லியோ

சின்ன சின்ன ஞாபகங்கள்

Recommended Posts

நான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.

தொடருங்கள் லியோ

யூதர்களும், இஸ்லாமியரும் ஒரே அளவு தொப்பி போடுவார்கள்.. உங்கள் ஸ்டேட்மென்ட்ஸ் அவர்களைப் பாதிக்கும்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

அண்ணையின் அப்பா அம்மாவை நாங்களும் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவம் . அண்ணையையும் அண்ணையுடன் நின்ற இளைய போராளிகள் தங்களுக்குள் அப்பர் என்று கதைத்துக்கொள்வார்கள். அண்ணையின் அப்பாவும் அம்மாவும் சமாதானக்காலத்தில்த்தான் இந்தியாவில் இருந்து வன்னிக்கு வந்து சேர்ந்தார்கள்.அவர்களை மாதத்தில் ஒரு தடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.அவர்கள் வாழ் நாளில் பல துன்பங்களையும் அனுபவித்தவர்கள்.மிக மிக நல்லவர்கள்.அப்பா ஓய்வுபெற்ற உயர் அரச அதிகாரி,மிகவும் பக்குவமாய் பழகும் எளிமையான மனிதர்.அம்மா ஒரு பாரிசவாத நோயாளி ,அவ கதைப்பது குறைவு. அம்மாவின் பராமரிப்பை இறுதிவரை அப்பாவே செழுமையாய் செய்துவந்தார்.அம்மாவிற்கு நாளுக்கு நிறைய மருந்து குளுசைகள் எடுக்கவேண்டியிருக்கும்.அப்பா நேரம் தவறாமல் கொடுப்பார்.அப்பா ஒரு கடவுள் பக்தர்.அவர் வல்வெட்டித்துறை சிவன்கோயிலுடன்  தொடர்புடைய பரம்பரையைச் சேர்ந்தவர்.அந்தக்கோயிலின் மலர் (புத்தகம்)ஒன்றை உறையெல்லாம் போட்டு கொண்டுவந்து தந்தார்.கவனமாய் வாசித்துவிட்டு தருமாறு.எனது வேலைப்பளுவால் என்னால் அந்த புத்தகத்தை வாசிக்கமுடியவில்லை.கவனமாய் திருப்பி கொடுத்துவிட்டேன்.

 

2007 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை வழமை போல் விடிந்தது.அன்று நான் எனது சிறு அணியுடன் மாங்குளம் போய் மல்லாவி போகவேண்டும்.வாகனத்தில் ஏறி டயரியை பார்த்துக்கொண்டிருந்தேன்.சாரதி வாகனத்தை எடுக்கவும் ஒரு போராளி வந்து வாகனத்திட்கருகில் நிற்கவும் சரியாய் இருந்தது.என்ன என்று வினவ ,அவன் அண்ணையின் அப்பா அம்மா வந்திருப்பதாய் சொன்னான்.வழமையாய் அறிவித்துத்தான் வருவார்கள்.அன்று திடீரென வந்திருந்தார்கள்.நான் இறங்கினேன் .கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளர் சொன்னார் நேரம் போயிடும் தாங்கள் போயிட்டு வாகனத்தை அனுப்பிவிடுவதாய் ,நான் ஆம் சொல்லி இறங்கிப்போனேன். அன்று எனது வாகனம் கிளைமர் தாக்குதலில் அகப்பட்டுக்கொண்டது.

 

  2008 ஆம் ஆண்டு ஒரு நாள் சந்திக்கும்போது அப்பா மிகவும் சந்தோசமாய் இருந்தார்.அண்ணை தற்செயலாய் வீட்டை வந்திருக்கிறார் அன்றைக்கு அப்பான்ர பிறந்த நாள் , அக்கா சொல்லித்தான் அண்ணைக்கு தெரியும்.அண்ணை கேக் வீட்டை இருக்கோ என்று அக்காட்ட கேட்டிருக்கிறார்.அக்கா தேடி ஒரு துண்டு கேக்கை குடுத்திருக்கிறா.அண்ணை அப்பாவின்ர ரூம் தேடிப்போய் அப்பாவிற்கு கேக் தீத்திவிட்டிருக்கிறார்.அப்பா சிரிச்சு சிரிச்சு சொன்னார்.கண்ணாலயும்

ஆனத்தக்கண்ணீர் வந்திருந்தது.  

