-
Tell a friend
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
போடுங்க போடுங்க எழுத்துக்களை மட்டுமல்ல செய்திகளையும் கலர்கலராக போடுங்கள். -
வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் - நாடுதழுவிய ரீதியில் போராட்டம் By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 03:54 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தின் வரி திருத்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் , துறைமுக ஊழியர் சங்கம் , மின்சாரசபை ஊழியர் சங்கம் , நீர் வழங்கல் ஊழியர் சங்கம் , வங்கி ஊழியர் சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் புதன்கிழமை (08) பணி பகிஷ்கரிப்பிலும் , ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் முடங்கின. இதனால் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் , வைத்தியர்கள் உள்ளிட்ட 40இற்கும் அதிக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. அத்தோடு எம்மால் 24 மணித்தியால பணி பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் நோயாளர்களின் நலன் கருதி அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்று நோய் வைத்தியசாலை , சிறுநீரக வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் நாளாந்த வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இவற்றில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். அரசாங்கத்தின் புதிய வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முதற்படியாக கறுப்பு பட்டி அணிந்துள்ளோம். எவ்வாறிருப்பினும் உரிய தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறாவிட்டால் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் கூட பணி பகிஷ்கரிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும்.' என்றார். இதே வேளை துறைமுகத்தின் 3ஆம் இலக்க நுழைவாயிலிருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்த துறைமுக ஊழியர்கள் சங்கம் பேரணியாக வந்து கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் மின்சாரசபை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து, கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். நிபந்தனைகள் இன்றி புதிய வரி வசூலிப்பு சட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதான கோரிக்கையாகக் காணப்பட்டது. அவ்வாறில்லை எனில் இனிவரும் நாட்களில் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தொழிற்சங்கங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் , கோட்டை நீதவான் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிவில் சட்டங்களுக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொழும்பு லோட்டஸ் வீதியில் அரச நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் , அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் நேற்று மாலை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147714
-
By ஏராளன் · பதியப்பட்டது
அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி ஆலோசனை By VISHNU 08 FEB, 2023 | 04:26 PM (எம்.மனோசித்ரா) அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார். இதன்படி, சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு, மஹபொல உதவித்தொகை, திரிபோஷ வேலைத்திட்டம், உழவர் ஓய்வூதியம், பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்குத் திட்டம், இராணுவம் மற்றும் ஊனமுற்ற இராணுவத்தினருக்கான கொடுப்பனவு, இராணுவ வீரர்களின் பெற்றோர் பராமரிப்புக் கொடுப்பனவு, ஒத்திவைக்க முடியாத மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய தொலைத்தொடர்பு சேவைகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், இராணுவத்தினருக்கு உணவு வழங்கல், பராமரிப்பு சேவைகள், கட்டிட வாடகை, துப்புரவு சேவைகள், பாதுகாப்பு சேவைகளுக்கான ஒப்பந்தக் கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதி போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் மற்றும் உர மானியம் வழங்கல், போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/147726 -
எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் - இடம்பெற்றது என்ன ? By T. SARANYA 08 FEB, 2023 | 04:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஒன்பதாவது ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு மற்றும் மரியாதை வேட்டு எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை இன்று புதன்கிழமை (பெப் 08) காலை 09.30 மணியளவில் ஆரம்பித்து வைத்தார். பலத்த பாதுகாப்பு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நிகழ்வையிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் கலக தடுப்பு பிரிவினர் உட்பட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். சபாநாயகர் மற்றும் பிரதமர் வருகை கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வருகை தந்தனர். இவர்களை பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்க வரவேற்றார். இதனை தொடர்ந்து சபாநாயகர் பிரமரின் வருகைக்காக முன்னிலையில் இருந்தார். சபாநாயகரின் வருகையை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தன வருகை தந்தார். சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். ஜனாதிபதி வருகை காலை 09.35 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார். முதற்பெண்மணி பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்விற்கு வருகை தரவில்லை. சபாநாயகர், பிரதமர், பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று படைக்கலசேவிதர்,பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கோட்டை மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர். இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி 9.55 மணிவரை அங்கிருந்த பின்னர் காலை 10.00 மணிக்கு சபைக்கு வருகை தந்தார். ஜனாதிபதியின் வருகையை படைகள சேவிதர் உரத்து அறிவித்தார். ஜனாதிபதி சபைக்கு நுழைந்த உடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று சிரித்து ஆரவாரம் எழுப்பி சபையில் இருந்து வெளியேறினார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசனத்தில் அமர்ந்து சபைக்கு தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு மற்றும் புதிய பாராளுன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை வாசித்தார். அக்கிராசன உரை காலை 10 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கை உரையை வாசித்த ஜனாதிபதி பொருளாதார நிலைமை, அரசியல் நிலைமை, உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினார். 55 நிமிடங்கள் உரையாற்றினார். ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரைக்காக அழைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், முப்படைத்தளபதிகள், மதத்தலைவர்கள் உயரதிகாரிகள் பலரும் சபாநாயகர் கலரி மற்றும் பொதுமக்கள் கலரியில் அமர்ந்திருந்து உரையை செவிமடுத்தன. வெறிச்சோடிக்கிடந்த சபை ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால் சபை வெறிச்சோடிக்கணப்பட்டது. அதேவேளை ஜனாதிபதியின் உரையின் சில அம்சங்களுக்கு அரச தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்பளித்தனர். சபை ஒத்திவைப்பு அறிவிப்பு பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பை அறிவிக்குமாறு சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை 09.30 மணி வரை பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார். https://www.virakesari.lk/article/147725
-
Recommended Posts