Jump to content

நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இதே நிலமைதான் இங்கும். ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து அவ்வப்போது இதெல்லாம் தேவையா என சலிக்கும் வவுனியனும்,அம்மா இன்னும் செய்ய வேணும் என ஆதரித்து அம்மாவுக்கு வழிகாட்டிகளாய் இருக்கும் மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா இருவரும் எல்லாத் தடைகளையும் தாண்டு என்கிற மன பலத்தைத் தந்து கொண்டிருக்கும் கடவுள்கள்.

நான் நினைச்சன் மண்வெட்டியாலை குதர்க்கவாதிகளை கேள்வி கேட்டிருப்பீங்களெண்டு. :lol:

எனக்கு தெய்வம் வரமா ஒரு இரும்பு மனுசியை தந்திருக்கிறது.

எனது ஒரு குழந்தை மாற்று திறனாளி. துணைவி முகம் சுழிக்காமல் அவர்களை பார்ப்பதால் தான் முடிகிறது.

எனது மாற்று திறனாளி குழந்தை என்னிலும் ஒரு படி மேலே. நண்பனுக்கு பிறந்தநாள் என்றால் வீட்டில் கப் கேக் செய்துகொண்டு போவார். இப்போதும் தனது ஆசிரியைக்கு புற்று நோய் என்று பதறிவிட்டார். பள்ளியில் காசு சேர்த்ததில் குட்டிபுலி முதலிடம்.

அவரை பார்க்கும்போது எல்லா களைப்பும், தளர்ச்சியும் பறந்துவிடும்.

நான் ஒரு சபிக்கப்பட்டவன். தோற்று களைத்து இனி இழக்க ஒன்றும் இல்லை என்று வெறியோடு உழைக்கிறேன்.

அக்கா, எனது கடைசி கருத்தை எழுதிவருகிறேன். அதில் எப்படி சபிக்கப்பட்டேன் என்று விளக்குகிறேன்.

Link to post
Share on other sites
 • Replies 86
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

விக், உங்கள் முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன்.

விடா முயற்சிக்கும் கொள்கை பற்றுக்கும் நீங்கள் ஒரு உதாரணம்.

தொடர்க உங்கள் பணி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விக், உங்கள் முயற்சிகளுக்கு தலை வணங்குகிறேன்.

விடா முயற்சிக்கும் கொள்கை பற்றுக்கும் நீங்கள் ஒரு உதாரணம்.

தொடர்க உங்கள் பணி.

நன்றி முதல்வன். உங்கள் போன்றவர்களின் ஊக்கமும், நல்லாசியும் ஊக்க சக்தியை தரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பை யாழ் கள உறவுகளின்  உதவியோடு நிறுவத் தொடங்கியவன்  அன்று அதற்கு மோகனும்  இணையவனும் பெரும் உதவி  செய்தார்கள்.  அதனை  தொடங்கிய  பலரில் நானும் ஒருவன் என்கிற முறையில் அதன் ஆரம்பம் அதன் பின்னால் நின்ற யாழ் கள உறவுகள்.அதற்கு உயவிய உறவுகள் இன்று பலர் யாழ்களத்தோடு இணைத்திருக்கவில்லை அவர்களின் அளப்பரிய  உதவிகளோடு யாழ் களத்தில் உருவாக்கம் பெற்ற நேசக்கரம் அமைப்பு பற்றி நானும் சில விடயங்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன். காரணம்  2002 ல் தான்  உதவி அமைப்பை தொடங்கியதாகவும் பின்னர்  அருணா முன்னர் பிரான்சில் இருந்தவன் தற்போது உயிருடன் இல்லை..தயா மோகன்  சுவிசில் உள்ளார் இவர்கள் கேட்டதால்  தான் நேசக்கரம்  என்கிற அமைப்பை  2006ல் கிழக்கில் தொடங்கியதாக சொல்லும்  சாந்திக்காகவும் அதனை  பார்த்த பின்னர்  யாழில் தான்  நேசக்கரம்  தொடங்கப் பட்டது என்று தெரிந்தும்  பேசாமல் இருப்பவர்களிற்காகவும். அதுவும் நானும் டண்ணும் இதே யாழ் இணையத்தில்  என்ன பெயர் வைக்கலாம் என்று  பகிரங்கமாக  மற்றையவர்களுடன் கலந்தாலோசித்து  வைத்த நேசக்கரம்  என்கிற பெயரை அதற்கான முதலாவது லோகோவை  வலைஞன் வடிவமைத்து தந்திருந்தான்  ஆனால் இதனை   எப்படி  தான் வைத்தாக  கூறப்போகிறாராம்.  நேசக்கரம் என்பதன்  தோற்றத்தையும் அதன் வளர்ச்சி பற்றியும் மற்றையவர்கள் தெரிந்து கொள்வதற்காக  எழுதத் தொடங்குகிறேன்.வேறு எங்கும் அல்ல யாழிலேயேதான் .

