Jump to content

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

கடந்த மூன்று நாட்களாக இணைய வசதி அற்ற காட்டுப் பகுதி ஒன்றில் தங்கிவிட்டு வந்த பின் இணையத்தினை திறந்தவுடன் கண்ணில் பட்ட மிகத் துயரமான செய்தி.  மணிவண்ணனின் அனைத்து பரிமாணங்களும் மிகவும் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிகச் சிறந்த மனிதராகவும் இறுதி வரைக்கும் வாழ்ந்த மனிதர்.

என் இதயம் பிழியும் கண்ணீர் அஞ்சலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CCiuNU-2vAI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா, விஜய், பாலா என பல திரையுலகினர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

mg_6651.jpg

mg_6656.jpg

mg_6658.jpg

mg_6672.jpg

mg_6676.jpg

mg_6679.jpg

mg_6681.jpg

mg_6687.jpg

mg_6689.jpg

mg_6695.jpg

mg_6723.jpg

mg_6756.jpg

mg_6760.jpg

mg_6778.jpg

http://www.tamizl.com/?p=19438

மேலே உள்ள படத்தில் காங்கிரஸ் உறுப்பினரும் தீவிர புலி எதிர்ப்புவாதியுமான இளங்கோவனும் நிற்கிறார்.

மணிவண்ணனின் இறுதி விருப்பம் புலிக்கொடியினை உடலில் போர்த்தவேண்டும். இங்கே அவரின் உடலின் மேல் போர்த்தப்பட்ட கொடி விடுதலைப்புலிகளின் கொடியா அல்லது சீமானின் நாம் தமிழர் கட்சி கொடியா? எனென்றால் தமிழக ஊடகங்களில் பலவற்றில் சீமானின் நாம் தமிழர் கொடி உடலின் மேல் போர்த்தப்பட்டதாக இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த அண்ணன் மணிவண்ணன் அவர்களின் மறைவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு வெளிவந்துள்ள ஆனந்த விகடனின், விகடன் மேடையில் இயக்குனர் மணிவண்ணன் குறித்த ஒரு கேள்விக்கு, மிகவும் காட்டமாக இயக்குனர் பாரதிராஜா பதில் அளித்துள்ளார். இரு மாதங்களுக்கு, இயக்குனர் மணிவண்ணனை நான் சந்தித்தபோது, தனது குரு நாதர் பாரதிராஜா குறித்து அவர் பேசிய பதிவை நான் இங்கு இணைத்துள்ளேன். இதே பதிவை நான் விகடனின், இரண்டு நிருபர்களுக்கும் அனுப்பியுள்ளேன். ஒருவருக்கு அனுப்பி இரண்டு மாதங்களும், மற்றொவருக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்கு மேலும் ஆகிறது. இந்த ஒலிப்பதிவை, எப்படியாவது பாரதிராஜாவிடம் கொண்டு சேருங்கள், இதை பற்றி முடிந்தால் ஒரு பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதுங்கள், எனது நிகழ்ச்சியின் பெயரோ, அல்லது நான் வேலை பார்க்கும் ரேடியோ நிறுவனத்தின், பெயரையோ கூட நீங்கள் சொல்ல வேண்டாம், பாரதிராஜா, மணிவண்ணனிடம் பேசினால் போதும் / அல்லது இந்த பதிவை கேட்டு கண் கலங்கினால் போதும் என்று வேண்டினேன், அந்த இரண்டு நிருபர்களிடமுமே. எந்த ஒரு பலனும் இல்லை. இதோ, இன்று வெளி வந்த விகடன் மேடை கேள்வி பதில் மூலம், பாரதிராஜா-மணிவண்ணன் பனிப்போரை விகடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. என் அன்பான வேண்டுகோள், இயக்குனர் மணிவண்ணன் பேசியுள்ள இந்த ஒலிப்பதிவை, ஒரு நிமிடம் கண்கள் மூடிக்கேளுங்கள். பிறகு, விகடன் மேடையில், பாரதிராஜா மனிவண்ணன் பற்றிய கேள்விக்கு சொல்லியுள்ள பதிலை படியுங்கள். பிறகு மறுபடியும், இந்த பதிவை முதலில் இருந்து படியுங்கள். என், ஆதங்கம் புரியும். பாரதிராஜா சார், உங்ககிட்ட இத எப்படி கொண்டு வந்து சேர்க்கிறதுன்னு தெரியல.. ஆனா, உங்க சிஷ்யன் மணிவண்ணன் பத்தி நீங்க ரொம்ப ரொம்ப தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க..!!! https://soundcloud.com/loveguru911/director-manivannan-crying-in?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook

Link to comment
Share on other sites

என் இனத்திற்காக வருவேன்.

கடந்த இரண்டு நாட்களாய் மனம் தட்டுத் தடுமாறியபடியே இருந்தது. இதை எழுதலாமா? என்னவென்று எழுதுவது? எழுதினால் ‘இவனை முதன்மைப்டுத்திக்கொள்கிறானா? என்ற கேள்விகள் வந்துவிடுமோ. என்ற தயக்கம். ஆனாலும் இதை பகிர்ந்தாக வேண்டும்......

