• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ராசவன்னியன்

சென்னை மெட்ரோ ரயில்...

Recommended Posts

 

 

கன்னியாகுமரியென்றால் திற்பரப்பு, மார்த்தாண்டம் பக்கம் குடியேறுங்கள்.

 

மிக அருமையான இயற்கை சூழல்..

 

என்ன, கொஞ்ச நாளில் நீங்களும் பாதி 'மல்லு'வாகிவிடுவீர்கள்..! :D

 

 

 

கடந்த வருடம் நண்பரிற்க்கு உதவியாக வந்த போது  மார்த்தான்டம் யாழ்ப்பாணமாகவே எனக்கு தென்பட்டது பேச்சு வழக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கிணறு,கமுகு,தென்னை அட்சரம் பிசகாமல் யாழ்ப்பாண வீடாகவே இருந்தன மறு நாள் சென்னையை பார்த்து அதிர்ச்சிதான் 15அடி  தள்ளி ஒண்டையுமே பார்க்க முடியல அவ்வளவு வாகன புழுதி புகை மனிதர்கள் என்னன்டு வாழ்கிறார்கள் என ஆச்சரியபடவேண்டிஇருந்தது திருவாணந்தபுர விமான நிலையத்தில் இறங்கி தமிழ் என தெரிந்தவுடன் மல்லுகள் தங்களுக்கு தெரிந்த தமிழில் கதைக்க முன்வந்தார்கள் நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை.

                                                            இவ்வளவிற்க்கும் நண்பர் தென்மாநிலகாய்கறியை மொத்தமாக லண்டனிற்க்கு இறக்கி கனிசமான அந்நிய செலவாணியை தமிழ்நாட்டுக்கு அனுப்புபவர் அதற்க்குரியதுகளை காட்டியும் பலனில்லை மட்டுமட்டாக 10 நிமிட தாமதத்துடன் பயனிகளின் முறைப்புகளுக்கு நடுவில் கூனிகுறுகி எமது சீட்டில் தாவிஇருந்தோம்.

Share this post


Link to post
Share on other sites

கடந்த வருடம் நண்பரிற்க்கு உதவியாக வந்த போது  மார்த்தான்டம் யாழ்ப்பாணமாகவே எனக்கு தென்பட்டது பேச்சு வழக்கும் பெரிய வித்தியாசம் இல்லை கிணறு,கமுகு,தென்னை அட்சரம் பிசகாமல் யாழ்ப்பாண வீடாகவே இருந்தன மறு நாள் சென்னையை பார்த்து அதிர்ச்சிதான் 15அடி  தள்ளி ஒண்டையுமே பார்க்க முடியல அவ்வளவு வாகன புழுதி புகை மனிதர்கள் என்னன்டு வாழ்கிறார்கள் என ஆச்சரியபடவேண்டிஇருந்தது திருவாணந்தபுர விமான நிலையத்தில் இறங்கி தமிழ் என தெரிந்தவுடன் மல்லுகள் தங்களுக்கு தெரிந்த தமிழில் கதைக்க முன்வந்தார்கள் நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை. இவ்வளவிற்க்கும் நண்பர் தென்மாநிலகாய்கறியை மொத்தமாக லண்டனிற்க்கு இறக்கி கனிசமான அந்நிய செலவாணியை தமிழ்நாட்டுக்கு அனுப்புபவர் அதற்க்குரியதுகளை காட்டியும் பலனில்லை மட்டுமட்டாக 10 நிமிட தாமதத்துடன் பயனிகளின் முறைப்புகளுக்கு நடுவில் கூனிகுறுகி எமது சீட்டில் தாவிஇருந்தோம்.

 

முன்னைய அனுபவமும், தற்போதைய தமிழரின் கையறு நிலையுமே அதற்கு காரணம். :(

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..!

உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..!!

 

Share this post


Link to post
Share on other sites

முன்னைய அனுபவமும், தற்போதைய தமிழரின் கையறு நிலையுமே அதற்கு காரணம். :(

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்..!

உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..!!

 

 

வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்...

ஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் இணையுங்கள் ராஜவன்னியன் .

 

இந்தியா ,தமிழ்நாடு ,சென்னை எனக்கு என்றும் அலுக்காது .

 

இந்தியாவை ஒருமுறை முற்றுமுழுதாக சுற்றுவதே என் கனவு .

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் தமிழ்நாடு மிகவும் பிடித்த இடம்.    இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஒரு வருடம்கூடப் போதாது.  அவ்வளவு இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்ப்பதற்கு.   :)   ஆனால், அங்கு வாழ்ந்திருக்காதவர்களுக்கு தமிழ்நாடு பிடிக்காது.  

 

மெட்ரோ ரயில் பற்றித் தொடர்ந்து பதியுங்கள் ராஜவன்னியன்.  அது நிரந்தரமாக வரும்வரை எந்த எதிர்பார்ப்பும்  இல்லை எனக்கு.  தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப முடியாது.   :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

ஜெயலலிதாவால் தமிழ்நாடும்...மோடியால் இந்தியாவும் முன்னேற எல்லாம் வல்ல கடவுளை வேண்டுவோம்...இவர்களைவிட்டால் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் முன்னேற்ற கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு யாரையும் தற்போது காணவில்லை....இவர்கள் அப்படியே ஈழத்தையும் தமிழ்நாட்டோடு சேர்க்கவும் (அல்லது ஒரு யூனியன் பிரதேசம் ஆகவாவது ஆக்கவேண்டும்..உக்ரைன் எதிர்கால டான்பாஸ்:) , ஜோர்ஜியாவின் அபகாசியா ..அமெரிக்காவின் புயேர்டோரிகோ மாதிரியாவது ) வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்....

Share this post


Link to post
Share on other sites

இந்த மெட்ரோவை விட மதுரை சர்வதேச விமாணநிலையமாகியும் கார்கோ சுங்கவாடி அமையாததால் மதுரை சுத்துவட்டாரபகுதியில் விளையும் காய்கறிகளை மல்லுகளின் விமானநிலையங்களிலும் தவமிருக்கின்றன.அதே காய்கறி வடநாடு செல்ல இரண்டுநாள் மும்பாய் ஏர்போர்ட்டில் இரண்டுநாள் விமானத்தில் ஒன்றரைநாள் ரொரண்டோவை அடைந்து மார்க்கம் தமிழ்கடையை அடைய கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்குமேல் போகின்றது இதுவே மதுரை விமானநிலையமாய் இருந்தால் அன்று பறித்த காய்கறி மூன்றுநாட்களுக்கு முன்னமே மார்க்கத்தில் இருந்து விலைபட்டு வீட்டு குளிர்சாதனபெட்டிக்குள் இருக்கும்.

                  காங்கிரஸ் இருக்கிறமட்டும் மல்லுக்களின் மறைமுக சாம்ராச்சியம் அவர்களால் தான் மதுரை விமாடநிலைய சுங்கவாடிபிரச்சினை நீள்கிறது என்றவர்கள் இப்ப மோடி வந்தும் தொடர்கிறது.எங்கெங்கு தமிழன் முன்னேற வழியுண்டோ அதெல்லாம் மற்றைய இனத்தவர்களால் அடைக்கபடுது.

Share this post


Link to post
Share on other sites

வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் (சென்னையில் இந்தியர்களிடமே கறக்கிறார்கள்) என்றால் ஏதாவது கறக்கலாம் என்பது அவர்களது எண்ணம்...நான் கடைசியாக வந்த பொழுது ஒரு திருமணத்திற்காக கொஞ்சம் நகைகளும் கொண்டுவந்தோம் ..சென்னை விமானநிலையத்தில் சுங்கஇலாகவினன் ஒருவன் என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக நகை கொண்டு போகமுடியாது..அது இது என்று இழுத்து கொண்டிருந்தான்...நானும் நீ செய்வதை செய் நான் ஒன்றும் செய்யமாட்டேன்..நகைகளை எனது பாஸ்போர்ட்டில் குறித்து விட்டி என்னை வெளியே விடு என்று கூறிவிட்டு நின்றேன்...அவன் எனக்கு போக்கு காட்டுவதற்காக அங்கே இங்கே என்று அலைந்து ஒரு அரைமணியை வீனாகினான்....எனது lineம் மூவ்பண்ண வில்லை...அவனே சிறிது நேரத்தில் என்னை வேண்டா வெறுப்பாக வெளியே விட்டான்... எங்களில் பிழையில்லாமல்..துணிந்து நின்றால்...இது போன்றவர்களை சமாளிக்கலாம்...