 

1970 களில போலிஸ் அண்ணையை தேடி வீட்டை வரத்தொடங்கிச்சாம் , அப்ப அப்பா அண்ணையிட்ட சொன்னாராம்.துரை நீ வீட்டை வராத உன்னால மற்றப்பிள்ளைகளுக்கும் பிரச்சனை,அண்ணையின்ர வீட்டுப்பெயர் துரை .அண்ணை அப்பாவை ஐயா என்றுதான் கூப்பிடுவார்.அப்பா சொன்னதுக்கு அண்ணை ஒன்றும் கதைக்கவில்லையாம் தலையாட்டிட்டு போனாராம். அண்ணை பிறகு ஒரு நாளும் வீட்டை வரயில்லையாம்.இந்தியாவில்தான் ஒருக்கா சந்திச்சாராம்.அண்ணை சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை அந்த தந்தையிடம் இருந்தது. 

 

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதின்நான்காம் திகதி சாமம் ஒரு சந்திப்பு முடித்து ( முள்ளிவாய்க்காலில் ) நடந்து போய்க்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு போராளி சொன்னான் அப்பாவும் அம்மாவும் அந்த பங்கருக்குள்ள இருக்கினம் என்று.அவர்களுடன் செஞ்சோலையில் நின்ற பெண்ணொருவரும் இருந்தார்.அப்பாதான் கொஞ்சம் கதைத்தார்.நான் இறுதியாய் விடைபெற்றுச் சென்றேன்.

 

- ஓவியன்-    

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

என்னென்னவோ எல்லாம் நடந்துவிட்டது.. அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள் லியோ..

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் லியோ 

Share this post


Link to post
Share on other sites

இதுவரை கேள்விப்பட்டேயிருக்காத அனுபவங்கள் உங்களிடமிருந்து வருகின்றது, லியோ!

 

வரலாற்றின் தேவை கருதி, இவை ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!

 

யாழின் ஆவணப்பக்கத்திற்காவது, சம்பந்தப்பட்டவர்கள் நகர்த்திவிட்டால் நல்லது! 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ராஜு அண்ணை, அண்ணையின் விஞ்ஞான  எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன். எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது. இவர்  ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும்  ஐ சே போட்டு கதைக்கிறவர்.

தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் அடித்தோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது . பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.

ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை  ). ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.

ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி,இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில்  ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை  தாங்கோ, கங்கா சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான்  பார்த்துக்கொண்டிருக்கு.

 நான் வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.நான் ஆம் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார்.பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும் தேவையில்லை என்றார்.கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.மிச்ச    மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார். 

 

- ஓவியன்-

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் லியோ!

Share this post


Link to post
Share on other sites

ராஜு அண்ணையின் இயற்பெயர் நேமிநாதன் என முடியும் என நினைக்கிறேன்.. விடாமுயற்சியுடன் கருவிகளை ஆக்குபவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.. பகிர்வுக்கு நன்றி லியோ..

Share this post


Link to post
Share on other sites

மிக ஆக்கபூர்வமான எங்கும் அறியாத பதிவுகள் .

தொடருங்கள் .

Share this post


Link to post
Share on other sites

திலீபன் எப்போதும் முன்னுதாரணப் போராளி ,அப்போது பல போராட்ட இயக்கங்கள் இருந்தன.எல்லா இயக்கங்களிலும் மக்கள் அவரவருக்கு கிடைத்த தொடர்புகளின்படி / நம்பிக்கையின் படி இனத்திற்கு விடுதலை பெறும் அவாவுடன் போராளிகளாய் இணைந்தார்கள்.புலிகள் இயக்கத்திலும் பலர் இணைய வந்தும் அவர்களை உடனடியாய் உள்ளீர்த்து பயிற்சி கொடுக்க இயக்கத்திடம் பொருளாதாரப்பலம் இருக்கவில்லை.அதனால் எங்கள் தொடர்பில் இருந்த பலர் மற்றைய இயக்கங்களுடன் இணைந்தனர்.

