Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது.

 

தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது...

 

நீங்களும் பாருங்கோவன்...

 

 

http://youtu.be/Tcn05fP5tSg

 

 

மேலதிக விவரங்களுக்கு அத்திட்ட அலுவலகத்தின் இணையத்தில் பாருங்கள்...

 

http://chennaimetrorail.gov.in/

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 224
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாய் இருக்கின்றது , புட்போட் அடிக்கிற வசதியோட டிசைன் பண்ணியிருக்கலாம் !

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது.

 

தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது...

 

நீங்களும் பாருங்கோவன்...

 

 

 

மிகவும் அழகாகவும்  பாதுகாப்பாகவும்  உயர் நவீன வசதிகளுடன் உள்ளது.

நல்லவிடயம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சென்னை ரயில்களில் பாதுகாப்பு எப்படி ?? போக்கிரி படம் பார்த்தபின்னர் சென்னை ரயில் பற்றி நினைக்கவே பயமாக இருந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகாக உள்ளது. மக்கள் பெருக்கத்திற்கு... ஏற்ப, போக்குவரத்து துறைகளிலும்... நவீன மாற்றங்களை கொண்டு வருவது சிறப்பு.
 

இந்தத் திட்டத்தை யார் கொண்டு வந்தது, யார் வெள்ளோட்டம் விடுவது என்று.... தமிழக கட்சிகள் இன்னும், உரிமை கோரி போராட்டம் நடத்தாமல் இருப்பது... ஆச்சரியமாக உள்ளது. :D

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது.. Personalized Special Class என்றால் என்ன என்று கேட்டுள்ளார்கள்.. எனக்கும் அந்தக் கேள்வி எழுகிறது.. :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்படம் சென்னை மாநகர தொடருந்தின் வழிதடங்களை குறிக்கின்றது.

 

இத்தொடருந்து, சில பகுதிகளில் நிலதிற்கு அடியில் 15 மீ ஆழ சுரங்க வழியிலும், சில பகுதிகளில் உயர்த்தப்பட்ட வழிகளிலும் பயணிக்கும்.

 

 

343p7c9.jpg

 

 

பட உதவி: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/route_schematic.php

 

.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 சென்னை 'மெட்ரோ இரயில்' திட்ட குறிப்பு

 

இந்த திட்டம் தொடர்பாக ஒரு விரிவான திட்ட அறிக்கையினை டெல்லி மெட்ரோ இரயில் கழகம் தயாரித்துள்ளது. இந்த அமைப்பு மெட்ரோ இரயில் திட்டதை டெல்லியில் சிறப்பாக அமைத்து செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் முதற்கட்டமாக கீழே காணும் இரண்டு மெட்ரோ இரயில் வழித்தடங்களை அமைத்திடலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது :

 

வழித்தடம் - 1

 

தொலைவு :  23.1 கி.மீ.

 

வழித்தட விவரங்கள்:

 

வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ. வண்ணாரப் பேட்டை - பிராட்வே (பிரகாசம் சாலை) - சென்னை சென்ட்ரல் - ரிப்பன் மாளிகை - கூவம் கரை ஒரமாக - அரசினர் தோட்டம் - தாராப்பூர் கட்டிடம் - ஸ்பென்ஸர்ஸ்-ஜெமினி-அண்ணா சாலை-சைதாப்பேட்டை - கிண்டி - சென்னை விமான நிலையம்.

 

 

வழித்தடம் - 2

 

தொலைவு :  22 கி.மீ.

 

வழித்தட விவரங்கள்:

 

சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ. சென்னை சென்ட்ரல் - ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - அமைந்தக்கரை - ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை - திருமங்கலம் - கோயம்பேடு பேருந்து நிலையம் - ஜவகர்லால் நேரு சாலை வழியாக - வடபழனி - அசோக்நகர் - சிட்கோ - ஆலந்தூர் - புனித தோமையர் மலை.

 

 

இரு வழிதடங்களின்  மொத்த தூரம் :  45.1 கி.மீ

 

 

முதல் வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ் தூரம் சுரங்கப் பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளன.

 

 

செய்தி மூலம்: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/project.php

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திட்ட பகுதிகளில் படங்கள்

 

 

2yowscm.jpg

 

 

 

2uhu2co.jpg

 

 

mta73r.jpg

 

 

 

15i6o1j.jpg

 

 

ehpid.jpg

கருத்து தெரிவித்த சுவி, விசு, யாழ்கவி, ரகுநாதன், தமிழ்சிறி மற்றும் டங்கு அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாய் இருக்கின்றது , புட்போட் அடிக்கிற வசதியோட டிசைன் பண்ணியிருக்கலாம் !

 

நன்றி திரு.சுவி.

 

புட்போர்ட் அடிக்கிற மாதிரி வடிவமைத்தால், சுரங்கப் பாதையில் தொடருந்து வேகமாக நுழையும்போது தொங்கிப் பயணிப்பவர்கள், சடுதியில் கீழோலகத்திலிருந்து மேலோகம் பயணித்துவிடுவர்.

