Jump to content

மூளை நல்லா வேலை செய்யணுமா? ஓட்ஸ் சாப்பிடுங்கள்

Recommended Posts

ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.

ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

Link to comment
Share on other sites

நன்றி வந்தியதேவன்

சிறந்த இலகுவான காலை உணவு(10 நிமிடங்கள் போதும்). ஓட்ஸ் அவித்து (வேணுமானால் பாலும் சேர்க்கலாம்) , walnuts உம் தேனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

walnuts ,தேனுக்கு பதிலாக வாழைபழமோ  அல்லது grapes ஒ சேர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

ஓட்ஸ்க்கும் குதிரைக்கும் நல்ல பொருத்தம் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

தினமும் சாப்பிடலாம் தான்...ஆனால் பலரும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, சாப்பாட்டுக்கே அல்லலுருகையில், 'யார்' இதை தயாரித்துக் கொடுப்பர்? smiley1674.gif:lol:

பயனுள்ள செய்திக்கு, நன்றி வந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மூன்று மாதங்களாக எனது காலை உணவு ஓட்ஸ்,சியா விதை சேர்ந்த கஞ்சிதான். நோய்கள் இல்லைத்தான். ஆனால் அதிகமாகப் பசி எடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மூன்று மாதங்களாக எனது காலை உணவு ஓட்ஸ்,சியா விதை சேர்ந்த கஞ்சிதான். நோய்கள் இல்லைத்தான். ஆனால் அதிகமாகப் பசி எடுக்கிறது.

மூளையில ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிற 'சிலமன்' உண்டா என அறிய ஆவல்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் மிகவும் நல்ல  உணவுதான் ! நான் இருக்குமிடத்தில் கிடைப்பதில்லை. நான் பரிசுக்குப் போய் வரும்போது நிறைய வாங்கி வருவதுண்டு !!

Link to comment
Share on other sites

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

நசுக்கப் பட்ட கோதுமை!

மூளையைப் பற்றி என்னால் அபிப்பிராயம் கூற முடியாது, ஏனெனில் வட இந்தியர் சாப்பிடுறது முழுக்கக் கோதுமைச் சப்பாத்தி தான்! :o

lowan_rolled_oats.gif

:D  :D  :icon_idea: இப்பிடி ஒண்டு இருக்கிறது இண்டைக்குத்தான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நசுக்கப் பட்ட கோதுமை!

ஐயோ ஐயோ, அண்ணை உங்களை நான் ஒரு வல்லவர் நல்லவர் அறிஞர் ...................இப்படி எல்லாம் யோசித்து, யாசித்து இருக்க இப்படி மோசமாய் போனீர்களே? -வேற ஆக்கள் எழுத முந்தி எழுதுவம்- :rolleyes:

ஓட்ஸ் க்கும் கோதுமைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இரண்டும் தானியம் என்கிற ஒற்றுமையை தவிர. சில பேர் அதிலிலும் ஒற்றை இரட்டை பிடிக்கிறார்கள், ஓட்ஸ் ஒரு ஒழுங்கான தானியம் அல்ல, அது ஒரு பருப்பு/ கடலை, வகையை சார்ந்தது என்று.

ஓட்ஸ் பல காலம் குதிரை உணவாகத்தான் பயன்படுத்தபட்டது.  இப்ப சில வருடங்கள் ஆகத்தான் அதை மனிதர்களும்- கொழுப்பு கூடின, மனிதர்களும் உண்ணுகிறார்கள்.இது மனித உடலில் கொழுப்பின் கட்டமைப்பை மேம்படுத்திகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுவதால். 

ஆனால் இது ஒரு சுவையான உணவு. காலமைக்கு திறமான உணவு. இதனுடன் கொஞ்சம் சீனியும்,-மருத்துவ காரணத்திகாக சாப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டும், திராட்சை வத்தலும்,கருவா பவுடரும் போட்டால் கலக்கும். ஒரே ஒரு பிரச்சனை இதனுடன் சேர்த்து கோப்பி குடிக்க முடியாது. சோறு சாப்பிட்டு விட்டு கோப்பி குடிக்கிறது போல இருக்கும்.

நன்றி வணக்கம்.

-புங்கை ஊரன் பகிடிக்குத்தான் எழுதியது. :icon_mrgreen:

நானும் அப்பிடித்தான், இவ்வளவு நானும், நினைச்சிருந்தேன், வொல்கனோ!

நீங்கள் சொல்லுறது சரி போல கிடக்கு!

நான் அவதானிச்ச படி, குதிரையள் கொஞ்சம் சில மனிசர்களை விட மூளை கூடின சாமானுகள் தான்! :icon_idea:  

Link to comment
Share on other sites

ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.

ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது.

தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்

http://www.sinthikkavum.net/2013/02/blog-post_5291.html

நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டியது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ முதலில் ஓட்ஸ் என்றால் என்னங்க ............மூழை இல்லாதவனின் ஆதங்கம் ............ :D  :D  :D 

haferflocken.jpg

Hafer flocken என்று, ஜேர்மன் பாசையில் சொல்வார்கள் தமிழ்ச் சூரியன்.

அநேகமான சுப்பர் மாக்கற் கடைகளில் வாங்கலாம். :)

Link to comment
Share on other sites

ஓட்ஸ் கனகாலமாகவே மனிதர் உண்கிறார்கள் வல்கனோ.
 
