-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு பேரவை தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார். எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷ்யா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை https://thinakkural.lk/article/247420 -
By கிருபன் · பதியப்பட்டது
நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம் Published By: Sethu 31 Mar, 2023 | 05:11 PM நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கையைக் கடைபிடித்த இந்நாடுகள், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேட்டோவில் இணைவதற்கு தீர்மானித்தன. நேட்டோவின் 29 நாடுகள் சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்த நிலையில், துருக்கியும் ஹங்கேரியும் தயக்கம்காட்டி வந்தன. பின்லாந்தின் இணைவுக்கு ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் துருக்கியின் பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் ஏற்கெனவே இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இதன்படி, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கடைசி தடங்கல் நீக்கியுள்ளது. 'நேட்டோவின் 30 நாடுகளும் பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்துள்ளன. அவர்களின் நம்பிக்கைகக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என பின்லாந்து பிரதமர் சவ்லி நீனிஸ்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு ஹங்கேரியும் துருக்கியும் அங்கீகாரம் வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன. https://www.virakesari.lk/article/151856 -
ஜபிஎல் தொடங்கின 2008 இருந்து 2011 வர தமிழக வீரர்களின் ஆதிக்கம் கூட 2010 4தமிழக வீரர்களும் முத்தையாமுரளிதரனோட சேர்த்து 5பேர் தொடர்ந்து பல மைச்சில் விளையாடினவை அப்ப நான் தீவிர சென்னை பான்ஸ்.................இப்ப எனக்கு சென்னை அணிய கண்ணிலும் காட்டக் கூடாது.......................
-
உண்மையான முகமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் இதுவரை மறைத்த முகம் எது? எனது பெயரையே வெளிப்படையாகத்தானே எழுதுவருகிறேன்? இதில் மறைப்பதற்கு என்னவிருக்கிறது? ஏன், நான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதால் என்னைத் தூற்றலாம் என்று நினைக்கிறீர்களா? தராளமாக. நான் கவலைப்படவில்லை. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பும், சிங்கள ஆக்கிரமிப்பும் ஒன்றுதான். எனக்கு இருமுகம் கிடையாது.
-
Recommended Posts