 

பரவாயில்லையா?

 

சென்னை ரயில்களில் பாதுகாப்பு எப்படி ?? போக்கிரி படம் பார்த்தபின்னர் சென்னை ரயில் பற்றி நினைக்கவே பயமாக இருந்தது.

 

இரவில் தொடருந்து பயண  பாதுகாப்பு அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைதான். சனத்தொகை ஊதிப் பெருத்துவிட்டதே...! பொழைக்க வேணாம்? :)

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திட்டத்தை யார் கொண்டு வந்தது, யார் வெள்ளோட்டம் விடுவது என்று.... தமிழக கட்சிகள் இன்னும், உரிமை கோரி போராட்டம் நடத்தாமல் இருப்பது... ஆச்சரியமாக உள்ளது. :D

 

வேலைகள் முற்றாக முடியட்டுமென அனைத்து அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன. பொதுமக்கள் பாவனைக்கு திறக்கும்போது பாருங்கள் இவர்களின் குடுமிச் சண்டையை...! ஒவ்வொருத்தரும், தன் தாத்தா, பாட்டி பெயரைத்தான் சூட்ட வேண்டுமென குதிப்பார்கள்..

மீனம்பாக்க வானூர்தி நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உள்நாட்டு & வெளிநாட்டு முனைய விவாக்கத்திற்கு, சமீபத்தில் தங்கள் தலைகளின் பெயரைச் சூட்ட அடித்துக் கொண்டார்கள்.. சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டுவந்தார்கள்..

 

மத்திய அரசு மூச்சு விடவில்லை, இதுவரை.  கேள்விப்பட்டிருப்பீர்களே?

நன்றாக உள்ளது.. Personalized Special Class என்றால் என்ன என்று கேட்டுள்ளார்கள்.. எனக்கும் அந்தக் கேள்வி எழுகிறது..

 

அது உயர்வகுப்பு பயணிகளுக்கானது டங்கு...பயணக்கட்டணம் சிறிது அதிகம்...

தற்போதுள்ள புறநகர் சேவையிலும் முதல் வகுப்பு என தனிப்பெட்டி உள்ளது.

 

Link to comment
Share on other sites

 • 6 months later...
 • கருத்துக்கள உறவுகள்

வருது வருது ...!

ஆ...விலகு...விலகு!! 

வேங்கை வெளியே வருது...!!! :o

 

அதான் நம்ம சென்னை 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டத்திற்காக கோயம்பேடு பணிமனையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரை சுமார் 1.5கி.மீ தூரம் பரீச்சார்த்த ஓட்டத்திற்காய் ஓட்டம்விட்டு மக்களுக்கு நோட்டம் பார்க்க விடப்பட்டது.

 

 

1655995_502946246488516_1896513564_n.jpg

 

 

1621942_407011416111380_617004703_n.jpg

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கோயம்பேடு பணிமனை முதல் கோயம்பேடு ரயில் நிலையம் வரையிலான 1.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

 

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, அண்ணா சாலை, சைதை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையுமாக இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் மும்முரமாக நடந்து வருகின்றன.

கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார்.

 

இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ரயிலின் வேகம், பிரேக் சிஸ்டம், ஏ.சி.யூனிட், தானியங்கி கதவுகளின் செயல்பாடு உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன.

 

1.5 கி.மீ.க்கு நடந்த சோதனை

 

இந்நிலையில், கோயம்பேடு பணிமனை - கோயம்பேடு ரயில் நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

 

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையமான கோயம்பேடு ரயில் நிலையம் உள்ளது. இதில் 1 கி.மீ. தூரத்துக்கு ‘ரேம்ப்’ எனும் சாய்தள ரயில் பாதை போடப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம் வரை வியாழக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

 

எல்லாமே ஆட்டோமேட்டிக் இன்னும் 2 வாரத்துக்குள் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 8 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஏப்ரலில் இருந்து ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடக்கும். சிக்னல், மெட்ரோ ரயில் இயக்கம் என அனைத்தும் ஆட்டோமேட்டிக் என்பதால் 4 மாதங்கள் வரை சோதனை ஓட்டம் நடைபெறும்.

 

முதல்கட்டமாக, கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சிட்கோ வரை 8 கி.மீ.க்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. அசோக் நகர் வரை 6.5 கி.மீ. தூரத்துக்கு மின் பணிகளும் முடிந்துவிட்டது. உடனுக்குடன் சிக்னல் வேலைகளும் நடக்கின்றன. 'கத்திப்பாரா' வரையிலான பணிகள் பிப்ரவரியிலும், ஆலந்தூர் வரையிலான பணிகள் ஏப்ரலிலும் முடியும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும். முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும்.

 

இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

 

source:http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5636572.ece

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது.

நன்றி...