ஆனால் துணிவும்..நிறைய பொறுமையும் வேண்டும்...

 

நீங்கள் சொல்வது உண்மைதான்.

 

சென்னை விமான நிலையத்தில் சில சுங்க அதிகாரிகள் முறைகேடாக நடக்கிறார்கள், கையூட்டு வாங்குவதும் உண்மைதான். ஆனால் அவர்கள் ஆட்களுக்கேற்றார் போல் இப்படி நடந்துகொள்கிறார்களென நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன், நான் செல்கையில் பையில் நகைகள் வைத்திருந்தேன். 'ஸ்கேன்' செய்யும்பொழுது அதிகாரி என்னிடம் கேட்டார். நான் நேரே சுங்க அதிகாரியிடம் சென்று, இவ்வளவு நகைகள் நான் ஒன்றறை வருடங்கள் கழித்து திருமண நிகழ்வுக்காக கொண்டுவந்துள்ளேன் எனக் கூறி அழைப்பிதழையும் காண்பித்தேன். 'வெளிநாடு செல்வது சம்பாதிக்கத்தானே, முக்கிய நிகழ்விற்கு கூட சில நகைகள் கொண்டுவர இவ்வளவு கட்டுப்பாடுகளென்றால் எப்படி சார்?' எனக் கேட்டவுடன், 'சரி வேறெதுவும் தீர்வை கட்டவேண்டிய பொருட்கள் உள்ளனவா?' எனக் கேட்டு சோதித்துப் பார்த்துவிட்டு இல்லையென்றவுடன் 'சரி செல்லுங்கள்' என அனுப்பிவிட்டார். ஆனால் எலெcட்ரானிக்ஸ் பொருட்கள், அளவிற்கு மீறி தங்க நகைகள் வைத்திருப்போரை ஒதுக்கி வைத்து 'கவனித்த'வுடனோ, இல்லை தீர்வை கட்டியவுடனோ அனுப்பிவிடுகிறார்கள். அதிகாரிகளின் மனநிலையையும், பயணிகளின் உண்மையான நோக்கத்தையும், நடந்துகொள்ளும் விதத்தையும் பொறுத்தும், அன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. கட்டுப்பாடுகள், தீர்வைகள் ஒரே சீராக இருப்பதில்லை.

 

...நான்ங்கு நாள் பயனத்தில் என்ன குண்டு வைக்க வந்தியளா இருவரையும் மீனம்பாக்க தமிழ் அதிகாரி ஆங்கிலத்தில் வறுத்தெடுத்துவிட்டார் லஞ்சமாய் 50 பவுன் நோட்டை நீட்டுமட்டும் மனிசன் தமிழில் கதைக்கவேயில்லை...

 

முந்தைய பதிவில் நான் கூறியது, பெருமாளின் மேற்கண்ட விடயத்துக்காக. :)

 

நன்றி பெருமாள், அர்ஜூன், நாந்தான் மற்றும் தமிழச்சி.

Share this post


Link to post
Share on other sites

-----

 நான் நேரே சுங்க அதிகாரியிடம் சென்று, இவ்வளவு நகைகள் நான் ஒன்றறை வருடங்கள் கழித்து திருமண நிகழ்வுக்காக கொண்டுவந்துள்ளேன் எனக் கூறி அழைப்பிதழையும் காண்பித்தேன். 'வெளிநாடு செல்வது சம்பாதிக்கத்தானே, முக்கிய நிகழ்விற்கு கூட சில நகைகள் கொண்டுவர இவ்வளவு கட்டுப்பாடுகளென்றால் எப்படி சார்?'