 

 யாழ் நேசக்கரம் இதுதான் அதன் உண்மையான பெயர்  அது பின்னர் நேசக்கரமாக  மாறிவிட்டது இந்த  அமைப்பின் முதலாவது உதவித் திட்டம் இங்கு யாழிலேயே ..இணைப்பு  அங்கு சாந்தி என்கிற பெயரை  யாராவது  கண்டால் அறியத் தரவும். நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=30377

 

அப்போ வரட்டா....வருவம்.....

 

யார் யார் ரிபோன் வெட்டினது யார் ஆலவாடம் சுத்தியது என்று யாரும் பார்ப்பதில்லை.
 
வியர்வை சிந்தி யார் உழைக்கிறானோ அவனுக்கே வெற்றி உரித்தானது.
 
மற்றைய படி மழைக்காலம் என்றால் ஈசல் வரும் ...
நிலா காலம் என்றால் தேனீ வரும்.
 
படம் காட்ட இங்க வந்து போவோரை உலகம் அறியும்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நேசக்கரம் என்ற பெயரில் 2006இல் தயாமோகண்ணாவினால் கிழக்கில் செயற்படுத்தப்பட்ட நேசக்கரத்தை இயக்கிய இளைஞர் இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறார். தற்போது தனது முகத்தை  இதோ பாரென்று அந்த இளைஞரால் காட்ட முடியாத நிலமையில் இருக்கிறார். அவர் வெளியில் வரும் நாளொன்று வரும்.
 
இதுபோல மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது நண்பர்களை வைத்து உதவிய அமைப்பும் இலங்கையில் இயங்கியது அதுவும் நேசக்கரம் என்ற பெயரில். இதுபோல 2007இல் யாழில் உருவாகிய யாழ் நேசக்கரம் பற்றிய பகிர்வில் உதவிய ஆரம்ப வித்திட்ட யாவரையும் அவர்களது உதவிகளையும் விரைவில் எழுதுவேன்.
 
பந்தியில் சாத்திரிக்கும் இடமுண்டு. 
 
2009இன் பின்னர் யேர்மனியில் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் உருவாக அடித்தளமிட்டு ஆதரவு தந்து உதவியவர்கள் 2010 சட்டம் அனுமதித்த பின்னர் எப்படி நேசக்கரம் வளர்ச்சி கண்டது. இதில் பங்களித்தோர் வெளியில் வராமல் தங்கள் ஆதரவை தந்தோர் என பலரை வெளியில் சொல்லுவேன்.
 
இதில் கணிசமான ஆதரவு யாழ் இணையத்திற்கானது. யாழ் இணையத்தின் கள உறுப்பினர்கள் வாசகர்களே உதவுகிறார்கள். பலரின் முகம் தெரியாது முகவரி தெரியாது. தங்களுடடைய உதவிகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றியெல்லாம் எழுத வேண்டும். 
 
திங்கள் வரை யாழ் களத்துக்கு வரமாட்டேன் உறவுகளே. எங்களது பெண்கள் அபிவிருத்தி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்திற்கு லண்டன் போகிறேன். திங்களின் பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன். 
 
