Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

நான் கண்ட பாரீ........................

Recommended Posts

பிரான்சுக்கு முதல் முதலில் வந்தவர் என்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும்

வருபவர்கள் எவரும் அவரது விலாசத்தை  மட்டும பிடித்தபடியே  தான் பிரான்சுக்குள் புகுவர்.  அது போதும் என்ற நம்பிக்கை.  வந்தவுடன் தங்க இடம்  சாப்பாடு  உடுப்பு விசா வேலை..........  எல்லாமே அவர் செய்வார்.

நானும் பார்த்திருக்கின்றேன்.  அவரது வீட்டில் உலை எப்பொழுதும் கொதித்தபடியே  தான் இருக்கும்.   சோறு போட்டபடியே  இருப்பார்கள்.   கறி  என்றால் இறைச்சி  அல்லது மீன் சிலவேளை கருவாடு.   இது முடிந்தால் சமாளிக்க  கத்தரிக்காய்  கறியும்  இருக்கும்.  பின்காலங்களில்  பருப்பு.

 

ஒரு ரூம்தான்.  சாய இடமிருந்தால்  எவரும் படுத்து நித்திரையாகலாம். நின்று கொண்டே நித்திரை செய்தவரை பார்த்திருக்கின்றேன்.

இவ்வளவையும்   பார்த்தபடி

வேலையில் நல்ல பெயரெடுத்து பதவியுயர்வு பெற்று  நல்ல சம்பளம் எடுத்து திருமணமாகி பிள்ளைகள் பெற்றபோதும் பாரீ தன் குணத்தை இழக்கவில்லை.

 

இருநேர வேலை.

நண்பர்களுக்கு உதவி

சுற்றி  ஒரு (புதிய  வரவு)கூட்டம்

கடன் தொல்லை  என இறுகி

மதியம்  வேலையால் வந்து படுத்தவர்.  தலைக்குள் ஏதோ செய்யுது என்று பிள்ளையைக்கட்டிப்பிடித்தார்.  இது தான் கடைசி  வார்த்தை.

 

எனக்கு தொலைபேசி  வந்து அங்கு நான் சென்றபோது அவர் கோமாவில்.

இரண்டு நாட்கள் செல்ல என்னை  வரும்படி அழைப்பு வந்து சென்றபோது எல்லோரும் அழுது குளறி வைத்தியர் ஏதோ சொல்கிறார். முடியாது என்று சொல்லுங்கோ  என்றனர்.

 

வைத்தியர் அருகில் இருத்தி மனதைத்திடம் செய்யும்படி சொல்லி.....

ஆரம்பித்தார்

அவரது மூளை  இறந்துவிட்டது.  இனி  எந்த பிரயோசனமும்  இல்லை.  கொடுத்திருக்கும்  இணைப்புக்களை  களட்டப்போகின்றோம்  என்கிறார்.  நான் எவ்வளவு செலவானாலும் வேறு இடம் கொண்டு போய் செய்கின்றோம் என்கின்றேன் முடியாது என்று புரிந்தும் ஆற்றாமையுடன்.  மூளையை   மாற்றும் சக்தி  இன்னும் எங்கும் வரவில்லை என்கிறார்.  

அத்துடன் இன்னொரு கோரிக்கையையும் முன் வைக்கின்றார். அடுத்த இடி.

அவரது இணைப்புக்களை  களட்டுவதற்கு முன் அவரது உடலில் 6 உறுப்புக்கள் நன்றாக உள்ளன. அவற்றை  எடுக்க அனுமதித்து அவரது துணைவியார்  கையெழுத்து  இடணும்  என்று.

என்ன  விளையாடுகின்றீர்களா ??? கொஞ்சம்  கோபமாக கத்துகின்றேன்.  அமைதியாக மீண்டும் சொல்கிறார். தயவு செய்து அனுமதியுங்கள்.  அவரால் 6  உயிர் வாழும்  என்று.

இரு பகுதிக்கும் இடையில் நான். மௌனமாக  பொழுது கழிகிறது.   ஒவ்வொருவராக ஒவ்வொரு மூலையில் நின்று அழுதபடி. மௌனத்தைக்கலைத்து நான் தான் ஆரம்பிக்கின்றேன்.

 

அவரது நிலையையும் வைத்தியர்களது நிலையையும் தெளிவு படுத்துகின்றேன்.

இப்போ ஒரே ஒரு நல்லது செய்யலாம்.

உறுப்புக்களை  கொடுக்கலாம்.  சொல்லும்போது நானும் அழுது விடுகின்றேன்.  எல்லோரும் அழுகின்றனர். சிறு நேரத்தில் அவரது மனைவியிடம் சென்று தாயே.  உன் நிலை  எவருக்கும் வரக்கூடாது. வந்துவிட்டது. உன் பிள்ளைகளுக்கு அவர் சேர்த்துவைத்தது இந்த நன்மை செய்தல் மட்டும்தான்.  இறுதி  நேரத்திலும் அதையே  விரும்புகின்றார்.  6 பேருக்கு உயிர் கொடு என்று முழுங்காலிட்டுக்கேட்டு நிற்கின்றேன். அழுதபடி சென்று விடுகின்றார்.

