Jump to content

16ம் ஆண்டு வீரவணக்க நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Thandikkulam-Thakkuthal-Thesakkaarru-600

Mejar-nithan-600x849.jpg

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

Mejar-Yaalini-copy-600x849.jpg

kapdan-Sathuriyan-600x849.jpg

புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.

தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்…

திருவுடலில் வெடி சுமந்து …

ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும் – மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள் – மோட்டார் எறிகணைகள் – யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர். இத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.  தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன்

இந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் -  நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன.

முதல் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி விபரணம்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=O0RQ5-XeJbE

ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

- விடுதலைப்புலிகள் இதழ் ( வைகாசி – ஆனி : 1997 )

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

http://thesakkaatu.com/doc7884.html

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு  எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.