யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
nedukkalapoovan

தலைவனுன்னா... இப்படி இருடா..!

Recommended Posts

969986_456307734464795_275349760_n.jpg

 

தலைவனுன்னா…

மக்கள் விட்டு

எட்ட நின்று..

குளிரூட்டி வாகனத்தில்

தான் மகிழ்ந்திருந்து..

வெயில் காய்ந்த

புழுதி குளித்த

வியர்வை வழிந்தோடும்

மக்கள் முன்..

கசங்காத வெள்ளை வேட்டி

மேடை

தரிசனம் தந்து..

வலு விழந்த

வாழ்விழந்த சொந்தங்கள் முன்..

நாலு வார்த்தை

நயவஞ்சகமாய் உதிர்த்து…

எதிரி தாழ் பணிந்து

சூழ்ச்சி மகுடம் சூடி…

கேட்ட கேள்வி

நேரிடைப் பதில் இன்றி

மேவிப் பேசி..

வாய்கிழிய

தத்துவம் பேசி…

புத்திசீவித்தனம் என்று

தலைக்கன

ரவுடீசம் செய்து

நடப்பவனல்ல..!

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

 

Edited by nedukkalapoovan
 • Like 8

Share this post


Link to post
Share on other sites

பகிர்விற்கு நன்றி 

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ் !

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி நெடுக்கு...........

Share this post


Link to post
Share on other sites

எதோ ஒரு உணர்வு படத்தை பார்க்கும்போது எழுத  மறுக்குது.:(

Share this post


Link to post
Share on other sites

தலைவனாக உருவாகியவர்களுக்கும்

உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கும் இடையில் 

நிறைய வித்தியாசம் உண்டு.

 

எவ்வளவு படித்தாலும் மக்களோடு மக்களாக இருந்து 

போராடுபவன் தான்  தலைவன்

 

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்   

Share this post


Link to post
Share on other sites

நன்றி உறவுகளே உங்கள் தாழ்மையான கருத்துக்களுக்கு..!

Share this post


Link to post
Share on other sites

969986_456307734464795_275349760_n.jpg

 

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

 

 

அழகிய வரிகள், நன்றி கவிதைக்கு!

Share this post


Link to post
Share on other sites

நன்றி அலை அக்கா. :)

Share this post


Link to post
Share on other sites

நாம் வாழும் காலத்தில், எம்முடன் வாழ்ந்த ஒரு தலைவன். வரலாற்றுக்காலத்திலும் இனிவரும் காலத்திலும் இவர்போல் இனியொருதர் இனிப்பிறப்பார் இல்லையென, எதிரிகளாலும் சொல்லப்பட்ட தலைவன். பொத்திப்பாதுகாக்கக் தவறிவிட்டோம். களமாடி, கடலாடி தனது உறவதையும் களப்பலியாக்கினான். இனியொருகாலமும், எம்மினமே களப்பலியாகிடிலும், இயற்கை எமக்கு ஈகாது இத்தலைவனை.

 

கனத்த நெஞ்சத்துடன்,கவிதைக்கு நன்றி.

 

உலகத்தமிழினத்துடன் புலம்பெயர் தமிழினமும் செய்ததவறால், வாராதுவந்த மாமணியை நந்திக்கடல் மடியில் விட்டுவந்தோம்.

Share this post


Link to post
Share on other sites

969986_456307734464795_275349760_n.jpg

 

 

 

தானைக்கும்

தலைவன்…

தமிழர் தரணிக்கும் பரணிக்கும்

சொந்தக்காரன்

தமிழர் தளபதி…

தகுதி விகுதி

என்றின்றி…

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

எதிரிகள் மட்டுமல்ல! துரோகிகளும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய உண்மை!...’ தலைவர்” என்ற சொல்லின் பொருளே!!! ‘எங்கள் அண்ணா!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தமிழ் தாயை

தரையில் வந்து

அவள் நிகராய் நின்று

கையெடுத்து வணங்கி..

அவள் புரியும்

மொழி கொண்டு

உறவாடும் இவனே

உண்மைத் தலைவன்..!

தமிழ் தாய்

மைந்தன்..!

வராது வந்த வரலாறே எம்வாழ்நாளில் இனியொரு தகைமையுடைத் தலைவனைக் காண்போமா?

கனத்த நெஞ்சமுடன் வரிகளுக்கு நன்றி நெடுக்கவர்களே!

