Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சென்னை மெட்ரோ ரயில்...


Recommended Posts

இந்தியா என்ற வெறுப்பு என்பது எம் மீது இருக்கின்றது தான். அதை 87களில் இந்தியாவே ஆரம்பி வைத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழர் என்ற தொடர்பினை வெறும் இந்தியக் குடியரசு என்று நூற்றாண்டு தாண்டாத ஒரு அடையாளம் தடுத்து விடும் என்றால் எப்படி ஏற்பது? தமிழகம் வளர்ச்சி உற்றால் அது எங்களுக்கும் பெருமை தானே!

கொசுறு- சோழர்வழி எனத் தமிழகத்தை விட அதிகமாக எம்மை நம்பிக் கொள்பவர்கள் நாங்கள்.

Link to comment
Share on other sites

 • Replies 224
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

 • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப விபரமாக இணைப்புகளைக் கொடுக்கின்றீர்கள் வன்னியன். நல்லாயிருக்கு...! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தான் பொது நிலங்களை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டு...பின் அதை காப்பாற்ற நீதிமன்றங்களுக்கும் செல்லுவார்கள்....நீதிமன்றங்களும் பாவம் என்று விட்டுவிடும்......

 

தமிழர்களுக்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு ஏது...நான் அங்கு திரிந்தவரையில் (1986-1988)..சாதாரண மக்கள் அன்புடனும்..வாஞ்சையுடனும் பழகுவார்கள்..ஆகவே தான் ஒரு தமிழ்நாட்டில் ஒரு ஈர்ப்பு....

 

தெருக்களும் சுத்தமாகி....கோயில்களிலும் கொள்ளை அடிப்பது ஒழிக்கப்பட்டால் தமிழ்நாடு ஒரு சொர்க்கம் தான் (கையில் காசு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்)....

இப்போது அங்கு போய்வரும் எனது நண்பர்கள் அங்கு உள்ள வசதிகளை புகழுகிறார்கள்..இசை தங்கியிருந்த hotel மாதிரி...

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கரிசனனையோடு கருத்து தெரிவித்து ஊக்கமூட்டிய டங்கு, தூயவன், சுவி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி. :)

 

இதே போல் ஈழத்திலும் ஏதேனும் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் பதியவும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கரிசனனையோடு கருத்து தெரிவித்து ஊக்கமூட்டிய டங்கு, தூயவன், சுவி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி. :)

 

இதே போல் ஈழத்திலும் ஏதேனும் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் பதியவும்.

 

பகிடி, விடுறீங்களா... வன்னியன்.

வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளீ.... என்று,

கனக்கத் திட்டத்தை... ஒடுகாலிகள், அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வசந்தம், கிழக்கில் ஒளீ.... என்று,

கனக்கத் திட்டத்தை... ஒடுகாலிகள், அமுல் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

 

புதிதாக கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம், படுவன்கரை பாலம், கல்லடி பாலம் பற்றி எழுதலாம் தானே சிறி?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புதிதாக கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம், படுவன்கரை பாலம், கல்லடி பாலம் பற்றி எழுதலாம் தானே சிறி?

 

அவைகள் எல்லாம்.... சிங்களவன், தனது குடியேற்றத்தை, தமிழன் பகுதியில்... விரைந்து செயற்படுத்துவதற்க்காக செய்யப் படுபவை.

தினமும்... உயிரை, கையில் பிடித்துக் கொண்டிருக்கும்... தமிழனுக்காக, சிங்களவன் செய்கின்றான் என்று, நீங்கள் நம்ப வேண்டாம்.

எமது நிலத்துக்கும், எமது மக்களுக்கும்... பாதுகாப்பு என்று, ஒன்று இருந்ததென்றால்...

அது... புலிகளிடம் மட்டுமே, இருந்தது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் யாழ் பகுதியில் பயணம் செய்து விட்டு நிறைய படங்கள் இங்கே பதித்திருக்கின்றார்...ஆனால் அந்த கட்டுமானங்கள் எல்லாம் பெரும்பாலும் முன்பு இடிக்கப்பட்டிருந்த கட்டடங்கள் திருப்பி கட்டியும்...2 தள கட்டடங்களுமே ஆகும்...ஒன்றும் "landmark" கட்டுமானங்கள் என்று சொல்லுமளவுக்கு இல்லை....யாழில் உயரமான கட்டடங்கள் கோயில் கோபுரங்களே... :)

மற்றும் கிழே

மட்டக்களப்பின் அழகான படங்கள்

Edited by naanthaan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய தமிழ்சிறி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி!

 

Update:

 

சென்னை பறக்கும் ரயில் திட்டப் பணியில், வேளச்சேரி - பரங்கிமலை இறுதி இணைப்பிலிருந்த தடங்கல் நீங்க வழி பிறந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கில் நேற்று(11-04-2014) அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் தில்லி உச்சநீதி மன்றத்தில் இடைக்கால தடை வாங்கும் வரை காத்திருக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.

 

2r3i4wx.jpg

 

நன்றி: தினமலர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைய காத்திருக்கும் 'சென்னை பறக்கும் ரயில் பாலம்'

( @ ஆதம்பாக்கம்)

 

 

Photo0923.jpg

 

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..

நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி..

மெட்ரோ ரயிலுடன் சேர்ந்திருந்தால் நிம்மதி ஆகுமடி..!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரசுகளையும் எல்லாத்துக்கும் குற்றம் சொல்லி பிரயோசினம் இல்லை...இந்தியா போன்ற நாட்டில் மக்களும் தான் பிரச்னை...

சீனா என்றால்...இந்த பிரச்னை வந்திருக்காது...இரவோடு இரவாக அந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பார்கள்......

இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சுற்றுலா வரத்தான் இருக்கு ....

Link to comment
Share on other sites

2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரசுகளையும் எல்லாத்துக்கும் குற்றம் சொல்லி பிரயோசினம் இல்லை...இந்தியா போன்ற நாட்டில் மக்களும் தான் பிரச்னை...சீனா என்றால்...இந்த பிரச்னை வந்திருக்காது...இரவோடு இரவாக அந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பார்கள்......

இன்னும் ஒரு 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஒரு சுற்றுலா வரத்தான் இருக்கு ....