-----

 

வன்னியன், சுங்க அதிகாரிக்கு போட்டது... உச்சி அடி.

அதிலை... சுங்க அதிகாரியின் மனம் இழகிவிட்டது. :D

Share this post


Link to post
Share on other sites

இந்த மெட்ரோவை விட மதுரை சர்வதேச விமாணநிலையமாகியும் கார்கோ சுங்கவாடி அமையாததால் மதுரை சுத்துவட்டாரபகுதியில் விளையும் காய்கறிகளை மல்லுகளின் விமானநிலையங்களிலும் தவமிருக்கின்றன...

 

...காங்கிரஸ் இருக்கிறமட்டும் மல்லுக்களின் மறைமுக சாம்ராச்சியம் அவர்களால் தான் மதுரை விமாடநிலைய சுங்கவாடிபிரச்சினை நீள்கிறது என்றவர்கள் இப்ப மோடி வந்தும் தொடர்கிறது.எங்கெங்கு தமிழன் முன்னேற வழியுண்டோ அதெல்லாம் மற்றைய இனத்தவர்களால் அடைக்கபடுது.

 

பெருமாளுக்கு பல உள்ளூர் விடயங்கள் தெரிந்திருக்கே! :lol::)

மதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்த்து கிடைத்துவிட்டால் அருகேயுள்ள திருவனந்தபுரத்திற்கு தென் தமிழ்நாட்டு பயணிகள் வருகையும், வருமானமும் குறையும் அதனால் திருவனந்தபுர விமான நிலையம் முக்கியத்துவத்தை இழக்கும் என்ற அச்சமே திரைமறைவு அரசியலுக்கு காரணம்.

தற்பொழுது திருவனந்தபுர கோட்டத்தோடு இருக்கும் கன்னியாகுமரி முதல் திருநெல்வேலிவரையுள்ள ரயில்வே கோட்டத்தை, மதுரையுடன் சேர்க்க பல வருடமாக போராடுகிறார்கள், அதற்கு இந்த மல்லுகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள், அவர்களுக்கு அனைத்தும் திருவனந்தபுரத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு எந்த முன்னேற்ற வசதியும் செய்வதில்லை.

தைப் பொங்கலுக்கு, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே எந்த சிறப்பு ரயில்களும் இயக்குவதில்லை, ஆனால் வீணாய்போன ஓணான் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் செல்லும். தென்னக ரயில்வேயில் புற்றீசல் பீடித்திருக்கும் மல்லுகளின் வீச்சு அப்படி!

 

Share this post


Link to post
Share on other sites

வன்னியன், சுங்க அதிகாரிக்கு போட்டது... உச்சி அடி.

அதிலை... சுங்க அதிகாரியின் மனம் இழகிவிட்டது. :D

 

அது ஒரு ஃப்ளோ வில் சொல்லிவிட்டேன் தமிழ்சிறி, அது ஒர்க்கவுட் ஆயிட்டது. :)

 

Share this post


Link to post
Share on other sites

மதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்த்து கிடைத்துவிட்டால் அருகேயுள்ள திருவனந்தபுரத்திற்கு தென் தமிழ்நாட்டு பயணிகள் வருகையும், வருமானமும் குறையும் அதனால் திருவனந்தபுர விமான நிலையம் முக்கியத்துவத்தை இழக்கும் என்ற அச்சமே திரைமறைவு அரசியலுக்கு காரணம்.

