-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும் ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ? முன்னுரை : யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது. அது மட்டுமல்ல, -) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் , -) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, சிங்கள இனவெறியர்களால்………. யாழ்நூலகம் உருவான வரலாறு : கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது இந்நூல் நிலையம் . நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. மாதம் 25 ரூபாய்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய யாழ்ப்பாண பொது நூலகத்தை 1935ல் யாழ்ப்பாண நகர சபை பொறுப்பேற்றது. 1949ல் யாழ்ப்பாண நகர சபை இலங்கையின் இரண்டாவது மாநகர சபையாக தரமுயரத்தப்பட, மேயராக பதவியேற்ற சாம் சபாபதி, நூலகத்திற்கென தனியான கட்டிடம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்து செயலிலும் இறங்கினார்.மார்ச் 29, 1954ல் யாழ் நூலகத்திற்கான அடிக்கல்லை யாழ்ப்பாண மேயர் சாம் சபாபதியோடு Fர் ளொங்ம் அமெரிக்க, பிரித்தானிய இந்திய உயர்ஸதானிகர்கள் இட்ட நாளில், அமெரிக்க அரசு 22,000 அமெரிக்க டொலர்களை (அன்றைய பெறுமதியில் ரூ 104,000) நன்கொடை செய்தது. அன்றைய மதராஸ் அரசின் தலைமை கட்டிடக் கலைஞரான VM நரசிம்மன், திராவிட கட்டிட பாரம்பரியத்திற்கமைய வடிவமைத்த கட்டிட வரைபிற்கமைய கட்டப்பட்ட கம்பீரமான யாழ்ப்பாண பொது நூலக கட்டிடம், ஒக்டோபர் 11, 1959ல், அன்றைய யாழ்ப்பாண மேயரான துரோகி அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது. சிங்களத்தால் தீக்கிரையாக்கப்பட்ட நேரம் : வைகாசி 31, 1981 அன்று, இரவு பத்து மணி துரையப்பா விளையாட்டரங்க பக்க மதிலிற்கு மேலால் பாய்ந்து வந்த சிங்கள காடையர்கள், சர் ஃபளொங்ன் சிலையைத் தாண்டி உள் நுளைந்தனர் . பொது நூலக வாயிலில் காவல் கடமையிலிருந்த காவலாளி அரை நித்திரையிலிருந்தான். சிங்களத்தில் கத்தி சிரித்துக் கொண்டு வந்த கூட்டத்தை பார்த்து டோர்ச் அடித்த காவலாளியை, காடையர் கூட்டம் அடித்துக் கலைத்தது. காடையர் கூட்டத்தில் சீருடையணிந்த காவல்துறையினரும் இருந்தனர். காவலாளி சுப்ரமணிய பூங்காப் பக்கம் தலைதெறிக்க ஓட, நிறை வெறியிலிருந்த காடையர்கள் நூலகத்தின் பிரதான கதவை அடித்து திறந்தார்கள். முன் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிங்கள காடையர்களும் காவல்துறைக்காரர்களும், புத்தகங்களையும் அரிய ஓலைச் சுவடுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நடுக் கட்டிட விறாந்தையில் போட்டனர். கிழக்கு பக்க கட்டித்திலிருந்தும் மேற்குப் பக்க கட்டிடத்திலிருந்தும் ஓடி ஓடி பெறுமதியான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டினார்கள்.பின்னர் அவர்ரை நெருப்புக்கு இரையாக்கினர்.புத்தகங்களை நெருப்பிட்டு கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்த காடையர் கூட்டம், பைலா பாட்டுப் பாடி ஆடத் தொடங்கியது. சிங்கள காவல்துரையினர் வேடிக்கை பர்தது மட்டுமல்லாமல் தீயை அணைக்க வந்த தமிழ் மக்களையும் தடுத்தனர்.இருந்தால் போல, கிழக்கு பக்க கட்டிடத்தில் நெருப்பு பெருஞ்சுவலை எடுத்தது. காக்கி களுசான் அணிந்த ஒருத்தன் கையில் பெற்றோல் குடுவையோடு கிழக்கு பக்க கட்டிட பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாக ஓடிய சிறிது நேரத்தில், மேற்குப் பக்க கட்டித்தையும் தீச்சுவாலைகள் சூழத்தொடங்கியது. தீயில் கருகிக் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் குவிமாடத்தின் கண்களிற்கு, யாழ் வாடி வீட்டு வாசலில் நின்று நூலகம் எரிவதை பார்த்து ரசித்த இலங்கையின் அமைச்சர் சிறில் மத்தியூவையும், காமினி திஸநாயக்காவையும் (பின்னொரு நாளில் சிங்களத்தின் தலைநகரான கொழும்பில் வைத்து 24/10/1994 அன்று இந்த கொடூரன் பெண் மறைமுக கரும்புலியால் அழிக்கப்ப ட்டான் ) தெரிந்திருக்கும். யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை தாங்கொண்ணா அதிர்ச்சியில் சர் டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார். யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் : ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் : 1.1660ல் றொபெர்ட் க்னொக்ச் எழுதிய History of Ceylon, 2.ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்உள்ள 700 நூல்கள் 3.சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்) 4.ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,தத்துவம் பற்றிய நூல்கள் 250) 5.கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்) 6.ஆறுமுக நாவலர் நூல் தொகுதி 7.பைபிள் - முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட கையெழுத்துப் படி 8.சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் 9.பிரிட்டானியா கலைக்களஞ்சியம் 10.அமெரிக்க கலைக்களஞ்சியம் 11.கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம் 12.மாக்மில்லன் கலைக்களஞ்சியம் 13.தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிய அரிய நூல்கள் 14.யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், 15.தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், 16.அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி, 17சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன. 18.அங்கிருந்த ஓலைச்சுவடிகளில் தமிழினத்தின் கலை கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, பண்டைய ஈழத்தை ஆண்ட தமிழரசர்களின் வரலாறு என்பன எழுதப்பட்டிருந்தன. 19.மேலும் சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் அங்கிருந்த ஓலைசுவடிகளின் மூலம்தான் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுத்தார். 20.மிக முக்கியமாக சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தற்கால தமிழில் எழுதப்பட்ட பல ஓலைசுவடிகள் அவற்றுள் அடங்கும். 21.பண்டைய புவியியல் நிலவரைகள்(geo. maps) 22.பண்டைய நிலவரை நூல்கள்(map books) 23 அது மட்டுமா எமது அரசர்கள் ஈழதேசத்திற்காய் கட்டுவித்த குளங்கள், மேற்கொண்ட நீர்ப் பாசன முறைகள், வழங்கிய வயல் நிலங்ககள் , கோவில்களுக்கு ஆற்றிய பணிளின் ஆவணங்கள் என்பன அங்கிருந்தன மீள் கட்டமைப்பு : எரிந்த நூலகத்தை மீண்டும் உடனடியாக கட்டியெழுப்பி, தமிழர்களின் கல்வியை நாசமாக்கும் இனவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்றக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அன்றைய யாழ்ப்பாண மேயரான ராஜா விஸ்வநாதனும் மாநகர சபை ஆணையாளர் CVK சிவஞானமும் களமிறங்கினார்கள். அவர்களோடு ஒட்டு மொத்த தமிழினமும் அணிதிரள கட்டிட கலைஞர் VS துரைராஜா, எரிந்த நூலக கட்டிடத்தை அதே போல் மீண்டும் கட்ட, கட்டிட வரைபுகளை வரைய முன்வந்தார். யாழ்ப்பாண நூலகத்தை மீளக் கட்டுவதில் முன்னின்று உழைத்த இன்னுமொருவர் அன்றைய stpetric கல்லூரியின் றெcடொர்ம், 2009ல் வட்டுவாகலில் போராளிகளோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்தது காணாமல் போகடிக்கப்பட்டவருமான, சர் பிரான்ஸிஸ் சேவியர். முடிவுரை : எம்மினத்தின் விடுதலைப் போருக்கும் இதுவே பெரும் வித்தாகியது. எந்த நோக்கத்திற்காக எதிரி நூலகத்தை எரித்தானோ, அந்த நோக்கத்தை எதிரியை அடைய வைத்து விட்டது. அதே நேரம், அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் அடைந்திருந்த உச்சத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போல், தமிழினம் மீண்டும் கல்வியில் முன்னணிக்கு வரவேண்டும். https://m.facebook.com/story.php?story_fbid=419810733303149&id=100058226779513 https://www.facebook.com/110874614371759/posts/440608954731655/ வேரடி தேடுவோம். -
By தமிழ் சிறி · Posted
மூன்று முறை சொந்த மக்களை வஞ்சித்த நாடு இது! - நிலாந்தன்
Recommended Posts
Please sign in to comment
You will be able to leave a comment after signing in
Sign In Now