2009- மே. 18ம் தேதி முள்ளிவாய்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை முடிந்த நிலை. அதன் பிறகு தமிழகம் உட்பட உலக தமிழர்களிடமும் ஒரு கனத்த மௌனம். ஏன், எதற்காக என்பதையும் சொல்லமுடியாத இறுக்கம். வாய்விட்டு கதறி அழவும் முடியாத அவலம். மத்திய காங்-அரசுக்கு ஏற்ப இங்கிருந்த கருணாநிதி ஆட்சி ‘எல்லா விதத்திலும்’ ஆடிக்கொண்டிருந்த நேரமது. ஊடகங்களில்கூட அங்கு நடந்தவைகளையும், பிறகு நடந்தவைகளையும் வெளிப்படுத்த முடியாத இருண்ட காலம்....எந்த நேரமானாலும் யாராலும் காட்டிக்கொடுக்கப்படலாம் என்ற அச்சம்....

அங்கே எல்லாமும் முடிந்துவிட்டது. எஞ்சியிருப்பவர்கள் பேசினால், அவர்களுக்கும் என்னாகுமோ என்ற பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்த நேரம். 2010 -மே மாதம் வரை அப்படித்தான் இருந்தது. பெரிய அளவில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. லண்டனின் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிடும் வரை இங்கே உள்ள எந்த ‘தமிழின’ ஊடகங்களும் அதைப்பற்றி பெரிதாக பேசவில்லை. மௌனம்...மிரட்டும் மௌனம்....

அப்படியான சூழலில்தான், 2010 -ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது. சுற்றும் முற்றும் பார்க்கின்றேன். ஈழ மண்ணில் ரத்தம் தோய்க்க நடந்தேறிய அந்த இன அழிப்பு பற்றி யாரும் பேசுவதாய் இல்லை. குரல்கொடுப்பதாய் இல்லை. ஏதாவது செய்தாக வேண்டுமே.நண்பர்களுடன் பேசுகின்றேன். ஆகட்டும் பார்க்கலாம். துணிந்து செய்யுங்கள். நண்பர் செந்தமிழன் சொன்னார்.

இறுதியாக 2010- மே ஒன்றாம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை ...
ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அழைத்து நேர்காணல் எடுப்பது. முழுக்க முழுக்க ஈழ மண் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின படுகொலை பற்றியே எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிகாரர்களையும் அழைக்க வேண்டும். சவாலான விசயம்தான். முடிவான பிறகு தலைப்பு பற்றி யோசித்தேன். முன்பொரு முறை கவிஞர் காசி ஆனந்தன் ஐயா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எதுவும் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோகவில்லை தம்பி” என்ற வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்தார். அழுத்தமாக...

அதை வைத்தே “முள்ளிவாய்க்கால் முடிவல்ல. இனி என்ன செய்யலாம்” என்ற தலைப்பு முடிவு செய்தேன். குமுதம் எம்.டி. வரதராஜன் அவர்களிடம், இப்படி ஒரு நிகழ்ச்சி, நடத்தினால் நன்றாக இருக்கும். எந்த சேனலும் அதைப்பற்றி பேசவில்லை. நாம் செய்தால் வாய்ப்பாக இருக்கும் என்று பேசினேன். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, முடிந்த பிறகு வரையிலும்கூட, கடைசி வரை எந்த தடையுமின்றி அனுமதித்தவர் இதற்கும் சம்மதித்தார். நிகழ்ச்சி தொடங்கியது. நேரடி பேட்டி..முக்கிய தலைவர்கள் அனைவரையும் அழைத்தேன். இதில் பதுங்கியவர்கள் யார் என்பதெல்லாம். வேறு செய்தி...

அப்படி ஒரு நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தமிழன் இயக்குனர் மணிவண்ணன் ஐயா அவர்களை தொலைபேசியில் பிடித்தேன். அதற்கு முன்பே சந்தித்து பேசிய அனுபவம். இடையில் அதிகம் பேசிக்கொள்ள முடியாத சூழல். என்னது, குமுதத்திற்கா என்றார். ஆமாம் வெப்.டி.வி.க்காக என்று விவரித்தேன். அதில்ல தம்பி, ‘எப்படி நடத்த முடியுது. யாருமே ஒரு வார்த்தை பேசமாடேங்கிறாங்க. நீங்க எப்படி..என வழக்கம் போல் நக்கலும் நையாண்டியுமாக பேசியதோடு சம்மதித்தார். குறிப்பிட்ட நாள். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தார்..

நான் மேலே இரண்டாவது தளத்தில் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். கீழே அவர் வந்துவிட்டதாக தகவல். சில மணித்துளிகள். இன்னேரம் வந்துவிட்டிருக்க வேண்டுமே. என்ன ஆச்சு என்ற தயக்கம். லிப்ட் அருகில் போய் நின்றேன். திறந்ததும் வணக்கம் தம்பி என்றார். முகத்தில் அதே சிரிப்பு. ஐம்பது அடி தூரத்தில் படப்பிடிப்பு இடம். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலானது. உடன் வந்த ஒருவர் தாங்கி பிடிக்க தட்டுத் தடுமாறி, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தபடி, வலி இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளமால் சிரித்து பேசியபடி....