Share this post


Link to post
Share on other sites

மிகமிகச் சிறந்த தலைவன் கிடைத்தும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள

தமிழினம் தவறிவிட்டதோ எனத் தோன்றுகின்றது. :(

இப்படி ஒரு அருமையான தலைசிறந்த தலைவனை மீண்டும் பெறுவதற்கு தமிழினம் இன்னும் எத்தனை யுகங்கள் காத்திருக்கவேண்டி வருதோ தெரியவில்லை.

கவிதைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை  அடைந்தே தீர்வோம் - சுமந்திரன்  முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா நேற்று விளையாட்டுக்கழக மைதானத்தில் கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது.   எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம் என்று நினைத்திருந்தபோது அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும்,  விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும் இன்று  எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது.  மிக நிதானமாக, மிக கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது.  விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில் அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது. இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு  நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்றார். https://www.virakesari.lk/article/58436
  • பிரி , யாழ் திண்ணைக்கு நல்வரவுகள். ஹுனுப்பிட்டி , சுங்கத் திணைக்களம் , 77 ம் ஆண்டு   கலவரம்,  ஐந்து பிள்ளைகள் , பருத்தித்துறை.  மிகவும் பழகிய குடும்பமொன்றினை ஞாபகப் படுத்துகின்றது. ஆயினும் வித்தியாசங்கள் அவர்கள் ஐவரும் ஆண் பிள்ளைகள் , தந்தையார் நெடுங்காலம் அவர்களுடன் இருந்தார் . அவர்களில் இரண்டாமவன் மிகுந்த அழகும் துடி துடிப்பும் கொண்டவன் ,  கலவரத்தை தொடர்ந்து ஊருக்கு வந்து என்னை கண்டதும் கேட்ட முதல் கேள்வி " அண்ணா , எங்கே போக வேண்டும் சேர்வதற்கு " என்பது தான். முதலில் எனக்கு புரியவில்லை;  பின்பு அவனை  சற்று நிதானமாக இருக்கும் படி சொன்னேன். இயக்கங்களில் ஒன்றில் சேர்ந்து நிலை உயர்ந்து வந்தான் - உள்வீட்டு குத்துச் சண்டைகளில் நியாயம் கேட்கப் போனவன் திரும்பி வரவில்லை.  அந்த ஏக்கமும் தந்தையாரை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது.   உங்களின் கதை பழைய ஞாபகங்களை சற்றே தட்டி விட்டு விட்டது.      
  • பெருமாள், அந்த "கெடுதியான" விடயங்கள் என்று நீங்கள் கருதுவதைத் தூக்கிப் பிடித்தது பீஷ்மரின் தொடர் அல்ல! அங்கே ஒரு பெரிய பின்புலத்திற்காகச் சொல்லப் பட்ட ஒரு சிறு விடயத்தை ஊதிப் பெருப்பித்து இங்கே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது தீவிர தமிழ் தேசியர்களாக இருப்போர் தான். கீழே பாருங்கள், ஒரு கருத்தை ரதி சொன்னதற்காக அவருக்கும் வசை விழுகிறது. நான் தேசிக்காய்கள் என்று அழைக்கும் தீவிர தமிழ்தேசியர்களின் செயல்கள் எப்பவும் அவர்கள் கட்டிக் காப்பதாகச் சொல்லிக் கொள்ளும் "தமிழ் தேசியத்திற்கு" ஆப்பாகத் தான் அமைந்திருக்கும் என்பதை இன்னொரு முறை நிரூபிக்கிற கருத்துகள் பையனுடையவை! இதனாலெல்லாம் இருக்கிற தமிழர்களும் அன்னியப்பட்டு விலகிப் போவார்களேயொழிய, யாரையும் இந்த தீவிர தமிழ் தேசியம் கவர்ந்திழுத்து விடப் போவதில்லை!
  • இந்திய பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தன. இது சம்பந்தமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் எமது செய்தி சேவை தொடர்புகொண்டு வினவிய போது, கொழும்பில் வைத்து கூட்டமைப்பு மோடியை சந்தித்த வேளையில் இதற்கான அழைப்பு கிடைத்திருந்த போதும் அதன் பின்னர் இதுவரையில் அதிகார பூர்வமான அழைப்புக்கள் எதுவும் விடுக்கப்படவில்லை என கூறினார். இதேவேளை இந்த செய்தி குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்திய மத்திய அசரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் தங்களுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அதன் பேச்சாளரொருவர் தெரிவித்தார். http://www.hirunews.lk/tamil/218597/இந்திய-பிரதமருடனான-சந்திப்புக்கு-இன்னும்-உத்தியோகபூர்வ-அழைப்பு-கிடைக்கவில்லை-த-தே-கூ