-
Tell a friend
-
Topics
-
6
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்த 13ஏ சட்டத்தை அமுல்படுத்துவது மற்றுமொரு சீர்குலைந்த அரசியல் பிரச்சினையாகும். இந்த வார தொடக்கத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்களுடனும் (பெரும் வணக்கத்திற்குரிய திபொட்டுவாவே ஸ்ரீ சித்தாராத சுமங்கல தேரர்) அஸ்கிரிய பீடத்துடனும் (பெரும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், முன்னைய ஜனாதிபதிகள் எவரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதைப் பார்ப்பது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார். 13ஏ பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக அரசியலமைப்பில் நிலைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அது பொருந்தவில்லை என்றால், திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை. இரண்டு பீடாதிபதிகளும் மற்ற இரண்டு நிக்காயேகளின் (பிரிவுகள்) தலைவர்களும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு 13A ஐ அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதாக பெப்ரவரி 8ஆம் திகதி தனது கொள்கை அறிக்கையில் உறுதிமொழி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.# sundytimes.lk
-
நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா?
-
ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ?
-
அப்பிடியென்ன அபிவிருத்தியை செய்து போட்டார் இவர், அவற்றையும் சேர்த்து சொன்னாற்தானே கேட்கிறவர்களுக்கும் புரியும். பேச, வாழ உரிமையில்லையாம் அபிவிருத்தியை மட்டும் விடுவார்களாம்! இனமுரண்பாடு தோன்றி படுகொலையாகி இன்று இந்த நிலையில் வந்து நிற்பதே தமிழனின் அபிவிருத்தியை காண பொறுக்காமாற்த்தான் என்பது, இந்தக்கூலிக்கு எங்கே புரியப்போகிறது? அங்கே கேட்டதை இங்கே வந்து கக்குகிறார். முதலில் நாசமாக்கப்பட்டு எரிந்ததெல்லாம் தமிழன் வியர்வை, குருதி சிந்தி ஏற்படுத்திய அபிவிருத்தியைத்தானே? அகதியாக சொந்தநாட்டில் அனைத்தையுமிழந்து தன் பிரதேசத்தில் கால் வைத்தான், உரிமை கேட்கவில்லை. விட்டானா? உங்கள் இடத்துக்கு போ எனக்கலைத்தவன் அங்கேயும் வந்து, தன்இடம் என்று கொன்று குவித்தான். இப்போ நமக்கென்று எதுவுமில்லையாம். இவருக்கு இதிலிருந்து என்ன புரிகிறது? எங்கள் மண்ணில் சிங்களம் விவசாயம் செய்யுது எங்களை விரட்டிவிட்டு, எங்கள் கடற்பிராந்தியத்தில் சிங்கள மீனவர், எங்கள் படித்த பட்டதாரிகள் தெருவில் சிங்கள உத்தியோகத்தர்கள் எங்கள் பிரதேசங்களில், எங்கள் மொழியில் எங்கள் முறைப்பாடுகளை செய்ய முடியவில்லை. சரி..... ...நாங்கள் அபிவிருத்தி செய்து சுயமாக வாழ முடியுமென்றால் சிங்கள அராஜகப்படை ஏன் இன்னும் எங்கள் மண்ணை அடைத்துக்கொண்டிருக்கு என்பதற்கு இவரிடம் பதிலுண்டா? இது எல்லோருக்கும் பொதுவான நாடு என்கிறார்கள் ஏன் எங்களை அடித்து விரட்டினார்கள்? ஏன் எங்கள் கோவில்களை ஆக்கிரமிக்கிறார்கள்? அதுக்காவது பதிலுண்டா இவரிடம்? நாங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து உழைத்து சாப்பிடவில்லை, கடன்வாங்கியே சாப்பிட்டோம் என அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அத்தோடு அடித்து, விரட்டி, பிடுங்கி சாப்பிட்டோம் என்பதை இன்னொருநாளில் சுடுகாட்டிலிருந்து ஒத்துக்கொள்வர்.
-
நாம் யாரையும் தங்கியிருக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் ஒரு மாதம் மழை பெய்யாது விட்டாலே சிக்கி திணறுகின்றார்கள். நிலமை இப்படியிருக்க ரஷ்யாவை ஒதுக்குவதன் மூலம் தமக்குத்தாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றது இந்த மேற்குலகு. ரஷ்யாவின் பொருளாதாரம் இல்லாத உலகும் மக்களும் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் என்பது பால்குடிகளுக்கும் விளங்கும் ஒரு விடயம். உக்ரேன் சார்பாளர்கள் போர் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் எதாவது செய்யலாம் என எங்கேயாவது எழுதி உள்ளார்களா? எனவே அவர்களும் உக்ரேனுக்கான ஆயுத விநியோக மூலமாக போர் விரும்பிகள் என இங்கே உறுதிப்படுத்துகின்றார்கள். யாழ்கள நிர்வாகி இணையவன் உட்பட...
-
Recommended Posts