 

அடுத்த நாள் விடிய  தொலைபேசி  எடுத்து இரவு கனவில் வந்தவர். அவர் அந்த மாதிரி  உள்ளாராம்.  தன்னைப்பற்றி  கவலைப்படாது நல்ல முடிவுகளை  எடுத்து மக்களுடன் நன்றாக இரு என்று சொன்னாராம்.

வைத்தியரிடம் நீங்களே  சொல்லுங்கோ.  நான் வந்து கையெழுத்து வைக்கின்றேன்  என்று.  

இறந்தும் ஆறுபேராக வாழும் அந்த பாரிக்காக இன்றும் பெருமைப்படுகின்றேன்.

 

யாவும் உண்மை.  (நடந்தது 1995)

Share this post


Link to post
Share on other sites

மனதை உருக்கி விட்டது, உங்களது பதிவு.
பாரீயின் பிள்ளைகள், மனைவி இப்போது... நன்றாக இருக்கின்றார்களா.. விசுகு.
பெற்றோர் செய்த... பாவ‌ புண்ணியம், பிள்ளைகளுக்குத்தான் சேரும் என்பதற்காகத் தான்... கேட்டேன்.
 

Share this post


Link to post
Share on other sites

பதிவிற்கு நன்றி விசுகு அண்ணா. தான் மறைந்தாலும் 6 பேரை வாழ வைத்திருப்பது சிறப்பான விடயம். பாரீ அண்ணா மறைந்தாலும் நம்மிடையே நிச்சயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

organ%20donation-757.jpg

Share this post


Link to post
Share on other sites

பதிவிற்கு நன்றி விசுகு அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

ஒரு உணர்வோட்டமான பதிவு

உடல் உறுப்புத்தானம் பற்றிய விழிப்புணர்விற்கான கருத்தூட்டத்தையும் தருகின்றது.

 

Share this post


Link to post
Share on other sites

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல் வாழ்ந்து மறைந்துவிட்டார்..

Share this post


Link to post
Share on other sites

ஒரு உணர்வோட்டமான பதிவு

உடல் உறுப்புத்தானம் பற்றிய விழிப்புணர்விற்கான கருத்தூட்டத்தையும் தருகின்றது.

 

உண்மை, வாணன்.

ஆனால்... அவர் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பின்பும்...

செய்த தான, தர்மத்துக்கு... இவ் உலகில், கடவுள் இருந்திருந்தால்...

அவரின் மனைவியும், பிள்ளைகளும்.... நன்றாக இருக்க வேண்டும்.

அப்படி, இல்லையெனில்... உந்த தானதர்மம், "ஆற்றில்... கரைத்த பெருங்காயம்."

Share this post


Link to post
Share on other sites

கருத்துப்பதிந்த 

விருப்பு வாக்கிட்டு ஊக்கம் தந்த  அனைவருக்கும் நன்றிகள்

இது உண்மை அனுபவம் என்பதால் சுருக்கமாகவும்  முக்கியமானவற்றையும் 

இது ஒரு குடும்பம் சம்பந்தமானது என்பதால் பொறுப்புடன் எழுதவேண்டியிருந்தது.  

நேரமிருக்கும்  போது உங்கள் கேள்விகளுக்கான  பதிலை எழுதுகின்றேன்.

 

இதை இன்று எழுத ஊக்குவித்ததும் ஞாபகப்படுத்தியதும் இந்த பதிவே.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125363#entry913988

 

Share this post


Link to post
Share on other sites

நான் இன்றுதான் seven pounds என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். அதில் அந்தக் கதாநாயகனால் ஏற்படும் விபத்தில் எழு பேர் இறந்துவிடுகின்றனர். அதற்குப் பிராயச்சித்தமாக அவன் எழு பேருக்கு உதவுவதற்காக தன் உடல் உறுப்புக்களைத் தானமாகக் கொடுக்கிறான். தான் தற்கொலை செய்து தன் இதயத்தை இறுதியாகத் தனக்குப் பிடித்த பெண்ணுக்கு வழங்குகிறான். ஆங்கிலக் கதையாக இருந்தாலும் இறுதியில் மனதைப் பிசைய வைத்து கண்ணீர் வரவைத்துவிட்டது. எனக்கு இதை வாசிக்க ஆரம்பிக்கும்போது அப்படம் தான் கண்ணுக்குள் வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

நானும் எனது உடலுறுப்புக்களைத் தானம் செய்வதாக,நீண்ட காலத்தின் முன்பே எனது குடும்பத்தினரிடம் சொல்லி வைத்திருக்கின்றேன்! எனது சாரதிப் பத்திரத்திலும் அந்த அனுமதி உள்ளது!

 

எனது சொந்தக் கண்களால் தமிழ் மக்கள் படும் துன்பம் தீர்வதை ஒரு நாள் காணவேண்டும் என்பது தான் எனது ஆசை! 

 

பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

Share this post


Link to post
Share on other sites
உண்மை மனிதர்களை இறைவன் நீண்டகாலம் வாழ விடுவதில்லை.
 