பல இயக்கங்கள் இருந்தமை எங்கள் இனத்தின் விடுதலைப்பலத்தை மிகவும் பாதித்தது.துரதிஷ்டவசமாய் ஒற்றுமை சாத்தியப்படவே இல்லை.

இந்தியா எப்போதும் தனது தேவைக்காய் எங்களைப்பிரித்தும் ,தன் நலத்தையே கையாண்டு வந்தது.எண்பத்தி ஐந்தாம் ஆண்டில் ஒருநாள் திலீபன் சொன்னார் இந்தியா ஆமி இலங்கைக்கு வரும்  அவங்கள் போராட்டத்தை உய்யவிடமாட்டாங்கள். எனக்கு அப்போது அதை சரியாய் புரிந்துகொள்ளும் அறிவு இருக்கவில்லை.

எங்களது சகோதரர்கள்/நண்பர்கள்தான் அடுத்தடுத்த இயக்கங்களில் இருந்தார்கள். திலீபனுக்கு பல இயக்க மாவட்ட மட்ட பொறுப்பாளர்களுடன் நல்ல உறவு இருந்தது.பலமான ஒரு இயக்கம் யாருடைய கைப்பொம்மையும் இல்லாமல் இருப்பதே விடுதலைக்கு தேவையானது.அதனால் பிற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.பல மற்றைய இயக்கப்போராளிகள் தனித்தனியாய் எங்களுடன் இணைந்துகொண்டார்கள்.

எங்களுடைய இயக்கத்தில் இருந்திருந்தாலும்,மற்றைய இயக்கத்தில் இருந்திருந்தாலும் எதிரியோடு நிற்பவர்கள் மட்டும் தான் துரோகிகள்.   

கிட்டண்ணா மீதான கைக்குண்டு தாக்குதலின் பின் அருணா அண்ணாவின் நடவடிக்கையால் மற்றைய இயக்கப்போராளிகள் கொல்லப்பட்டார்கள்.அருணா அண்ணை இயக்கத்தின்ர முக்கியமானவராய் இருந்தும் ,இந்தியன் ஆமிக்கு எதிரான நடவடிக்கையில் வீரச்சாவு அடைந்தும் அவர் மாவீரர் பட்டியலில் இறுதிவரை இணைத்துக்கொள்ளப்படவில்லை.    

தலைவர் மனதிலும் கவலைகள் இருந்தன.அவர் எப்போதும் விடுதலை என்ற இலக்கை நோக்கியே செயட்ப்பட்டுக்கொண்டிருந்தார்.அவர் தன்னை எப்போதும்  மக்களில் ஒருவனாகவே எண்ணிக்கொண்டார்.

ஒரு போராளிகளின் திருமண நிகழ்வின் போது  அந்த மணப்பெண்ணின் தந்தை,வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்,அவர் அண்ணை சிறுவனாய் இருக்கும்போது கண்டிருக்கிறார்.அண்ணையை கண்டு கதைத்துக்கொண்டிருன்தவர்.திடீரென அண்ணையின் காலில் வீழ்ந்து கும்பிட்டார்.அண்ணை ஐந்து அடி பின்னகர்ந்துவிட்டது.அண்ணைக்கு அது பிடிக்கவேயில்லை.

 

ஓவியன்    

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

திலீபன் காலத்து அனுபவங்களையெல்லாம் எழுதுவதால்... பகிர்வுக்கு நன்றி லியோ அண்ணா..! :rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

மிகவும் எளிமையாக எழுதிக்கொண்டு போறீங்கள் . ஒரு பரவசத்தோடு வாசித்துக் கொண்டு போகக் கூடியதாய் இருக்கு !

தொடருங்கள் லியோ , வாழ்த்துகள் !!

Share this post


Link to post
Share on other sites

 இந்தப்  பதிவுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை லியோ 

தொடர்ந்தும் எழுதுங்கள்  

Share this post


Link to post
Share on other sites
காலில் விழுந்து கும்பிடுபவரே கவிப்பதிலும் முன்னுக்கு நிற்பார்கள் என்பதால் தலைவர் விலகி இருப்பார்...தொடருங்கள் லியோ
 

Share this post


Link to post
Share on other sites

 தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி லியோ.

