Jump to content

ஒரு போராளியின் இறுதிக்கணம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1995 ம் ஆண்டு, சாள்ஸ் அன்ரனி படையணி திருமலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். திரியாய்க் காட்டுப்பகுதியில் படையணியின் ஒரு பகுதி தங்கியிருந்தது. திருமலை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மினிமுகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியாகி, அப்பகுதிக்கு செல்வதற்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன.
 
நீண்ட தூரம் நடந்து சென்று, தங்கியிருந்து மறுநாள் தாக்குதலை நடாத்த வேண்டும், ஆகையால் தேவையான ஆயுதவெடிபொருட்கள், ஏனைய அத்தியாவசிய பொருட்கள், சமையல் உபகரணங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
 
அந்த சமயத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம் காட்டை அதிரவைத்தது. மரங்களில் இருந்து குருவிகள் கீச்சிட்டுக்கொண்டு பறந்தன. குரங்குகள் சத்தமிட்டபடி மரங்களில் தாவிச் சென்றன. 
 
காட்டுக்குள் சிறிலங்கா படையணியின் சிறப்புப்படைகள் வருவது வழமை. அப்படி வந்தவர்களால் முகாம் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டதா? என சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஒரு போராளி ஓடிவந்து ’அருள் 89 ரைபிள் கிரனைற் செல் மிஸ்சாகி விட்டது அதில் புகழரசன் காயமடைந்து விட்டார்’ என்றான்.
 
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று பார்த்தபோது, அப்போராளியின் கால்கள்  கடுமையான காயத்திற்குள்ளாகியிருந்தது. இரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. மருத்துவப்போராளி மேஐர் ஜெமினி உடனடிச் சிகிச்சையை வழங்கினார். சேலைனை ஏற்றி, இரத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
 
அவசர முதலுதவியைத்தவிர மேலதிக சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை. எனவே தாக்குதல் திட்டத்தை கைவிட்டு விட்டு, அவரை வன்னிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். 
 
வன்னியிலிருந்து வண்டி(படகு) வருவதாக தகவல் கிடைத்ததும் ஒரளவிற்கு நம்பிக்கை பிறந்தது.  புல்மோட்டைப்பகுதியில் வண்டி வரும் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குக் காயப்பட்டவரைக் கொண்டு செல்ல வேண்டும். 
 
புல்மோட்டை பிரதான வீதியைக்கடந்து செல்லவேண்டியிருந்ததால், வீதியைக் கிளியர் பண்ணிக் கட்டவுட் போட்டு உறுதிப்படுத்துவதற்கான அணி சீக்கிரமே புறப்பட்டுச் சென்றது. சில குறிப்பிட்ட பகுதிகளால்தான் வீதியைக்கடந்து புலிகள் செல்கின்றவர்கள் என்ற விடயம் இராணுவத்திற்கு தெரியும். இதனால் அந்தப்பகுதிகளில் இராணுவம் இடையிடையே அம்புஸ் போட்டிருக்கின்றவன். எனவே செல்ல வேண்டிய பாதையை அணிகள் உறுதிப்படுத்திய பின்னரே காயக்காரரைக் கொண்டு செல்ல வேண்டும்.
 
கிளியர் பண்ணும் அணிகள் முன்செல்ல சிறிது இடைவெளி விட்டு காயக்காரரையும் தூக்கிக் கொண்டு அணிகள் நகர்ந்தன. வீதியைக்கடந்து படகில் ஏற்றும் இடம்வரை காயப்பட்டவரைக் கொண்டு சென்றாயிற்று. இனி படகு வந்தால் சரி என்ற திருப்தியில் அணியினர் காத்திருந்தனர். எப்படியும் சீக்கிரமாக காயக்காரரை அனுப்பினால்தான் அவரைக் கொண்டு சென்ற அணிகள் இரவே திரும்பி வர முடியும். எல்லோரும் பதட்டத்ததுடன் காத்திருந்தனர். 
 
