-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......! 😎
-
By பெருமாள் · பதியப்பட்டது
2 minutes துரைமுருகன் பங்களா துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள். துரைமுருகன் பங்களா இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இந்த நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஒருசில தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். கொள்ளையர்கள் எழுதிய வாசகம் https://www.vikatan.com/government-and-politics/crime/attempted-robbery-at-duraimurugan-guest-house-thieves-wrote-on-wall?fbclid=IwAR3VD5gBr1pOT1786qSgAWUPDM2X1eWz3WQvuoaUNJTvgiMlhc5mY1Zyd3E?utm_source=Newsleter&utm_medium=email&utm_campaign=15th_apr_2021_Cont3 -
ஐயா தீபாவளிக்கு வாயே திறக்க மாட்டாரே.
-
சிறுவர் கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான கருணாவின் பதில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளிவந்த மறுநாள் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த அமைப்பினைத் தொடர்புகொண்டு தன்மீதான குற்றச்சட்டுக்கள் குறித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடையாளம் காணப்படாத இடமொன்றிலிருந்து தொலைபேசியூடாகப் பேசிய கருணா அம்மான், தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்ததோடு சிறுவர் கடத்தல்களிலோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடுத்துவதிலோ தனது குழு ஈடுபடவில்லை என்று கூறினார். "இவ்வாறான விடயங்களை நான் வெறுக்கிறேன். சிறுவர்களைக் கடத்துவதோ அல்லது கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதோ நான் விரும்பும் செயல்கள் அல்ல" என்று அவர் கூறினார். தனது குழுவில் இணைவதற்கான மிகக் குறைந்த வயது 20 என்று கூறிய கருணா அம்மான், இதற்குக் குறைந்த வயதுடைய இளைஞர்களை குழுவில் சேர்க்கும் பொறுப்பாளர்களுக்கெதிராக தான் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அவ்வாறனவர்களை தான் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாவின் அலுவலகத்தின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் பெயர்ப்பலகை. இதே அலுவலகத்தில்த்தான் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை கருணா குழுவினர் அடைத்துவைத்திருப்பதைப் பெற்றோரும், மனித்கவுரிமை ஆர்வலர்களும் கண்ணுற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இந்த கூற்று, அவரது அமைப்பின் பேச்சாளர் இலங்கை அரச பத்திரிக்கைச் செவ்வியில் பகிரங்கமாக "சிறுவர்கள் எமது அமைப்பில் இருக்கிறார்கள்" என்ற கூற்றிற்கு முற்றிலும் முரணாக இருப்பது குறிப்பிடத் தக்கது. "நாம் சிறுவர்களைக் கடத்தி வரவில்லை, அவர்கள் தாமாகவே எம்முடன் இணைகிறார்கள்" என்று செங்கலடி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். கருணா தொடர்ந்தும் மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகளுடன் பேசுகையில், "எமது அமைப்பிற்கென்று கட்டுக்கோப்பான வரையறைகளை வைத்திருக்கிறோம், அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைகின்றன, உங்களுக்கும் வெகு விரவில் இக்கட்டுப்பாட்டு வரையறைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பிவைப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால் இவ்வறிக்கை வெளிவரும்வரை அவ்வாறானதொரு ஆவணத்தினை கருணா எம்மிடம் அனுப்பிவைக்கவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவத்துடனான கருணா குழுவின் தொடர்பு பற்றிக் கேட்டபோது, "அது அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே" என்று அவர் கூறினார். "இலங்கை ராணுவத்திற்கும் எமக்கும் இடையே ராணுவ ரீதியிலான தொடர்புகள் ஏதும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக நான் சில தொடர்புகளை ராணுவத்தினருடன் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார். உங்களது ஆயுதம் தரித்த குழுவினர் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக உலாவருவது எப்படி என்று கேட்டபோது, "எமது அரசியல்ப் பிரிவினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொலீஸாரின் உதவியுடன் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், எமது ராணுவப் பிரிவினர் கருணாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுமே ஆயுதங்களுடன் உலவுகிறார்கள். இப்பிரதேசங்களை நாம் புலிகளிடமிருந்து போராடி மீட்டெடுத்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
-
எந்த நாட்டோடு போராடபோகினமாம் ஆள் சேர்த்து? சிங்கள இராணுவத்துக்கெதிரான குற்றச் சாட்டுக்களை நீத்துப்போகச் செய்வதற்கான தந்திரமாக இருக்கலாம்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.