Jump to content

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்

Recommended Posts

இத்தலைப்பில் மனம் திருந்தி அல்ல மனம் வருந்தி கருத்தெழுத வேண்டிய அளவிற்கு இன்றைய யாழ் கள உறவுகள் சிலரின் செயற்பாடுகள் இருந்து கொண்டிருக்குது..! நேசக்கரத்திற்கு 5 சதம் ஈயாதவங்க கூட.. நாளை இங்கு கேள்வி கேட்பாங்க போல இருக்கே. அதற்கு சாந்தி அக்கா பதில் சொல்ல வேண்டிய நிலமை..! இப்படியே போய்க்கிட்டு இருந்தா.. ஒரு தொண்டு அமைப்பை நடத்த முடியாது.. தெருவால போறவன் வாறவன் கேட்கிற கேணத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருப்பதை தான் செய்ய முடியும்..! :lol::icon_idea:

நேசக்கரம் மீதான எங்களின் கடந்த காலக் குற்றச்சாட்டுக்கள் என்பன.. அதன் செயற்பாடுகள் தொடர்பானதல்ல. அதன் செயற்திட்டங்கள் தொடர்பானது. அதனை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கூட.. இதில் கருத்தெழுவது வேடிக்கையாக உள்ளது. இன்று நேசக்கரம் பன்முகத் தன்மையுள்ள செயற்திட்டங்களைச் செய்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அது இலக்கை எட்ட தொடர்ந்து பயணிக்க வேண்டியும் கொள்கிறோம்..!

இத்தோடு இத்தலைப்பில் எங்கள் கருத்தை நிறைவுக்கு கொண்டு வருகிறோம்.

நன்றி. :)

செயற்திட்டங்கள் பிழையாக இருந்தால் நீங்கள் முன்மாதிரியான திட்டங்களை

முன்மொழிந்தது உதவியிருக்கலாம் .

விமர்சனங்கள் மனிதனை அல்லது அமைப்புகளை நல்வழிப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

 • Replies 86
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

செயற்திட்டங்கள் பிழையாக இருந்தால் நீங்கள் முன்மாதிரியான திட்டங்களை

முன்மொழிந்தது உதவியிருக்கலாம் .

விமர்சனங்கள் மனிதனை அல்லது அமைப்புகளை நல்வழிப்படுத்தவேண்டும்.

நீங்கள் மேற்படி தலைப்புக்களைத் தேடிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதைப் படிக்காமல்..இப்படி சகட்டு மேனிக்கு எழுதப்படாது. அதில் பிரேரணைகளையும் செய்தே உள்ளோம்..! :D

விடுங்க மருதங்கேணி. நேசக்கரத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பங்களிப்புச் செய்யப் போகினம் போல இருக்குது. அதுதான் அக்கிரிமெண்ட் போட கிளியரன்ஸ் போய்க்கிட்டு இருக்காமில்ல..! :lol::D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேட்கப்படும் கேள்விக்கு கொடுக்கும் பதில் நேர்மையாக இருந்தால் இன்று 5 சதம் கொடுக்காதவன் கூட நாளைக்கு மனம் மாறி உதவக் கூடும்.இன்னும்,இன்னும் ஆட்களை சேர்க்க வேண்டுமே ஒழிய நீ நேசகரத்திற்கு 5 சதம் தரவில்லை அதனால் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்.சாந்தி அக்கா அப்படி முட்டாள்தனமான வேலை செய்ய மாட்டார்.ஏனென்டால் உங்களை விட ஒரு அமைப்பை கொண்டு நடத்துவது எவ்வளவு கஸ்டம் என்று அவவுக்குத் தெரியும்.

நேசக்கரத்தின் செயற்திட்டத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் நே.கரத்தின் மீதான குற்றச்சாட்டு தான்...உங்களுக்கு செயற்திட்டத்தில் குறை தெரிந்த மாதிரித் தான் இத் திரியில் எழுதிய மற்றவர்களுக்கும் சில பிழைகள்,குறைகள் கண்ணுக்குத் தெரியலாம்.தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை.

"பறவைகள் பலவிதம்"[/size]

மனிதர்களும் அப்படியே ............. உங்களுடைய  கருத்துக்கள் உண்மையானவை.

ஆனால் அனுபவரீதியாக பார்க்கும்போது.

எதையும் கொடுக்க விருப்மாதவர்கள். ஒரு சதமும் ஈயாதவர்கள்.............. எதோ எல்லாம் உளுங்காக இருந்துவிட்டால் அள்ளிகொடுத்திருப்போம் என்ற தோரணையில் கதை விட்டு கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்கையில் இப்படியான ஜென்மங்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள்.

மனம் இருப்பவனுக்கு தெரியும் ...... பலதும் நடக்கும் என்று.

எமது போராட்டத்தில் அன்று யார் கொடுத்தானோ அவனே இன்றும் கொடுக்கிறான்.

இந்த போராட்டத்தை வைத்து யார் வயிறு வளர்த்தானோ அவன் இன்றும் அதைதான் செய்கிறான்.

சுயவிளம்பரம் தேடி யார் போராட போனானோ அவனுக்கு இணையம் வந்தது பரலோகத்தில் இருந்து  பால் வந்த மாதிரி துள்ளி குதிக்கிறான்.

(எங்காவது ஒரு 5 வீதம் மாறியிருக்கலாம்)

விதை விதைப்பவனுக்கு தெரியும் தான் நீர் பாய்ச்சும்போது அது சில புல்லுக்கும் போகும் என்று. அதற்காக விதையே விதைக்காமல் நின்று கொண்டு கேள்வி மட்டும் கேட்டால்? யாருக்கு என்ன பயன்.

சில தெளிவு படுத்தல்கள் இருக்க வேண்டும். எமது நாட்டை பொருத்தமட்டில்  சரியானதை  திரைக்கு பின்னால் இருந்தே செய்ய முடியும்.

சந்தியகாவின் உயிருக்கு உலை வைத்துவிட்டு............ அவரிடம் கேள்வி கேட்க என்ன யோக்கிதம் இருக்கிறது ?

நாளை பூசா சிறையில் யாருக்கு உதவி வேண்டும் என்று. நேரில்  சென்று அவர்களிடம் அவர்களே எழுதிய கடிதங்களையும் வாங்கி வாருங்கள்  என்று என்னையோ ..... உங்களையோ  சாந்தியக்கா கேட்டால் போகவா போகிறோம்????   

*****

****

*****

நாங்கள் அடிகளை நின்றவன் போனவன் என்று எல்லோரிடமும் வாங்கிவிட்டோம். அருகில் யார் வந்து நின்றாலும் இப்போ ஒரு  அச்சம் சந்தேகம் எம் மனதில் வருகிறது.  எமது மனநிலை பாதிப்பு அடைந்துவிட்டதோ என்னமோ. சாந்தியக்கா மேல் சந்தேகம் வருவதை நான்  பிழை என  சொல்ல முடியவில்லை. ................ குறித்த கேள்விகள்  அவர் இங்கு எழுதும் பதிலுடன்  முடியுமெனில். 

இதை ஒரு தீர்வாக என்னால் பார்க்கமுடியவில்லை. வெறும் குழப்பகரமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

நியானி:  ஒரு பந்தி தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

பழிக்கு பழி வேண்ட விரும்புவோருக்கு ஒரு வேண்டுகோள்:

பாசக்கரம் என்று அமைப்பை தொடக்கி அதற்கு உலகெல்லாம் கிளை பரப்பி பல மில்லியன் டொலர்கள் சேர்த்து ஈழ மக்களுக்கு உதவலாம்.

மக்கள் அடித்து பிடித்து பாசக்கரத்தை ஆதரிப்பார்கள், நேசக்கரமும் ஆதரவற்றுவிடும்.

பின் வெள்ளை பென்சில் படையப்பா பாட்டு போட்டு வெற்றி பவனி வரலாம்.

அவ்வளவிற்கு திறமை இல்லை என்றால் ஒதுங்கி இருப்பதே நல்லது.

அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை சுருட்டும் சிறி லங்கா அரசியல்வாதிகளுக்கு எதிராக சவால்விட்டு ஹை கொமிசனுக்கு எதிராக வழக்கு போடலாம், கட்டுரை எழுதலாம்.

அதற்கும் துணிவு இல்லாவிட்டால் மற்றோரை மிரட்டி பந்தா காட்டுவதை நிறுத்தலாம். வேலை வெட்டிக்கு போய் குடும்பத்தை முன்னேற்றலாம்.

Link to comment
Share on other sites

நாளை 23.06.2013 GTVஇல் சாந்தியுடன் நான் நடத்திய நேர்காணல் ஐரோப்பிய நேரம் மு.ப. 10:30இற்கு ஒளிபரப்பாகும். எழுத்து மற்றும் நேசக்கரத்தின் செயற்பாடுகள் பற்றி உரையாடியிருக்கிறோம்.

