Jump to content

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு


Recommended Posts

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

 

arjunbabu87__madurai.jpg

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

imagesCAXMKOLS.jpg

மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

meenakshi_temple-300x225.jpg

இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)

meenakshi-temple-06_burning_oil-299x266.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.

meenakshi-temple-1922_m.jpg

 

  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
  • பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
  • வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.

ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கர்ம வீரர் காமராஜர் கூறி உள்ளார். அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.

http://mathuraikkaaran.blogspot.ca/2010/05/blog-post_28.html

கோவிலைச் சுற்றி பார்க்க : http://view360.in/virtualtour/madurai/

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி

Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி.

இக்கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக இணைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகையில் தமிழர்களே இதில் போதிய அக்கறை கொண்டிக்கவில்லை. இதன் பெருமையும், சரித்திர உண்மைகளும் பலருக்கும் தெரியவில்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரலாறு சொல்லும் நிறுவகங்களை பார்க்க வருவோரிடம் பணம் வாங்கியே அவற்றினை பராமரிக்கலாம்.

 

அற்புதமான பணம் கொழிக்கக் கூடிய உல்லாசப் பயண துறை, தமிழகத்தில் உள்ளதை, அம் மாநில அரசு உணர்ந்ததாக தெரிய வில்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா !

 

மதுரை சிவபெருமானின் பல திருவிளையாடல்கள் நடந்த இடம் .

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி .நிறைய விடையங்களை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி.

இக்கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக இணைக்க, பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகையில் தமிழர்களே இதில் போதிய அக்கறை கொண்டிக்கவில்லை. இதன் பெருமையும், சரித்திர உண்மைகளும் பலருக்கும் தெரியவில்லை.

 

நான் வாக்களித்தனான்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான்  நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி  இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது.  ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும்  இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம்  அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில்  ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன். நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது  அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின்  அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்?  ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும்  கேட்க்க முடியாது போகிறது?  ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்  அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும்  மூலிகை பெட்ரோல் மாதிரி  பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள் 
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, ஆடி, 2007 இரு துணைப்படைக் கூலிக் குழுக்களிடையே மோதல் - கொம்மாதுறை ராணுவ முகாமில் சம்பவம் கடந்த புதனன்று, மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொம்மாதுறை ராணுவ முகாமில் இருந்து இயங்கிவரும் துணைப்படைக் கூலிக் குழுக்களான கருணா குழுவினருக்கும் ஈ பீ டி பி யினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு கருணா துணைப்படை உறுப்பினர் கொல்லப்பட்டதோடு இரு ஈ பி டி பி துணைப்படையுறுப்பினர்கள் காயமடைந்திருக்கின்றனர்.  இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கும் ஒரே துணைப்படைக் கூலிக் குழுவான ஈ பி டி பியினருக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் கருணா துணைப்படைக் கூலிகள் கொம்மாதுறை முகாமினுள் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா துணைப்படைக் கூலிகள் ஈ பி டி பியினரின் செயற்பாடுகளுக்கு தடங்கலாக இருந்து வருகின்றனர். சம்பவ தினம் கொம்மாதுறை முகாமில் ஈ பி டி பியினர் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 5 கருணா துணைப்படைக் கூலிகள் கிர்னேட்டுக்கள் கொண்டும், தானியங்கித் துப்பாக்கிகள் கொண்டும் உள்ளிருந்தவர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தாக்குதலில் சிவஞானம் சுதாகரன் மற்றும் கோவிந்தன் விஷ்ணு ஆகிய ஈ பீ டி பி துணைப்படையினர் காயமடைந்தனர். இவ்விரு துணைப்படையினருக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் இலங்கை ராணுவம், சண்டையினை முடிவிற்குக் கொண்டுவர தாக்குதலாளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே கருணா துணைப்படைக் கூலியொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  அத்துடன் சண்டை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன், காயப்பட்டவர்களை இராணுவம் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றது.  மட்டக்களப்பு வாழைச்சேனை நகர்களுக்கிடையே அமைந்திருக்கும் ராணுவ முகாம்களில் கொம்மாதுறை ராணுவமுகாமே மிகவும் பெரியது என்பதுடன், இம்முகாமின் இருவேறு பகுதிகளில் இவ்விரு துணைப்படைக் கூலிக்குழுக்களும் இலங்கை ராணுவத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.  மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து புலிகள் தமது தளங்களை வன்னிக்கு நகர்த்தியிருக்கும் வேளையில், அரசு மட்டக்களப்பில் தேர்தல்களை நடத்த திட்டமிட்டு வரும் பின்னணியிலேயே தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக இக்குழுக்களுக்கிடையேயான மோதல் வெடித்துள்ளது.  கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களை கருணா துணைப்படைக் கூலிகள் கிழக்கில் தடைசெய்துள்ள நிலையில், கருணா குழுவும் ஈ பி டி பி யினரும் தமது சொந்தப் பிரச்சாரப் பத்திரிக்கைகளை இப்பகுதிகளில் ஏட்டிக்குப் போட்டியாக விநியோகித்து வருவது நடக்கிறது. 
    • வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை  நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை  நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன். உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை  எனது கருத்தை பகிர்வதே நோக்கம். நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே  சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள்  வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை.  வேறு திரியில் என்ன பேசுகிறார்கள்  யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம்  கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே  இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும்  நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும்  காரணமாக இருக்கலாம்  ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய  காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே.  நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது  அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால்  அதில் எனக்கு அக்கறை இல்லை
    • இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.