 

இன்னும் 5 வருடமா? சுற்றுலாவா..செட்டிலாகவா? :)

அதற்குள் அரசியல்வாதிகள் என்னென்ன கூத்துகளை நிகழ்த்தப் போகிறார்களோ? :o

 

2016 தேர்தல் நேரம் நான் தமிழகத்தில் இருப்பேன் என நினைக்கின்றேன். ஒரு பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. ஆனால் சில உதவிகள் செய்வேன்....

 

இருவருக்கும் வாழ்த்துக்களும் தமிழ் நாட்டின் இனிய வரவேற்பும்... :)

கூடவே முறுக்கித் திரியும் சில ஈழத்தமிழர்களுக்கும் சொல்லி வையுங்கள்.. :lol:

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 5 வருடமா? சுற்றுலாவா..செட்டிலாகவா? :)

அதற்குள் அரசியல்வாதிகள் என்னென்ன கூத்துகளை நிகழ்த்தப் போகிறார்களோ? :o

 

 

இருவருக்கும் வாழ்த்துக்களும் தமிழ் நாட்டின் இனிய வரவேற்பும்... :)

கூடவே முறுக்கித் திரியும் சில ஈழத்தமிழர்களுக்கும் சொல்லி வையுங்கள்.. :lol:

இந்தியாவந்து பல்பு வங்கி வரும் ஈழ தமிழர்களே அதிகம் (இது இப்போது கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்...இரண்டு தரப்பும் மரியாதையாக் நடக்கிறார்கள்... :) )

 

 

 

5 வருடத்தில்..(அல்லது அதற்க்கு முன்) ஒரு சுற்றுலா தான்..Goa to கன்னியாகுமாரி.... ;)

ஒரு 15-20 வருடத்தில் தேவை என்றால்...கன்னியாகுமரி பக்கம் செட்டில் :) :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வந்து பல்பு வங்கி வரும் ஈழ தமிழர்களே அதிகம் (இது இப்போது கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்...இரண்டு தரப்பும் மரியாதையாக் நடக்கிறார்கள்... :) )

 

5 வருடத்தில்..(அல்லது அதற்க்கு முன்) ஒரு சுற்றுலா தான்..Goa to கன்னியாகுமாரி.... ;)

ஒரு 15-20 வருடத்தில் தேவை என்றால்...கன்னியாகுமரி பக்கம் செட்டில் :) :)

 

சிலர் இலங்கை சிங்களவனுக்கு கொடுப்பது மாதிரி இங்கே 'பல்பு' கொடுக்க முனைந்தால் சிக்கல்தானே? :)

ரோமாபுரி சென்றால் ரோமன் மாதிரிதான் நடக்கோணும் கண்டியளோ? :lol:

 

கன்னியாகுமரியென்றால் திற்பரப்பு, மார்த்தாண்டம் பக்கம் குடியேறுங்கள்.

 

மிக அருமையான இயற்கை சூழல்..

 

என்ன, கொஞ்ச நாளில் நீங்களும் பாதி 'மல்லு'வாகிவிடுவீர்கள்..! :D

 

 

 300px-Thirparappu_falls.jpgthirparappu-water-falls-3.jpg6561100577356422.jpg

 

maxresdefault.jpg

 

கடைசியாக இணைத்த படத்திலுள்ள இடத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. ('ஆண்பாவம்' படத்தில் பாண்டியனும், சீதாவும் அடிக்கடி சந்திக்கும் படித்துறை..? - "யப்பா...சூப்பரு..! "ன்னு கூப்பிடுவாரே பாண்டியன்! )

 

 

திரி தலைப்பிலிருந்து விலகுவதால் இத்தால் நிறுத்துகிறேன்.

 

Edited by ராசவன்னியன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 

maxresdefault.jpg

 

கடைசியாக இணைத்த படத்திலுள்ள இடத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. ('ஆண்பாவம்' படத்தில் பாண்டியனும், சீதாவும் அடிக்கடி சந்திக்கும் படித்துறை..? - "யப்பா...சூப்பரு..! "ன்னு கூப்பிடுவாரே பாண்டியன்! )

 

திரி தலைப்பிலிருந்து விலகுவதால் இத்தால் நிறுத்துகிறேன்.

 

சீதா  என்று

இராமரின் துணைவியாரைத்ததானே   சொல்கிறீர்கள்..........?? :lol:  :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சீதா  என்று  இராமரின் துணைவியாரைத்ததானே   சொல்கிறீர்கள்..........?? :lol:  :D

 

இல்லை, கர்ணனாகப்பட்டவரின் மனைவியாக இருந்தவர்... :)

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆண்பாவம் சீதா மாதிரி ஒன்றோடு...இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருந்தால்...இது தான் சொர்க்கமாக இருந்திருக்கும்....

 

எனக்கு துரோகம் செய்த கடவுளை பழி வாங்க நான் மதம் மாற போகிறேன்... :)

 

ராசா..படங்களை போட்டு வயதெரிச்சலை கிளப்பாதீர்கள்....சாகும் மட்டும் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என் நிலை... :)

 

நிலையை மாற்ற முயலுவோம்...

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களாக கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி ஒரு வழியாக முடிவுற்று, ஆலந்தூர் நிலையம் வரை ஒரு வழித் தடத்தில் பணிகள்  பூர்த்தியடைந்தது. கோயம்பேடு - ஆலந்தூர் வரை சோதனை ஓட்டமும் தற்பொழுது துவங்கியுள்ளது.

 

 

BpxTRH1IMAA_Loz.jpg

 

கத்திப்பாரா மேம்பாலத்தில் மெட்ரோ ரயில்...

 

 

Bnhku_GCEAAIEb5.jpg

 

வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

9qjw2p.jpg

 

மிக முக்கிய இரண்டு அடுக்கு மாடி செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி.

இங்கு முதல் தளத்தில் சென்னை பறக்கும் ரயில் வழித்தடமும், இரண்டாம் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடமும், தரை தளத்தில் சென்னையின் மற்ற அனைத்து தென் தமிழ் நாடு நோக்கிய ரயில்களுக்கான நிலையமும் அமைகின்றன.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்?

 

கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்.....

எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கன்க்ரீடில் அமைக்கிறார்கள்..ஆனால் இவற்றை பராமரிக்க போவது யார்?