செற்றில் (தொலை தொடர்பு சாதனம்) வன்னியிலிருந்து செய்தி வந்தது.  கடல் பகுதியில் கடற்படையின் டோறா பீரங்கிப்படகுகள் வந்து தரித்து நிற்பதால் ‘படகு இன்றைக்கு வராது’ என்றார்கள். மறுநாள் இரவு கடற்புலிகளின் துணையுடன் வந்து ஏற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது.
 
புல்மோட்டைக் கடற்பரப்பில் பல மீன்பிடிப்படகுகள் இரவு வேளைகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறுபடகுகளில் தொழில் செய்யும் படகுபோல வந்து காயக்காரரை ஏற்றுவதோ சாமான்கள், அணிகள் வருவதோ வழமை. அன்றைய தினம் மீன்பிடிப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. 
 
காயக்காரரை ஏற்ற வந்த படகினர் புல்மோட்டையை அண்மித்த பகுதிக்கு வரும்போது, இலங்கை கடற்படையின் டோறாப்படகு வந்து நிற்கின்றது என்ற தகவல் ராடர் நிலையத்திலிருந்து சொல்லப்பட்டதால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். எனவே காயக்காரரைத் தூக்கிக் கொண்டு மீளவும் முகாமிற்குச் செல்ல வேண்டிய நிரப்பந்தம். 
 
நடுநிசி இரவு, வீசிய காற்றிற்கு இசைவாக அசைந்த மரக்கிளைகளின் மெல்லிய சத்தம், ஆங்காங்கே காட்டுக்குருவிகளின் ஓசை, இடையிடையே நரிகள் ஊளையிடும் சத்தம், மிகவும் அமைதியாக இருந்தது காடு. இரவு வேளைகளில் முகாம் பகுதி மிகவும் அமைதியாக இருக்கும். வெளிச்சங்கள் இருக்காது. சென்றி மாற்றுதல் தொடக்கம் எல்லாம் மிகவும் அமைதியாக நடக்கும், டோச் லைற்றைக்கூட கையால் பொத்தியே அடிப்பார்கள்.
 
காயக்காரரைக் கொண்டு சென்ற அணியினர் திரும்பி வந்துவிட்டனர். காயப்பட்டவரை ஒரு ஆலமரத்தின் பெரிய வேர்களுக்கிடையில் படுக்கவைத்தனர். ஆலமரத்தின் விழுதில் சேலைன் போத்தல் கட்டப்பட்டிருந்தது. அவர் வேதனையில் கத்திக் கொண்டிருந்தார். வலி நிவாரணியை சேலையினுடன் கலந்து விட்டிருந்தனர். இரண்டு கால்களினதும் முழங்காற்பகுதி சேதமடைந்திருந்ததால் இரத்தப்பெருக்கை நிறுத்துவது கடினமாயிருந்தது. தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து கொண்டிருந்தார் மருத்துவப்போராளி.; அருகில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். 
 
புகழரசனோ ‘எனக்கு கஷ்டமியிருக்கு, உடம்பெல்லாம் முறிக்கிறமாதிரி இருக்கு’ என முனகிக் கொண்டிருந்தார். ஜெமினியிடம் என்ன மாதிரியிருக்கு என்று கேட்டேன். இரத்தம் கணக்கப்போயிட்டுது. எங்களிடம் தற்போது உள்ள சேலைன்கள் அதை நிவர்த்தி செய்யக்கூடியமாதிரி இல்லை. இரத்தம் ஏற்றக்கூடிய வசதியும் இல்லை எனக்கூறி மௌனமாக கைகளை இறுகப்பிடித்து தலைகுனிந்தார். இருட்டில் அவரது முக ஓட்டத்தைக் அவதானிக்க முடியவில்லை.
 