இந்தப் பிரச்சனை இங்கே ஆரம்பிப்பதற்கு முதலே இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டு விட்டது. இல்லையென்றால் இன்னும் பரபரப்பாகவும் சூடாகவும் என்னுடைய கேள்விகளை தொடுத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • 7 months later...
 • கருத்துக்கள உறவுகள்
நீண்டகாலம் இப்பகுதியில் எவ்வித கேள்விகளையும் இணைக்கவில்லை. இவ்வருடம் தொடக்கத்தில் நேசக்கரம்அமைப்பில் நீண்டகால பங்களிப்பாளராக இருந்து வரும் ஆரூரன் என்ற உறவு 2கேள்விகளை அண்மையில் மின்னஞ்சலில் தந்திருந்தார். அவர் உலவும் இடங்களில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட சந்தேகம் மிக்க வினாக்கள் அவையெனவும் அதற்கான பதிலை யாழில் தருவது சிறப்பாக இருக்கும் எனவும் கேட்டு  கேள்விகளை  தந்திருக்கிறார்.
 
இதுவரையில் ஆரூரன் தனது பெயரை வெளியிடாமல் செய்த உதவிகள் நிறைய. ஆனால் தனது கேள்வியில் தனது பெயரை வெளியிடலாம் என்ற அனுமதியையும் தந்துள்ளார்.
 
1)  நேசக்கரம்  உப அமைப்புகளை ஆரம்பித்துள்ளீர்கள் ? இவற்றின் நோக்கம் என்ன ? இதற்குள் ஏதாவது அரசியல் நோக்கம் இருக்கிறதா அக்கா ?
 
உப அமைப்புக்களை ஆரம்பித்ததன் நோக்கம் வேலைத்திட்டங்களை எங்கும் விரிவுபுடுத்தவும் நிருவாக ஒழுங்குகளை இலகுவாக மேற்கொள்ளவுமே. மற்றும் ஒவ்வொரு உப அமைப்பும் ஒவ்வொரு விடயங்களுக்கு சிறப்பான ஆற்றலாளர்களை உள்வாங்கி செயற்படுகிறது. 
 
உதாரணம் :- மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம். இதில் அங்கத்துவம் வகிப்போர் பல்கலைக்கழக மாணவர்கள். இவ்வமைப்பானது முதலில் பல்கலைக்கழகமாணவர்களை மையப்படுத்தி ஆரம்பித்தோம். தற்போது ஒட்டுமொத்த கல்விக்கான அமைப்பாக மாற்றியுள்ளோம். இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் கல்வி தொடர்பான பணிகளை சரியாக செய்யக்கூடியவர்கள்.
 
இதேபோல தேன்சிட்டு உளவள அமைப்பானது உளவள மேம்பாடு தொடர்பான சகல வேலைகளையும் செய்கிறது.
 
குறிப்பாக தேன்சிட்டு உளவள அமைப்பின் செயற்பாடு அதிகம் மக்களுடன் செயற்படும் அவர்களோடு நேரில் உறவாடி அந்தந்த இடங்களில் முகாமிட்டு செயற்படவுள்ளது. ஆரசியல் எதுவும் உப அமைப்பகளின் உருவாக்கத்தில் இல்லை ஆரூரன். புதிலில் மேலும் தெளிவுகள் இருப்பின் அறியத்தாருங்கள்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ஆரூரனின் 2வது கேள்வி :-
 
3) நேசக்கரம் இணையத்தில் உங்கள் பணியாளர்கள் என அறிமுகமானவர்கள் உங்கள் உதவி வழங்கல் படங்களில் இருந்தவர்கள் பலர் ஏன் தற்போது இல்லை ? ஒருவரை பணியிலிருந்து விலக்குவதற்கான காரணங்கள் என்ன ?
 
தாயகத்தில் இயங்கிய சிலர் தங்கள் பணிகள் நிமித்தம் விலகியுள்ளார்கள். 2010 எம்முடன் இணைந்து பல்கலைக்கழகமாணவர்கள் உதவி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதில் பங்காற்றிய தீபச்செல்வன் தனது கல்வியைத் தொடர வேண்டிய நிலமையில் ஒதுங்கிக்கொண்டார். எனினும் தீபச்செல்வன் தன்னால் திரும்ப இணைய விரும்புகிற போது வந்து இணைய வேண்டுமென்ற விருப்பில் நேசக்கரம் காத்திருக்கிறது. தீபச்செல்வனுக்கான இடம் எப்போதும் இருக்கிறது. 
 
ஆரம்பத்தில் எம்மோடு சேர்ந்து இயங்கிய கமலாதேவியை விலக்கியமைக்கான காரணம் எமது நிர்வாக ஒழுங்குகளுக்கு மாறாக செயற்பட்டமையால் கமலாதேவியை விலக்கினோம். சுயவிருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல் அல்லது அதிகாரத்தை பாதிக்கப்பட்டவர்கள் மீது செலுத்தும் எந்த பணியாளரையும் எவ்வித கருணையும் இன்றி விலக்குவோம். அதன் அடிப்படையிலேயே கமலாதேவி விலக்கப்பட்டார். கமலதேவி அவர்கள் அண்மையில் தொடர்பு கொண்டு தனது தவறுகளை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொண்டு நேசக்கரத்தில் இணைக்குமாறு கோரி தொடர்பு கொண்டிருந்தார். விதிமுறை எல்லோருக்கும் பொதுவானது. விதியை மீறுவோருக்கான நடவடிக்கைகளும் பொதுவானதே. ஆக கமலாதேவியை மீண்டும் இணைத்துக் கொள்ளமாட்டோம்.
 
இதேபோல 2013 இறுதியில் கூட தாயகத்தில் இயங்கிய 4பேரை பணிநீக்கம் செய்துள்ளோம். நிர்வாக ஒழுங்குகளை மீறி சுயதேவைகளுக்காக எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியது மட்டுமன்றி எம்மால் வழங்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செயற்படுத்தாமல் அறிக்கைகள் சமர்ப்பிக்காமல் விட்டமைக்காகவும் மற்றும் விதிமுறைகளை மீறிய செயற்பாடுகளுக்காகவும் மேற்படி 4பேரையும் விலக்கியுள்ளோம். எம்மால் விலக்கப்படுவோர் மீண்டும் இணைக்கப்படமாட்டார்கள்.
 
ஆரூரன் நீங்கள் குறிப்பிட்டவர்களின் பெயர்கள் சில இங்கே தவிர்க்கப்படுகிறது. 
 
Link to comment
Share on other sites

 • 5 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய சகோதரி சாந்தி

உங்களிடம் ஒரு கேள்வி உண்டு.

இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும்

புலிகளுக்கு வெளிப்படையாக 

சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு

எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது?

இதனால்

நேசக்கரத்துடன் இணைந்து இலங்கையில் செயல்படும் கள உறுப்பினர்களுக்கு

பிரச்சனைகள் வராதோ?

அல்லது நேசக்கரத்தின் மூலம் பயன் பெறுகின்றவர்களுக்கு

பிரச்சனைகள் ஏற்படாதோ

இல்லை,

பாம்புக்கு தலையும்

மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களைப் போன்று

நீங்களுமோ?

அக்காச்சி கோபிக்காமல் பதில் சொல்லுவீங்கள் என நினைக்கின்றன்.

நானும் பலமுறை உங்களைப்போல் இந்தமாதிரி யோசித்திருக்கின்றேன் ஒருநாளும் எழுதி கேட்டதில்லை பூச்சி நீங்கள் சம்மந்தப்பட்டவர்களிடத்தில் நேரடியாக கேட்டுள்ளீர்கள் இதனூடாக எமது சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நல்லதுக்கு காலம் இல்லை என்பது. நல்லவற்றுக்குத்தான் சோதனையும் வரும்.
என்றாலும் தங்கத்தை சுட சுடத்தான் ஒளிரும்.

எனினும் சந்தேகங்கள் அர்த்தமற்றவை. அவரது சேவைகள் பெறுமதியானவை. 

உங்கள் சந்தேகங்களுக்கு நிச்சயமாக விடை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய சகோதரி சாந்தி

உங்களிடம் ஒரு கேள்வி உண்டு.

இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும்

புலிகளுக்கு வெளிப்படையாக 

சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு

எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது?

இதனால்

நேசக்கரத்துடன் இணைந்து இலங்கையில் செயல்படும் கள உறுப்பினர்களுக்கு

பிரச்சனைகள் வராதோ?

அல்லது நேசக்கரத்தின் மூலம் பயன் பெறுகின்றவர்களுக்கு

பிரச்சனைகள் ஏற்படாதோ

இல்லை,

பாம்புக்கு தலையும்

மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களைப் போன்று

நீங்களுமோ?