 

கத்திபாரா ராம்ப்களில் ஒரு lane marking களும் இல்லை...பின் எப்படி வாகனங்கள் ஒழுங்காக செல்லும்.....

எப்போ இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் ?

 

சில நாட்கள் இந்த திரி பக்கம் வரவில்லை.. :(

இவற்றையெல்லாம் பரமரிக்கப் போவது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்தான்.

 

கத்திப்பார சாலையில் புதிதாக தார் மேவப்பட்டு, சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை போக்குவரத்துக் காவல் துறை சாலையில் ஒழுங்குபடுத்தும் கோடுகளை வரையவில்லை. தற்பொழுது நிறைவேறியிருக்கலாம்.

இவ்வருட இறுதியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையுள்ள முடிவடைந்த தடத்தில் மட்டும்  மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்க உள்ளது.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சென்னை கோயம்பேட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையில்(Operation Control Centre) கருவிகள் பல பொருத்தப்பட்டு அவற்றை சோதிக்கும் பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 

Metro-Rail.jpg

 

கோயம்பேட்டில் தற்கலிகமாக அமையப்பட்டுள்ள சென்னை மெட்ரொ ரயில் நிலைய தலைமை அலுவலகமும்,

இயக்க கட்டுப்பாட்டு கட்டிடமும். (OCC)

 

 

10299022_852194454793747_119359905356696

 

 

10526033_852194434793749_149821749624638

 

இயக்க கட்டுப்பாட்டு அறையில்(OCC) பரிசோதனைகள்

 

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

Update:

 

The first Chennai Metro Rail service from Koyambedu to Alandur will be open to the public only by December, said M. Venkaiah Naidu, Union minister for urban development, on Friday.

 

04_09_2014_003_046_008.jpg

 

 

"கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம்" முதல் உயர்த்தப்பட்ட ரெயில் நிலையமாக மக்கள் பாவனைக்கு தயாராகி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்திலுள்ள ரெயில் நிறுத்த கட்டிடங்களின் அனைத்து உள்ளக பணிகளையும், ரெயில் இயக்கதிற்கு தேவையான முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களையும் நிறுவத் தொடங்கியுள்ளது.

ரெயில்களின் தானியங்கி செயல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்து இயக்க கோயம்பேடு கட்டுப்பாட்டு மையத்தில், தேவையான உபகரணங்களும் நிறுவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனன். கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏழு ரெயில் நிலையங்கள் இருக்கின்றன.

சில ரெயில் நிலையங்களில் கட்டிட வேலை முடிந்தவுடனேயே உபகரணங்கள் நிறுவல் வேலைகள் தொடங்கியுள்ளது.ரெயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஒரு சில பயணிகள் வசதிகள் நிறுவ வேண்டியுள்ளது. அரும்பாக்கம், அசோக் நகர், கோயம்பேடு நிலையங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் தயாராக உள்ளது. கட்டுமான பணி நிறைவடைந்து நிலைய உள்ளக வேலைகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

சுரங்க வழியில், ஷெனாய் நகர் முதல் கோயம்பேடு வரையேயான வழித்தடத்தில் பாதைகள் அமைக்கும் பணியில் வேகமாக முன்னேற்றம் கணப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது என மெட்ரோ ரெயில் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

 

Source - Times Of India.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில், அண்ணா சாலை வழியாக சுரங்க வழியில் புகுமுன்பாக கிண்டி மின்சார ரயில் நிலையம் மேலே, குறுக்கு வாட்டாக மெட்ரொ ரயில் வழித்தடம் அமைவதால், இரும்புத் தகடுகளால் பொருத்தப்படும் மேல் பாலம், கீழே ஓடும் மின்சார ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏதுமில்லாமல் மெல்ல மெல்ல உருவெடுத்து, தூண்களின் மேலே ஊர்ந்து பொருந்துவதை படத்தில் காணலாம்.. :o

 

Wc9ul51.jpg?1

 

D8X53aC.jpg?1

 

yflVksT.jpg?1

 

gHY57Pv.jpg?1

 

- Engineers make the world..

 

