போராளிகளாக , மாவீரர் குடும்பங்களாக, மாவீரர்களின் பிள்ளைகளாக.....இப்படி பார்த்தால் அரசாங்கம் மிஞ்சியிருக்கிற ஒவ்வொரு தமிழரையும் கொன்றுவிட வேண்டும்.
 
உலகின் பார்வைக்கு எல்லாரையும் நாட்டில் இயங்க அனுமதித்துள்ளேன் என்ற அரசியல் நோக்கில் அரசாங்கம் இப்போது அனைத்து அமைப்புகளையும் இயங்க விட்டுள்ளது. இப்போது உதவி அமைப்புகளில் கைவைத்தால் அரசு தன் கண்ணிலேயே குற்றிக் கொள்ளும் நிலமையை உருவாக்கி நேசக்கரம் போன்ற வருடாந்தம் ஒரு மில்லியன்கூட தேறாத உதவிகளை வழங்கும் அமைப்புகளில் கைவைத்து எந்த வெற்றியையும் காணமுடியாது. நேசக்கரம் இயங்காது போனால்  இலங்கையில் தமிழர்கள் அனைவரும் உயிரை மாய்க்கவோ தற்கொலை பண்ணிக்கொண்டு சாகவோமாட்டார்கள். நேசக்கரம் போனால் இன்னொரு கரம் என்ற நிலமை உருவாகிவிட்டது.
 
குறிப்பாக சொல்லப்போனால் இங்கு பலர் தேவையில்லாத கற்பனைகளில் மிதந்து செய்யப்படும் ஒருதுளி உதவியைக்கூட செய்யாதே என்பது போலவே இருக்கிறது.
Link to comment
Share on other sites

1.2. அப்படி என்றால் என்ன ..ருக்கு போர்க் குற்ற விசாரணை?

அப்படியானால் போர்க்குற்ற விசாரணை முடியும் மட்டும் எந்த போரால் பாதிக்கப்பட்ட சனமும் சாப்பிடாமல் சாகச்சொல்கிறீங்களா ?  போர்க்குற்ற விசாரணை , பொதுமக்களுக்கான மனிதாபிமானப்பணி , பெண்கள் மீதான கொடுமைகள் ,முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு இவையாவும் வேறு வேறு தளங்களில் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள். 

உலகில் போர்க்குற்றங்கள் பற்றி நூற்றாண்டுகள் கடந்தும் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் இதுவரை நீதி உடனடியாக கிடைத்தது வரலாறில்லை. போர்க்குற்ற விசாரணைகள் முடியும் வரை காத்திருந்துதான் போரால் பாதிக்கப்பட்டவர்களெல்லாம் சாப்பிட வேண்டுமென்றால் போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் அனைவரும் தற்கொலைதான் செய்து கொள்ள வேணும். 
Link to comment
Share on other sites

2. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டுவதால் உங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுபெடுப்பீர்களா?

அவர்கள் யாரும் இங்கிருந்து தட்டச்சு யுத்தம் செய்பவர்களில்லை. யதார்த்தவாதிகள். அவர்கள் ஆயுதம் எடுத்து போராடி அடுத்த வருடம் தனியரசை உருவாக்கப்போகிறோம் என முன்வரவில்லை. இழந்தவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி கல்வி ,பொருளாதாரம் ,அரசியலில் முன்னேறக்கூடிய ஆற்றல் மிக்கவர்களை உருவாக்க தங்களை இப்பணியில் இணைத்துள்ளார்கள். தங்களுக்கு வரும் பிரச்சனைகளையும் தாங்களே சமாளிக்கவும் சாவென்றால் அதையும் ஏற்கவும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களுக்காக நீங்கள் முதலிக்கண்ணீர் வடிப்பதைக்கூட விரும்பாத துணிச்சல் மிக்கவர்கள். ஆக உங்கள் முதலைக்கண்ணீர் என்மீதான வஞ்சத்தில் எழுந்ததே தவிர களப்பணியாளர்களின் மீதான கரிசனையில் இல்லையென்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இல்லை இதுவும் சளாப்பல் என்று அர்த்தப்படுத்தினால் அது உங்கள் விளக்கம் மட்டுமே.

2. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டுவதால் உங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுபெடுப்பீர்களா?

3. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டி பெறும் உதவிகளால் நன்மை அடையும் அப்பாவிகளுக்கு இலங்கை இராணுவத்தால் பிரச்சனை வராதா

உங்கள் கேள்விகள் இரண்டும் ஒரே பதிலையே எதிர்பார்கிறது. முதலாவது கேள்விக்கான பதிலிலேயே இறுதிக் கேள்விக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இல்லை

இதை எல்லாம் சிந்திக்க முடியாத அடி முட்டாளா நீங்கள்?

ஓம் நான் அடிமுடி அறியாத முட்டாள். என்னண்ணே இப்பவே இந்தப்புதினம் உங்களுக்குத் தெரியும். அடிமுட்டாளெண்டதாலை தானே உங்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.