அக்காச்சி கோபிக்காமல் பதில் சொல்லுவீங்கள் என நினைக்கின்றன்.

பூச்சியண்ணா (என்னிலும் 3வயது கூடின அண்ணா நீங்கள் அண்ணா என விழித்தல் தான் பொருத்தம்)
எப்படா கல்லெறியலாம் என காத்திருந்து கருத்தெழுவோரை விட உங்களது  நேர்மை பிடித்திருக்கிறது. முதுகுக்குப் பின்னால் வதந்திகளை பரப்புகிறவர்களை விடவும் நீங்கள் ஆயிரம் மடங்கு உயந்தவராக தெரிகிறீர்கள். . இது உண்மையாகவே எழுதுகிறேன்.
 
கடந்தவருடம் நேசக்கரம் பற்றியும் எனது எழுத்துகள் பற்றியும் இதே களத்தில் ஒருவர் எழுதித்தள்ளியிருந்தார். அப்போதுதான் நேசக்கரம் கேள்வி பதில் என்றொரு பகுதியை ஆரம்பித்தேன். துளித்துளியாய் பகுதியில் பாருங்கள் கேள்வி பதிலில் நீங்கள் சந்தேகிக்கும் சந்தேகங்களுக்கெல்லாம் பதில் இருக்கிறது. பலர் தங்கள் சந்தேகங்களை கேட்டிருந்தார்கள் கேள்விகளாக. அவற்றுக்கான பதில்கள் முழுவதையும் நீங்கள் வாசித்தால் தற்போதைய உங்கள் சந்தேகத்துக்கான பதில் கிடைக்கும். 
 
ஒரு போதும் ஈரூடகவாசியாய் வாழமாட்டேன். எனக்கு அந்தளவு துணிச்சல் இல்லை. பத்துச்சதத்துக்கும் பெறுமதியில்லாதவர்களையெல்லாம் பெறுமதியாக்கியது நாங்கள் தான். அதுபோலத்தான் நானும். நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு சதமும் பெறுமதியற்ற சாதாரமான ஒரு தாய் நான். 
 
அன்னை தெரேசா 12வயதில் தனது வசந்தத்தை துறந்து துறவியாகி உலகில் பலகோடி பெறுமதியான பணிகளைச் செய்துவிட்டு இறந்து போனார். ஆனால் இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்னும் பலரும் அந்தத் தாயை பெயருக்காக மயங்கியவரென்றும் பலகோடி பணத்தை வத்திக்கானின் பிரத்தியேக வங்கியில் வைப்பிலிட்டு விட்டுப்போனார் என்றும் சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டுமே இருக்கிறது.
 
இறுதி வரையும் அன்னை தெரேசா விமர்சனங்கள் மீது தனது எதிர்வினையைப் பதிவு செய்யவேயில்லை. காரணம் ஒவ்வொரு மனித மனமும் வேறு வேறு எண்ணங்களையும் கொண்டது. ஒவ்வொருவருக்கும் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப சந்தேகங்கள் வரும் கேள்விகள் வரும் அந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் இன்று உலகில் பல்லாயிரம் உயிர்கள் பயனடைந்திருக்கமாட்டார்கள்.
 
நான் அன்னை தெரேசாவை இங்கு குறிப்பிடுவது என்னை நியாயப்படுத்துவது  இல்லை இப்போது எதைச் சொன்னாலும் அதை சந்தேகத்தோடு மட்டுமே பார்க்கப்பழகிவிட்ட தமிழ் மனநிலையில் தான் நீங்களும் இருக்கிறீங்கள்.
 
எனது நிலைப்பாடு இதுதான் என்று என்னால் துணிந்து சொல்லவும் செயற்படவும் முடிகிறது. இதுவொரு சாகிறேன் பந்தயம் பிடிபாப்பமெண்ட நிலமைதான். இதில் தடையிடும் நிலமை ஒருநாள் வரும் அப்போது எல்லாப்பணிகளுக்கும் இலங்கையரசு தடைகளையிடும். அப்போது நீங்கள் கூட ஒரு கண்டனத்தைக்கூட எழுதக்கூடும்.
 
நான் ஒருவேளை இல்லாது போனால் நேசக்கரம் மட்டுமே செயலிழக்கும்  ஆனால் நேசக்கரத்துக்கு நிகராக நிகரானவர்கள் ஒரு 300பேர் வரையில் கடந்த 5வருடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு எப்போதும் ஏதோவொரு வகையில் மக்கள் பணி செய்யத் தயாராகவே இருக்கிறார்கள்.
 
இந்த வளர்ச்சியில் அடைந்து ஏமாற்றங்கள் தடைகள் தொல்லைகள் பல. ஆனால்  முடியும் என்ற வேகத்தில் இங்கியே இந்த நிலமை உருவாகியிருக்கிறது. இதனை நேசக்கரத்தின் செய்திகள் மற்றும் முன்னேறத்தினை நீங்கள் அவதானித்தால் நிச்சயம் புரியும். 
 
நான் புலியென்று எங்கும் என்னை நிலைநாட்டவில்லை. ஏதாவது நான் பிறந்த இனத்திற்காகவும் நாட்டிற்காகவும் செய்ய விரும்புகிறேன். அதற்கான சிறு அணிலாய் என பங்கு. ஒரு கொஞ்சப் பிள்ளைகளுக்கு கல்வியும், கொஞ்சப்பேருக்கு நிம்மதியான உணவும் இன்னும் கொஞ்சப்பேருக்கு வாழ வழியையும் ஏற்படுத்திக் கொடுக்க முடிந்திருக்கிறது.
 
மாவீரர்கள் வரலாறுகள் இன்னும் கொஞ்சக்காலத்தில் இராமாயணம் போலவும் , மகாபாரதம் போலவும் ஆகிவிடாமலிருக்க மாவீரர்கள் குறிப்புகளையும் அவ்வப்போது எழுதுகிறேன். இதனை விட என்னிடம் எந்த பெரிய பலமோ சக்தியோ இல்லை. காலம் ஒருநாள் உங்களது சந்தேகங்கள் தேவையற்றது என்பதனை புரிய வைக்கும். 
 
துளித்துளியாய் பகுதியில் நேசக்கரம் கேள்வி பதில் பகுதியை முழுமையாக வாசியுங்கள். அனைத்து சந்தேகத்திற்குமான பதில்கள் இருக்கிறது. இங்கே ஒரு மாவீரரின் நினைவுநாளில் அதைக் கொண்டு வந்து நான் ஒட்ட பிறகு பல்முகங்கள் வந்து குதற நியானி கத்தியெடுக்க கடைசியில இந்தத் திரிக்கு பூட்டு விழும். அதைவிட துளித்துளியாய் பகுதியில் உங்கள் சந்தேகங்களை கேட்டால் இது பலருக்கும் பயனாக இருக்கும்.
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் பலமுறை உங்களைப்போல் இந்தமாதிரி யோசித்திருக்கின்றேன் ஒருநாளும் எழுதி கேட்டதில்லை பூச்சி நீங்கள் சம்மந்தப்பட்டவர்களிடத்தில் நேரடியாக கேட்டுள்ளீர்கள் இதனூடாக எமது சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 

துளித்துளியாய் பகுதியில் கூட பல செய்திகளை ஒட்டியிருக்கிறீங்கள். அங்:கெல்லாம் ஏனோ சந்தேகம் வராமல் இருந்ததோ தெரியவில்லை. அண்மையில் அனந்தியின் மக்கள் பணிகள் பற்றி ஒட்டியிருந்தீங்கள். அனந்தி நாட்டிலும் நிற்கிறார் அதேவேளை புலத்தில் இயங்கும் அனைத்துலக செயலகத்தினாலும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்கப்பட்டுள்ளார். 

ஓடியோடி செய்திகளை மட்டும் ஒட்டி ஒப்பாரி வைத்தால் மட்டும் போதாது பூச்சி போல நேர்மையான மனமும் துணிச்சலும் வேணும். பாரதியாரின் பாடல் ஒன்று :- நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி. என் பாடல் தான் நினைவில் வருகிறது. 

உங்கள் போன்ற தேசியத்தூண்களின் சந்தேகங்கள் தொல்லைகள்  செயற்பட சலிப்பாக ஏன்  மன அமைதியைக் கெடுத்து ஒரு சவமும் வேண்டாம் என ஒதுங்கக்கூட பலமுறை தள்ளியிருக்கிறது. ஆனால் சாவின் நுனிவரை சென்று மீண்ட ஒவ்வொரு உயரின் குரலும் , உயிரைத்தந்த ஒவ்வொரு மாவீரரின் கனவுமே எல்லாத்தையும் தள்ளிவிட்டு வேகமாய் இயங்கத் தக்க பலத்தை தந்தது.
 