ஒரு வழியாக ஸ்டுடியோ உள்ளே வந்து எதிரும் புதிருமாக அமர்ந்தோம். அவரையே உற்று பார்த்தபடி இருந்தேன். அதிகம் வியர்த்துவிட்டிருந்தது. மூச்சு வாங்கியபடி, முதுகிலோ கழுத்திலோ வலி என்பதை உணர்த்திய முகபாவம். பார்க்க பார்க்க எனக்கு அச்சம், அதிர்ச்சியாகி நின்றது. தவறு செய்துவிட்டோம். பெரும் தவறு. இப்படியானவைரை நாம் அழைத்திருக்க கூடாது. நாமே அந்த இடத்திற்கு சென்றிருக்க வேண்டும். அவருக்கு தண்டுவட பிரச்சனைக்காக முதுகில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது தெரியும். ஓரளவு நன்றாக இருக்கின்றார் என்றே நினைத்தேன். இந்தளவிற்கு மோசமாக இருப்பார் என தெரியவில்லை. பெரிய அவதியை அவரிடத்தில் பார்க்க முடிந்தது. சொல்ல முடியாத வலி, அவதி, அவரது முகத்தில் தெரிந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் சிரத்தபடியே...

முழுக்க முழக்க ஈழத்தை பற்றி மட்டுமேவா.? எப்படி சாத்தியம்.? எப்படி நடத்த விடுகிறார்கள்.? இடையிடையே கேள்வி. ஒவ்வொன்றிற்கும் பதில் சொன்னபடி இருந்தேன். நம்ப ஆளுன்னு சொல்றவன் எல்லாம் மூடிகிட்டு உட்கார்ந்திருக்கான்...அவருக்கே உண்டான நக்கல் நையாண்டியுடன் பேசிய நேரம்...உடம்பு ஒரு அதிர்வோடு குலுங்கி அடங்கியது. பட்டென்று எழுந்து அவரை தாங்கி பிடிக்க முயன்றேன். அதற்குள் சுதாரித்தபடி ஒன்றுமில்லை என்றார்...

முகம் மட்டும் கொஞ்சம் மாறியது. வலி துடிப்பு.

முதுகில் நடந்த அறுவை சிகிச்சையில் ஏதோ சிக்கல். மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யனும் என்றார்கள். போகனும். பிரச்சனையாதான் இருக்கு. சமயத்தில் தரையில் காலை வலுவாக ஊன்றி நிற்கும் போது அப்படி உடம்பு குலுங்கி நிற்கிறது. தவறினால் விழ வேண்டியதுதான். நடக்கும் போதும் பார்த்து நடக்க வேண்டும். ரொம்பவும் காலை ஊன்றினால் பிரச்சனையாகிடும். இப்பவும் அப்படித்தான் சீட்டில் உட்கார்ந்தபடி காலை கொஞ்சம் ஊன்றவேண்டியதாயிற்று. அதான் இப்படி என்றவர் , அந்த வலியிலும் ‘என்ன பன்றது. அரசியல்வாதிங்க நாற்காலி பதவி மாதிரி ஆகிப்போச்சு நம்ப நிலைமை. எப்ப ஆடும், எப்ப கவிழும்னு தெரியாதில்ல’...என்று கிண்டலடிக்க....எனக்கு வேறு சிந்தனை.

சற்று நேரம் போனதும் ‘என்னை மன்னிச்சுடுங்க ஐயா. இப்படி ஒரு நிலையில் இருப்பதை அறிந்திருக்கவில்லை. வீட்டிலேயே வந்து எடுத்திருக்க வேண்டும். நீங்களாவது ஒரு வார்த்தை கூறியிருக்கலாம். இவ்வளவு பெரிய சிரமத்தை தாங்கிக்கொண்டு வர ஏன் சம்மதித்தீர்கள் என்று கேட்டுவிட்டேன்.

“எனக்காக என்றால் வந்திருக்க மாட்டேன்தான். என் இனத்திற்காக வருவேன். எவ்வளவு தொலைவென்றாலும் என்ன வலியென்றாலும் வருவேன் தம்பி. இப்படி நம்ப நிலைமைய பேச எந்த சேனலும் இப்போ தயாரா இல்ல. விலை போனவனும், சோரம் போனவனுமாய் இருக்கான். அத்தி பூத்த மாதிரி இந்த வாய்ப்பு. சோர்ந்து கிடக்குற நம் மக்களுக்கு ஆதரவா இருக்கிற நேரம். இப்ப பேசல என்றால் எப்ப பேசபோறம். கூடாது தம்பி. எழுந்துடனும். அதற்கு எதுவெல்லாம் வாய்ப்பா இருக்கோ அதைல்லாம் பயன்படுத்தனும். அந்த நோக்கம்தான். அதான் வந்தேன். எனக்காக இல்ல. நம் இனத்துக்காக” சொன்னபடி கண் கலங்கினார்.

வாயடைத்துப்போனேன். உண்மையில் ‘சினிமாக்காரர். ஏதோ இனத்திற்காக பேசனும். மற்றவர்களைவிட இவர் கூடுதலாக பேசுகிறார்’ என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தேன். அது அன்று உடைந்து சிதறியது. அவரது வலி, வேதனை, துடிப்புக்கு மத்தியில் சவாலெடுத்து நின்ற விதம்....பணம்கொடுத்து சில காட்சிகள் நடிக்க அழைத்தும் ஓய்வென்று ஒதுங்கிக்கொண்ட நிலையில்...மிகவும் யோசிக்க வைத்தது அவரின் இன உணர்வு பிடிவாதம்.

அந்த நேர்கானலிலும் நிறைய...உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இழப்புகள் இருக்கலாம். இலக்கை எட்டாமல் விடக்கூடாது. போராட்ட வழிமுறைகளை மாற்றியபடியே இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இங்குள்ள தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் சோர்ந்து போகக்கூடாது. எல்லாமும் ‘காத்திருக்கிறது’. காலம் வரும். அதற்கு முன்பாக நாம் செய்யவேண்டியதை செய்திருக்க வேண்டும் எனறெல்லாம் பேசி முடித்தார்....