.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • என்னப்பா இது..... தலை, கால் புரியவில்லை...... இதுக்கு பதில்..... மலைப்பாம்பை... விழுங்கி..... நாலு கோட் எழுதி.... ரிஸ்க் இல்லாமல் காசு பார்க்கலாமே என்று யோசிக்கிறேன். 🤔
  • வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு? December 8, 2021   வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி காவற்துறையினர் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் திணைக்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை காவற்துறையினர் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2021/170040
  • ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன் பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார்.  ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயேவேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது. இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT),  ‘வாஷிங்டன் போஸ்ட்’ (WaPo), ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (WSJ) - அடுத்தடுத்து நீண்ட கட்டுரைகளை வெளியிட்டன. இந்தியாவில் வெறுப்பரசியல் வளர  ஃபேஸ்புக் உதவுவதாகவும், இதைத் தடுக்க எந்தப் பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கட்டுரைகள் கூறின.  இப்படி மூன்று மிக முக்கிய பத்திரிக்கைகள் இந்தியாவை மையமாக வைத்து ஃபேஸ்புக்கின் செயல்பாட்டினை அம்பலப்படுத்தியது மெதுவாகவே இந்திய ஆங்கில ஊடகங்களில் பேசப்பட்டன, அதுவும் மேம்போக்காக! தமிழ் ஊடகங்களில் இவ்விஷயம் பெரும் கவனத்தைப் பெறவில்லை. இந்திய அரசியலை உற்றுக் கவனிப்போர் விவாதிக்க வேண்டிய விஷயம் இது என்பதாலேயே இக்கட்டுரை அவசியமாகிறது. ஃபேஸ்புக்கின் உளவியலும் நன்மைகளும் குகைகளில் கோட்டோவியம் வரைந்த ஆதி மனிதன் முதல் இன்று வரை எண்ணங்களை சக மனிதனோடு பகிர்வது அடிப்படை அவாவாக இருக்கிறது. சகல ஜீவராசிகளும் அதில் ஏதோவொரு வகையைப் பின் பற்றினாலும் மனிதனால்தான், தன் பின்புலத்தோடு வேறுபட்ட மற்றவர்களோடு அர்த்தத்துடன் உறவாடி அறிவுத் தளத்தில் இணைந்து செயல்பட முடிகிறது. அவ்வகையில் சமூக வலைதளங்களின் அறிமுகமும் நவீன யுகத்தின் இணைய வசதிகளும் அவ்வுணர்வுக்கு நெய்யூற்றி வளர்த்தது. உலகம் நிஜமாகவே இன்று கையளவுதான். அக்டோபர் மாதம் டில்லியில் வாழும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ஸ்வீடனில் வாழும் பாகிஸ்தானிய வரலாற்றாசிரியர் இஷ்டியாக் அஹ்மத், நியூ ஜெர்ஸியில் வாழும் நான் ஆகியோர் முகம்மது அலி ஜின்னா பற்றிய நேரலை நிகழ்வொன்றை ஃபேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்தோம்; பார்வையாளர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில். நிகழ்வின் முடிவில் ஜின்னா போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி பலரும் அறிய முடிந்தது. அதேபோல் தலித் வரலாற்றாசிரியர்களோடு நிகழ்த்திய நேரலைகளும் பலருக்கு புதிய வரலாற்று புரிதல்களை அளித்தன. பேரிடர்களின்போது ஃபேஸ்புக் மூலம் உதவிகள் ஒருங்கிணைப்பது, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் திரட்டுவது - ஒரு குழந்தையின் மருத்துவத்துக்கும் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதும் சமீபத்தில் நடந்தது - ஜனநாயகம் காக்க யதேச்சாதிகார அரசுகளுக்கு எதிராகத் திரள உதவுவது என்று ஃபேஸ்புக் எவ்வளவோ நற்பயன்களை நமக்குத் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், விஞ்ஞானம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதுமே இரு முனைக் கத்தி! அணுசக்தியால் நகரங்கள் அழிந்திருக்கின்றன. அதே அணுசக்தி புற்றுநோயிலிருந்து காக்கவும் உதவுகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கு இல்லை.  அமெரிக்க அரசியலும் பேஸ்புக்கும் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிலாரி கிளிண்டன் தோற்று டொனால்ட் டிரம்ப் ஜெயித்தார். அமெரிக்க அரசியல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்வு அது. அந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது ட்விட்டரை மிகச் சாதுர்யமாக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய விதம். அத்தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்று ஆராய்ந்த அமெரிக்க அரசு நிறுவனங்கள், “ஆம், ரஷ்யா ஒரு மிகப் பெரும் பொய்ச் செய்தி பரப்புரையை மேற்கொண்டது, சமூக ஊடகங்களின் துணையோடு!” என்று அறிவித்தன. வாஷிங்டன் டி.சி. அருகே ஒரு பீட்சா ஹட் உணவகத்தில் ஹிலாரி கிளிண்டனின் பாலியல்ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துவதாக ஒரு பொய்ச் செய்தி ஃபேஸ்புக்கில் பரவ அந்த உணவகம் தாக்கப்பட்டது, சமூக வலைதளங்களின் வீச்சுக்கும் தாக்கத்திற்கும் ஓர் உதாரணம் இது. 2020 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றார். ஆனால், தொடக்கத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அமெரிக்க ஜனாதிபதியான அவரே பொய்ச் செய்திகளை பரப்பினார். அவர் ஆதரவாளர்கள் அச்செய்திகளை சமூகவலைதளங்களில் மேலும் பரவலாக்கினர். அமெரிக்க தேர்தலின் மீது அமெரிக்கர்களே நம்பிக்கை இழந்து, ‘மோசடி நடந்தது’ என்று பேசும் நிலையை உருவாக்கினர். டிரம்பின் நீதித் துறையே, தேர்தல் நேர்மையாக நடந்ததென்று சான்றளித்தை டிரம்ப் ஆதரவாளர்கள் கேட்கவில்லை. முத்தாய்ப்பாக தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக அமெரிக்க காங்கிரஸ் ஏற்கும் நாளன்று அமெரிக்காவே திகைக்கும் வகையில் காங்கிரஸ் கட்டிடத்தைத் தாக்கிச் சூறையாடினார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள். இதில் ஃபேஸ்புக்கின் பங்கு கணிசமானது. இன்ஸ்டாகிராமும் பதின்ம வயதுப் பெண்களின் உளைச்சலும் செப்டம்பர் 14 அன்று ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை, ஃபேஸ்புக்கின் இன்னொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் எவ்வாறு பதின்ம வயதுப் பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய திருப்தியின்மையை உருவாக்கி பெரும் மன உளைச்சல் அளிக்கக் காரணமாகின்றது என விரிவான கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரை வெளியான சமயம்தான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை இளம் பதின்ம வயதினருக்கு அனுமதியளிக்க எத்தனித்தது.  