அந்தப் புனிதங்களின் ஆசியும் ஆன்ம பலமும் உள்ளவரை இப்படியே புலியை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் எனது வெளிப்பாட்டையும் முடிந்த மக்களுக்கான உதவிகளையும் செய்து கொண்டேயிருப்பேன். இதையும் நிறுத்த ஒருநாளைக்கு நிச்சயம் தடைவிழும் அப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்களைப்போல செய்திகளை மட்டும் ஒட்டிக் கொண்டு தேசியம் வளர்க்கமாட்டேன் அப்போதும் போராடுவேன். 
 
மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்கு.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என் பதிலை அகற்றி விட்டார்கள்.

சரி கேள்விகளை அந்த திரியில் வைக்கின்றேன் அக்காச்சி

துளி துளியாக பகுதியில் நான் இணைத்த இணைப்புக்களில் அவர்கள் தமது சொந்தப்பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள்.
நீங்கள் நடத்தும் நேசக்கரம் அப்படி இல்லை புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து கிடைக்கும் பண உதவியினால் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவுகின்றீர்கள் ஆனந்தி சசிதரனுடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் அவரிடம்தான் கேட்க்கவேண்டும். 
புலத்தில் இருந்து தாயக விடுதலைக்கு பங்களிப்பு செய்தவர்களை சிலரை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிரர் பிடித்து சிறையில் வைத்து இருக்கிறார்கள் அதில் சமீபத்தில் ஒருவர் சிறைக்குள் கொல்லவும் பட்டுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறு சிறிலங்காவில் இறுக்கமான நிலை இருக்கும்போது நீங்கள் இப்படி பகிரங்கமாக யாழிலும் சமூக வலைத்தளங்களிலும் புலிகளுக்கு வெளிப்படையாக 
சொந்த விபரங்களுடன் பெரியளவில் ஆதரவு கொடுத்துக் கொண்டு
எப்படி நேசக்கரம் அமைப்பை இலங்கையில் நடத்த முடிகின்றது? என்பதுதான் எனது கேள்வி இதற்க்கு பதில் கூறுவதற்கு பதிலாக என்னை முடிந்தவரைக்கும் திட்டி தீர்த்து உள்ளீர்கள் இதில் இருந்து தெரிகின்றது உங்களின் பெரியமனசு .. 
 
உங்களைப்போல் பந்தி பந்தியாக எழுதும் தன்மை என்னிடம் இல்லை இதற்க்கு மேல் இதைப்பற்றி எழுதுவதாக இல்லை ..

துளித்துளியாய் பகுதியில் நீங்கள் இணைத்த செய்திகளில் நான் குறித்தது அனந்தியின் உங்கள் வெட்டு ஒட்டுபற்றி. அனந்தி அவர்களை உங்களுக்கு அரசியல்வாதியாய் தெரியலாம். அனந்தி எனக்கு நண்பர் எழிலனின் மனைவியாகவும் துணிச்சல் மிக்க மக்கள் பணிசெய்யும் சிறந்த சமூகத்தாயாகவும் தெரியும்.  செய்தியில் எழுதி அறிவித்துவிட்டு அனந்தியுடன் நட்பை பேணும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை தமிழரசு. வளமைபோன்ற கூட்டத்தோடு கூட்டமாக கல்லெறிந்து யாரையாவது சிண்டு முடிஞ்சு கூத்துப்பார்க்கும் உங்கள் பணியில் அனந்தியையம் என்னையும் சிண்டு முடிஞ்சுவிடும் உங்கள் முயற்சி திருவினையாகாது. 
 
அனந்தியை உதாரணம் காட்டியமைக்கான காரணம் யாதெனில் :- எல்லா எதிர்ப்புகள் தடைகளையும் தாண்டி அனந்தி அவர்கள் இயங்குகிறார் என்பதனை விளக்கவே. இதிலிருந்து ஏதாவது உங்கள் தமிழரச அறிவுக்கு புரியும் என நினைத்தே எழுதினேன். 
 
நேசக்கரம் மக்கள் அமைப்பு. அதாகப்பட்டது அனந்தியின் பணிபோல. இந்த நேசக்கரத்தில் ஒரு பங்களிப்பாளர் மட்டுமே இங்கு நீங்கள் வயிற்றுவலியில் துடித்து சந்தேகப்படும் சாந்தியென்கிற தனி மனிசி இதில் ஒரு பாகம் மட்டுமே. கடந்த 5வருடத்தில் தனிப்பட்ட எனது உழைப்பிலிருந்தும் வங்கியில் கடனெடுத்து சில போராளிகளுக்கு உதவியதில் நான் அடைந்திருக்கும் கடனின் தொகை 14ஆயிரம் யூரோக்கள். தனியே உதவி செய்பவர்களின் உதவிகளை மட்டும் கொடுத்துவிட்டு நான் சும்மா இருக்கவில்லை ஐயா. இதுவும் சிலவேளை உங்கள் அகராதியில் அர்த்தம் மாறுபடலாம். 
 
ஒரு சதத்துக்கும் பயனில்லாத என்னையெல்லாம் வைச்சு ஒரு ஆணியும் புடுங்கேலாதென்பதையும் உங்கள் தேசிய அறிவில் நான் பெரிய புள்ளியாக தெரிந்தால் அது உங்கள் குற்றமே.நேசக்கரம் ஐரொப்பிய சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு ஆபிரிக்காவிலும் இயங்க முடியும். இலங்கையின் உதவி அமைப்புகளின் சட்ட வரையறைகளுக்கு எந்த இடைஞ்சலும் நேசக்கரம் இதுவரை கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மட்டுமே செய்கிறது. 
 
நேசக்கரத்தின் பணியாளர் ஒருவர் 8மாதங்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. எனினும் அந்த நபர் இன்னும் தனது பணியை கடமையை விட்டு ஒதுங்கவில்லை. இன்னும் சிலர் மனிதவுரிமை அமைப்புகள் வரை செல்ல வேண்டிய நிலமைகள் கூட வந்தது. பலருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் இடைஞ்சல்களில் பணியாளர்கள் பலரது பாதுகாப்பு தொடர்பில் மனிதவுரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டு சிலர் நாட்டைவிட்டுக்கூட வெளியேறி ஆசிய நாடுகளில் அலைகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தான் நேசித்து மக்களுக்கு பணி செய்ய நேசக்கரத்தின் பணியாளர்களாக இயங்கியது மட்டும்தான். இதையெல்லாம் உங்களுக்கு விளக்கி நீங்கள் புரிந்து இரக்கம் தர வேண்டுமென்றல்ல. உங்களது நஞ்சுத்தனமான எண்ணம் எங்களிடம் இல்லையென்பதனை தெளிவுபடுத்தவே.
 
இலக்கில் தெளிவிருந்தால் வெற்றியடைவேன் என்ற துணிச்சல் இருந்தால் நீங்களோ அல்லது பூச்சி பூரான் புழுக்கள் கூட எந்தத்தடையையும் தாண்ட முடியும். புலியை நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஆதரிக்கிறேன் நேசிக்கிறேன். என்னால் உதவியமைப்பிலும் இயங்கிக் கொண்டு தாயகக்கனவோடு மடிந்த மாவீரர்கள் வரலாற்றையும் எழுத முடியும். நேசக்கரம் புலிகளின் பிரதியில்ல எனது எழுத்தும் நேசக்கரமும் இருவேறு பாதையில் பயணிக்கின்றன. என்னால் இவ்விரண்டு பாதையிலும் இலக்குத் தவறாமல் பயணிக்க முடியும்.
 
தமிழனுக்கு தமிழன் காட்டிக்கொடுப்பாளன் துரோகம் வஞ்சம்  பிற இனத்தவரால் இல்லை. எங்களால் தான் எங்களின் அழிவு. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள். 
 
இங்கு உங்களை திட்டித் தீர்த்ததாக அலுத்து கொள்ளாமாட்டீர்கள். பந்தி பந்தியாய் விளக்கியும் விளங்காமல் திரும்பவும் வந்து சந்தேகம் என்று வந்த போது திருக்குறள் போல விளக்கம் தர என்னிடம் அந்தளவு தமிழரச அறிவு இல்லையென்பதால் நீண்ட விளக்கமாய் தந்துள்ளேன்.
 
எனக்கெல்லாம் பெரீய மனசென்று உங்கள் பெரிய மனசால் யோசிக்காதையுங்கோ. அவ்வளவு நான் பெரீய ஆளில்லை.
 
பி.கு :- துளித்துளியாய் பகுதியில் உங்கள் சந்தேகங்கள் போல பலரது சந்தேகங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இருக்கிறது. அங்கே போய் வாசித்திருந்தால் இங்கு வந்து ஒரு மாவீரரின் நினைவுநாளில் வந்து நின்று எழுதியிருக்கமாட்டீர்கள். 
 