வீடியோ நேர்காணலும் முடிந்தது. மீண்டும் படப்பிடிப்பு இடத்தில் இருந்து லிப்ட் வரை. பிறகு கீழே இறங்கியதும், இருபது அடி தூரத்தில் அவரது கார். பெரும் அவதிப்பட்டதை உடனிருந்தே பார்த்தேன். ஆனால் அவரது முகத்தில் ‘வலி’ பற்றி தெரிந்தாலும், மனதில் ஏதோ ஒன்றை சாதித்ததாய் சென்றமர்ந்தார்..

பின்னாளில் பலமுறை பேசியும் சந்தித்தும் இருக்கின்றேன். எப்போது பார்த்தாலும் அவர் சொன்ன அந்த வார்த்தைகளே எனக்குள் சுழன்றபடி இருக்கும்.

நேற்றும் அப்படித்தான். கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அந்த முகத்தை பார்த்த போதும், பெரு முழக்கத்துடன் எழுந்து நடந்த பேரணியில் அந்த வாகனத்தை பார்த்த போதும்...

“என் இனத்திற்காக வருவேன். எவ்வளவு தொலைவென்றாலும், என்ன வலியென்றாலும் வருவேன் தம்பி”..........அவரின் வார்த்தை எதிரொலித்தபடியே இருந்தது. தம்பிகளுக்கான வார்த்தை ....

பெருந்தமிழன் இயக்குனர் மணிவண்ணன் என்ற விதை நெல்.
வீணாய் போய்விடவில்லை.....
 
Link to comment
Share on other sites

மணிவண்ணன் அவர்களின் இழப்பு எதிர்பாராதது..! பல நல்லுள்ளங்களை இற்றைவரையில் இழந்திருக்கிறோம்.. ஆனால் இவரது சடுதியான மறைவு பலத்த அதிர்ச்சியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Spoiler

பெருந்தமிழன் இயக்குனர் மணிவண்ணன் என்ற விதை நெல். வீணாய் போய்விடவில்லை.....
 
சென்று வருக ஐயா....சென்றுவருக.......நாமெல்லாம் உங்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அருகதையற்றவர்கள்.

Link to comment
Share on other sites

Thirumurugan Gandhi  //  15 யூன் 2013 // முகநூலிலிருந்து //
 
தோழர். இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். எப்பொழுதும் மிகுந்த மரியாதையுடனும், அன்புடனும் பேசுபவர் என்பது மட்டுமல்லாமல், அனைவரையும் சமமாக பாவித்து நடத்துபவர். மிக எளிமையான மனிதராகவும், தொடர்ச்சியான வாசிப்பினையும் கொண்டவர்.

சில காலத்திற்கு முன்பு அணு உலை தொடர்பான ஒரு ஆவணப்பட வெளியிட்டு விழாவில் எந்தவித சமரசமும் இன்றி, கமலஹாசனின் விசுவரூபத்தினையும், இசுலாமிய எதிர்ப்பு மன நிலையையும் கடுமையாக சாடி பதிவு செய்தவர். உடல் நிலை கடுமையாக பாதிப்படைந்த காலத்திலும் எதேனும் தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கான உந்துதலுடன் தொடர்ந்து தோழர்களுடன் விவாதிப்பவர். இயக்க வேறுபாடின்றி அனைத்து அரசியல் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்.

நாம் தமிழர் பேரியக்கத்திற்கான விவாதம் அவரது வீட்டில் தொடர்ந்து நிகழ்ந்த 2009 மத்தியில் அவருடன் பேசி இருக்கிறேன். பேரியக்கத்தின் நிகழ்வு சென்னையில் நிகழ்த்தவேண்டுமென பேசிக்கொண்டிருந்த காலத்தில், ஏன் சென்னை தவிர்த்த பிற ஊர்களான திருச்சி, அல்லது மதுரையில் நிகழ்த்தினால் மக்கள் பங்கேற்பு இயலக்கூடியதாக இருக்கும் என்று நான் அவரிடத்தில் பேசியபொழுது மிக இயல்புடன் அதை உள்வாங்கிக்கொண்டவர். இதை பின்பு சீமான் உட்பட பிறரிடத்தில் பேசவும் செய்தார். எந்த விதமான முன் முடிவுகளோடும் அனுகாமல் நோக்கத்தினை அதன் அர்த்தத்தில் புரிந்து கொள்ளக்கூடிய மிக சிலரில் இவரையும் நான் ஒருவராக பார்த்து இருக்கிறேன்.

கடந்த வருடம் நினைவேந்தலுக்காக அழைப்பிதழ் கொடுக்க சென்ற சமயத்தில் என்னுடைய மகளும் உடன் வந்திருந்தாள், நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்த பொழுது மதிய உணவு நேரம் கடந்ததை உணர்ந்து உடனடியாக என் குழந்தைக்கான உணவினை தரவேண்டும் என்பதை உணர்த்தி அவளுக்கான சிறு உணவினை பகிரச் செய்தார். ” நாம எப்பவும் நேரம் காலம் பார்க்காம பேசிட்டுருப்போம், குழந்தைங்க பாவம் அதுகள பசிக்க விடக் கூடாது ” என்றார்.