பகிர்விற்கு நன்றி விசுகு 

Share this post


Link to post
Share on other sites

சென்னையில் ஒரு நாள்  தமிழ் படமும்  இது பற்றிய கதை  தான் 

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி விசுகு !

Share this post


Link to post
Share on other sites

மனதை உருக்கி விட்டது, உங்களது பதிவு.

பாரீயின் பிள்ளைகள், மனைவி இப்போது... நன்றாக இருக்கின்றார்களா.. விசுகு.

பெற்றோர் செய்த... பாவ‌ புண்ணியம், பிள்ளைகளுக்குத்தான் சேரும் என்பதற்காகத் தான்... கேட்டேன்.

 

பாரீ 

என்று குறிப்பிட்டது  அவரது வள்ளல் குணத்துக்காக  சிறி.

எனக்கு அறிவு தெரிந்து முதல் முதலாக என்னைக்கட்டுப்படுத்த முடியாமல் பல முறை  அழுதது இங்குதான்.

 

புண்ணியம் சம்பந்தமாக இன்னொரு பகுதியையும் எழுதணும்

 

அவர் நல்ல  இடத்தில் நல்ல  சம்பளத்தில் கன  காலமாக வேலை  செய்துவந்தபோதே இறந்தார்.

இதனால் அவருக்கு வரவேண்டிய சலுகைகளைக்கேட்டுப்போனபோது அவரது முதலாளி(யூதன்) அப்படி ஒன்றும் இல்லை.  தரமுடியாது என்று மறுத்துவிட்டான்.

நான்   இது  பற்றி  எம்மவர்களின் அலுவலகத்துக்கு அறியத்தந்தபோது

அவர்கள் நீதிபதி  பிக்குவா அவர்களின்  தொலைபேசி  இலக்கத்தை  தந்து தொடர்பு கொள்ளுமாறு பணித்தார்கள்.

 

நான் தொடர்பு கொண்டபோது

நீதிபதி  பிக்குவா அவர்கள் இது   போன்ற  விடயங்களில் ஈடுபடுவதில்லை  என்றும் சட்டத்தரணி மிசல் என்பவரே இதைக்கவனிப்பதாகவும்   ஆனால் அவருக்கு 2 மாதங்களுக்கு  வேலைகள் நிறைய  உள்ளது அதன் பின்தான் அவருடன் நேரம் ஒதுக்கமுடியும் என்று சொன்னார்கள்.

அப்பொழுது பொழுது படும் நேரம்.

நான் என்னுடைய  பிரச்சினையை அவரது காரியதரசிக்கு விளக்கப்படுத்தி  அவசரமாக வேண்டும் என்று கதைத்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களாக இழுபறியாக இருந்தது.  திடீரென மறுமுனையில் தமிழில் வணக்கம்.  நான் மிசல் பேசுகின்றேன். நாளை  வாங்கோ  என்று ஒரு பிரெஞ்சுக்குரல் கேட்டது. நான் எத்தனை  மணிக்கு என கேட்க எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கோ.  வந்து உங்கள் பெயரை மட்டும் காரியதரசியிடம் சொல்லுங்கோ என்றார். அத்துடன் எத்தனை  பிள்ளைகள்  எவ்வளவு காலம் வேலை செய்தார் சட்டப்படி பதிந்து வேலை செய்தாரா? என்பன போன்ற  தகவல்களையும் கேட்டார்.

 

அடுத்தநாள் நாங்கள் அங்கு சென்று பெயரைச்சொன்னதும் சிறிது  நேரத்தில் அவரே வந்து அவரது அறைக்கு கூட்டிப்போனார். (மேசையில் தலைவர் பிரபாகரனது படம்)

எல்லாவற்றையும் கேட்டு எழுதியவர்.  ஒரு கடிதத்தை எழுதி அதை உடனேயே  அனுப்புங்கள். உங்களுக்கு வரவேண்டிய  அனைத்தும் சில நாட்களில் உங்களை  வந்தடையும்.  போய் வாருங்கள்(இது தழிலில்)  என்றார்.  எங்களுக்கு சந்தேகம்.  இருந்தாலும் புறப்பட்டோம்.  உங்களது கட்டணம் எவ்வளவு என்று கேட்டோம்.  நன்றி  வணக்கம் சொல்லுங்கோ.  அவ்வளவு தான் என்றார்.

 

சில  நாட்களில் அவருக்கான பெரும் தொகைப்பணம் வீட்டுக்கு  செக்காக  வந்தது.

அதையும் எடுத்துக்கொண்டு அவரிடம் சென்று  உங்களது கட்டணம் எவ்வளவு என்று கேட்டோம்.  நன்றி வணக்கம் சொல்லுங்கோ.  அவ்வளவு தான் என்றார்.  இருவரும் கண் கலங்கிவிட்டோம்.  வெளிக்கதவு வந்து வழி அனுப்பிவைத்தார்.  நாங்களும் கையெடுத்து கும்பிட அவரும் கும்பிட்டார்.

 

புண்ணியம்

எந்தவடிவில்..............

Share this post


Link to post
Share on other sites