கருத்துக்கள உறுப்பினர்கள் லியோ 245 பதியப்பட்டது June 2, 2013 கருத்துக்கள உறுப்பினர்கள் Share பதியப்பட்டது June 2, 2013 இணையங்களைப் பார்க்க மனம் மேலும் குழம்பியது.முன்பு எல்லாம் மனச்சோகம் வந்தால் துயிலும் இல்லம் போய் சிறிது நேரம் மரநிழலில் இருந்து வந்தால் மனம் அமைதியாகும்.இன்று என்ன செய்யலாம் யோசிக்க படக் என்று அந்த ஞாபகம் வந்தது.சில நாட்களுக்கு முன்புதான் ஒரு மாவீரனின் தாயின் தொலைபேசி இலக்கம் கிடைத்திருந்தது.இன்றைக்கு அந்த அம்மாவோடு கதைப்போம். அம்மா அம்மா நான் என்னை அறிமுகப்படுத்தினேன். ஐயோ என்ர பிள்ளையே ! எப்படியிருக்கிறாய்?.நான் கேட்க வேண்டிய கேள்வியை அவ கேட்டா. நான் நல்லா இருக்கிறன் அம்மா நீங்க எப்படி அம்மா. நான் இருக்கிறன் .எனக்கு ஒரு குறையும் இல்லை.என்ர வீட்டுக்கு வந்திட்டன்.காலையில ஒருக்கா சமைச்சா மூன்று நேரமும் சாப்பிடுவன். தேங்காய் பொறுக்கி போடுவன்.ஓலை பின்னுவன். என்ர பாடு பிரச்சனை இல்லைத்தம்பி.நான் போன மாதம்தான் இந்த போனை வாங்கினனான்.அப்ப பக்கத்து வீட்டுக்காரர் எல்லாம் கேட்டவை உனக்கேன் உதை. உன்னோட யார் கதைக்க போயினம் என்று.எனக்கு தெரியும் என்ர பிள்ளைகள் எங்காவது இருப்பாங்கள் என்று. அம்மாவுக்கு ஒரு பெடியன்தான்.மனுசனும் பெடியனுக்கு பத்து வயதாய் இருக்கும் போது இறந்து போனார்.அவர்களுக்கு பொருளாதார பிரச்சனை பெரிதாய் இருக்கவில்லை. பெடியன் படிப்பிலையும் விளையாட்டிலையும் கெட்டிக்காரன்.அமைதியானவனாய் இருந்தாலும் துடியாட்டக்காரன்.தாயில் கொள்ளை பாசம் வைத்திருந்தான்.தாயும் அவனில் உயிரையே வைத்திருந்தாள்.முதலில் அவன் பதின்நான்கு வயதில் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.அவனது வயதைக்காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.பின்பு பதினாறாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான்.மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான் வீட்டில் ஒரு பிள்ளை என்பதற்காய்.இம்முறைதான் நான் அவனது வீட்டிற்கு முதல் தடவையாய் போயிருந்தேன். பின் இரண்டாம் தடவை அவனது வீரச்சாவுக்கு போனேன். அவன் தனது பதினெட்டாம் வயதில் மீண்டும் இயக்கத்திற்கு வந்துவிட்டான். பயிற்சி முடித்து விடுமுறையில் நின்றபோது என்னைச் சந்திக்க வந்திருந்தான்.முழுமையாய் ஒரு போராளியாய் இருந்தான்.அளவாக கதைக்கின்ற அந்த பண்பு நிறைந்த போராளியின் மனதில் தாயின் சோகம் குத்தியிருந்தது.நானில்லாட்டிலும் அண்ணை (தலைவர்) என்ர அம்மாவைப்பார்ப்பார்.அவனில அந்த திருப்திஇருந்தது. நான் ஆலோசனை கூறினேன்.நீர் ஒரு பிள்ளை என்றதால பின்னணி வேலைகளைச் செய்யலாம்.இடைக்கிடை அம்மாவையும் போய்ப் பார்க்கலாம்.நான் கதைத்துப்பார்க்கிறேன் என்றேன்.வேண்டாம் அவன் முழுமையாய் மறுத்துவிட்டான்.அவன் களமுனையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டான். இறுதியாய் அவனை முகமாலையில் பின்னனிப்பிரதேசத்தில் சந்தித்தேன்.நான் நிற்பதை அறிந்து அவன் சந்திக்க வந்திருந்தான்.மிகக் கலகலப்பாய் இருந்தான்.அம்மாவை போய்ப்பார்த்தீரா? என்றேன்.எங்க சரியான வேலை என்றான். நான் ஒரு வெள்ளைத்தாளைக்கொடுத்து, கடிதம் எழுதித்தாரும் நான் அம்மாவுக்கு கிடைக்க ஒழுங்கு செய்கிறேன் என்றேன். அவன் சுமார் ஒருமணித்தியாலத்திட்கு பிறகு ஏதோ எழுதி மடித்துத்தந்தான்.