மூவர் தூக்கு காலத்திலும், பின்னர் ஐ. நா அறிக்கை, அமெரிக்க தீர்மானத்தின் போதான காலகட்டத்திலும் மிக நேர்மையான நிலைப்பாட்டினை எடுத்துப் பேசினார்.

சூலூர் தமிழ் அறிஞர்கள் வட்டத்தில் தவறாது தனது பங்களிப்பினை தொடர்ச்சியாக பதிவு செய்தவர் அவர். இது அவரது மாணவர் காலத்தில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வாகவே இருந்ததாக அறிந்திருக்கிறேன்.
தீவிர இடதுசாரி தமிழ் தேசியவாதியாகவே அவரை அறிந்திருக்கிறேன். அவ்வாறாகவே அவரது பேச்சுக்களும் அவருடனான விவாதத்தில் வந்திருக்கின்றன. ஒரு விரிவான புத்தக தொகுப்பினை அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன்.

அவர் இயங்கிய சூழலில் அவரால் இயன்ற அளவிலான பங்களிப்பினை மிக நேர்மையாக செய்திருக்கிறார் . பல நேரங்களில் அவரது பங்களிப்புகள் வெளிப்படாமல் போனதும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக இயக்கத் தோழர்கள் எனும் போது அவரது முகத்தில் மகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் தோன்றுவதும் தனது உடல் சிரமங்களை மீறி நேரம் செலவழிக்க முற்படுவதும் அவரிடத்தில் காண முடியும். எழுந்து நிற்க சிரமப்பட்ட சமயத்தில் கூட வாசல் வரை வந்து வழியனுப்ப நிற்பவர். தமிழீழத்தின் விடுதலைக்கும், விடுதலை புலிகளுக்கும் ஆதரவாக வெளிப்படையான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத அடக்குமுறை சூழலில் கூட தனது நிலைப்பாடினை வெளிப்படையாக அறிவித்த தோழர் அவர்.

தோழரது மரணம் எதிர்பாராதது, அதிர்ச்சியளிக்க கூடியது.
தமிழினக் கலைஞரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது.

தோழருக்கு வீரவணக்கம்.
Thirumurugan Gandhi  // 15 யூன் 2013 // முகநூலிலிருந்து

https://www.facebook.com/thirumurugan.gandhi?hc_location=stream

Link to comment
Share on other sites

சிரம்தாழ்த்தி வணங்குகிறேன் ....................இன்றைய சூழ்நிலையில் எப்படி ஒரு கலைஞன் இருக்கவேண்டுமோ ..அப்படி இருந்திருக்கிறார் ..என்பதை அன்னாரின் மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள்  தெட்டத்தெளிவாய் கூறிநிற்கிறது...............

உங்கள் ஆன்மா இறைவனுள்  நித்தியமாய் இளைப்பாற்றி அடையக்கடவதாக .
Link to comment
Share on other sites

என் நண்பன் பெற்றுத்தந்த ஆஸ்கார் விருது: மணிவண்ணன் பற்றி சத்யராஜ் // 19 யூன் 2013
 
அமைதிப்படை படத்தின் மூலம் எனது நண்பன் மணிவண்ணன் எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் சத்யராஜ். அமைதிப்படை படத்தில் அமாவாசை சத்யராஜ் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று படிப்படியா நாகராஜ சோழனாக மாறும் காட்சியமைப்பினை திரைப்பட ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாது. இந்த காட்சியினை அமெரிக்காவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைத்திருக்கின்றனராம். மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கடைசியாக இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ படத்திலும் சத்யராஜ்தான் ஹீரோ. இருவரும் நீண்டகால நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்துள்ளனர். நண்பனின் மரணத்தை யாரலும் அவ்வளவு எளிதாக தாங்கிக் கொள்ள முடியாது. துயரத்தில் இருக்கும் நிலையிலும் நண்பன் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையினை நினைவு கூர்ந்துள்ளார்.
 
அமெரிக்காவில் பாடம்:  இந்த காட்சிக்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளும். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்த காட்சி இது. இதனைத்தான் இப்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்துள்ளனர். பாடிலாங்குவேஜ் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணத்திற்கு காட்டியுள்ளனராம்.
 
  http://tamil.oneindia.in/movies/heroes/2013/06/manivannan-honoured-me-with-powerful-charter-in-177430.html

Link to comment
Share on other sites

தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்: நாம் தமிழர் கட்சி இரங்கல் 

50 திரைப்படங்களை இயக்கியும், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடத்தும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணன் மறைவுற்றது தமிழ்த் திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கும் ஈடு செய்த முடியாத பேரிழப்பாகும்.

இயக்குனராகவும், நடிகராகவும் மட்டுமே பரவலாக அறியப்பட்ட எங்களின் பாசத்திற்குரிய மணிவண்ணன் ஐயா அவர்கள், மிகப் பெரிய கொள்கைவாதிவாதியாவார். பொதுவுடைமைக் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர், இளமையில் பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். இறுதி வரை அக்கொள்கையில் உறுதியாக நின்றவர்.

இலங்கையில் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தனித்து முன் வந்து தனது கருத்தைக் கூறியவர். ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்ததை எதிர்த்து துணிந்து பேசியவர். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை புகழ்ந்து பேசியவர். தமிழ்நாட்டு மக்கள் மனதில் இனப் பற்றையும், தமிழ்த் தேசியத்தையும் ஆழமாக விதைத்தவர்.

பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு, தமிழினம் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒரு தெளிவை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு உறுதுணையாய் நின்ற தலைவர்களில் மணிவண்ணன் ஐயா ஒருவர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மணிவண்ணன் ஒரு சீரிய சிந்தனையாளர், சிறந்த பகுதறிவாளர், ஆழந்த தமிழினப் பற்றாளர், தெளிந்த தமிழ்த் தேசியவாதி என்பதோடு, வழிகாட்டியாய் கருதத்தக்க மனிதாபிமானியாவார். தமிழினத்தின் விடியலுக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் பெரும்பங்காற்றிவந்த நிலையில் அவருடைய வாழ்வு முடிவெய்திவிட்டது எமது கட்சிக்கும் தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மணிவண்ணன் மறைவால் பெரும் துயரை சந்தித்துள்ள அவருடைய குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

http://naamtamilar.org/uncategorized

Link to comment
Share on other sites

மணிவண்ணன் - தமிழ் சமூகத்தின் தவிர்க்க முடியாத கலைஞன்

ஜீவசகாப்தன் , 22 ஜூன் 2013

மணிவண்ணன் என்கிற மகத்தான கலைஞனை மனிதனை இழந்து தவித்து கொண்டிருக்கிறோம். அவருடைய இறப்பு அறிவிற்குப் புலப்பட்டாலும் மனதால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தமிழகம் முழுவதும் வாழும் பகுத்தறிவாதிகள் அனைவராலும் நமது தோழர் என்று உணரப்பட்ட அற்புதமான மனிதர். பார்ப்பன நடுத்தர வர்க்க பார்வையாளர்களை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த 80களில் வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் பிரச்சனைகளை மய்யப்படுத்திய திரைப்படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர். இனி ஒரு சுதந்திரம், வீரப்பதக்கம், தோழர் பாண்டியன், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் மணிவண்ணனின் வசனங்கள் சமகால அரசியலை மிகத் துணிச்சலாக சாடியவை.

1997 என்று நினைவு.. மதுரை தமுக்கம் மைதானத்தில் தமுஎச சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை இரவில் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உள்ளத்தை அள்ளித் தா, அவ்வை சண்முகி என மணி்வண்ணன் இயக்குனர் பணியில் இருந்து தற்காலிகமாக விடுபட்டு முழு நேர நடிகனாக தன்னை வடிவமைத்து கொண்டிருந்த நேரம். அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து உருவாகி இருந்த நேரம். அந்த மாநாட்டில் இடது சாரித் தோழர்கள் தவிர்த்து வெகுசன மக்கள் பலரும் மணிவண்ணனை பார்ப்பதற்காக கூடி இருந்தனர். அந்த பெருந்திரள் கூட்டத்திற்கு முன் மிகவும் பணிவாகப் பேசிய அவரது உரையின் பாதிப்பு பத்து நாட்களுக்கு மேல் என்னிடம் இருந்தது. கடந்த ஒராண்டிற்கு முன் மூவர் தூக்கிற்கு எதிரான உண்ணாநிலை மேடைக்கு மணிவண்ணனை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு நானும் அமீர் அப்பாஸூம் சென்றிருந்தோம். அப்போதும் மிகவும் தன்மையுடன் பேசினார். அவருடைய மகன் வயதில் உள்ள என்னை அவரது சம வயது தோழர் போல் நடத்திய அவரது பண்பு இன்றைய அரசியல்வாதிகள் , பிரபலங்கள் எத்தனை பேருக்கு வரும்?

அய்ம்பது திரைப்படங்களை இயக்கிய, 400 படங்களில் நடித்த 30 ஆண்டு காலமாக பொதுவுடைமை அரசியலுடனும் திராவிட இயக்க ஆளுமைகளுடனும் தொடர்பு வைத்திருந்த மனிதரின் எளிமை என்னை ஆச்சரியப்படுத்தியது. இனி இது போல் என்னை ஆச்சரியப்படுத்தும் அற்புதமான மனிதர்களை என் வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற கேள்வி என்னுள் எழுகிறது. அந்த மதுரை கலை இரவில் திரையில் தோன்றும் நடிகர்களை நேரில் பார்ப்பதையே அதிசயமாக நினைக்கும் மனநிலைதான் என்னிடம் இருந்தது. அப்போது எனக்கு வயது 12. ஆனால் சமீபத்தில் அவரை சந்தித்த போதும் அதே பிம்பம்தான் எனக்கு இருந்தது. சினிமா குறித்தும் நடிகர்கள் குறித்தும் எனக்கிருந்த மாய பிம்பம் உடைந்திருந்த இந்த காலகட்டத்திலும் அவர் என்னை முழுமையாக வசியபடுத்தி இருந்தார் என்பது நான் மறுக்கமுடியாத உண்மை. ஏனென்றால் இயக்குனர், நடிகர் என்கிற நிலையைத் தாண்டி அற்பதமான மனிதராக அவர் இருந்தார் என்பதை நான் உணர்ந்து கொண்ட அனுபவம்.

