Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாதாரணமாகவும் மயக்கம் வருவதுண்டு. அது முன்பிலிருந்தே இருக்கிறது. மயங்கி விழுந்து hospital க்கு சென்றேல்லாம் இருக்கிறன். அது இவ்வாறான பிரச்சினைகளால் வரலாம். அது தான் blood test எடுத்து பார்ப்பம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால் இப்பொழுது சில வருடங்களாக மற்றவர்கள் தமக்கு உடலில் நேர்ந்த பிரச்சினைகள் அல்லது காயங்கள் பற்றி சொல்லும்போதும் மயக்கம் வருகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? :rolleyes: மூளை நரம்பில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுவதால் இவ்வாறான மயக்கம் வருவதாக இருக்காதா? :unsure:

 

எங்களில் அதிர்ச்சி.. மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளை.. காட்சிகளைக் காணும் போது.. தூண்டலுக்கு துலங்கும்.. தன்னியக்க நரம்புத் தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகளால்.. இதயத் துடிப்பு மற்றும் குருதி அமுக்கத்தில் ஏற்படும் குறைவு அல்லது மாற்றங்களால் மயக்கம் ஏற்படலாம். இதில் மூளையை விட முண்ணான் எனப்படும் முள்ளந்தண்டினூடாக செல்லும் மூளையின் நீட்டமே அதிகம் பங்களிக்கிறது.

 

மேலும் உங்களுக்கு குருதி அழுத்தம் குறைவாக இருப்பதும் திடீர் மயக்கத்திற்கு இட்டுச் செல்லலாம்.

 

இவை இரண்டும் வெவ்வேறான பிரிவுகளில் வெவ்வேறான வகையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. எனவே நீங்கள் தற்போது முழுமையான உடற்பரிசோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்வது நன்று. இரத்தப் பரிசோதனை இவற்றில் ஒன்று.

 

உங்களுக்கு தற்போதுள்ள பிரச்சனை இதுவாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது..! எதுஎப்படியோ உங்களைப் பரிசோதிக்கும் டாக்டர்களே சரியான தீர்மானங்களைச் செய்ய முடியும். இது ஒரு அனுமானம் மட்டுமே..! :icon_idea::)

 

Vasovagal syncope

 

Vasovagal syncope occurs when something triggers a temporary malfunction in your autonomic nervous system. The autonomic nervous system is the part of the nervous system responsible for regulating many of the body’s automatic functions, such as heartbeat and blood pressure.

 

The malfunction in the autonomic nervous system causes a drop in your blood pressure and a reduction in your heartbeat. This leads to a temporary interruption to your brain’s blood supply.

Vasovagal syncope may be caused by:

 

  • sudden exposure to an unpleasant sight or experience, such as the sight of blood
  • standing for long periods of time
  • spending a long time in hot or stuffy environments
  • a sudden intense episode of stress, emotional upset, fear or anxiety
  • a sudden feeling of pain

http://www.nhsdirect.wales.nhs.uk/encyclopaedia/f/article/fainting/

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் காட் அடிக்குதோ? மூச்சு இருக்குதோ?

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ் அண்ணா. :)

 

இன்னும் காட் அடிக்குதோ? மூச்சு இருக்குதோ?

 

உயிரோட தான் இருக்கிறன். :lol:

 

இது தான் blood test report. ஏதாவது விளங்கினால் சொல்லுங்கோ. doctor இடம் நேற்று சனமாக இருந்ததால் திரும்பி வந்திட்டன். இனி அடுத்த கிழமை தான். நாளைக்கும் வெள்ளிக்கிழமையும் நிற்க மாட்டார். :rolleyes:

 

------------------------------------------------------------

கள உறவு ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க blood test report ஐ திரியிலிருந்து அகற்றியுள்ளேன். :rolleyes: விசுகு அண்ணா பச்சை போட்ட பின் அகற்றுவதற்கு மன்னியுங்கள். நீங்கள் பச்சையை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை உங்களுடைய இரத்த சோதனை முடிவுகளை பார்க்க கூடியதாக இருந்தது. அவற்றில் எதுவும் குறைவாக இல்லை. நான் முதலே சொன்ன மாதிரி, பல சந்தர்பங்களில் இதற்குரிய காரணங்கள் வெளித்தெரிவது இல்லை. ஜஸ்டின் சொன்ன EEG, செய்யலாம், இதயத்தை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம், ஆனால் பெரும்பாலும் அவையும் நோர்மல் என்றே வருவது உண்டு.

சில சந்தர்பங்களில் VIDEO EEG என்றோ event monitoring என்றோ செய்வார்கள். ஆனால் பலர் இவற்றை விரும்புவதோ நம்புவதோ இல்லை. அடுத்த முறை வந்தால் வைத்தியரை கட்டாயம் பாருங்கள். அவர்கள் உங்களை முறைப்படி வழிநடத்த கூடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.