 

அண்ணெய் நீங்க மதுரை பக்கம் போயி கணகாலமோ? 2013 மதுரை சர்வதேசவிமாணநிலையமாகி srilankanair பறந்து கொண்டிருக்கு இரண்டொரு கிழக்காசிய விமாணங்கள் கூட இறங்கி ஏறுது அதுலாபமற்ற தடமாக கார்கோ மூவ்மென்ற் அற்று காணப்படுவதல் மற்றைய விமானகம்பெனிகள் மதுரையில் இறங்கி ஏற யோசிக்கினம்   நந்திமாதிரி cargo கிளியரன்ஸ் பன்னும் கஸ்டம்ஸ் என்னும் ஒருத்தர் கூட இல்லை இதனால் அறுசுவை உணவை பார்க்கமுடியுமே தவிர உண்ணமுடியாது என்ற நிலை மதுரைக்கு. கஸ்டம்ஸ் டீமை உருவாக்கி மதுரைக்கு வழங்குவது மத்திய அரசின் வேலை என்கிறார்கள்??

Share this post


Link to post
Share on other sites

அண்ணெய் நீங்க மதுரை பக்கம் போயி கணகாலமோ? 2013 மதுரை சர்வதேசவிமாணநிலையமாகி srilankanair பறந்து கொண்டிருக்கு இரண்டொரு கிழக்காசிய விமாணங்கள் கூட இறங்கி ஏறுது அதுலாபமற்ற தடமாக கார்கோ மூவ்மென்ற் அற்று காணப்படுவதல் மற்றைய விமானகம்பெனிகள் மதுரையில் இறங்கி ஏற யோசிக்கினம்   நந்திமாதிரி cargo கிளியரன்ஸ் பன்னும் கஸ்டம்ஸ் என்னும் ஒருத்தர் கூட இல்லை இதனால் அறுசுவை உணவை பார்க்கமுடியுமே தவிர உண்ணமுடியாது என்ற நிலை மதுரைக்கு. கஸ்டம்ஸ் டீமை உருவாக்கி மதுரைக்கு வழங்குவது மத்திய அரசின் வேலை என்கிறார்கள்??

 

மதுரைக்கு போகலையா? :o:D

 

சென்ற வ்ருடம் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைத்தது பற்றி யாழில் ஏற்கனவே திரி பதிந்த ஞாபகம் உள்ளது.

நான் சொல்ல வந்த விடயம், இன்றும் அந்த தடங்கல்கள் தொடர்கிறது என்பதையே..!

 

போதிய பயணிகள் போக்குவரத்து இல்லையென காண்பித்து கிடைத்த அங்கீகரத்தை ரத்து செய்யவே நீங்கள் மேற்கூறிய தடைகள், வசதி குறைவுகள் இன்ன பிற.

 

சுங்கத்துறை மத்திய அரசின் வேலையே ஆகும். அவர்கள்தான் போதிய இயந்திரங்களையும், மனித வளத்தையும் மதுரை விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites

மதுரைக்கு போகலையா? :o:D

 

சென்ற வ்ருடம் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்த்து கிடைத்தது பற்றி யாழில் ஏற்கனவே திரி பதிந்த ஞாபகம் உள்ளது.

நான் சொல்ல வந்த விடயம், இன்றும் அந்த தடங்கல்கள் தொடர்கிறது என்பதையே..!

 

போதிய பயணிகள் போக்குவரத்து இல்லையென காண்பித்து கிடைத்த அங்கீகரத்தை ரத்து செய்யவே நீங்கள் மேற்கூறிய தடைகள், வசதி குறைவுகள் இன்ன பிற.

 

சுங்கத்துறை மத்திய அரசின் வேலையே ஆகும். அவர்கள்தான் போதிய இயந்திரங்களையும், மனித வளத்தையும் மதுரை விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 

 

இது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசிலும் பார்க்க தமிழ்நாட்டு அரசையும் தமிழ்நாட்டிலிருந்து போன MPகளையுமே குறை சொல்லவேண்டும்.....கூடி கொள்ளையடிகின்றபடியால் வாய்மூடி மௌனியாக இருகின்றார்கள்....நேர்மையானவர்களாக இருந்திருந்தால் நாடாளுமன்றில் பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்பி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பார்த்திருப்பார்கள்.....இப்போதும் 37 பேரும் என்ன செய்கிறார்கள் என்று அம்மாவுக்கு தான் வெளிச்சம்...

