முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைத் தனது கட்சியின் தலைவராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் பலம்பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் கட்சியை கையளிப்பதில் சொத்து விடங்களும் தங்கியிருப்பதாகவும் மறைமுகமாகத் தெரிவித்தார்.
க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஆனால் செயலாளர் பொறுப்பில் தானே இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளில் செயலாளரே சர்வ அதிகாரங்களும் கொண்டவராக இருக்கிறார். தலைவர் பதவி எனப்படுவது ஒரு பொம்மைப் பதவி போன்றது. செயலாளர் நாயகத்திற்கு தன்னிச்சையாகத் தலைவரை நீக்கும் அதிகாரமும் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னாள் தமிழ்க் காங்கிரசின் முக்கியஸ்தரான வீ.ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாரின் பாட்டனாரின் அரசியல் மாணவன் என்பதும் இரு கட்சிகளும் இழந்துபோன தங்கள் கட்சியின் மதிப்பை மீட்டெடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. அதில் ஒன்றாக தற்காலத்தில் மக்களின் அபிமானத்தைப் பெற்ற க.வி.விக்னேஸ்வரனைப் பயன்படுத்தி தங்கள் பாரம்பரியக் கட்சிகளை வளர்க்க திட்டமிட்டு அது முடியாமல் போனதும் அவர்மீது அவதூறுகளை வீசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆனந்த சங்கரி அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணல்
http://thamilkural.net/?p=12880
ஹாஹா பெயர் சொல்லக்கூடாது கல்கிசை , தெகிவளையில் பல வெளிநாட்டு பெண்களே கைதானார்கள்
ஆதாரமெல்லாம் கொடுக்க முடியாது மருதர் நாட்டுக்கு வரும் போது கொழும்பில் ஓர் பத்திரிகை வாங்கி படித்தால் நாட்டு நிலவரம் தெரியும் (கைதுகளும் வன்புணர்வு பற்றிய செய்திகளும்)
என்ன ஐயா திரும்ப திரும்ப எந்த ஆதரமும் இல்லமால் பொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஓரளவுக்கு எந்த எரிய ? எந்த லொட்ஜ்? கொண்டுவருபவர்களை எப்படி அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்?
என்றாவது எழுத வேண்டும். .....அதை விடுத்து திரும்ப திரும்ப .... லொட்ஜ் லொட்ஜ் என்றே எழுதுகிறீர்கள்.
நான் வருகிற கோடைவிடுமுறைக்கு இலங்கை வரலாம் என்று இருக்கிறேன்.
முன்பெல்லாம் எனக்கு பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது
அவர்களை சுட்டுவிட்டு அவர்கள் பணத்தை எடுத்து ஏழைகக்கு கொடுக்க வேண்டும் என்று
எண்ணிக்கொண்டு இருப்பேன்.
இப்போ அவர்களைவிட இலங்கை பெறுமதியில் எனது ஓய்வூதிய கணக்குகள்
எவ்ளவோ கூடுதலாகவே இருக்கும். வேண்டும் என்றால் முன் கூட்டி எடுப்பதுக்கான
தண்டனை பணத்தையும் வரியையும் கட்டிவிட்டு எடுக்கலாம் .
இப்போ "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" என்று சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
இதை பற்றி எனக்குள் எண்ணி நானே பலமுறை நினைப்பதுண்டு
எவ்வளவு சுயநலவாதியாகிக்கொண்டு இருக்கிறேன் என்று.