Jump to content

காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995


Recommended Posts

காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995 ...

அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன.

துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன.

” டோறா “  அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “  பீரங்கிப் படகுகள் மூன்று.

இரும்புக் காவல்.

அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள்.

” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “  கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு  ” எடித்தாராவை ” அண்மித்தார்கள்.

ஆரம்பித்தது உக்கிரமான சண்டை.
 

 

Kaangkesan-Thurai-Attack-_-thesakkaaru-6

 

காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.

எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர்.

” எடித்தாராவின் “  அடித்தளத்தை , வெடிகுன்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள்.

அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல.  நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….!

இராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு.  வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம்.

” பெண் கரும்புலிகளின் ” ஒரு வெடிகுண்டு படகு , தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது.

அசுரவேகம்.  மிக அண்மைய…..!

போர்களங்கள் அபூர்வமானவை.  அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில்  -  நினைத்துப்போவது நிகழாமல் போகும் ,  நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும்.

வெடிகுண்டுப்படகு  சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை.

ஐந்து  மணிநேரச் சரித்திரச் சமர்  முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர்.

நியூட்டன் – தங்கன் – தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை.

பூநகரிச் சமரின் போது நாகதேவன் துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் முழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..!

- உயிராயுதத்திலிருந்து…..

    ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.