அமைதிப்படை திரைப்படம் வந்த புதிதில்தான் மணிவண்ணனைப் பற்றிய பிம்பத்தை எனக்கு என் அப்பா (ஏபி.வள்ளிநாயகம்) கொடுத்தார். மதுரை மதி திரைஅரங்கில் ஒரு இரவுக் காட்சி அந்த திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்தோம். சத்யராஜ் அந்த படத்தில் பெரியாரின் வசனத்தை பேசுவார். அந்த வயதில் அந்தக் காட்சி ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது. மிகவும் பிற்காலத்தில் அந்த படத்தை பார்க்கும் போதுதான் தீண்டாமை கொடுமை, நாத்திக பிரச்சாரம், அரசியல் நையாண்டி என பல்வேறு கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பது புரிந்தது. இப்பேர்பட்ட கலைஞனுக்கான அங்கீகாரத்தை திரையுலகம் கொடுக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். 

பாரதிராசா போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த இயக்குனர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் வார இதழில் மணிவண்ணன் குறித்து பேசியது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.  முதல் மரியாதை, வேதம் புதிது எடுத்த பாரதிராசாவா இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் என்பது நெஞ்சைப் பிளக்கும் கேள்வியாக இருக்கிறது. பாரதிராசாவே உங்க படத்தை பார்த்துட்டு நாங்க கரையேறிட்டோம் நீங்க கரையேறலையா? அலைகள் ஓய்வதில்லை, காதல் ஒய்வதில்லை, வேதம் புதிது, கருத்தம்மா என உங்களின் பல படங்கள் உடைமை சமூகத்தையும் சாதிய சமூகத்தையும் கேள்விக்குட்படுத்திய காவியங்கள்தான். அதற்காக தமிழ் திரைச் சூழலில் உங்களுக்கு ஒப்பற்ற இடத்தை மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் கொடுத்து வைத்திருந்தார்களே, அதற்கு நீங்கள் கொடுத்த பரிசு இதுதானா?

மணிவண்ணன் என்கிற மனிதன் வறுமையில் பிறந்திருக்கலாம்; வலியுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதற்காக மணிவண்ணன் வருத்தப்பட்டிருக்க மாட்டார். ஆனால் தன் வாழ்நாளில் கடைசி தருணங்களில் ஏற்பட்ட மன வலியை அவரால் தாங்கியிருக்க முடியாது. பாரதிராசாவே கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தாலும் பத்திரிக்கை தர்மத்தை கருத்தில் கொண்டு விகடன் பத்திரிக்கை அந்த வார்த்தைகளை தணிக்கை செய்திருக்கலாம்.

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வரும் இயல்பான தந்தை போலவே நிஜ வாழ்க்கையிலும் அற்புதமான மனிதராகவே மணிவண்ணன் வாழ்ந்திருக்கிறார். பணம் இல்லாதபோது கம்யூனிசமும் சாதி ஒழிப்பு சிந்தனையுடன் படம் எடுத்த பல பேர் இன்று உடைமை சமூக உணர்வுடனும் சாதி உணர்வுடனும் இருப்பதை நாம் கண்கூடாய் காண்கிறோம். இது போன்ற சந்தர்பவாத சமூகத்தில் இறுதி வரை தான் கொண்ட கொள்கைகளே தனக்கான அடையாளம் என்று வாழ்ந்த அற்புதமான மனிதர் மணிவண்ணன். அந்த படைப்பாளியின் கொங்கு நாட்டு கிண்டலை நம்மால் மீண்டும் கேட்கமுடியுமா? ஈழப்பிரச்சனைக்கும் பெரியாரிய மேடைகளுக்கும் வலிய வந்து உதவி செய்யும் கொள்கையாளரை மீண்டும் சந்திக்க முடியுமா என்கிற கேள்விகள் எழும் போதே இந்த இழப்பின் வலியை நம்மால் உணர முடிகிறது. 

கார்ப்பரேட் கலாச்சரத்தை மய்யப்படுத்திய மேட்டுக் குடி பாணி இயக்குனர்கள் மய்யம் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் காரல் மார்க்ஸின், பெரியாரின் கருத்துக்களை திரைஅரங்குகளில் பேச வைத்த எளியவர்களின் இயக்குனரை, அரசியல் விமர்சகரை நாம் இனி எங்கு காணப் போகிறோம்? பகுத்தறிவுவாதியாக மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆனால் பாமர ரசிகனாக என்னால் எதுவும் பேச முடியவில்லை.

- ஜீவசகாப்தன்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24231:2013-06-22-11-54-31&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
வாசகர் மணிவண்ணன்

எப்படி யோசித்தும் என்ன கூட்டம் என்று நினைவில்லை. ஆனால் சென்னை இக்ஷா மையத்தில் நடந்தது இது.

கூட்டம் முடித்துவிட்டு வழக்கம் போல அரங்கத்தின் வெளியே அங்கங்கே குவியல் குவியலாய் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

எங்களது விவாதம் ஜெயமோகனைச் சுழன்று சுற்றியது. அவரை எப்படி எப்படியோ விமர்சித்துக் கொண்டிருந்த நாங்கள் அவரது “காடு” பற்றி பேச ஆரம்பித்தபோது அதன் அழகியல் மற்றும் பிரமாண்டம் குறித்து கொஞ்சம் வியப்போடே நகர்ந்தது எங்களது உரையாடல்.

