Jump to content

நினைவழியாத் தடங்கள்

Recommended Posts

அறிமுகம் 

ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும்.

அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பதிவுகளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன்.

தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு. கடினமான அந்த விடுதலைப்பயணத்தின் பசுமைகளையும் கனத்த நினைவுகளையும்தான் இங்கு பதிய விளைகின்றேன்.

முடிவு ஏதுமின்றிப் போயிருக்கும் போராட்டம், நிரக்கதியாய் நிற்கும் தாயகம், வெறுமையாகத் தெரியும் எதிர்காலம், என்பதை நினைத்தால் மனது நிம்மதியாக உறங்க மறுக்கின்றது. தாயகத்து நினைவுகளையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நினைவுகளின் சுழற்சி கனவுகளாக வெளிப்பட்டு தூக்கம் தொலைகின்றது.

பாடசாலை நண்பர் வட்டத்தை இடப்பெயர்வு பிரித்துவிட்டது. எனக்கு அறிமுகமான, உருவாகிய நட்பு என்பது விடுதலைப்பயணத்தில் ஏற்பட்டது மட்டும்தான். அந்த நட்பின் ஆயுளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், பொய்யான நட்பு என்பதல்ல. நட்பு என்றைக்கும் சாகாமல் இருக்கும். ஆனால் நண்பன் இருக்க மாட்டான். சாவுக்கு அருகில்தான் எங்கள் நட்பு கட்டியெழுப்பப்டும். நண்பர்களாக நெருங்கி, ஒவ்வொருவருடன் பழகும் போதும் யுத்தத்திற்கு சென்று மீண்டும் சந்திப்போமா? என்ற விடைதெரியாக் கேள்வி மனதின் ஓரத்தில் பதிந்துதான் இருக்கும். ஆனால், பிரிந்து பின்னர் சந்திக்கும் போது இருக்கும் அந்த சந்தோசம்! அனுபவிக்கும் போதுதான் புரியும். ஒரு நாள், தீடீரென நிரந்தரமாகவே நண்பன் பிரிந்து போகும் போது ஏற்படும் மனநிலையைச் சொல்லில் அடக்க முடியாது.

ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க, அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு.

சில இடங்களில் திடீர் மோதல் காரணமாக வீரச்சாவுகள் ஏற்படும். அவர்களின் வித்துடல்களை கொண்டுவர முடியாமல் அந்த இடத்திலேயே விதைத்திருக்கின்றோம். அதுவரை ஒன்றாக உண்டு, உறங்கி, அருகிலேயே நின்று களமாடிய நண்பனின் உடலை புதைத்துவிட்டுத் திரும்பும்போது இருக்கும் வலியை விபரிக்கமுடியவில்லை. பயணவழியில் தவிர்க்கமுடியாத வீரமரணங்களுக்கான விதைகுழிகள் அவ்விடத்திலேயே உருவாகும். பெற்றோர்களிடம் செய்தியும் புகைப்படமும் மட்டுமே போய்ச்சேரும். அந்தப்பெற்றோர்கள் எல்லாவற்றையும் விடுதலையின் பெயரால் ஏற்றார்கள்.

தாயகத்தின் ஒவ்வொரு அடிப்பரப்பிலும் மரணித்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் இறுதி மூச்சைச் சுமந்த காற்றும், இரத்தம் சிந்திய மண்ணும் விதைக்கப்பட்ட அவர்களின் கனவு நிறைவேறும் நாளுக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை கடினங்களைச் சுமந்து, இத்தனை தியாகத்தை எதற்குச் செய்தார்கள்? ஈழ விடுதலைக்காகவும், அந்த இலட்சியத்திற்காகவும்தான்.

போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும்.

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த, கதையளக்கும் ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

நினைவழியாத் தடங்கள் - 01

தேசியத்தலைவர் பற்றி.....!

Link to comment
Share on other sites

நல்ல காரியம் இது வாணன்.. படிக்க ஆவலாக உள்ளேன்.. ஒவ்வொரு வெற்றியும் இழப்புக்களின்மீதே பெறப்பட்டதால் அவற்றை இனிப்பு வழங்கி என்றுமே கொண்டாடியதில்லை.. இன்று உள்ளது நாளை போகலாம் என்கிற எண்ணம் எப்போதுமே இருக்கும்.. அதேபோல இன்று இல்லாதது நாளை கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையும் கூடவே இருக்கும்..

Link to comment
Share on other sites

போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும்.

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

எழுதுங்கள் வாணன். எங்கள் வாழ்வின்  எல்லாமுமான உன்னதமானவர்கள் பற்றிய நினைவழியாத தடங்களை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல எழுதிவிடுங்கள். சரி தவறு என்பதையே தராசிட்டு எங்களுக்காக மடிந்தவர்கள் பற்றிய இக்கால மீளாய்வு அறிவுஜீவி எழுத்துக்களை விட இத்தகைய பதிவுகளே இப்போது தேவை.

வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. ஒரு வரலாற்றை பதிவு செய்யும் உங்கள் எழுத்துக்களை காலம் பத்திரப்படுத்த எழுதுங்கள் என்று மட்டுமே சொல்லுவேன். எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாணன் வணக்கம்,
வீரவரலாற்றின் நினைவழியா தடங்களை இயன்றவரை பதியுங்கள்.
இரத்தமும் சதையுமான அந்த வரலாறு  எங்கள் வீரவரலாற்றின் 
ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் . வாழ்த்துக்கள் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள்.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள்.

உண்மையான வசனங்கள் 

தொடர்ந்து எழுதுங்கள் வாணன்  

Link to comment
Share on other sites

வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள்.

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

எழுதுங்கள் வாணன், வாசிக்க மிக ஆவல்!!

Link to comment
Share on other sites

வாசிக்க ஆவலாக உள்ளேன். இனி இழக்க எதுவுமில்லை எனுமளவுக்கு எமது மக்கள் அனைத்தையும் இழந்துள்ளார்கள். 
 
மாவீரர்கள் என்றுமே மறக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் சுயநலமற்றவர்கள். தமது மக்களின் சுதந்திரத்துக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது கனவுகள் தான் இதுவரை நிறைவேறவில்லை!

நினைவுகளிலாவது எமது சுதந்திர வாழ்வை வாழ்ந்திருப்போம்!

எனவே தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாணன் 

மண்ணுக்கா மடிந்த இந்த தியாகிகளின் வரலாறுகள்  எப்போதும் உயிர்ப்புடனேயே  இருக்கவேண்டும் .

நாளை நாங்கள் இல்லாமல் போகும்போதும் இந்த உண்மை வரலாறுகளே எங்கள் பரம்பரை நெஞ்சை நிமிர்த்தி 

வாழ வழிசெய்யும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாணன்

தமிழரது விடுதலைப்போராட்ட  வரலாறு பல தியாகங்களையும் எண்ணிலடங்கா வலிகளையும் கொண்டது

அது பதியப்படணும்

ஆவணப்படுத்தப்படணும்  என்று அடிக்கடி எழுதி  வருகின்றேன்

அந்தவகையில் தங்களது முயற்சி  பெரும் நம்பிக்கையும் உற்சாகத்தையும் தருகிறது

எழுதுங்கள்

வரலாற்றை அப்படியே  பதிவு செய்யுங்கள்.

மக்களிடம்

உலகிடம் அவை போய்ச்சேரணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ

Link to comment
Share on other sites

வணக்கம் வாணன் ,எழுதுங்கள்
எங்களுக்காக களமாடிய உங்களை போன்றோரின் பதிவுகளை வாசித்தாவது சிலர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருக்கட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாணன்......

Link to comment
Share on other sites

வீரவரலாற்றின் நினைவழியா தடங்களை இயன்றவரை பதியுங்கள்

Link to comment
Share on other sites

என்னை அன்போடு வரவேற்று, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து, கருத்துரைத்த இசைக்கலைஞன், சாந்தி, லியோ, வாத்தியார், அலைமகள், நுணாவிலான், புங்கையூரான், நந்தன்,விசுகு, புத்தன், குருவி, Gari, மொசப்பொத்தேமியா சுமேரியர்,அர்ஜீன், குமாரசாமி, சுண்டல் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நிச்சயம் உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து பயணிப்பேன். 

நீண்டகாலப் பயணத்தின் நினைவுகளில், அவ்வப்போது வந்து செல்லும் சம்பங்களை உங்களுடன் பகிர நினைப்பதால், அவை ஒரு தொடர் சம்பவமாகவோ, ஒழுங்கு முறையிலோ அமைந்திருக்காது.  நினைவுகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்..  

Link to comment
Share on other sites

உங்கள் வருகைக்கு நன்றி சகோதரி, 

நிச்சயம் பதிவேன், ஆனால் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய வேலைப்பளுக்களும் இருப்பதால் சிலசமயம் இடைவெளிகள் வரலாம். முடிந்தவரை, பதிவேற்றுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க, அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு.

----------

இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன்.

எமது போராட்ட வரலாறுகள், அதற்குப் பின்னே மறைந்திருக்கும் தியாகங்கள், சோகங்கள்... போன்றவற்றை, உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள் வாணன். 

Link to comment
Share on other sites

நன்றி தமிழ் சிறி

தங்களின் கருத்துக்களுக்கு

நினைவழியாத் தடங்கள் - 02 (ஒருபோராளியின் இறுதிக்கணம்) 

வீரச்சாவு போராட்டப்பாதையில் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இந்தச் சாவின் கணங்கள் கடினமானவை. எனது நண்பன் சொன்னான் ‘மச்சான் இங்க காயப்படுகிறதை விட ஓரேயடியா வீரச்சாவடைந்திடனும்’ என்று.

Link to comment
Share on other sites

நெருடல்l இணையத்தளத்திலும் உங்கள் இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகின்றது .... வாழ்த்துக்கள்....

http://nerudal.com/nerudal.58228.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.