ஃபேஸ்புக் நிறுவன ஆய்வின் அடிப்படையிலேயே, மூன்றில் ஒரு பங்கு (33%) பதின்ம வயதுப் பெண்கள் இன்ஸ்டாகிராமினால் தங்கள் உடல் அழகின் மீது அதிருப்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை. தற்கொலை எண்ணம் எழுந்த பதின்ம வயதினரில், அமெரிக்காவில் 6% இன்ஸ்டாகிராமை குற்றஞ்சாட்டினார்கள். பதின்ம வயதினரும் இள வயதினரும் ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமையே அதிகம் விரும்புகின்றனர் என்கிற புள்ளிவிபரத்தை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த பிரச்சினைகள் எல்லா 'ஸ்நாப்சேட்' போன்ற தளங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமுக்கே பிரத்யேகமான சில பிரச்சினைகள் உண்டு. ஃபேஸ்புக் தானே அறிய வந்த இந்த உண்மைகளைப் பொதுவெளியில் மட்டுப்படுத்தியே பேசியதோடு அல்லாமல், இது போன்ற ஆய்வின் முடிவுகளைக் கேட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே விபரங்களை அளிக்க தட்டிக் கழித்தது என்றது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’கட்டுரை. வெறுப்பை ஊக்குவிக்கும் அல்காரிதம் எந்த ஒரு மென்பொருள் (Software) செயல்பாட்டினை நிர்ணயிப்பதும் கட்டமைப்பவதும் அதனை எழுதப் பயன்படுத்தும் மொழியும் அது சார்ந்த இலக்கணமும். அம்மொழிகளை வைத்துக் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு செயலுக்கான விளைவினை ‘அல்காரிதம்’ என்று சொல்லலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்று கட்டமைப்பதே அல்காரிதம். இன்று சமூக வலைத்தளங்கள் வெறுப்பை ஊக்குவிக்கும் செயலிகளாக உருமாறியிருப்பது தற்செயல் இல்லை. 2016-ல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளரே வெளியிட்ட பதிவொன்றில், ‘சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப்  படித்து ஒரு ஊக்கமற்ற தன் தேவைக்கான நுகர்வோராக (passive user) மட்டுமே இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கேடு’  என்று கண்டறிந்து எழுதினார். ஆனால், ஃபேஸ்புக்கால் விளையும் மன பாதிப்புக்கான மருந்து, ஃபேஸ்புக் மூலம் இன்னும் பலருடன் பகிர்தலே’ என்பதாகச் சொல்லி அதனை ஊக்குவிக்கும் வகையில்  ஃபேஸ்புக் செயல்பட ஆரம்பித்தது. ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் விருப்பக் குறிக்கு (like) 1 மதிப்பெண், மறுப்பகிர்வுக்கு 5, முக்கியமான நீள கமெண்ட் அல்லது மறுப் பகிர்வுக்கு 30 என்று பதிவுகளை மதிப்பிட ஆரம்பித்து, இதற்கேற்ப பதிவுகளைப் பயனர்களின் செய்திச் சுருளில் (news feed) காட்டுமாறு செய்தது. இதன் விளைவாக சர்ச்சைப் பதிவுகள் பிரதான இடம்பெற்றன, ஆக்ரோஷத்தை உண்டாக்கும் பதிவுகள் தூக்கிப்பிடிக்கப்பட்டன. போலந்தில் ஓர் அரசியல் கட்சி 50%-50% என்கிற அளவில் நேர்மறைச்செய்தி, எதிர்மறைச் செய்திகளைப் பகிர்ந்துவந்தது. ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் மாற்றத்துக்குப் பின் எதிர்மறைச் செய்திகளின் பங்கு 80% ஆக எகிறியது. இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜகவின் ஐடி விங்கின் எதிர்மறைச் செய்திகளை நாம் நினைவுகூர வேண்டும். சென்ற வருடம் ஃபேஸ்புக் கோப உணர்வு எமோஜிக்கான மதிப்பீட்டை பூஜ்யமாக்கியதும் வன்முறைப் பதிவுகள் குறைந்தன என்று நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஃபேஸ்புக்கின் அல்காரிதத்தின் பகடைக்காய்கள் ஆகிவிடுகிறோம். நீண்ட நாள் ஃபேஸ்புக் செயல்பாட்டாளனாக என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ்ப்  பதிவுகளில் பிராமணர்களைக் காழ்ப்புடன் பழிப்பதோ, பெரியாரைக் காட்டமாக விமர்சிப்பதோ நொடிப் பொழுதில் வைரலாகும். மார்க் ஸக்கர்பர்க் இப்படியான எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்த நிறுவன ஊழியர்கள் முன்வைத்த யோசனைகளை நிராகரித்தார் என்கிறது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை. இந்த இடத்தில்தான் நாம் இந்தியா தொடர்பான ஃபேஸ்புக் செயல்பாடுகளையும், பாஜகவின் வெறுப்பரசியலையும் ஆராய வேண்டி இருக்கிறது. 2019 தேர்தலும் பாஜகவின் சமூக வலைதளப் பிரச்சாரமும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்றது ஏன் என்று கிரிஸ்டோஃப் ஜாஃப்ரலாட்டும் கில்லிஸ் வெர்னியர்ஸும் ‘கான்டெம்ப்ரவரி சௌத் ஏஷியா’ (Contemporary South Asia) இதழில் வெளியிட்ட கட்டுரையில் சில காரணங்களை முன்வைத்தார்கள். அத்தேர்தலில் பாஜக சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்தியது என்று கவனப்படுத்தியிருக்கிறார்கள். சில விவரங்களை இங்கு தொகுக்கிறேன். தேர்தலுக்காக ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து மிகப் பெரும் களப் பணியாளர் படையை உருவாக்கியது பாஜக. மஹாராஷ்டிரத்தில் மட்டும் 92,000 வாக்குச்சாவடிக் கண்காணிப்பாளர்கள். எந்த ஒரு பணியாளரும் 100 வாக்காளருக்கு மேல் பொறுப்பாக இருக்க மாட்டார், அந்தளவுக்குப் பணியாளர்களும் இருந்தார்கள். 2018-ல் அமித் ஷா, பூத் செயல்பாட்டு திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒருவர் என்று 90,000 செல்பேசி பிரமுகர்கள் (cell phone pramukhs) நியமிக்கப்பட வேண்டும் என்பது இலக்கு.  இப்படி நிர்ணயிக்கப்படுபவர்கள் வெறும் செய்தி சேகரிப்பாளர்கள் மட்டும் இல்லை; செய்திகளைப் பரவலாக்குவோரும் ஆவர். அவர்களுக்கு செல்பேசி அளித்து வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதே குறிக்கோள். ஐ.