நன்றிகள் தமிழரசு. இத்தகைய உங்கள் வஞ்சத்தினை அறிகிற போதெல்லாம் மீள மீள நிறையச் செய்ய வேண்டுமென்ற எண்ணமே வலுக்கிறது. இப்படி இடைக்கிடை வந்து ஏதாவது எழுதுங்கோ அப்பதான் இன்னும் பலநூறு பணிகளைச் செய்ய தூண்டுதலாக இருக்கும்.
 
இறுதியாக :- வாழ்க உங்கள் வெட்டு ஒட்டும் பணி. எனினும் ஒருநாளைக்கு நிச்சயம் தடைவிழும் அப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு உங்களைப்போல செய்திகளை மட்டும் ஒட்டிக் கொண்டு தேசியம் வளர்க்கமாட்டேன் அப்போதும் போராடுவேன். 
 
உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது உங்கள் சோற்றில் மண் அள்ளி போட்டுவிட்டேனா அல்லது பிழைப்பை கெடுத்து விட்டேனா இப்படி கோபம் கொள்ளும் அளவுக்கு நான் ஒ ன்றும் பெரிதாக சொல்லவில்லையே எனக்குள்ள சந்தேகங்களை உங்கள் முன் வைத்தேன் அதைத்தவிர வேறு நான் என்ன செய்தேன் நீங்கள் தேசியத்துக்கு செய்தவற்றை   கூவி கூவி வியாபாரம் செய்கின்றீர்கள் உண்மையில் தேசியத்துக்கு அற்பனித்தவர்கள் பலர் மௌனமாக வாழ்ந்து வருகின்றார்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்கள் அதை சொல்லி தற்பெருமை தேடிக்கொள்ள மாட்டார்கள் நீங்கள் எப்படி புனிதமான புலிகள் அமைப்புடன் ... எனக்கு சத்தியமாக புரியவில்லை உங்களின் தொடர்பு பற்றி சொல்வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் எழுதுகின்றீர்களா இதெல்லாவற்றுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் அதுவரைக்கும் உங்களின் பாணி இல்லை பனி தொடரட்டும் 

பி;கு : வெட்டி ஒட்டுவதுதான் எனக்கு தெரியும் உங்களைப்போல பந்தி பந்தியாக எழுதி பிழைப்பு நடத்தவேண்டிய தேவை எனக்கு இல்லை 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை வாசிக்கின்ற அனைவரிடமும் கேட்கின்றேன் ஒரு கேள்வியை

இவர் என் கேள்விகளுக்கு சரியாக பதில் தந்துள்ளாரா என்று?

என் கேள்வி

எப்படி புலிகளுக்கு ஆதரவை வெளிப்படையாகக் கொடுத்துக் கொண்டு இலங்கையில் இயங்கும் ஒரு அமைப்பை நடாத்த முனைகின்றது?

இது தான் என் கேள்வி

தன்னை திரேசாவாகவும் (நல்ல வேளை அவர் உயிருடன் இல்லை. பாவம் இருந்து இருந்தால் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி அதில் விழுந்தாவது தற்கொலை செய்து இருப்பார்)

என் கேள்விக்கு இவர் எழுதிய சளம்பல்களை வாசித்துப் பாருங்கள்.

இவரது முன்னால் 'உடன் பிறவா சகோதரம் சாத்திரியின்' இன்றைய நிலை அனைவரும் அறிந்தது. ஜேர்மனுக்கு தொலைபேசி எடுத்தால் பிரான்ஸின் நீசில் அதனை ஒலிப்பதிவு செய்யும் அளவுக்கு இவர்கள் சகோதர்கள். இன்று வெளி உலகுக்கு எதிரிகள்.

இன்று தன் பழைய பதிவுகளுக்கு உயிர் ஊட்டி தன்னை தேசிய வாதியாக்குகின்றார். இவர் 2010, 2011, 2012, 2013  இல் இதே திரிகளில் ஒரு வணக்கம் கூட செலுத்தவில்லை. இதே சாந்தி தமிழ் செல்வன் அண்ணர் செத்தவுடன் வன்னியில் அவருக்கு எதிராக மக்கள் சுவரொட்டி ஒட்டினார்கள் என்று (அது உண்மை) எழுதியவர்

நேர்மையும் நெஞ்சில் துணிவும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்

1. புலிகளுக்கு நேரடி ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டு எப்படி இலங்கையில் புனர்வாழ்வு அமைப்பை நடத்த முனைகின்றது?

1.1. மகிந்த அந்தளவுக்கு ஜனநாயக மனிதரா? புலி ஆதரவு என்றாலும் மக்களின் துயர் துடைக்கும் அமைப்புகளை தன் மண்ணில் இயங்க வைக்க?

1.2. அப்படி என்றால் என்ன ..ருக்கு போர்க் குற்ற விசாரணை?

2. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டுவதால் உங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுபெடுப்பீர்களா?

3. இப்படி நீங்கள் பகிரங்க ஆதரவு காட்டி பெறும் உதவிகளால் நன்மை அடையும் அப்பாவிகளுக்கு இலங்கை இராணுவத்தால் பிரச்சனை வராதா

இல்லை

இதை எல்லாம் சிந்திக்க முடியாத அடி முட்டாளா நீங்கள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது உங்கள் சோற்றில் மண் அள்ளி போட்டுவிட்டேனா அல்லது பிழைப்பை கெடுத்து விட்டேனா இப்படி கோபம் கொள்ளும் அளவுக்கு நான் ஒ ன்றும் பெரிதாக சொல்லவில்லையே எனக்குள்ள சந்தேகங்களை உங்கள் முன் வைத்தேன் அதைத்தவிர வேறு நான் என்ன செய்தேன் நீங்கள் தேசியத்துக்கு செய்தவற்றை   கூவி கூவி வியாபாரம் செய்கின்றீர்கள் உண்மையில் தேசியத்துக்கு அற்பனித்தவர்கள் பலர் மௌனமாக வாழ்ந்து வருகின்றார்கள் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்கள் அதை சொல்லி தற்பெருமை தேடிக்கொள்ள மாட்டார்கள் நீங்கள் எப்படி புனிதமான புலிகள் அமைப்புடன் ... எனக்கு சத்தியமாக புரியவில்லை உங்களின் தொடர்பு பற்றி சொல்வதற்கு சம்மந்தப்பட்டவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் எழுதுகின்றீர்களா இதெல்லாவற்றுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் அதுவரைக்கும் உங்களின் பாணி இல்லை பனி தொடரட்டும் 

பி;கு : வெட்டி ஒட்டுவதுதான் எனக்கு தெரியும் உங்களைப்போல பந்தி பந்தியாக எழுதி பிழைப்பு நடத்தவேண்டிய தேவை எனக்கு இல்லை 

ஐயா இதில எங்கைப்பா கோவம் உங்களில ? உண்மையைச் சொல்லியிருக்கிறேன். நான் உங்களைப்போல கதிரையிலிருந்து தண்டச்சோறு சாப்பிடேல்ல. 2வேலை உடலை வருத்தி உழைக்கிறேன். அதேநேரம் என்னால் முடிந்தவரை 8மாணவர்களை எனது தனித்த உழைப்பில் கல்வி கற்க உதவுகிறேன். இதுமட்டுமில்லை எனது சக்திக்கு அப்பாற்பட்டு உங்கள் போன்ற தேசியவாதிகளால் கைவிடப்பட்ட போராளிகளுக்கு சோறுபோடுகிறேன்.அவர்களே இதனை நீ யாருக்கும் முன்னால் துணிந்து சொல்லு என அனுமதி தந்துள்ளார்கள். இதெல்லாம் சொன்னால் உங்களுக்கு பிடிக்காது நீங்கள் சொல்லாமல்  செய்கிறேன் என்று சொல்லுவீங்கள். 

உங்கள் சந்தேகத்துக்கான நாகரீகமான பதிலே நான் தந்தது. அதையே புரிந்து கொள்ள முடியாமல் கூவி கூவி விற்பனை மொழியில் பதில் தேவையென்ற உங்கள் புரிதலுக்கு இப்படித்தானெ பதில் தர முடியும்.

புனிதமான அமைப்பு புலிகளை புனிதத்தோடு இன்றுவரையும் நேசிக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு இன்னும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கெல்லாம் செய்த எதையும் தேசியத்தை காக்க மறைத்து மௌனப்பணி செய்யிறீங்கள். ஆனால் வெளிப்படையாக இயங்க வேண்டிய காலத்தின் தேவையை ஆயிரத்தெட்டு தொல்லைகள் சவால்களோடு முன்னெடுக்கிற நான் மட்டும் உங்களுக்கு எல்லாத்தையும் மறைச்சு மௌனமா உங்கள் வஞ்சம் முழுவதையும் ஏற்க வேணும். இது எந்த உலக நியாயமோ தெரியேல்ல.