நான் அதை தாயிற்கு கிடைக்க ஒழுங்கு செய்தேன். அதுதான் தாயிட்கான அவனது கடைசி செய்தியாய் போயிற்று. அம்மா ஒரு இடமும் போறதில்லையோ? இல்லைத்தம்பி பிள்ளையை விதைச்ச இடமும் இல்லை என்று பெரு மூச்சு விட்டவ. என்னைமாதிரி இன்னும் ஒரு ஆள் இருக்கிறா தம்பி அவவுக்கு உன்னைத்தெரியும்.அவவுக்கும் ஒரு பிள்ளைதான் அந்தப்பிள்ளை சரணடைந்து எங்கை என்று தெரியாது.அவ தேடாத இடம் இல்லை.இப்ப என்னட்டைதான் இடைக்கிடை வருவா .அவவின்ர போன் நம்பரைத்தாறன் அவவிட்கும் எடு தம்பி என்று நம்பரைத் தந்தா. மகன் வைச்ச மாமரம் , கொய்யாமரம் நல்லாய்க்காய்க்கிதாம் . சுத்தி இருக்கிற எல்லாச் சனத்திட்கும் கொடுக்கிறதாம்.சின்னப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் முடிய ஒருக்கா இந்தப்பக்கம் வந்துதான் போவாங்களாம். ஊரில முந்தி இயக்கத்திற்கு பின்னால திரிஞ்ச கொஞ்சம் இப்ப அவங்களோட நிற்கிறாங்கள் பச்சோந்திகள் பஞ்சமிகள் என்று பேசினா. அம்மா சுகமாய் இருங்கோ பிறகு கதைக்கிறன் - நிரோன்- Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ரதி 3,270 Posted June 2, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 2, 2013 அம்மா உண்மையைக் கதைத்தால் உடனே போனை வைத்து விடுவீங்களா?...எழுதிய விதம் அருமை Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் 2,566 Posted June 2, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 2, 2013 நன்றாக இருக்கு லியோ Link to post Share on other sites
இசைக்கலைஞன் 3,121 Posted June 2, 2013 Share Posted June 2, 2013 மனதைப் பிசைய வைத்தது.. இணைப்பிற்கு நன்றி லியோ.. Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் லியோ 245 Posted June 4, 2013 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 4, 2013 ரதி,சுமோ,இசை நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கமூட்டலுக்கும் Link to post Share on other sites
வாத்தியார் 1,546 Posted June 4, 2013 Share Posted June 4, 2013 பகிர்விற்கு நன்றி லியோ இப்படிப்பல அம்மாக்கள் ஏக்கப்பெருமூச்சுகளுடன் வாழ்கின்றனர். உங்கள் ஆறுதலான வார்த்தைகள் அந்த அம்மாவிற்கு நிம்மதியைக் கொடுக்கும் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,243 Posted June 4, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2013 தொடர்ந்து எழுதுங்கள் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் shanthy 1,271 Posted June 4, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2013 நன்றிகள் லியோ அண்ணா கதையை தந்தமைக்கு. இப்படிப் பல அம்மாக்கள் அப்பாக்களுடனான அனுபவங்கள் என்னிடமும் இருக்கிறது. கடந்தவாரமும் இதோபொலொரு மாவீரர்களை தந்த அப்பா எதிர்பார்க்காத நிகழ்வாக இறந்துவிட்டார். மகள் மகளென்று உறவாடிய அந்த அப்பா கடந்த திங்கள் இரவு 9மணிக்கு இறந்துபோனார். அன்று காலை அவருக்கு இம்மாதத்துக்கான பணம் அனுப்பிவிட்டு இரவு தாயக நேரம் 10மணிக்கு தொலைபேசியெடுத்தேன் அழுகுரல்தான் வந்தது அப்பாவுக்காய் அனுப்பிய காசில் ஒரு மாபோத்தல் கூட வாங்கிக் குடிக்காமல் இறந்துவிட்டார். இன்னும் அந்த நினைவும் அவரது குரலும் மனசுக்குள்.....! Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் 3,972 Posted June 4, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 4, 2013 பகிர்வுக்கு நன்றிகள், லியோ! ஆழ்மனதை, கசக்கிப் பிழிகின்றது உங்கள் கதை! தொடர்ந்து எழுதுங்கள்! Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் ஜீவா 681 Posted June 5, 2013 கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 5, 2013 உணர்வு பூர்வமான நல்ல எழுத்தாற்றல், வலிக்கிறது .. தொடர்ந்து பல படைப்புக்களைத் தாருங்கள்.! Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் லியோ 245 Posted June 5, 2013 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 5, 2013 வாத்தியார்,விசுகு,சாந்தி ,புங்கை,ஜீவா அனைவருக்கும் அன்புடனான நன்றி. Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் நிலாமதி 1,309 Posted June 5, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 5, 2013 தற்போது எல்லோரும் மறக்க நினைக்கும் உறவுகளின் கதை.உணர் வோட்ட்மாய் எழுதி உள்ளீர் கள் பாராட்டுக்கள். இப்படி ஒரு சிலரால் தான் மனிதம் வாழ்கிறது Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் suvy 8,034 Posted June 5, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 5, 2013 தொடர்ந்து எழுதுங்கள், மனதில் ஒரு துயரத்தைக் கொண்டு வந்தது . Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் putthan 2,162 Posted June 5, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 5, 2013 தொடர்ந்து எழுதுங்கள் Link to post Share on other sites
arjun 1,738 Posted June 5, 2013 Share Posted June 5, 2013 பாவம் அந்த அம்மாவிற்கு வெளிநாட்டில் யாரும் இல்லை போலிருக்கு . Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் shanthy 1,271 Posted June 5, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted June 5, 2013 பாவம் அந்த அம்மாவிற்கு வெளிநாட்டில் யாரும் இல்லை போலிருக்கு . வெளிநாட்டில் யாரும் இல்லாதபடியால் தானே வெளிநாட்டில் இருந்து ஒருவர் அம்மாவுடன் தொலைபேசுகிறார். Link to post Share on other sites
ஆரதி 336 Posted June 5, 2013 Share Posted June 5, 2013 ம்............... என்னத்தை சொல்ல நன்றி லியோ! Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் லியோ 245 Posted June 7, 2013 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted June 7, 2013 நிலாமதி,புத்தன்,சுவி,அர்ஜுன்,சாந்தி ,அலைமகள் வருகைக்கும் கருத்து இடலுக்கும் மிக்க நன்றிகள் Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் வாணன் 182 Posted July 22, 2013 கருத்துக்கள உறவுகள் Share Posted July 22, 2013 பகிர்விறிகு நன்றி Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் putthan 2,162 Posted January 28, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted January 28, 2014 இன்றைய தெரிவில் லியோவின் கதை Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் அஞ்சரன் 986 Posted January 29, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted January 29, 2014 அம்மா எழுத்தில் அடக்கிவிட முடியாது ...தொடருங்கள் Link to post Share on other sites
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.