டி. விங்கின் தலைவர் அமித் மாளவியா 1.2 மில்லியன் களப் பணியாளர்கள் பாஜக அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்கிறார்கள் என்றார். ஒரு டிரோல் (troll) படையே உருவாக்கப்பட்டது என்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். 2019 தேர்தலுக்கு, ‘ஐ.டி. படை வீரர்கள்’ (I.T. Yoddhas) என்று ஒரு அணியே அமித் ஷா வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் சொல்கிறார். இவர் பாஜகவின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக, ‘நானும் சௌகிதார்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர். 2019-ல் பாஜக 2,00,000 - 3,00,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும், காங்கிரஸ் 80,000 - 1,00,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறது. ஃபேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலிக் கணக்குகளை முடக்கியபோது அவற்றில் முக்கியமான ஒன்றாகப் பேசப்பட்ட ‘இண்டியா ஐ’ (India Eye) பாஜக சார்பானது. ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியலர்கள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பதுபோலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்திலும்  கொண்டுசேர்க்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். பாஜகவின் தேர்தல் வியூகத்தில் மட்டுமல்ல, தேசத்தை அரசாளும் வியூகத்திலும் சமூக வலைத்தளத்துக்கு பெரும் பங்குண்டு. அதன் மூலம்தான் அதன் வெறுப்பரசியல், வாக்காளர்களின் விரல் நுனிகளுக்கும் விழித்திரைகளுக்கும் சென்றடைகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. சமூக வலைதளக் காலம் இதை மேலும் விஸ்தரித்திருக்கிறது. ஃபேஸ்புக்கும் அங்கி தாஸின் ராஜிநாமாவும் ஃபேஸ்புக்கை இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பாஜக இருப்பதைப் பற்றி ஆகஸ்ட் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ விரிவான கட்டுரையை வெளியிட்டது. பாஜகவின் டி.ராஜா சிங், தெலுங்கானாவைச் சேர்ந்தவர். ரோஹிங்யாக்களைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களைப் பற்றியும் மிக ஆட்சேபகரமான பதிவுகளை, வன்முறையைத் தூண்டும் விதமாகவே (விரிவாக அப்பேச்சுகள் இந்திய ஊடகங்களிலும் பேசப்பட்டது, சுட்டிகளை கட்டுரையின் கீழ் காண்க) எழுதவும் பேசவும் செய்தார். அவரைப் போன்ற வன்முறைப் பேச்சுகள் பேசியவர்களை அமெரிக்காவில் ஃபேஸ்புக் தன் எல்லா தளங்களிலிருந்து நீக்கியிருந்தாலும், ராஜா சிங் மீது நடவடிக்கை எடுத்தால் ஆளும் பாஜகவைப் பகைத்துக்கொள்ள நேரிடுமோ என ஃபேஸ்புக் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த அங்கி தாஸ் மறுத்துவிட்டார். ஃபேஸ்புக்கை அமெரிக்காவில் உபயோகிப்போர் 200 மில்லியனுக்கும் சற்று குறைவு, இந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கை 300 மில்லியனை நெருங்குகிறது. அங்கி தாஸ் பாஜக சார்புடையவராக இயங்கினார் என்று ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களே சொன்னார்கள். 2014-ல் அங்கி தாஸ் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பிரச்சாரத்தை முடுக்கிவிட உதவியதாகவும், அதன் பின் நிகழ்ந்தது ஊரறிந்தது என்றும் பதிவிட்டார். இன்னொரு பதிவில் அவர் 30 வருட களப் பணி இந்தியாவை சோஷலிஸத்தில் இருந்து விடுவித்தது என காங்கிரஸை தாக்கிப் பதிவிட்டார். அங்கி தாஸின் செயல்கள் பாரபட்சமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு தாஸின் பதிவுகள் முழுமையாகப் பார்த்தால் எந்தப் பாரபட்சத்தையும் காட்டவில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் சமாதானம் சொன்னது. தாஸ் இஸ்லாமியரை பற்றியும் கீழ்த் தரமான பதிவொன்றைப் பகிர்ந்திருந்தார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே, ‘இந்திய முஸ்லிம்கள் கரோனா தொற்றைப் பரவச் செய்கின்றனர்’ என்று சமூக வலைத்தளங்களில் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது. ஆனால் ஃபேஸ்புக்கோ  ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும்வரை அவரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று ஃபேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. ‘கிரவுட்டான்கிள்’ (CrowdTangle) எனும் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்தப் பதிவுக்கு முன், ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைதளப் பரிமாற்றமாக (interactions, probably refers to comments and not just rehshares) இருந்த அவர் பதிவுகள் 2.5 மில்லியனாக எகிறியதாம். வெறுப்புத் தீயாகப் பரவும் வகை கொண்டது. இக்கட்டுரைகளின் விளைவாக அங்கி தாஸ் அக்டோபரில் பதவி விலகினார். டிசம்பர் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இன்னொரு கட்டுரையில், ‘ஃபேஸ்புக் சமூக வன்முறை உண்டாகக் கூடிய இடங்களில் மிக உச்சப்பட்ச ஆபத்து இருக்கும் தொகுப்பான முதலாவது அடுக்கில் (Tier -1)-ல் இந்தியாவைக் கணக்கிட்டது’ என்றது. இந்த வருடம் மீண்டும் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை விமர்சித்து முன்பு கூறிய மூன்று பத்திரிக்கைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. இதில் இந்தியாவுக்கு என்றே பிரத்யேகக் கட்டுரைகள் வெளிவந்தன. ஃபேஸ்புக்கின் கட்டமைப்பு போதாமை ஒரு முக்கியமான புரிதலை சமீபத்தியக் கட்டுரைகள் உணர்த்தின.  