Link to comment
Share on other sites

நல்ல விடயம். உட்புறக்கட்டமைப்மை மேம்படுத்தி அந்நிய முதலீடுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும். அவ்வகையில் தமிழகம் செழிப்புறுவது கண்டு மகிழ்ச்சி..! :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மெட்ரோ ரயில்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன...! இங்கு துலுசில் தானியங்கி ரயில்கள்தான் ஓடுகின்றன. ஆச்சரியம் ஒரு விபத்துகூடக் கிடையாது...! :lol::D

Link to comment
Share on other sites

குப்பைகளை அங்கும் போட்டு வைத்துள்ளனர். உங்களின் மண் மீது உங்களுக்கே அக்கறை இல்லையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குப்பைகளை அங்கும் போட்டு வைத்துள்ளனர். உங்களின் மண் மீது உங்களுக்கே அக்கறை இல்லையா?

 

இன்னமும் திட்டப்பணிகள் முடிவுறவில்லையே தூயவன், நிறைவுற்றதும் குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவிடுவர்..ஆனால் சென்னைவாசிகளைப் பற்றி தெரியும் தானே? பெட்டிகளை எப்படி தூய்மையாக வைத்திருக்கப் போகிறார்களென அடுத்த வருடம் தெரிந்துவிடும்.

 

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்..தாய் மண் மீது பற்றுறுதிகொள்ளும் வரை உணர்வுகள் வளரவில்லை.

 

All are in 'take it policy'!

 

Link to comment
Share on other sites

இதை இயக்குவதற்கும் நிறைய மின்சாரம் தேவைப்படப் போகின்றேதே. என்ன செய்யப் போகின்றார்கள்? விமானநிலையம் பற்றி மேலே சொன்னீர்களே. என் நண்பர் ஒருவர் தமிழகம் சென்ற போது மலசலகூடம் சென்னார். அங்கே பழைய வடிவான மலசலகூடம். வேறுவழி இல்லை என்றுபோனனால் வாசலில் அசிங்கம் செய்து வைத்திருந்தார்கள். எந்தப் பணியாளரும் அதைச் சுத்தம் செய்து வைத்திருக்கவில்லை. அவன் விமானத்தில் ஏறித் தான் கடமையை(?) முடித்தான். ஒரு சர்வதேசத் தரம் கொண்ட விமான நிலையத்தின் நிலைமை இது. இதைவிடச் சிறிலங்காவில் உள்ள விமானநிலையம் தரம் வாய்ந்தவை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் புதிய விமான நிலைய முனையங்களின் கட்டுமானப் பணிகள் மிக மிக தரமற்றவை. ஏர்போர்ட்ஸ் அதாரிடி அஃப் இந்தியா(AAI)வின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற ஊழல் மலிந்த வேலைகள் அவை. இதைத் தவிர சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையின் ஒரு பகுதி, அடையாறு நதியின் மேலே கட்டபட்ட முறையிலும் தரமற்ற வகையில் உள்ளதாக கூறி இன்னமும் பயணிகள் பாதுகாப்பு காரணமாக திறக்கப்படவில்லை. :wub:

இவையனைத்தையும் சரி செய்யும்வண்ணம் விமான நிலையத்தை தனியார்வசம் ஒப்படைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, முடிவாகும் தருணத்தில், விமான நிலைய ஊழியர்கள் சங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடையை சென்ற வாரம் வாங்கியுள்ளனர். அரசு நிறுவனமென்றால் ஊழலில் திளைப்பது புதிதல்லவே? இதற்கு சென்னை விமான நிலையமும் விதிவிலக்காகவா இருக்க முடியும்?

மும்பாய், தில்லி, பங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் போன்று சென்னை விமான நிலையமும் சீக்கிரம் தனியார்வசம் (PPP - Private, Public Partnership முறையில்) ஒப்படைக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை! :o

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும் :D  மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும். :icon_idea:

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும் :D  மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும். :icon_idea:

 

நல்ல எண்ணம் தான். ஆனால் 'வத வத'வென பெருகியுள்ள மக்கள் தொகையினை நினைத்தால், யானைப் பசிக்கு சோளப்பொரி போலத்தான் இந்த வெகுசன திட்டங்கள் முடியும்.

 

உதாரணத்திற்கு இங்கேயுள்ள ஒரு நடுத்தர கிராமத்திற்கு சென்று தெருவில் பாருங்கள் எத்தனை மனித தலைகள் வீதியில் தென்படுமென்று, அது நிச்சயம் யாழ்ப்பாண நகரின் சன நடமாட்டத்தை விட அதிகமாகவே இருக்கும்.

 

மக்கள் என்று நாம் இருவர், நமக்கு இருவர் என எண்ணத் தலைப்படுகிறார்களோ அப்பொழுதான் இந்தியாவின் திட்டங்களின் பலன் பெரும்பாலான சனங்களுக்கு சென்றடையும்.

 

Link to comment
Share on other sites

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும் :D  மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும். :icon_idea:

 

இந்திய குடிமகன்/மகள்கள் தாங்களாக முன்வந்து ஊழலை ஒழிக்க முயற்சி செய்தால் ...விண்வெளி ஆராய்ச்சியை நிறுத்தாமலேயே தங்களது மருத்துவ மலசல வசதிகளை முறைப்படுத்தலாம்....

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.