-
Tell a friend
-
Topics
-
Posts
-
நோய் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி நெடுக்கஸ். உங்கள் அம்மாவின் இழப்பின் துயரம் மிக வலி மிகுந்தது. உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.
-
இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது. 1) சேறடித்தல் 2) அதனைத் தடுத்தல் உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥 உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன. சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️
-
முக்கால் வாசி விடயம் விளங்கியது. கால் வாசிதான் விளங்கவில்லை.😲
-
விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல் சென்று விடடார் என தேற்றிக் கொள்ளுங்கள்.
-
By Kavallur Kanmani · Posted
இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.