 
Link to post
Share on other sites

அக்காச்சி நீங்கள் சொல்கிற தயா மோகன் கருணா பிரிந்த போது கருணாவின் ஊடக பேச்சாளராக அறிவிக்கப் பட்டு இயங்கியவர் பின்னர் புலிகளின் கை ஓங்கிய போது பல்டி அடித்து மீண்டும் புலிகளோடு இணைத்தவர் இறுதி யுத்தத்தின் பின்னர் தன்னோடு நின்ற போராளிகளை கைவிட்டு விட்டு கே .பி . யின்உதவியோடு வெளிநாடு வந்து சேர்த்தவர்.இறுதி யுத்த காலத்தில் இவரும் கே பி யும் மாறி மாறி கொடுத்த பேட்டிகளே இருவரும் ஒன்றாக இயங்கியத தற்கு சாட்சிகள் . அந்த தயா மோகனின் ஆலோசனையோடு நேசக்கரம் தொடங்கியது என்கிறீங்கள் . அடுத்தது சாத்திரி அண்ணா யாழில் நேசக்கரத்தை தொடங்கியவர் அவருக்கும் கே.பி குமான தொடர்புகள் அனைவரும் அறிந்தது எப்படி பார்த்தாலும் நேசக்கரத்தின் பின்னணி ஒரே இடத்தில இருந்து தானே தொடங்கு கின்றது இதை நேரடியாக சொல்லி விட்டு செய்யலாமே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் தோற்றுவாய் பற்றிய சாந்தி அக்காவின் பதிவும், சாத்திரிதான் யாழில் தொடக்கியவர் என்று கருத்தும் ஆச்சரித்தைத் தருகின்றன. நேசக்கரம் தாயகத்தில் செய்யும் அளப்பரிய சேவைகள் போற்றுதற்குரியது. ஆரம்ப காலத்தில் நேசக்கரத்தோடு இணைந்திருந்தாலும் பின்னர் அது ஆலமரமாக வளர்ந்தபோது பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. எனவே நேசக்கரத்தின் செயற்பாடுகளைப் பற்றிக் கதைப்பதற்கு எந்த அருகதையோ உரிமையோ என்னிடம் இல்லை.

எனக்குத் தெரிந்து நேசக்கரம் யாழில் ஆரம்பிக்கப்பட்டது யாழ் டன் என்று அன்பாக அழைக்கப்பட்ட டங்ளஸ் என்ற உறவால்தான். இதைப்பற்றிய திரி நாற்சந்தியில் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=27323

சாத்திரி பிற உறுப்பினர்களைப் போன்று இணைந்துகொண்டவர். போர் நடந்த காலம் ஆகையால் அவருக்கு இருந்த தாயகத் தொடர்புகள் காரணமாக ஆரம்ப உதவிகளைத் தாயகத்திற்கு அனுப்பும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கிருபன் எழுதி இருப்பதே உண்மை. இது தொடர்பாக ஒரு திரி யாழில் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆதரவு தெருவித்து, எனது பங்களிப்பையும் வழங்கி இருந்தேன். இதில் டண்ணின் பங்களிப்பே முக்கியமானது. சாத்திரி அப்போது தான் புலிகளின் பிரதினிதி போலவே யாழ் களத்தில் செயற்பட்டார். இதனால் அவருக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது சாந்தி அவர்களும் சாத்திரியும் ஒன்றாகவே இயங்கினர். பின்னர் நேசக்கரத்தின் செயற்பாடுகள் டண்னால் கைவிடப்பட்டு இருந்தது.பின்னர் அவரே இதனை சாந்தி அவர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். அதன் பின்னர் சாந்தி அவர்கள் தமக்கிருந்த தொடர்புகளையும், எழுத்தையும் பாவித்து இதனை பெருமெடுப்பில் செயற்பட வைத்தார் அப்போது தான் இது ஒரு அமைப்பாக ஜேர்மனியில் பதியப்பட்டது . இதன் பின்னால் அவரின் உழைப்பு நிச்சயமாக இருக்கிறது. இதில் சாத்திரியாரின் பங்கு ஆரம்ப்பத்தில் தொடர்பாடலை ஏற்படுத்தியது மட்டுமே. ஆனால் இன்று அவர் தான் புலிகளை விட்டு 2001 ஆம் ஆண்டே வெளியேறி விட்டிருந்தேனதென்று எழுதுவது தான் , இவர் யார் இங்கு என்ன செய்தார், இப்போது என்ன செய்கிறார் என்னும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை  மட்டும் சாந்தியக்கா புரிந்து கொள்ளணும்