என்னைப்பற்றி சொல்ல பல புலிகள் வாழ்கிறார்கள். இன்னும் சாகவில்லை. ஆனால் உங்களோடு நின்று விவாதிக்க அவர்களால் முடியாதுள்ளது. ஏன் இதே யாழ் களத்தில் கூட இருக்கிறார்கள் கருத்தாளர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேண்டிக் கொள்கிறார்கள். இங்கே விவாதித்து நேரத்தை வீணாக்காமல் உனது பணியைச் செய்யென்பதே.
 
நீங்கள் சொல்வது போல விரைவில் விடை கிடைக்கும் அப்போது முகத்தை மறைக்க இடமின்றி நீங்கள் ஒளிச்சு இன்னொரு முகமூடியோடு வரப்போவதும் நிச்சயம்.
 
நீங்களோ இல்லை பூச்சி பூரான் தேள் என்னதான் குத்தி முறிஞ்சாலும் நேசக்கரம் சாகாது. அது தனது இனத்துக்கான பணிகளில் தனது இலக்கில் தவறாது பயணித்துக் கொண்டேயிருக்கும். 
 
இதற்கு மேல் உங்களுக்காக எனது நேரத்தை செலவிடமாட்டேன் மன்னிக்கவும். உங்களுக்கு தந்த பதிலில் நாகரீகமாகவே பதில்கள் இருக்கிறது அவற்றை புரிந்து கொள்ள முடியாததால் தொடர்ந்து உங்களுடன் விவாதித்து எனது நேரத்தை விரலாமாக்காமல் விடுகிறேன்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை வாசிக்கின்ற அனைவரிடமும் கேட்கின்றேன் ஒரு கேள்வியை

இவர் என் கேள்விகளுக்கு சரியாக பதில் தந்துள்ளாரா என்று?

என் கேள்வி

எப்படி புலிகளுக்கு ஆதரவை வெளிப்படையாகக் கொடுத்துக் கொண்டு இலங்கையில் இயங்கும் ஒரு அமைப்பை நடாத்த முனைகின்றது?

அரசியல் நாகரீகம் கருத்து நாகரீகம் என்றொன்று இருக்கிறது பூச்சியண்ணே அந்த நாகரீக அடிப்படையில் உங்கள் கேள்விக்கான பதில் தந்தாச்சு. அதை உங்களால் விளங்க முடியேல்ல என்றால் என்ன செய்யிறது. 
 
புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவை கொடுத்து எழுதிக் கொண்டு சமநேரத்தில் என்னால் சமூகப்பணியையும் செய்ய முடியும். சமூகப்பணி , எழுத்து இவ்விரண்டு பாதைகளிலும் இலக்குத் தவறாமல் என்னால் இயங்க முடியும் இங்குகிறேன். இதன்படியே நேசக்கரத்தை இயக்க முடிகிறது.

தன்னை திரேசாவாகவும் (நல்ல வேளை அவர் உயிருடன் இல்லை. பாவம் இருந்து இருந்தால் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி அதில் விழுந்தாவது தற்கொலை செய்து இருப்பார்)

பொதுப்பணிகளில் உலகில் எல்லா இனங்களும் எல்லா மனிதர்களும் ஒரேமாதிரியான சிந்தனையுள்ளவர்கள் என்றதை சுட்டிக்காட்டவே அன்னைதெரேசாவை உதாரணம் காட்டினேன். இதைப் புரிந்து கொள்ளாமல் என்னை அன்னை தெரேசாவாக எழுதியதாக புரிந்த உங்கள் எண்ணத்தில் தான் தவறு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவரது முன்னால் 'உடன் பிறவா சகோதரம் சாத்திரியின்' இன்றைய நிலை அனைவரும் அறிந்தது. ஜேர்மனுக்கு தொலைபேசி எடுத்தால் பிரான்ஸின் நீசில் அதனை ஒலிப்பதிவு செய்யும் அளவுக்கு இவர்கள் சகோதர்கள். இன்று வெளி உலகுக்கு எதிரிகள்.

சாத்திரியுடன் உங்களுக்கு ஏதும் தீர்க்கமுடியாத நோயிருந்தால் சாத்திரியிடம் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள். இங்கு எனது எழுத்துக்குள் தொடர்பில்லாத ஆட்களை செருகி உங்கள் பெருந்தன்மையை நிலைநிறுத்தாதீர்கள்.

எனக்கு உடனே பிறந்த பின்னரே பிறந்த சகோதர சகோதரிகள் நிறையப்பேர். அதுபோல உங்கள் கற்பனையில் ஒரு உடன்பிறவா சகோதரத்தவத்தை தந்தமைக்கு நன்றிகள். ஏற்கனவே நெல்லையன் என்ற முன்னால் கருத்தாளர் தனக்குள்ளே ஒரு கற்பிதத்தை வைத்திருந்தார் தனது குரலை பதிவு செய்வதாக. அப்படி யாரின் குரலையும் பதிவு செய்து ரசிக்க இவர்கள் யாரும் அந்தளவு பெரியபுலனாய்வாளர்களோ அமெரிக்க உளவு நிறுவனமோ அல்ல.

ஆனால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒலிப்பதிவு செய்து உங்களது குரலை பரப்புவதற்கு நீங்களோ அல்லது நெல்லையனோ அமெரிக்க உளவு நிறுவனம் இல்லை. தனக்குள்ளே தன்னை பெருமைப்படுத்த சிலர் இத்தகைய உள(ழ)வு உழலாம். இங்கு சாத்திரியும் உங்களைப்போல ஒரு கருத்தாளர் மட்டுமே எனக்கு. 
 
ஏற்கனவே சாத்திரி கடந்த வருடம் இதே பகுதியில் தனது உளவுத்திறனை பூச்சியின் கேள்விகள் போலே கேட்டு தனது முகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை அனைத்து யாழ் கள உறவுகளும் அறிவர். 
 
ஏற்கனவே சாத்திரி இங்கு களத்தில் நேசக்கரத்தை அழிப்பேன் புலிகளை அழித்தது போல என எழுதிய நேரமே யாழில் பலர் சாத்திரி என்றவரை அறிந்திருந்தார்கள். சாத்திரிக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை பூச்சியண்ணே. நீசிற்கு நீங்களும் போய் உங்கள் ஆருயிர் நண்பர் சாத்திரியுடன் தண்ணியடித்து நட்பை பரிமாறியது போல எனக்கு நட்பு உறவு எதுவுமில்லை. சக கருத்தாளர் மட்டுமே. 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்மை செய்வோரை குழப்புவதற்கு எங்கும் ஒரு கூட்டம் இருக்கும். ஒரு கதிரையில் இருந்து தகவல்களை வெட்டி ஒட்டுவதற்கும், செய்கையில் காட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த களத்தில் நேசக்கரம் தொடர்பான கருத்துகளில், அவர் என்ன செய்கிறார், எவ்வாறு திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுகிறார் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது. இன்று பேச்சளவில் மட்டும் ஒருவித நாகரீகமாக எமது தேசியமும் போராட்டமும் பெரும்பாலாரோரால் முன்னெடுக்கப்படும்போது செயலில் சிலவற்றையேனும் செய்து, அது சம்பந்தமான வரவு செலவுகளை இங்கு பகிரங்கமாக வைப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விடுத்து நன்மை செய்பவர்கள்மீது வெறும் அவதூறுகளை சொல்லுவோரால் எதுவும் நடைபெறாப் போவதில்லை. ஒரு சிலரின் தனி மனித தாக்குதலால் நேசக்கரத்தின் பணிகள் முடங்காமல், மேலும் மேலும் பலருக்கும் பயன்பட்டு சிறக்க வேண்டும்.

போற்றுவார் போர்ரட்டும் தூற்றுவார் தூற்றட்டும்! நாம் எமது பாதையில் துணிவுடன் நடப்போம்!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்று தன் பழைய பதிவுகளுக்கு உயிர் ஊட்டி தன்னை தேசிய வாதியாக்குகின்றார். இவர் 2010, 2011, 2012, 2013  இல் இதே திரிகளில் ஒரு வணக்கம் கூட செலுத்தவில்லை. இதே சாந்தி தமிழ் செல்வன் அண்ணர் செத்தவுடன் வன்னியில் அவருக்கு எதிராக மக்கள் சுவரொட்டி ஒட்டினார்கள் என்று (அது உண்மை) எழுதியவர்

நேர்மையும் நெஞ்சில் துணிவும் இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்

என்னை தேசியவாதியென்று நீங்கள் மதிப்பு தந்தமைக்கு நன்றி. நான் தேசியத்துரோகி. தமிழ்ச்செல்வண்ணாவின் மரணம் பற்றி வந்த செய்தியொன்றில் பலர் எழுதிய கருத்துக்களில் எனது கருத்தையும் பதிவு செய்தேன் ஐயா. அப்போது வந்த சுவரொட்டி உண்மையென்று நீங்கள் அடைப்புக்குறியிட்டு எழுதியிருக்கிறீங்கள். 
 