பின்னர் ‘நான் முடிந்தளவு ஏதாவது செய்யப் பார்க்கின்றேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பது விளங்கியது. அந்த இடத்திற்குப் பக்கமாக எனது நண்பனுக்கருகில் இருந்தேன். நித்தரை வரவில்லை. பகல் அலைச்சல், நித்திரையால் அயர்ந்தேனோ தெரியவில்லை. காயப்பட்ட போராளிக்கருகில் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகில் சென்றுபார்த்தேன்.
 
புகழரசன் ‘எனக்கு ஏதோ செய்யுது’ என மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு கைகளாலும் ஆலமர வேரைப்பிடித்துக்கொண்டு உடம்பை அங்கும் இங்குமாக வளைத்துக்கொண்டிருந்தார். ஜெமினியும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆலமரவேரை கைகளால் இறுக்கப்பிடித்துக் கொண்டு “ஆலமரவேரே என்னைவிடு நான் போப்போறன்” எனக்கூறி நெஞ்சைத் தூக்கினார், ஜெமினியும் நெஞ்சை வாஞ்சையுடன் தடவி, பிரச்சனையில்லையப்பன் என கூறிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின் மீண்டும் புகழரசன் தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி “ஆலமரவேரே என்னை விடு நான் போப்போறன்” என சிறிது உரத்த குரலில் கூறிக்கொண்டு நெஞ்சை உயர்த்தினார். அவரின் நெஞ்சைத் தடவியும் மட்டையை எடுத்து விசிறியும் ஏதேதோ செய்தனர். ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. மீண்டும் சிறிது உரத்த குரலில் “ஆலமரவேரே என்னைவிடு; நான் போப்போற…..!” என பலமாக நெஞ்சைத்தூக்கிய அவரின் உடல் சலனமற்று விழுந்து அடங்கியது. உடல் மட்டுமல்ல, அந்தப்போராளியின் விடுதலைக்கான பயணமும். ஒரு அமைதி, மௌனங்களையும் பெருமூச்சுக்களையும் தவிர வேறு சத்தங்களில்லை. அவரது உடலை துணியால் போர்த்திவிட்டு அருகில் அமர்ந்தான் ஜெமினி.
 
வீரச்சாவு போராட்டப்பாதையில் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இந்தச் சாவின் கணங்கள் கடினமானவை. எனது நண்பன் சொன்னான் ‘மச்சான் இங்க காயப்படுகிறதை விட ஓரேயடியா வீரச்சாவடைந்திடனும்’ என்று.
 
மறுநாள் அந்த முகாமிலேயே அவரது வித்துடலை விதைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. அக்காட்டுக்குள் கிடைத்த பூக்களைக் கொண்டு மலரஞ்சலி செலுத்திவிட்டு, நண்பர்கள் சேர்ந்து அவரை விதைத்தோம். சம்பிரதாயங்களோ, உறவுகளோ இன்றி அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, திரியாய் காட்டில் விதைக்கப்பட்டார். அதற்குப் பின்னர் திரியாயில் நடைபெற்ற மறிப்புச்சமரில் வீரச்சாவடைந்த மேஐர் கமல் மாஸ்டர் உட்பட பலர் அங்கு தான் விதைக்கப்பட்டனர்.
 
விடுதலைக்கான விதைகள் தாயகப்பரப்பில் எங்குமே விதைக்கப்பட்டிருக்கின்றன. தாயகத்தின் நிலப்பரப்பில் பாதம் பதிக்கும்போது, அந்த ஆத்மாக்களுடனான நினைவுகளுடன் சில நிமிடங்கள் கரைந்து செல்லும்.
 
வீரச்சாவு 10.05.1995
 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது மனதுக்கு கஸ்ரமாக போய் விட்டது. :'(

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மனம் கனக்கும் பதிவு.
நன்றாக எழுதியுள்ளீர்கள்.தொடருங்கள். 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி, அலைமகள், லியோ. 