அப்போது பக்கத்து குவியலில் நின்று பேசிக் கொண்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் எங்கள் பக்கம் திரும்பிச் சொன்னார், “ரொம்ப அருமையான நாவல். ரொம்பவே பிரமாண்டம். என்ன, அந்த நாவல்ல கொஞ்சம் சாரு இருப்பார். போக, கம்யூனிஸ்டுகள டேமேஜ் பண்றதுதான் அவரோட பர்பஸ். அவரோட விஷ்ணுபுரம் கூட அப்படித்தான்.” எல்லா இடங்களிலும் இதை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இரண்டு விஷயங்கள் என்னை வியக்க வைத்தன,

1. யாரென்றே தெரியாத நபர்கள் , இன்னும் சொல்லப்போனால் முகவரியற்ற யாரோ பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் தனக்கு சொல்ல ஏதோ இருந்தால் அதில் பங்கேற்கும் அவரது பிரபலம் துறத்தல்.

2. மற்ற சினிமாக்காரர்களைவிட கொஞ்சம் கூடுதலாக வாசிப்பார் என்று மட்டுமே என் புத்தியில் கிடந்ததை சுத்தமாய் துடைத்துப் போட்ட அவரது ஆழமான வாசிப்பு.

கலகக்காரர், நல்ல நகைச்சுவை நடிகர், அரசியல் பகடியோடு படங்களைத் தருவதில் வல்லவர், எல்லாவிதமான படங்களையும் இயக்கியவர், போக தமிழ்த் தேசியக் குழுக்கள் எதுவாயினும் அது எவ்வளவு சின்னதாயினும் அது நடத்தும் கூட்டங்களில் சிரமம்பாராது பங்கேற்பவர் என்பதுதான் பொதுவாக அவர் குறித்த தமிழ் மண்ணின் பொது அபிப்பிராயம்.

ஆனால், பெரியாரையும், மார்க்ஸையும் கையில் எடுக்காமல் தமிழ்த் தேசியம் யாருக்கும் சாத்தியப் படாது என்பதில் அவர் உறுதியாய்த்தான் இருந்திருக்கிறார். ஆரம்பக் காலத்தில் அவர் இரண்டு பொது உடைமைக் கட்சிகளுக்கும் வேலை பார்த்திருக்கிறார். சுவர் எழுத்து எழுதியி ருக்கிறார்.
ஒருகட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சி களிடமும் அவர் நம்பிக்கை இழக்கிறார். அவர்கள் மீது ஊழல், ஒழுக்கமின்மை, அர்ப்பணிப்பின்மை போன்ற குற்றசாட்டுகள் எதுவும் இல்லை அவருக்கு. அவர்கள் தொழிற்சங்கங்களைச் சார்ந்து மட்டுமே இயங்குகிறார்கள். ஆகவே அவர்களால் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே செயல்பட முடிகிறது. இது போதாது. போகவும் தொழிற்சாலைகள் மூடப்படும்போது கட்சி அந்த இடத்தில் இல்லாமல் போகும் என்பதுதான் அவரது குற்றச்சாட்டு.

இந்த வகையில் ஒரு தீவிரவாத இடதுசாரிக் குழுவில் இணைகிறார். இவரோடு இயங்கிய இரண்டு தோழர்கள் இல்லாமல் போகவே ஒரு இடதுசாரியாய் இயங்க இயலாமையால் மட்டுமே அவர் சென்னைக்கு வருகிறார்.

மட்டுமல்ல, எந்த இடத்திலும் மற்ற தமிழ்த் தேசியத் தோழர்கள் முன் வைப்பது போன்ற கடுமையான விமர்சனங்களை இவர் இடதுசாரிக் கட்சிகள் மேல் வைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் இணக்கமாகவே இருந்திருக்கிறார்.

காளிமுத்து என்கிற இவரது ஆசிரியர்தான் இவரது ஆளுமைக்கெல்லாம் காரணம் என்கிறார். தமிழ்வாணனை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவரை அவர்தான் “ தாய்” நாவலைத் தந்து மடை மாற்றம் செய்திருக்கிறார். சிலந்தியும் ஈயும்கூட அவர்தான் தந்திருக் கிறார். நாமும்தான் 25 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறோம். இப்படி எதுவும் செய்யவில்லையே என்ற கோவம் நம் மீது இயல்பாகவே வருகிறது.

கணக்கற்ற முறை இவர் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை வாசித்திருக்கிறார். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிது புதிதாய் கற்றுக் கொள்வதற்கு அதில் இருந்ததாய் சொல்லி யிருக்கிறார். இடதுசாரித் தலைவர்கள் தங்களது இளைஞர்களை இதை வாசிக்கச் செய்வதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம் குறைந்து இருப்பதாகப்படுகிறது.

ஏறத்தாழ 40000 நூல்கள் அவரது வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு நூலகம் அமைத்து அவற்றை அங்கு வைக்கவேண்டும் என்று நந்தன் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரைத் துறையினர் ஆசைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது.

துணை இயக்குனர்கள் நிறைய வாசித்தால் தான் தமிழ்த் திரையுலகம் வளப்படும் என்று மனதார நம்பியவர் மணிவண்ணன். வாசிக்க நல்ல நூல்களைக் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர். எனவே அவரது குடும்பத்தினர் இதைக் கொஞ்சம் கருணையோடு அணுக வேண்டும். கொஞ்சம் பழசாய்த்தான் தோன்றும் ஆனாலும் அதுதான் சரியெனப் படுகிறது,
“ வாசிப்பதை நிறுத்திக் கொண்ட தேர்ந்த வாசகனுக்கு எங்கள் அன்பும் வணக்கமும்.
- இரா.எட்வின்
(puthiya dharisanam)
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.