இது போன்ற  சமூக  சேவைகளை

பொதுத்தொண்டுகளை  செய்பவர்கள் 

இது   போன்ற பகிரங்க  விவாதங்களையும்  கேள்வி பதில்களையும்  செய்யமுடியாது

என்பதைப்புரிந்து கொண்டு

இவற்றிலிருந்து விலகி

எல்லோரையும் அரவணைத்தபடி

காரியத்தில் மட்டுமே கண்ணாக  இருக்கணும்

இதுவே  இன்றைய  தமிழரது தேவை

தயவு செய்து இவற்றை  தவிருங்கள் சாந்தியக்கா.......

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலைக்கப்பட இருந்த நேசக்கரத்தை இப்போது திறமையாக நடத்துவது சாந்தி என்று நடக்கும் செயல்களிலே தெரிகிறது....அதை விட்டு வெளியேறியோர் ஏன் கவலைபடுகிறார்கள்?

காய்த்தமரம் தான் கல்லடி படும்....

 

யாரும் நேரம் இருந்தால் நேசக்கரத்தின் வரலாறை எழுதி வைத்தால் நல்லம்...... (அதற்கு பாடு பட்டவர்களின் பங்களிப்பை பற்றியும்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலைக்கப்பட இருந்த நேசக்கரத்தை இப்போது திறமையாக நடத்துவது சாந்தி என்று நடக்கும் செயல்களிலே தெரிகிறது....அதை விட்டு வெளியேறியோர் ஏன் கவலைபடுகிறார்கள்?

காய்த்தமரம் தான் கல்லடி படும்....

யாரும் நேரம் இருந்தால் நேசக்கரத்தின் வரலாறை எழுதி வைத்தால் நல்லம்...... (அதற்கு பாடு பட்டவர்களின் பங்களிப்பை பற்றியும்)

கவலைப்படவில்லை நான்தான். சும்மா பிலிம்.

வரும்போது நடுத்தெருவில் நிற்கும் முன்னாள் போராளிக்கு ஒரு நூறு டொலர் கேட்டால் ஒரு ஈ, பூச்சி இந்த பக்கம் எட்டி பார்க்காது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மட்டமான பேச்சு தன் ஊரை கெடுக்குதுங்க - அது

வெட்டித்தானமாக் கேக்கிறவங்க

காதையும் கெடுக்குதுங்க

சந்திலும் பொந்திலும் வாதம் - அதால்

தலைவலி மருந்துக்கு லாபம்

கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து

குடும்பத்தை கலக்குதுங்க - பெரும்

குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி

பொழப்பயும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி - ஒரு

பொய்யை நூறாகக் கட்டி - கரும்

பூதம் என்றும் சிறு பேய்கள் என்றும் - பல

பாதையும் ஊரையும் கெடுக்குதுங்க

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து

அவதிப் படுத்துதுங்க - ஊரை

அவதிப் படுத்துதுங்க - அது

அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே

அமைதியை கெடுக்குதுங்க ...

 

 

~~~~~ நன்றி

~~~~~பட்டுக்கோட்டை கல்யாணம்

 

குரல் ~ 196 (பயனில சொல்லாமை - Against vain Speaking)

பயனில்சொல் பாராட்டுவானை மகனேனல்

மக்கட் பதடி யேனல்

பயனற்றவைகளை சொல்லி பயன் பெற நினைப்பவனை, மனிதன் என்பதை விட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.