 

உங்களோடு பகிர்ந்துகொள்ளும் போது மனதிற்கு ஒருவித அமைதி கிடைக்கின்றது. 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4) February 17, 2021       — விஜி/ஸ்டாலின் —  நவீன உலகை தரிசிக்க கப்பலில் புறப்பட்ட பெரியார்  சுயமரியாதை இயக்கத்தில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளைகளில் திடீரென்று பெரியார் காணாமல் போனார். சுமார் ஒரு வருடம் கழித்து அவர் திரும்பி வந்தபோதுதான் அவரது ஐரோப்பிய பயணம் பிரபல்யமானது.    தனது அறிவுத்தேடலை விரிவாக்க உலகளாவிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு நீண்ட பயணத்தை அவர் திட்டமிட்டார். மேலைநாடுகளின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்வதை நோக்காகக் கொண்டு பலநாடுகளுக்கு சென்றுவரும் நோக்கோடு அப்பயணத்தை ஆரம்பித்தார். பயணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் உலக புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியையும் “லெனினும் மதமும்” என்கின்ற நூலையும் தனது குடியரசு பத்திரிகையில் தமிழாக்கம் செய்து தொடராக வெளியிட்டார்.     1931ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பிரெஞ்சு நாட்டைச்  சேர்ந்த ‘அம்புவாஸ்’ என்ற கப்பலில் தனது பயணத்தை தொடங்கினார் பெரியார். அவர் பயணத்தில் இருந்தபோது அவரது பத்திரிகைகளில் அந்த பயணம் பற்றிய செய்திகள் எதுவும் இடம்பெறாதவாறு பார்த்துக்கொண்டார். ரஷ்யா கம்யூனிசம் போன்ற வார்த்தைகள் அப்போதைய பிரித்தானிய காலனி அரசால் மிக கடுமையாக கண்காணிக்கப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம்.   இளமையில் செல்வந்தராயிருந்தும் பொதுவாழ்வில் வந்த பின்னர் சிக்கனத்தையும் எளிமையையும் கடைப்பிடிக்கத் தொடங்கிய பெரியார் “கஞ்சன்” என்று பெயரெடுத்தவர். பொதுப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்பதற்கு அவர் முன்மாதிரியாக இருந்தமையே அதற்கு காரணம். அதனால்தான்  மூட்டை முடுச்சுக்களை ஏற்றுகின்ற கப்பலின் நான்காம் வகுப்பு மலிவுவிலை பிரிவிலேயே அவர் பயணித்தார். முன்பின் அனுபவமில்லாத கடற்பயணம், காற்றும் குளிரும் வாட்டி வதைத்தன.   இந்தப்பயணமானது முக்கியமாக இலங்கை, எகிப்து, ரஸ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், போத்துக்கல், இங்கிலாந்து என்று சுமார் பத்து நாடுகளை தாண்டியது.   முதலில் இலங்கையில் கப்பல் தரித்தபோது வெளியே சென்றுவருவதற்கு கிடைத்த ஆறுமணி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கொழும்பு நகர் சென்று சிலரை சந்தித்துத் திரும்பினார். அதன் காரணமாக ஐரோப்பிய பயணம் முடிந்து வரும் வழியில் இலங்கையிலும் சிலகாலம் தங்கிச்செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டார்.   சுமார் பன்னிரு நாட்கள் கப்பல் பயணத்தின் பின்னர் எகிப்தை வந்தடைந்தார். மனித இனத்தின் பெரும்சாதனைகளில் ஒன்றான சுயேஸ் கால்வாயின் பிரமாண்டத்தை பார்த்து அதிசயித்து நின்றார். எகிப்தில் சுமார் 11 நாட்கள் செலவிட்டு புராதன நகரங்களின் அழகினையும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் பெரிதும் ரசித்தார். அலெக்ஸாந்திரியா துறைமுகமூடாக கிரீஸ் சென்றடைந்தார். அங்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஏதன்ஸ் நகரம், சாக்கிரடீஸ், பிளாட்டோ போன்றவர்களின் நினைவிடங்கள், சிலைகள், வரலாறுகள், பல்கலைக்கழகங்கள் என்று ஒரு நிமிடம் கூட வீணடிக்காது சுற்றி வலம் வந்தார்.   