புலிகளை ஒருகாலம் ஊடகங்கள் முதல் எதிர்த்த புளொட் சிவராம் புலிகளால் மாமனிதராக கௌரவிக்கப்பட்டார். புலிகளின் அரசியல் இராஜதந்திரியாகக்கூட ஏற்கும் அளவு மாமனிதர் சிவராம் இருந்தார். சிவராம் அளவுக்கு நான் உயரவோ தாழவோ இல்லை. ஆனால்  ஒரு செய்தியில் எனது கருத்தை பதிவு செய்தேன். ஏன் இப்போதும் முரண்படும் செய்திகள் கருத்துக்களில் எனது எதிர்புகளை பதிவு செய்கிறேன்.
 
நேர்மையும் துணிவும் என்னோடு கூடப்பிறந்தது. நீங்கள் எதிர்பார்க்கும் அதே வடிவங்களோடுதான் பதில் தந்துள்ளேன். அதாகப்பட்டது அரசியல் ,கருத்து நாகரீகத்தின் உட்பட்டு. 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கிக் கொண்டு எவ்வாறு உதவி செய்யமுடியும் என்று சந்தேகம் தெரிவிக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது. அவர் இறந்த புலிகளூக்கு அஞ்சலி செலுத்துகிறார். அவர்களின் வாழ்க்கையை நினைவு கூருகிறார். புலிகளூக்கு ஆதரவு கொடுப்பதற்கும் அவர்களைப்பற்றி எழுதுவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அது இவர்களுக்கு புரியாவிட்டாலும் சிங்கள அரசுக்கு புரியும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1. புலிகளுக்கு நேரடி ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டு எப்படி இலங்கையில் புனர்வாழ்வு அமைப்பை நடத்த முனைகின்றது?

1.1. மகிந்த அந்தளவுக்கு ஜனநாயக மனிதரா? புலி ஆதரவு என்றாலும் மக்களின் துயர் துடைக்கும் அமைப்புகளை தன் மண்ணில் இயங்க வைக்க?

நேசக்கரம் புனர்வாழ்வு அமைப்பல்ல. மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் அமைப்பு. இலங்கையில் மட்டுமல்ல ஆபிரிக்காவில் அமெரிக்காவில் ஏன் உலகில் எங்குமே இயங்கக்கூடிய  தன்னார்வ தொண்டு அமைப்பு. இது ஐரொப்பிய சட்ட விதிகளுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அதுபோலவே இலங்கையில் தனது கிளையமைப்பை உருவாக்கி இயங்குகிறது. அதாகப்பட்டது செஞ்சிலுவைச்சங்கம்,IOM,American aid, un இத்தகைய அமைப்புகள் போலவே இயங்குகிறது.
 
இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு உதவினால் அதில் 99சதவீதமானவர்கள் புலிகளுடன் தொடர்புபட்டவர்களே இருக்கிறார்கள். அதாவது போராளிகளாக , மாவீரர் குடும்பங்களாக, மாவீரர்களின் பிள்ளைகளாக.....இப்படி பார்த்தால் அரசாங்கம் மிஞ்சியிருக்கிற ஒவ்வொரு தமிழரையும் கொன்றுவிட வேண்டும்.
 
உலகின் பார்வைக்கு எல்லாரையும் நாட்டில் இயங்க அனுமதித்துள்ளேன் என்ற அரசியல் நோக்கில் அரசாங்கம் இப்போது அனைத்து அமைப்புகளையும் இயங்க விட்டுள்ளது. இப்போது உதவி அமைப்புகளில் கைவைத்தால் அரசு தன் கண்ணிலேயே குற்றிக் கொள்ளும் நிலமையை உருவாக்கி நேசக்கரம் போன்ற வருடாந்தம் ஒரு மில்லியன்கூட தேறாத உதவிகளை வழங்கும் அமைப்புகளில் கைவைத்து எந்த வெற்றியையும் காணமுடியாது. நேசக்கரம் இயங்காது போனால்  இலங்கையில் தமிழர்கள் அனைவரும் உயிரை மாய்க்கவோ தற்கொலை பண்ணிக்கொண்டு சாகவோமாட்டார்கள். நேசக்கரம் போனால் இன்னொரு கரம் என்ற நிலமை உருவாகிவிட்டது.
 
குறிப்பாக சொல்லப்போனால் இங்கு பலர் தேவையில்லாத கற்பனைகளில் மிதந்து செய்யப்படும் ஒருதுளி உதவியைக்கூட செய்யாதே என்பது போலவே இருக்கிறது.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1.2. அப்படி என்றால் என்ன ..ருக்கு போர்க் குற்ற விசாரணை?

அப்படியானால் போர்க்குற்ற விசாரணை முடியும் மட்டும் எந்த போரால் பாதிக்கப்பட்ட சனமும் சாப்பிடாமல் சாகச்சொல்கிறீங்களா ?  போர்க்குற்ற விசாரணை , பொதுமக்களுக்கான மனிதாபிமானப்பணி , பெண்கள் மீதான கொடுமைகள் ,முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு இவையாவும் வேறு வேறு தளங்களில் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள். 

