Jump to content

கரும்புலி நாள் சிறப்பிதழ்


Recommended Posts

கரும்புலிகள் சிறப்பிதழ் நன்றியோடு தேசக்காற்று....!

 

தேசக்காற்று இணையத்தில் சென்று மாவீரர்களின் விபரங்கள் நினைவுகள் பகிர்வுகள் யாவற்றையும் பார்க்கலாம். இதுவரையில் வெளிவராத பல்வேறு வகையான தேசத்தின் நினைவுகள் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றின் பாதையில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான ஒரேயொரு இணையத்தளம்....!

http://thesakkaatu.com/doc1767.html

 

கரும்புலி நாள் சிறப்பிதழ்

-----------------------------------------------------

 

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

 


அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்

 

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

 

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.

 

2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

 

முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

 

http://thesakkaatu.com/doc1767.html

Edited by shanthy
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் கரும்புலிகள்.

 

blacktigers1.jpg?w=470

நெல்லியடியில்

நெத்தியடியாய்

நெடுநாள் சிங்களப் பகை

நொருக்கி

வீழ்ந்த அந்த

நெடும் வீரன்

மில்லர் வழியில்…

தமிழராம் எம்

தாகமாம் தமிழீழம்

விடியும் வரை

பிச்சை கேட்டு

அடிமைகளாய் வாழப் போவதில்லை…!

 

விடியலின் கனவோடு

கந்தக மூச்செடுத்து

சாவினில் வாழும்

மறப் புலிகளாய்

கரும்புலிகளாய்

எம் தேச விடியலை

சிதைக்க நினைக்கும்

தடைகள் முடிப்போம்.

 

விடியற்  சூரியனை

கூவி அழைத்து

ஈழ வானில் சேர்த்து..

மின்னிடும்

வான் தாரகைகளாய்

நாமும்

மிளிர்வோம்.

தலைவன் வழியில்..

விடியலின் வேளை வரை

தமிழர் நாம்

என்றும்

கரும்புலிகளே…!

(05.07.2009 கரும்புலிகள் நாள் – Black Tigers Day)

 

http://kuruvikal.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

கரும்புலி மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.