அதன் பின்னர் துருக்கி தேசத்தில் பெரியார் வந்திறங்கினார். சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்நாட்டை பீடித்திருந்த கொடிய யுத்தத்தின் வடுக்கள் இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஒட்டோமான் பேரரசின் இறுதி அத்தியாயங்களை வரலாறு எழுதி முடித்திருந்தது. கமால் பாஷாவின் தலைமையில் புதிய துருக்கி பல புரட்சிகர மாற்றங்களுடன் ஒரு மதச்சார்பற்ற தேசமாக எழுந்து நிற்கத் தொடங்கியிருந்தது.    துருக்கியின் அகன்று விரிந்த சமவெளிகள் வயல் நிலங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்திலும் வணிக நகரமான கொன்ஸ்ந்தாந்துநோபிள் ஐரோப்பிய நிலப்பரப்பிலும் இருந்தது. புரட்சிக்கு முன்னரான வரலாற்றுக் காலங்கள் முழுக்க கொன்ஸ்தாந்துநோபிள் என்றறியப்பட்ட அந்த பட்டினம் இஸ்தாம்பூல் என்று அழைக்கப்படும் புதிய வரலாறு தொடங்கியிருந்தது.   அந்த பட்டினத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுதந்திர சதுக்கத்தில் எழுந்து நின்ற கமால் பாஷாவின் உருவச்சிலை பெரியாரை கவர்ந்திழுத்தது. கமல் பாஷாவின் தலைமையில் இடம்பெறத் தொடங்கியிருந்த மதபீடங்களின் அதிகாரம், மற்றும் மூட நம்பிக்கை போன்றவற்றுக்கெதிரான வேலைத்திட்டங்களை துருவித்துருவி அறிந்துகொண்டார் பெரியார். நிச்சயமாக  ஐரோப்பாக் கண்டத்தையும் ஆசியாவையும் பிரிக்கின்ற அந்த மார்மரா கடலின் வனப்பை ரசிப்பதற்கு அவருக்கு அப்போது நேரம் வாய்த்திருக்கமாட்டாது. அதனால்தான் பெரியாரின் பிற்கால உரைகளில் அடிக்கடி கமல் பாஷா நினைவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.  ஸ்டாலின் பெரியாரை சந்தித்தாரா?   அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளான பொதுவுடைமை ரஸ்யாவை பார்வையிடுவதற்கான நாட்கள் நெருங்கியிருந்தன. ஒடேசா துறைமுகம் சென்றடைந்த பெரியார் அங்கிருந்து உக்ரைன் வழியாக மொஸ்கோ நோக்கிய நெடுந்தூர ரயில் பயணத்தை ஆரம்பித்தார். பெப்ரவரி மாதம் 20 டிகிரி குளிரின் கொடுமை சொல்லிமாளாது. நதிப்படுக்கைகள் எல்லாம் உறைந்து கிடந்தன. அவற்றின் மீது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும், குதிரைவண்டிகளும் கூட தாராளமாக நடமாடிக்கொண்டிருந்தன. மொஸ்கோ வந்தடைந்த பெரியாருக்காக சோவியத்தின் ஒன்றியம் அவரை ‘அரச விருந்தினராக’ அங்கீகரித்திருக்கின்ற மகிழ்ச்சியான செய்திகாத்திருந்தது. தங்குமிடம், வழிகாட்டிக்குழு, மொழிபெயர்ப்பாளர் என்று வசதிகள் ஏற்பாடாகியிருந்தன.  1932ஆம் ஆண்டு மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற “மே தின” ஊர்வலத்தை பார்வையிட்டு அங்கு ஜோசேப் ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றார். அப்போது அவர் இந்தியாவின் நாத்தீக தலைவர் என்று அறிமுகம் செய்யப்பட்டார். அவரது உரையில் எல்லோரையும் போல சொந்தநாட்டு வரலாற்றுப் பெருமைகளைப் பேசி கைதட்டு வாங்க முயலவில்லை. வெட்கத்தை விட்டு உரையாற்றினார்.  