Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

போர் நிறுத்தத்தை அரசு மதிக்கிறது.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்று அணையைத் திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை யுத்தம் அல்ல! போர் நிறுத்தத்தை அரசு இன்னும் மதிக்கிறது என்கிறார் ரம்புக்வெல

மாவிலாறு கால்வா யைத் திறப்பதற்கான நடவடிக்கையையே படை யினர் மேற்கொள்கின்ற னர். இது யுத்தமல்ல.

பாதுகாப்புத் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடை பெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

""யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட் டது. இப்போது அரசு அதைக் கடைப்பிடிப் பதை விட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதென புலிகளின் திருமலை மாவட்டப் பொறுப்பா ளர் எழிலன் பொய்ப் பிரசாரங்களை மேற் கொண்டுள்ளார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவ தென்றால் அதற்கு ஒரு வழிமுறை இருக்கின் றது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடும் தரப்பு இவ்விடயத்தை 14 நாட்களுக்கு முன் னர் நோர்வே வெளிவிவகார அமைச்சு மூல மாக மறு தரப்புக்கு முறைப்படி அறிவிக்க வேண்டும். அரசு அதைச் செய்யவில்லை. எனவே, அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை. மதித்துச் செயற்படுகின்றது.

தண்ணீர் தொடர்பான மனிதாபிமான அடிப்படையிலேயே நாம் மாவிலாறு கால் வாயைத் திறந்து விடும்படி கோரினோம். பேச்சு நடத்தினோம். தண்ணீர் தொடர்பாக எதுவித நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாவிலாறு கால்வாயைத் திறந்து விடும் இராணுவ நடவடிக்கை இப்போது இடம்பெறு கிறது. இதை யுத்த நிறுத்த மீறல் என்றோ, யுத்தம் ஆரம்பித்து விட்டதென்றோ கருத முடியாது.'' இவ்வாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நன்றி newstamilnet.com

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படி என்டா கண்காணிப்புக்குழுவுக்கு 14 நாள் முதலே அறிவிக்கனும் யுத்த நிறுத்ததில இருந்து மீறுறம் என்டு.

அப்படி என்டா புலிகள் தமிழீழம் கிடைச்ச பிறகு இதை ஆறுதலா அறிவிக்கலாம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.