நாங்கள் சின்ன ஆக்களாக இருக்கேகுள்ளயே யாழ்ப்பாணத்தில குவக்கர் ஓட்ஸ் என்ற அமெரிக்க ஓட்ஸ் டின்களில் வந்தது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

img_9772.jpg

ஆம்.. எனக்கு அம்மா சின்னனில.. ஒட்ஸ் தீத்தின ஞாபகம் இருக்குது. பவுடராவும் வரும். தேன் மற்றும்... சுடுநீர் விட்டு குழைத்து.. கையால தொட்டுப் பார்த்து சுடுகுதோ இல்லையோ என்று.. அப்புறம்.. கரண்டியால் தீத்திறவா. நல்ல ஞாபகம் இருக்குது. அதை ஒரு வாய் எடுத்திட்டு.. அம்மாவின் கால்களைச் சுற்றி சேலைத் தலைப்பை இழுத்துக் கொண்டு ஓடி.... அப்புறம்.. சாப்பிட்டு முடிய.. மீண்டும் மறுவழமாக..ஓடி வந்து.. வாயை ஆவென்று பிடிச்சு.. வாங்கிச்.. சாப்பிட்டிருக்கிறன். என்ன ஒரு இனிமையான காலங்கள் அவை. :lol:

அப்ப, மூளை விசயம் உண்மை போலத் தான் கிடக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளையில ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிற 'சிலமன்' உண்டா என அறிய ஆவல்! :icon_idea:

மூளை மட்டும் அப்பிடியே இருக்கு. ம் ....... :icon_idea:

இது கடலை வகை இல்லை வொல்கானோ தானியம்தான். கோதுகூட தங்க நிறத்தில்  இருக்கும். கிட்டத்தட்ட கோதுமை போலவே இருக்கும்.

Link to comment
Share on other sites

இது குதிரைக்கு வைக்கும் கொள்ளு வகையைச் சார்ந்த்தது.  காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது உடலிற்கு நல்லது. குடலில் எஞ்சியுள்ள கொழுப்புகளை அகற்ற உதவும் என்று கூறுகிறார்கள்.  

இதனுடன் கொஞ்சம் தவிடும் (wheat bran)  பழங்களும், கொழுப்புக் குறைந்த பால் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிடுவேன்.

தப்பிலியின் காலை உணவுக் காட்சி.. :D

care-and-feeding-bull-eating-300x208.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலியின் காலை உணவுக் காட்சி.. :D

care-and-feeding-bull-eating-300x208.jpg

எங்கேயோ போய் நல்லா மேய்ஞ்சு போட்டு வந்திருக்கிறார்......... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகள் கன பேருக்கு தெரிகிற படியால்  இதுக்கும் மூளைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கோ என்று ஆராச்சி செய்யத்தான் வேணும். 3J உடன் ஓட்ஸ் இணைகிறது போல இருக்கிறது.

மற்றது; இது முதலே இருக்கு.உண்மைதான். கொஞ்ச ஆக்கள் சாப்பிட்டும் இருப்பினம்- அமெரிக்காவின் குதிரையின் மூளையாவது எங்கட பிள்ளைகளுக்கு /செல்வங்களுக்கு வராதோ என்று நினைத்து, ஆனால் பெரிய அளவில் சாப்பிட வெளிக்கிட்டது 1990 களுக்கு பிற்பாடுதான். இரண்டு வருடத்துக்கு முந்திய தகவல்- இன்னும் இது இதய வியாதிகளை நேரடியாக குறைப்பதாக சான்றுகள் இல்லை. இது நல்ல HDL கொலஸ்ட்ரோல்ஐ கூட்டுது என்று கண்டு பிடித்துள்ளார்கள் ஆனால் அப்படி கூடிய HDI இதயத்தை பாதுகாக்கிறது என்று நிரூபிக்கபடவில்லை.-"சுகம் வரும் ஆள் தப்பாது என்கிறது போல"

After reports of research finding that dietary oats can help lower cholesterol,[11] an "oat bran craze" swept the U.S. in the late 1980s, peaking in 1989, when potato chips with added oat bran were marketed. The food fad was short-lived and faded by the early 1990s. The popularity of oatmeal and other oat products again increased after a January 1998 decision by the Food and Drug Administration (FDA), when it issued a final rule that allows food companies to make health claims on food labels of foods that contain soluble fibre from whole oats (oat bran, oat flour and rolled oats), noting that 3.0 grams of soluble fibre daily from these foods may reduce the risk of heart disease.

அண்மையில் இலங்கை சென்ற போது உறவினர் ஒருவருக்கு "எடை" குறைப்பதற்காக  இதை ஒரு வைத்தியர் கொடுத்திருந்தார். -அவருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்லை. அவரும் ஒரு டின் பால் பேணியளவு ஓட்ஸ் வாங்கி ஒரு மாதமாய் சாப்பிட்டு கொண்டு இருந்தார் :rolleyes: . அது அங்கே 400 ஒ 500 ரூபா.  

ஒன்றில் ஒதோ ஒன்று இருக்கு என்று ஏதாவது ஒரு வழியில் கேள்விபட்டால் அதை பிரிச்சு மேய்கிறதில் யாழ்ப்பாண மூதாட்டிக்கும் சிரேஷ்ட வைத்திய வைத்திய நிபுணருக்கும் ஒரு வித்தியாசமும்  இல்லை என்பதர்ற்கு இது நல்ல உதாரணம்.

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொஞ்சநாள் உதை சாப்பிட்டு பாத்தனான் தான்....மூளைக்கு பெரிசாய் பலன் தெரியேல்லை.....அனால் வயிறு நல்ல விறீடமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.