சாதியக்கொடுமை காரணமாக தொடரும் ‘இந்திய மக்களின் ஏழ்மை நிலை’ பற்றி உருக்கமான உரை நிகழ்த்தி மக்கள் கூட்டத்தின் கண்ணீரை வரவழைத்தார். பெருந்தலைவர் லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவிடம் தொடங்கி அஸர்பைசான் எண்ணெய் வயல்கள், மொஸ்கோ மோட்டார் கம்பெனிகள், சர்வதேசத்தொழிற்சங்க அலுவலகம், மாபெரும் அனல் மின்நிலையங்கள், மக்கள் நீதிமன்றங்கள், கூட்டுப்பண்ணைகள், நாத்தீக பிரச்சார மையங்கள், நூதனசாலைகள் என்று பல இடங்களையும் பார்வையிட்டார்.  விவசாயிகள், மாணவர்கள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும் கண்டுபேசி கம்யூன்கள் மற்றும் சோஷலிச கட்டுமானங்கள் போன்றவற்றின் அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டார்.   சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி மிகையில் இவானோவிச் கலினினனை (mikhail ivanovich kalinin) சந்தித்து உரையாடினார். கிரம்ளின் மாளிகையில் மேதின நிகழ்வுக்காக வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பினையும் கூடவே பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியும் நாத்திகர் சங்கமும் பெரியாரது ரஷ்ய சுற்றுலாவுக்கு பெரும் உறுதுணையாய் இருந்தன.   ஸ்டாலினை சந்தித்து உரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், இறுதி நேரத்தில் அது ரத்துசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. பெரியாருடன் பயணித்த இராமநாதன் என்பவரின் நடத்தைகள் சோவியத் புலனாய்வு அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதித்தமையால் அந்த அனுமதி இரத்தானது.  சுமார் மூன்று மாதகால அனுபவங்களோடு அந்த மண்ணை விட்டுவிலக மனமின்றி ரஸ்யாவை விட்டு வெளியேறினார் பெரியார்.  அதன் பின்னர் பிரான்ஸ் இங்கிலாந்து என்று பயணம் தொடர்ந்தது. லண்டனில் தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. அங்கிருந்த ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய தொழிலாளர்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் விதம் பற்றி விலாவரியாக உரையாற்றினார். லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவை சந்தித்து பேசினார். வேல்ஸ் சென்று பார்வையிட்டு திரும்பினார்.   ஸ்பெயின், போத்துக்கல், இத்தாலி என்று சென்ற பெரியார் அங்கும் இருக்கக்கூடிய கம்யூனிச சித்தாந்த தலைவர்களை சந்தித்தார். பார்சலோனாவில் இருக்கும் கொலம்பஸ் சிலை என்று எதையும் விட்டுவைக்காமல். பார்வையிட்டுக்கொண்டேயிருந்தார்.  ஜெர்மனுக்கும் பெரியார் சென்றார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்குவராத காலம். ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இப்போதெல்லாம் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் நிர்வாண சங்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் எல்லோரும் நிர்வாணமாகவே உலாவருவர். நிர்வாணமாக சூரிய குளியல் செய்வது என்பது இன்றைய காலத்தில் உலகெங்கும் சாதாரணமானதொன்று. ஆனால் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இவைபற்றியெல்லாம் அபச்சாரமான பார்வையே உலகெங்கும் இருந்து வந்தது. பேசாப்பொருட்களை பேசுவதுதானே பெரியாருக்கு கைவந்த கலை. ஜெர்மனியில் இருந்த நிர்வாண சங்கம் பற்றி அறிந்து அச்சங்கத்தினரையும் பார்க்க விரும்பினார். அவர்களை சென்றுபார்த்தார். ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் யாரும் துணிமணிகளுடன் செல்லமுடியாது. ஆகவே அவர்களை சந்திக்க நிர்வாணமாக செல்ல துணிந்தார். அவர்களை சென்று பார்த்து கலந்துரையாடினார். அவர்களோடு இணைந்து நின்று நிர்வாணமாக படங்களும் எடுத்துக்கொண்டார்.   சுமார் ஒருவருடகால உலகச் சுற்றுப் பயணம் இறுதி கட்டத்துக்கு வந்திருந்தது. பிரான்ஸ் மார்சேல் துறைமுகத்திலிருந்து ‘ஹாரூன மாரு’ என்ற ஜப்பானிய கப்பலானது பெரியாரையும் ஏற்றிக்கொண்டு 17/10/1932 அன்று கொழும்பு வந்தடைந்தது.   இலங்கையில் சுமார் இருபது நாட்கள் தங்கியிருந்த பெரியார் அதன் பின்னர் இந்தியா சென்றடைந்தார்.  இந்தியா திரும்பிய பெரியாருக்கு சமதர்மம் பற்றிய ஈடுபாடு அதிகமானது. தனது உலக சுற்றுப்பயணம் பற்றி தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க சுமார் நாற்பது கூட்டங்களில் உரையாற்றினார். ‘அது புதியதோர் உலகம் அதுபோல் எங்கும் இதுவரை இருந்ததில்லை’ என்று கம்யூனிச ஆட்சிமுறையை புகழ்ந்தார். ஆனால் ‘அது எனக்கு புதிதல்ல. நான் இவ்வுலகு எப்படி இருக்கவேண்டுமென்று கனவு கண்டுகொண்டிருக்கின்றேனோ அது சாத்தியமானதுதான் என்பதையே நான் அங்கு அறிந்துகொண்டேன்’ என்றார்.   ‘சாமி கும்பிடுவதையல்ல “கும்பிடுகின்றேன் சாமி”’ என்பதை முதலில் கைவிடுங்கள் என்கிறார். ‘கனம்’,  ‘திரு’, ‘ஸ்ரீமதி’, என்று அழைப்பதைவிடுத்து அனைவரும் ஒருவரையொருவர் ‘தோழர்’ என்று விளிக்கவேண்டும் என்று சுயமரியாதை இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரச்சார கூட்டங்களுக்கு செல்கின்றபோது பிறந்த குழந்தைகளை பெற்றோர்கள் பெரியாரின் கையினில் கொடுத்து பெயரிடச் சொல்வது வழமை. உலகச் சுற்றுப் பயணம் முடிந்து வந்த பின்னர் நடந்த அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், என்றவாறாக சமதர்ம தலைவர்களின் பெயரை சூட்டினார். அது மட்டுமல்ல ரஷ்யா, மொஸ்கோ என்றும் கூட பெயரிட்டுள்ளார் என்கின்ற நகைச் சுவையான செய்திகளும் பெரியாரின் வரலாற்றில் உண்டு.    (பெரியாரின் இலங்கைப்பயணம் பற்றிய தனியான கட்டுரை அடுத்த பகுதியில்)    https://arangamnews.com/?p=3738        
  • அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜
  • நெடுக்ஸ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
  • மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
  • பி.சி.ஆர் பரிசோதனையைக் குறைத்து விட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா தொற்றால் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கொ ரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நோய் குறைவதாக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசி நோய் பரவுவதைத் தடுக்காது, ஆனால் நோய் அதிகரிப்பதைத் தடுக் கிறது என்று இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லு நர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். Thinakkural.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.