ஃபேஸ்புக் உலகில் எல்லா நாடுகளில் இருந்தாலும், பொய்ச் செய்திகளைக் கண்டறிவதற்கான அதன் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 87% அமெரிக்காவுக்கும், வெறும் 13% மட்டுமே அமெரிக்கா தவிர்த்த மொத்த உலகுக்கும் செலவாகிறது. இந்தியாவில் ஹிந்தியிலும் வங்க மொழியிலும் வெறுப்பு மொழியாடல்களைக் கண்டறிய மென்பொருளில் முதலீடுசெய்ததாக ஃபேஸ்புக் சொல்கிறது. சமீபத்திய தேர்தலுக்குப் பின் வங்கத்தில் 40% பதிவுகள் பொய்கள் என்று ஃபேஸ்புக் கண்டறிந்தது. ஒரு பொய்ப் பெயர் (Fake ID) பதிவாளரின் பதிவு 30 மில்லியன் லைக் போன்றவற்றை அள்ளியதாம். தமிழில் பொய்ச் செய்திகளைக் கண்டறியவும், வன்மம் கொண்ட பதிவுகளைக் கண்டறிந்து நீக்கவும், ஃபேஸ்புக் தமிழ் மொழியில் முதலீடு செய்யவில்லை என்று தெரிகிறது. தமிழில் பிராமணர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் (இதில் பிராமணர்களும் சேர்த்தி) மிக வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவுகள் சாதாரணமாக அன்றாடம் தென்படும். அடிப்படையில் யாரோ யாரைப் பற்றியோ வன்மத்துடன் எழுதுகிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தெறிக்கும். மேலும் ரிப்போர்ட் அடிப்பது என்கிற புகார் சொல்லுதலை வைத்து பதிவர்களை, அவர் எழுதியது - வன்மமோ இல்லையோ- பிடிக்காதவர்கள், முடக்குவதும் அடிக்கடி நிகழும் ஒன்று. ஆனால் அதையெல்லாம் மட்டுப்படுத்தும் கட்டமைப்பு ஃபேஸ்புக்கிடம் இல்லை. இந்திய வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிய ஃபேஸ்புக் ஆய்வாளர்கள் முன்பு குறிப்பிட்டதைப் போல், இவ்வருடம் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்ததுமே மூன்று முக்கிய நாளிதழ்கள் ஃபேஸ்புக்கினால் இந்தியாவில் பெருகும் அல்லது வெளிவரும் வெறுப்பரசியலைப் பற்றி பிரத்யேக கட்டுரைகள் வெளியிட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நிகழும் அரசியலும் அதில் சமூக வலைத்தளங்களின் பங்கு பற்றியும் உலக அரங்கில் இருக்கும் முக்கியத்துவமே அக்கட்டுரைகளுக்கு காரணம். இந்தியாவில் ஃபேஸ்புக் இயங்கும் முறையையும் அங்கிருக்கும் உரையாடல்களையும் ஆராய முனைந்து, ஃபேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கைத் தொடங்கினார்; ஃபேஸ்புக்கின் அல்காரிதம் பரிந்துரைக்கும் குழுமங்களில் இணைவது, பரிந்துரைத்த காணொளிகளைக் காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக அவர் இயங்க ஆரம்பித்தார். பிறகு மளமளவென்று வன்முறைப் பதிவுகள் வரத் தொடங்கின, பொய்ச் செய்திகள் தொடர்ந்தன. மூன்றே வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறைக் காட்சிகளையும்விட அதிகமாக பார்க்க நேரிட்டதாம் அந்தப் பரிசோதனை பதிவருக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லாமியரை மிகக் கீழ்த்தரமாக வசை பாடி, மோதியை துதிபாடி, அதீத வன்முறை பதிவுகள் வர தொடங்கின. ஃபேஸ்புக்கின் உள்ளேயே இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வெறுப்புப் பதிவுகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிப்படையாக ஓர் அறிக்கை சொன்னது. ஃபேஸ்புக்கின் செயல்பாடு இப்படியே தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் வெறுப்பு மட்டுமே எஞ்சும் என்று ஓர் இஸ்லாமியர் ஃபேஸ்புக்கின் ஆய்வாவாளர்களிடம் சொன்னாராம். லவ்-ஜிஹாத், கரோனா தொற்று ஆகியவற்றுக்கு இஸ்லாமியரை வசைபாடி வரும் பதிவுகளில் பெரும்பாலானவை சங்கப் பரிவார அனுதாபிகளுடையதுதானாம். பஜ்ரங் தள், ராம் சேனா ஆகிய குழுக்கள் பற்றி ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே அச்சம் இருந்தது. ஆனால் அவற்றைத் தடைசெய்தால் பாஜகவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்று ஃபேஸ்புக் தயங்கியது. பஜ்ரங் தள் பதிவுகளுக்கும் நிஜ வாழ்வில் நடக்கும் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. திரிபுராவில் 11 வயது பையன் ஒருவன் ஜூன் 26 அன்று இறந்ததும், சிறுநீரகத்தைத் திருடுவதற்காகவே அவன் கொல்லப்பட்டான் என்று வதந்தி பரப்பப்படது. விளைவாக உண்டான கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வதந்தியைப் பரப்பியதில் முக்கியமானவர் பாஜகவைச் சேர்ந்த ரத்தன் லால் நாத். பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என்று வாட்ஸப்பில் பரவும் வதந்திகளால் மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரு மாதத்துக்குள்ளேயே 14 கலவரங்கள். மாடுகளைக்  கடத்துகிறார் என்ற வதந்தியால், பெஹ்லு கான் அடித்தே கொல்லப்பட்டார். பரவும் வெறுப்புக் கலாசாரமும் ஏற்றுமதியாகும் வெறுப்பும் ஃபேஸ்புக் பற்றிய உண்மைகள் அம்பலமானதும் அது ஒரு தனியார் நிறுவனம் தன் லாப நோக்குக்கான உறுபசிக்கு சமூகங்களைக் காவு கொடுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. உண்மை. ஆனால், அது மட்டுமே உண்மை இல்லை. ஃபேஸ்புக் இந்திய அரசோடு கருத்துரிமைக்காக சில சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவில் மேலோங்கியபோது, இந்தியா இந்திய தயாரிப்பான 'கூ' (Koo) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. உடனே பாஜகவினர் கூவை நோக்கிப் பாய்ந்தனர். கூ தளத்தில் மட்டுறுத்தல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. வெறுப்புப் பதிவுகள் உடனே பெருகியது. ஒரு பதிவர் இஸ்லாமியரை எந்த வசைச் சொல்லை வைத்து அழைக்கலாம் என்று அச்சில் ஏற்ற முடியாத நான்கு சொற்களைக் குறிப்பிட்டிருந்தார். கூ தளத்தைப் போல் கிளப்ஹவுஸ் வலைதளத்திலும் சாதியமும் இஸ்லாமியருக்கு எதிரான வசைகளும் தளம் ஆரம்பித்து இந்தியர்கள் சேர்ந்த உடனேயே தொடங்கியது. ஒரு கிளப்ஹவுஸ் நிகழ்வில் முஸ்லிம் ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொன்னால் ரூ. 500 அளிப்பதாகச் சொல்லப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் தன் கடமையில் தவறுகிறது, ஆனால், அதை தாண்டி இந்தியாவில் நிலவும் வெறுப்புச் சூழல் இந்தியாவின் பிரச்சினை, இந்தியர்களின் பிரச்சினை. இதனை மழுப்பவே முடியாது. வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி செய்திகள், கட்டுரைகளை வெளியிடும் ‘ஃபாரின் பாலிஸி’ (Foreign Policy) இதழ், சென்ற வருடம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இஸ்லாமிய வெறுப்பு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. பொய்ச் செய்திகளை ஆராயும் ஓர் ஆய்வகம் இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் 260 போலி ஊடக தளங்கள் 65 நாடுகளில் வியாபித்திருப்பதாகச் சொல்கிறது. வெளிநாடுகளில் இடதுசாரி அரசியலர்கள்கூட தங்கள் தொகுதி இந்தியர்களின் மோதி ஆதரவை அனுசரித்துப் பேசும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரசியலர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை அமெரிக்க வாழ் இந்துத்துவர்களின் சமூக வலைதளத் தாக்குதல்களுக்கு - பலவும் வன்முறையை அப்பட்டமாகப் பேசும் தாக்குதல்கள் - உள்ளாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, டி.