Share this post


Link to post
Share on other sites

மருதங்கேணி,புத்தன்,சுமே,இசை,விசுகு,புங்கை,அலை,விசுகு,இசை,அர்ஜுன்,இசை,சுவி,அலை,வாத்தியார்,ரதி,சுமே வருகைக்கும்,ஊக்கமிடலுக்கும் மிக்க நன்றிகள்  


எண்பத்தியாறாம் ஆண்டு ஒரு வேலைத்திட்டமாய் சாவகச்சேரிக்குப்போனேன்.நான் அங்கு இரண்டு வாரம் தங்கி

அவ்வேலைத்திட்டத்தை செய்யவேண்டும்.சாவகச்சேரி மருத்துவமனைக்கு சற்று  தள்ளிய முன் ஒழுங்கையில் (ரெயில் தண்டவாளத்தைத் தாண்டி) கொஞ்ச தூரத்தில் வலப்பக்கமாய் அந்த முகாம் இருந்தது.அந்த முகாமுக்கு போய்ச்சேர அங்கு எவரும் தெரிந்த

முகங்களாய் இலலை.அந்த வேலைத்திட்டத்தை நிர்வகிப்பவர் எனக்குரிய

அடிப்படை வசதிகளை செய்து தந்து ,அன்றே வேலைத்திட்டம் நடக்கும்

இடத்திற்கும் கூட்டிப் போய் வந்தார். அந்த வேலைத்திட்டம் பெரிய முக்கிய வேலைத்திட்டம் இலலை.அது ஒரு சாதாரண வேலைத்திட்டம்.நானும் ஒரு சாதாரண போராளி. அந்த முகாமில் ஒரு பத்துப்பேர்தான் இருந்திருப்பார்கள் .அந்த முகாமில் ஒரு மேசையில் கரம் போட் இருந்தது.அது எப்போதும் பிஸியாய் இருக்கும்.

அதைவிட ஆறு ஏழு கதிரை இருக்கும்.ஒரு கட்டில் இருந்தது. மற்றம்படி பெரிதாய் சொல்ல ஒன்றும் இல்லை. போராளிகளின் துப்பாக்கிகள்தான்.

இரவு படுக்கும் போது சென்றி போட்டார்கள். என் பெயரையும் போடச்சொன்னேன் .அது சரியில்லை என்றிட்டார்கள். விறாந்தையில் கரைப்பக்கமாய் பாய் போட்டுவிட்டார்கள்.நடுவில போட்டால் ஆட்களை சென்றிக்கு உலுப்பி எழுப்பைக்க உங்களுக்கு சிவராத்திரி ஆயிடும் என்றார்கள்.    

படுத்து நான் நித்திரையாய் போயிட்டன்.யாரோ வந்து என்னை தட்டி எழுப்பிச்சினம் .நான் என்னடா என்று யோசிச்சன் சென்றிக்குத்தான் மாறி எழுப்புறாங்களோ? எதுவும் புரியயில்லை.அண்ணை வந்து அந்த கட்டில்ல படுங்கோ .இல்லை நான் இதில படுக்கிறான்.ச்சீ அதுல வந்து படுங்கோ .

இதுக்கு மேலயும் ஒன்றும் செய்யேலாது.நான் போய் படுத்து நித்திரையாகிட்டன்.காலமை எழுந்து பல்லுத்தீட்டைக்க இரவு என்னை நித்திரையால எழுப்பினவர் வந்தார்.நல்லா கதைத்தார்.இடைக்கிடை தனது தோளை உயர்த்திப்பதிக்கும் பழக்கம் இருந்தது.ஏதாவது தேவை என்றால் கேளுங்கோ என்றார்.அவர் விடை பெறும்போது கேட்டேன் நீங்கள் யார் என்று. நான் தான் கேடில்ஸ் என்றார்.

 

 

ஓவியன்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் இரண்டு பேர், இயக்கத்தில சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய்  எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள்  நிலத்தை பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன் கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான் என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும் சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு சிரித்துக்கதைத்தார்(ஒன்றும் தெரியாத மாதிரி). பின் சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.   

