-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
வணக்கம் பரணி உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள். -
By ஈழப்பிரியன் · Posted
சிலவேளை மலையாளம் பிறந்து 500 வருடங்ளாக இருக்கலாம். -
By Paranee · பதியப்பட்டது
சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள். -
By ஏராளன் · பதியப்பட்டது
உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்ளும். அதேபோல் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, முழு விவரங்களையும் இன்னதென அறிந்து கொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர். வேணு என்றால் மூங்கில். இதையே வாழைமட்டை, கரித்துண்டு, கற்பூரம் ஆகியவற்றை உதாரணம் காட்டியும் விளக்குவார்கள். ஆக, மூங்கில் அல்லது கற்பூர வகை சூட்சுமபுத்தி அமைவது பெரும்பாக்கியம். இத்தகைய புத்திக்காரர்கள் வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். கங்கைக்கரையில் ஞானி ஒருவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் பயின்று வந்தனர். அந்நாட்டு இளவரசனும் அங்கே சீடனாகத் தங்கியிருந்து பயின்றதுடன், அந்த ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தான். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி. இளவரசன் அதிர்ந்தான். ‘`என்ன இது… ஏன் அடித்தீர்கள்?’’ எனக் கேட்டான். ‘`உனது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்’’ என்றார் ஞானி. இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில் பலமுறை அடிவாங்கினான். போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடமிருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ‘`பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்குவேன். எச்சரிக்கையாக இரு’’ என்றார். இதிலும் ஆரம்பக்கட்டத்தில் பலமுறை அடி வாங்கிய இளவரசன், ஒரு நிலையில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், அவன் தூங்கும் வேளையில் அவனைத் தாக்குவதற்காகத் தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ‘`இனி மூன்றாம் கட்டப் பயிற்சி. தடிக்குப் பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய்விடும்!’’ என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். ‘விழிப்புணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே… ஒரு முறை, இவர் தூங்கும்போது நாம் தாக்கினால் என்ன?’ என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்… மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி. இளவரசன் வியந்தான். தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி! நாமும் அந்த ஞானியைப் போன்று, இளவரசனைப் போன்று உள்ளே விழிப்பு நிலையை அடைந்துவிட்டால் போதும்; எதிலும் தோற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், அதற்குச் சில பக்குவ நிலைகள் தேவைப்படுகின்றன. உங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளுங்கள்! மனிதனைப் பார்த்து, ‘நீயே பேரின்ப வடிவம்’ என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் படித்ததும் உங்களில் பலரும் எண்ணலாம்… தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாங்களா பேரின்ப வடிவம் என்று ஏளனம்கூட செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் பேரின்ப வடிவம்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் அதற்குக் காரணம், உங்கள் உண்மை இயல்பு பற்றிய அறியாமையே! சுவாமி விவேகானந்தரிடம், ‘மாயை என்றால் என்ன?’ என்று சிலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘`அறியாமை, அறியாமை, அறியாமையே’’ என்றார் அவர். ஒருவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. பெரிய சிங்கம் ஒன்று அவனைத் துரத்தியது. பதறி விழித்தான். தான் கண்டது கனவு என்பதை அறிந்ததும் அவனுக்கு எவ்வளவு நிம்மதி?! நீங்களும் உங்களின் நிஜ இயல்பை அறிந்துகொண்டால் இப்படியான நிம்மதியையும் ஆனந்தத்தையும் அடைவீர்கள். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது அவரிடம், ‘`நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘`இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாராம். அவரவர் நிஜ இயல்பை அறிவதும், காப்பாற்றிக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும். போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ‘`உன் தனித்தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். ஒரு நாள் சீடர்களோடு காட்டு வழியில் பயணித்துக்கொண்டிருந்தார் புத்தபிரான். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். “சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?’’ என்று கேட்டார். ‘`இதில் என்ன சந்தேகம். காட்டில் உள்ள இலைகளே அதிகம்’’ என்றனர் சீடர்கள். உடனே புத்தர் புன்னகையோடு கூறினார்… ‘`இந்தக் காட்டில் உள்ள இலைகளைவிட நானறிந்த உண்மைகள் அதிகம். என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்தாலே போதும், துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றிப் பழகுங்கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்’’ என்றார் கௌதமர். திருப்தியோடு இருங்கள்… ‘ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மனத்திருப்தி’ என்கிறது மகாபாரதம். பெரும் தலைவனாக இருந்தாலும் அறிஞனாக இருந்தாலும் நிறைவை அடையாதவன் நிலை தாழ்ந்துவிடுகிறான்’ என்கிறது மத் பாகவதம். மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? `வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி-துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை…’ என்கிறது மகாபாரதத்தின் சாந்தி பருவம். ஆகவே, சகலத்தையும் சமமாக பாவித்து மனநிறைவோடு வாழும் மனிதர்கள் பாக்கியவான்கள். இவர்கள், வீண் ஆசைகளை அண்டவிடுவதில்லை. பற்றற்று இருங்கள்.! பற்றுகொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! பகவான் கண்ணன் நினைத்திருந்தால் `போர் புரிந்தே ஆக வேண்டும்’ என்று பார்த்தனுக்குக் கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. உற்றார் உறவுகள்மீது கொண்ட பற்றானது உள்ளத்தைப் பலவீனப்படுத்திவிட, தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனுக்கு, அவனை அவன் அறிந்துகொள்ளும் விதம் கீதை எனும் அமிர்தத்தைப் புகட்டினார். அதன்பிறகும் “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி, நீ உன் விருப்பம்போல் செயல்படு’’ என்று அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். விளைவு நாமறிந்ததே! பூந்தோட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சில பூக்கள் மட்டுமே இறைவனுக்கு ஆரமாகும். மீதம் உள்ளவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மலர்ந்து சிரிக்கவே செய்கின்றன. நாமும் மனதால் மலராக வேண்டும். https://thinakkural.lk/article/246653
Recommended Posts