உலகில் போர்க்குற்றங்கள் பற்றி நூற்றாண்டுகள் கடந்தும் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கும் இதுவரை நீதி உடனடியாக கிடைத்தது வரலாறில்லை. போர்க்குற்ற விசாரணைகள் முடியும் வரை காத்திருந்துதான் போரால் பாதிக்கப்பட்டவர்களெல்லாம் சாப்பிட வேண்டுமென்றால் போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் அனைவரும் தற்கொலைதான் செய்து கொள்ள வேணும். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய மீனவர்களின் படகுகளை ஏலம் விட உத்தரவு! January 23, 2022   இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக இலங்கை மீன் வளத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால், வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 125 விசைப் படகுகள், 17 நாட்டுப் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டு, காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இருப்பதால், உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, விபத்துகள் ஏற்படுவதாக கூறி, படகுகளை ஏலம் விட அனுமதி கோரி, இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள், யாழ்பாணம் மாவட்ட ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, மீட்கப்படாமல் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக ஏலம் விட உத்தரவிட்டார். கொரோனா பரவல் மற்றும் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடும் பணி நடைபெற உள்ளது. 50 ஆயிரம் இலங்கை ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள், 17நாட்டு படகுகளுக்கு என மொத்தம் ரூ. 5.66 கோடி இழப்பீடு வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.   https://globaltamilnews.net/2022/172195  
  • இதே.. நம்ம பொரிஸ்.. நாட்டைப் பூட்டிட்டு தான்... தண்ணியும் பார்ட்டியும் என்றிருந்திருக்குது. குழந்தைகள் வேறு.. பிறந்திருக்குது.. ஒன்றல்ல.. இரண்டு. 
  • கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன். January 23, 2022     நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு. மரண வீடுகளில் வைப்பதற்கு மலர் வளையங்களுக்கும் தட்டுப்பாடு. அதே சமயம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்குவது நிறுத்தப்பட்டதால் மெழுகுதிரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். சபுகஸ்கண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உப உற்பத்திகளில் ஒன்றாகவே மெழுகுதிரி வார்க்கப்படுவதாகவும் இப்பொழுது அதற்கும் தட்டுப்பாடு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம்,  எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால் 4 மணி நேர  மின் வெட்டை எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எதிர்வு கூறுகின்றது. எனவே மின் வெட்டு நேரத்தில் பயன்படுத்துவதற்கு மெழுகுதிரிகளுக்கும் தட்டுப்பாடு வரும்போலிருக்கிறது. இப்படியாக பூச்செண்டுகளுக்கும் மலர்வளைங்களுக்கும் மெழுகுதிரிகளுக்கும் தட்டுப்பாடான ஓர் அரசியல் பொருளாதாரச் சூழலில்  தை பிறந்திருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால்  தை பிறந்த பொழுது நாட்டில் பெரும்பாலான வழிகள் மூடப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. தை பிறந்த கையோடு இந்தியா ஒரு தொகுதி பணத்தை கடனாக வழங்கியிருக்கிறது. அது அரசாங்கத்துக்கு இரண்டு மாதங்களுக்காவது மூச்சு விடும் அவகாசத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மேலும் கடன் உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தமிழ் கட்சிகள் கூட்டாக ஒரு ஆவணத்தை தயாரித்து அதனை இந்திய தூதரகத்திடம் கையளிக்கவிருந்தன. ஆனால் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அவசர அவசரமாக டெல்லிக்கு போக வேண்டி இருந்தபடியால் ஆவணம் கையளிக்கப்படவில்லை. அது பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. தமிழ் கட்சிகளின் கடிதத்தை பெற்றுக்கொள்ளாமல் இலங்கைக்கான இந்திய தூதுவர் ஏன் டெல்லிக்கு பறந்தார் என்று பல்வேறு விதமான ஊகங்கள் எழும்பின. டெல்லிக்கு போன தூதுவர் திரும்பி வந்த கையோடு மத்திய வங்கியின் ஆளுநரைச் சந்தித்து இந்தியாவின் நிதி உதவியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆயின், அந்த நிதிஉதவியை அவசரமாக பெற்றுக்கொடுப்பதற்காகத்தான் அவர் புதுடில்லிக்கு பறந்தாரா? என்ற ஒரு ஊகமும் உண்டு. ஏனெனில்  நாடு அதன் படுகடனில் ஒரு பகுதியை அடைப்பதற்கு கடந்த 18ஆம் திகதி வரையிலும் ஒரு காலக்கெடு இருந்தது. அக்காலக்கெடுவுக்குள் இலங்கை அரசாங்கத்திற்கு சீனா அல்லாத வேறு எந்த நாடாவது உதவி வழங்க தவறினால் அரசாங்கம் சீனாவை சரணடைவதே தவிர வேறு வழி கிடையாது என்றிருந்த ஒரு நிலையில்  அவ்வாறு அரசாங்கம் சீனாவிடம் உதவி கெட்டுப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்திய தூதுவர் அவசர அவசரமாக டெல்லி சென்று ஒரு தொகுதி கடனை கொழும்புக்கு வழங்கியதாகவும் ஊகிக்கப்படுகிறது.  அதேசமயம் தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணத்தை பெற்றுக்கொள்வதில் காட்டிய அக்கறையை விடவும் கொழும்பின் கடனை அடைப்பதில்தான் புதுடில்லி அதிகம் கவனம் செலுத்தியது என்றும் ஒரு விமர்சனம் உண்டு. தமிழ் கட்சிகளின் கடிதத்தை கொடுப்பதற்கு கால வரையறை இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் அடைக்க வேண்டிய கடன்களுக்கு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காலக்கெடு இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டு வியாக்கியானம் செய்ய முடியாது. மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு உண்டு அந்த உறவின் பிரகாரம் ஓர் அரசு இன்னொரு அரசைப் பாதுகாக்கும். இந்தியாவுக்கு ஆவணத்தைத் தயாரித்த கட்சிகளை விமர்சிக்கும் தரப்புகள் இந்த விடயத்தை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றன. தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணத்தை வைத்து இந்தியா இலங்கையுடனான தனது பேரத்தை அதிகப்படுத்தி விட்டது என்றும்,அண்மையில் திருகோணமலையில் உள்ள எண்ணை குதங்களில் ஒரு பகுதி தொடர்பான உடன்படிக்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி செல்வதை இந்தியா தனக்கு சாதகமாக கையாண்டு தன்னுடைய காரியங்களை முடித்துக் கொள்கிறது என்பதே அந்த குற்றச்சாட்டாகும்.  ஏற்கனவே இந்திய இலங்கை உடன்படிக்கை அவ்வாறுதான் செய்யப்பட்டது. அமெரிக்க சார்பு ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவருவதற்காக சோவியத் சார்பு இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் பின்தள வசதிகளையும் வழங்கியது. அதன்மூலம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஓரு கருவியாகப் பயன்படுத்தி கொழும்பை வழிக்கு கொண்டு வந்து இலங்கைதீவில் இந்தியா என்றென்றும் தனது மேலாதிக்கத்தை சட்டப்படி நிலைநிறுத்த தேவையான ஒரு ஆவணத்தை -அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கையை – எழுதிக் கொண்டு விட்டது. எனவே இந்தியா எப்பொழுதும் கொழும்பைப் பணிய வைப்பதற்கான அழுத்த பிரயோக சக்தியாகத்தான், கருவியாகத்தான் தமிழ் மக்களை கையாண்டு வருகிறது என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள். இந்த இடத்தில் இந்தியாவுக்கு ஒரு பொது ஆவணத்தை வழங்கிய கட்சிகள் தமது செயற்பாடுகளின் மூலம் நிரூபிக்க வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது. அது என்னவெனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இக்கட்சிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மைகள் இல்லை என்பதனை செயல் மூலம் நிரூபிப்பதுதான். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்படி ஆவணத்தை தயாரித்த கட்சிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்குபவை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா சொல்லித்தான் அப்படி ஓர் ஆவணத்தை தாங்கள் தயாரிக்கவில்லை என்பதனை நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயம் மேற்படி கட்சிகளுக்கு உண்டு.அதோடு தாங்கள் தயாரித்த ஆவணம் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டி விடவில்லை  என்பதையும் நிரூபிப்பதற்காக உழைக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மேற்படி கட்சிகளுக்கு உண்டு. கிடைக்கும் தகவல்களின்படி மேற்படி கட்சிகள் மேலும் சில ஆவணங்களை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. அதன்படி பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றவேண்டும் என்று கேட்டு ஒரு கூட்டுக் கோரிக்கையை அவர்கள் வரைந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் ஏறக்குறைய ஒரு மாதத்தில் தொடங்கப்போகிறது. இவ்வாறான ஒரு காலப் பின்னணியில் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பது அவசியம் என்றும் மேற்படி கட்சிகள் கருதுகின்றன. தவிர ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவதாக இருந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இது தொடர்பான இறுதி முடிவை பெரும்பாலும் வரும் ஏப்ரல் மாதமளவில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கலாம் என்று தெரிகிறது. எனவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எல்லா கட்சிகளும் ஒன்றாகக் கூடி முன்வைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களை கொடுக்கலாம் என்று அவை நம்புகின்றன. அது சரிதான். அப்படி ஒரு கூட்டுக் கோரிக்கை கட்டாயமாக முன்வைக்கப்பட வேண்டும். அதேசமயம், இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூட்டுக் கோரிக்கை வெறும் கடிதமாக முடியக்கூடாது. அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செயல்பூர்வ வடிவத்தை எடுக்க வேண்டும். கடிதம் எழுதியதோடு மேற்படி கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. கடிதம் எழுதுவது மட்டுமே அரசியல் செயல்பாடாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. கடிதம் எழுதிய கட்சிகளுக்கு அந்த கடிதங்களை நோக்கி உழைக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒன்றாக இணைந்து ஓர் ஆவணத்தை தயாரித்து ஜெனிவாவுக்கு அனுப்பின. அதன் விளைவாக மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை ஒப்பீட்டளவில் கடுமையானதாகக் காணப்பட்டது. ஆனால் ஐநா தீர்மானம் வழமைபோல இலங்கை அரசாங்கத்துக்கு “என்கேஜ்” பண்ணத் தேவையான இடைவெளிகளை வழங்கியது. கடிதத்தை எழுதிய கட்சிகள் பின்னர் தங்களுக்கிடையே முட்டி மோதிக் கொண்டன.  குறிப்பாக அக்கடிதத்தில்  பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே அதாவது, மனித உரிமைகள் ஆணையத்துக்கு வெளியே கொண்டு போக வேண்டும்; ஐநா பொதுச்சபை, பாதுகாப்புச் சபை போன்ற ஐநாவின் ஏனைய மன்றங்களை நோக்கி கொண்டு போகவேண்டும் ; அனைத்துலக நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களை நோக்கி கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை அதிகம் வலியுறுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஏனைய கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு அக்கடிதத்தை தயாரித்தன. கடிதம் அனுப்பப்பட்டது கடந்த ஜனவரி 21ஆம் திகதி. இப்பொழுது அடுத்த ஜனவரி வந்துவிட்டது. மறுபடியும் ஒரு ஜெனிவாக் கூட்டத்தொடர் வருகிறது. இந்த ஓராண்டு காலகட்டத்துக்குள் மேற்படி கடிதத்தில் தாம் முன்வைத்த கோரிக்கையை செயல்படுத்தும் நோக்கத்தோடு மேற்படி கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்னென்ன செய்திருக்கிறது என்பதனை பட்டியலிட்டு காட்ட வேண்டும். அதே போல இந்தியாவுக்கு கடிதம் எழுதிய கட்சிகளும் அதன் அடுத்த கட்டமாக இந்தியாவை எப்படி தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைக்கலாம் என்று திட்டமிட்டு உழைக்க வேண்டும். ஏனெனில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக ஆனந்தசங்கரி கடிதங்களை எழுதியது போலல்ல இது.   https://globaltamilnews.net/2022/172168
  • அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.   https://athavannews.com/2022/1263260
  • இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடு : தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர் ! புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளார். தொற்றுநோயால் மிகவும் அழிவுகரமான தாக்கங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கான நியூசிலாந்து நாட்டவர்களை விட தான் வேறுபட்டவன் அல்ல என்றும் கூறியுள்ளார். கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அன்பானவருடன் இருக்க இயலாமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை அடுத்து முழு நாடும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் இதுவரை 15,104 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 52 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     https://athavannews.com/2022/1263284
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.