 

அந்த ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .  அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன் ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம் கொழுத்தி  சனத்தை சுட்டு,அடிச்சு தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய் மாதிரி திரிஞ்சன்.

 

ஓவியன்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் இரண்டு பேர், இயக்கத்தில சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய்  எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள்  நிலத்தை பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன் கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான் என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும் சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு சிரித்துக்கதைத்தார்(ஒன்றும் தெரியாத மாதிரி). பின் சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.   

 

அந்த ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .  அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன் ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம் கொழுத்தி  சனத்தை சுட்டு,அடிச்சு தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய் மாதிரி திரிஞ்சன்.

 

ஓவியன்

ஆண்டனியும்  பாவும்தான்  அந்த வேலையை திரிவார்கள்.

கோண்டாவில் லில்  புலவர் வீடியோ இருக்கும் ஒழுங்கைக்குள் ஒரு வீட்டில் இருந்தார்கள் சிலகாலம்.
நீங்கள் அவர்களில் ஒருவரா?? 
 
சகாதேவன் இவர்களுடன் நெருங்கி இருப்பார்....

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் லியோ .

புலவர் வீடியோ ஒழுங்கைகுள் தான்  எனது வீடு இருக்கு .

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் லியோ

Share this post


Link to post
Share on other sites

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு , நானும் ஒரு பொறுப்பாளரும் அண்ணையை சந்திக்க போயிருந்தோம்.அண்ணையை சந்திக்கப்போனால் பொதுவாய் அங்கதான் சாப்பாடு.இடியப்பமும் சொதியுமென்றாலும் அந்த மேசைச்சாப்பாடு ஒரு தனி ரகம்தான்.கொத்துரொட்டி போட்டாலும் மூன்று நாலு வகைகள் இருக்கும்.அண்ணையை யார் சந்திக்கப்போயினமோ பொதுவாய் அவைக்கு விருப்பமான சாப்பாடுதான் இருக்கும்.சிலர் வருகினமென்றால் கட்டாயம் பன்றிக்கறி இருக்கும். எனக்கு அன்று பல்லுப்பிரச்சனை அண்ணை பிடிச்சிட்டுது.அன்றைக்கு சோறும் மாட்டிறைச்சி கறியும் கத்தரிக்காய் பால்கறியும்தான்.  நான் இறைச்சி சாப்பிட கஸ்டப்பட்டேன்.அண்ணை தான் சாப்பிட்டுக்கொண்டே இடைக்கிடை நல்ல இறைச்சி தேர்ந்து எனக்கு போட்டுக்கொண்டிருந்திது.எனக்கு சரியான கஸ்டமாய் இருந்திது.

பொறுப்பாளர் அவருடைய துறையின் கீழ் உள்ள ஒருபிரிவு ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிறதாம்.அந்தப்பிரிவு ஒரு மலர் செய்யவிரும்புவதாகவும் சொல்லி,அந்தப்பிரிவின் ஆரம்பகால பொறுப்பாளர் இயக்கத்தில் இருந்து விலத்தியுள்ளதால் அவரின் பெயரை பயன்படுத்தலாமா என்று கேட்டார்.அப்போது அண்ணை உடனடியாய் பதில் சொன்னார்.அப்ப நீங்கள் என்ன பொய் வரலாறோ எழுதப்போறியள்?.

அண்ணை எப்போதுமே தெளிவானவர். பின் ஒரு தடவை ஒருவர் அண்ணையுடன் கதைக்கும் போது மாத்தையா அண்ணையை மாத்தையா என்று கூறினார். அண்ணை உடனடியாய் மாத்தையாவை விட உமக்கு வயசு கூடவோ?என்று கேட்டார்.

 

ஓவியன்

         

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

வாசிக்க  ஆர்வமாக இருக்கு

Share this post


Link to post
Share on other sites

கற்பனையில் பத்திரிகைகளில் எழுதப்படும் செய்திகளைவிட, நாலே வரிகளானாலும் படித்துச் சிந்திக்கத்தக்க தகவல்கள்.. நன்றி லியோ அண்ணா..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.