எம்.கிருஷ்ணா நியூ ஜெர்சியில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அப்போது எழுந்த அச்சுறுத்தல்களைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே விக்கித்துப்போய் அமெரிக்க போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்ட அவலமும் நடந்தது. கவனியுங்கள் வாசகர்களே... மிரட்டியவர்கள் அமெரிக்க வாழ் மெத்தப் படித்த தமிழர்கள். முன்பொரு முறை சுப்பிரமணிய சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நியூ ஜெர்சியில் நேரில் சென்றிருந்தேன். சுவாமி பேசிய அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு மெத்தப் படித்தவர்கள் பலர் கை தட்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தியர்கள் இங்கு அமெரிக்காவில் சிறுபான்மையினர், இங்கு எந்த பாதுகாப்பைத் தங்களுக்கு விழைகிறார்களோ அதனை அமெரிக்க வாழ் இந்துத்துவர்கள் இந்தியாவில் தர மறுக்கிறார்கள். இது அசிங்கமான இரட்டை வேடம். இந்தியா உலகின் ஜனநாயக நாடுகளில், அதன் மக்கள்தொகையாலும் அங்கிருக்கும் பல கோடி சிறுபான்மையினராலும், அமெரிக்காவுக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயகம் உலகில் எங்கு சிதைவுற்றாலும் அது உலகெங்கிலுமுள்ள ஜனநாயகத்தைப் பலவீனமாக்கும். இன்று ஜனநாயகத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாக சமூக வலைதளங்கள் உருவெடுத்திருக்கின்றன. அரசுகளும் சமூகங்களும் இதுகுறித்து அக்கறையோடு உடனடியாக பலவித உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். எல்லாப் பழியையும் வலைதளங்கள் மீது போட்டுவிட்டு சமூகங்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. சமூக வலைதளங்களானவை ஒரே சமயத்தில் ஊதுகுழல்களாகவும் முகம் காட்டும் கண்ணாடிகளாகவும் நமக்குத் தோன்றுகின்றன. அதாவது, அடிப்படை வெறுப்பானது நம் சமூகத்தின் உள்ளே ஊற்றெடுக்கிறது. அதைத்தான் நாம் வெல்ல வேண்டும். ஆதாரச் சுட்டிகள்: 1.     https://www.wsj.com/articles/facebook-services-are-used-to-spread-religious-hatred-in-india-internal-documents-show-11635016354 2.     https://www.nytimes.com/2021/10/23/technology/facebook-india-misinformation.html 3.     https://www.nytimes.com/2021/10/25/business/facebook-papers-takeaways.html 4.     https://www.washingtonpost.com/technology/2021/10/24/india-facebook-misinformation-hate-speech/ 5.     https://www.washingtonpost.com/technology/2021/10/25/what-are-the-facebook-papers/ 6.     https://www.wsj.com/articles/facebook-hate-speech-india-politics-muslim-hindu-modi-zuckerberg-11597423346 7.     https://theprint.in/tech/facebook-research-flagged-inflammatory-content-against-muslims-in-india-says-wsj-probe/755878/ 8.     https://www.bbc.com/news/world-asia-india-54715995 9.     https://www.vice.com/en/article/v7gq98/wsj-investigation-of-facebook-india-links-with-bjp-sparked-political-row 10.  https://www.indiatoday.in/technology/news/story/facebook-turned-a-blind-eye-to-anti-muslim-hate-speech-and-propaganda-in-india-says-report-1868737-2021-10-24 11.  https://www.washingtonpost.com/world/asia_pacific/as-mob-lynchings-fueled-by-whatsapp-sweep-india-authorities-struggle-to-combat-fake-news/2018/07/02/683a1578-7bba-11e8-ac4e-421ef7165923_story.html 12.  https://news.yahoo.com/uproar-over-fabindia-commercial-highlights-085504363.html 13.  https://www.buzzfeednews.com/article/pranavdixit/koo-muslim-hate-india 14.  https://www.hindustantimes.com/india-news/twitter-says-its-algorithm-amplifies-right-wing-political-content-101634926182240.html 15.  https://www.thequint.com/news/india/clubhouse-twitter-spaces-hate-speech-islamophobia-casteism-bullying 16.  https://theprint.in/opinion/twitter-facebook-profited-a-lot-from-indias-hate-agenda-time-to-pull-the-plug-with-a-law/425047/ 17.  https://time.com/6112549/facebook-india-islamophobia-love-jihad/ 18.  https://foreignpolicy.com/2020/07/01/india-islamophobia-global-bjp-hindu-nationalism-canada/ 19.  https://thediplomat.com/2019/05/manufacturing-islamophobia-on-whatsapp-in-india/ 20.  https://www.rollingstone.com/feature/anatomy-of-a-fake-news-scandal-125877/ 21.  https://www.wsj.com/articles/facebook-executive-supported-indias-modi-disparaged-opposition-in-internal-messages-11598809348 22.  https://scroll.in/article/979033/ankhi-das-track-record-at-facebook-will-make-her-successors-unenviable-job-even-harder 23.  https://www.livemint.com/Politics/jkSPTSf6IJZ5vGC1CFVyzI/Death-by-Social-Media.html   https://www.arunchol.com/aravindan-kannaiyan-article-on-facebook-and-hate-arunchol?fbclid=IwAR1OpNcmY2gPAECDhu13ZpT0p907an_sxsWC0IBhayl1tfJN0h5EKDXZKEM
  • அருள் பொழியும் திருநல்லை பதி வாழி அழகான வடிவேலன் பதம் வாழி    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.