Share this post


Link to post
Share on other sites

ஒரு மாதத்திற்கு "100000" பயணிகள்...

ஆகவே ஒரு நாளைக்கு அண்ணளவாக "3000" பயணிகள்...

ஆகவே ஒரு நாளைக்கு "15-20" விமானங்கள்...(குத்து மதிப்பாக)

அதாவது மணித்தியாலத்துக்கு "1" விமானம்...

எப்படி இந்த விமானநிலையத்தை பராமரிக்க முடியும்?

இந்த விமானங்களிடம் இருந்து வரும் வருமானம் இந்த விமானநிலையத்தின் 5% வீதமான செலவுக்கு கூட வருமா என்பது கேள்வி.....

Edited by naanthaan

Share this post


Link to post
Share on other sites

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து விவரணை கீழே...

 

 

fEqUAo.png

எங்கை போனாலும் துர் அதிஸ்டதேவதையை காவும் mihin ம் வழித்தடம் cmb யிம் தான் கொட்டமடிக்குதுகள் விளங்குமா?  :D

Share this post


Link to post
Share on other sites

சென்னை ஆலந்தூர் - கிண்டி மெட்ரோ வழித்தடத்தில் சில நாட்களுக்குமுன் பாதியில் தொங்கியிருந்த இரும்புப் பாலம் அமைக்கும் பணி, மேலும் முன்னேற்றம் அடைந்து இறுதி நிலையை எட்டியுள்ளது..

 

சென்னை Larsen & Toubro கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொள்கிறது.

 

 

TBc05Cd.jpg?1

 

7W1Svyu.jpg?1

 

H4QGvv8.jpg?1

 

7wm8zj4.jpg?1

 

kEqG5mO.jpg?1

 

 

 

யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாவற்குழி ரயில் பாலமும் தற்பொழுது முடிந்திருக்கணுமே! :o

Share this post


Link to post
Share on other sites

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

 

‘மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்… நான் மெட்ரோவில் ஊரைச் சுத்தப் போறேன்!’- என இனி உற்சாக ஸ்டேட்டஸ் தட்டலாம்; ஓடும் மெட்ரோ ரயிலில் சாய்ந்துகொண்டு செல்ஃபி க்ளிக்கலாம்!

சென்னையின் பெருமித அடையாளமாக, மிகமிக விரைவில் பறக்கவிருக்கிறது மெட்ரோ ரயில். (ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் மெட்ரோவில் கேட்காது.) கொல்கத்தா, டெல்லி, பெங்களூருக்கு அடுத்து, இந்தியாவில் ஓடவிருக்கும் நான்காவது மெட்ரோ… சென்னை மெட்ரோ!

2014 டிசம்பர் மாதம் தன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் சென்னை மெட்ரோ, முதல் கட்டமாக மேம்பாலங்களில் மட்டும் இயக்கப்படும்; பின்னர் படிப்படியாகச் சுரங்கப்பாதைகளிலும் பறக்கும். சுமார் 14,600 கோடி பட்ஜெட்டில், சென்னை நகரின் உள்கட்டமைப்பையே ‘பட்டி – டிங்கரிங்’ பார்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றன மெட்ரோவுக்கான தடங்கள். 

 

‘சென்னை மெட்ரோ ரயில்’ என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம்,  இரண்டு வழித்தடங்களிலுமாக மொத்தம் 45 கி.மீ தூரத்தைக் கடக்கும். மெட்ரோ பயணக் கட்டணம், எட்டு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 23 ரூபாய் வரை இருக்கலாம். பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை பயணிக்கும் பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கவிருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்துக்கு அருகிலேயே பரங்கிமலை  மெட்ரோ ரயில் நிலையமும் வரவிருக்கிறது. எனவே, புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று ஜங்ஷன்களும்  பரங்கிமலையில் சந்திக்கவிருக்கின்றன. இதனால்,   பரங்கிமலையின் ரியல் எஸ்டேட் மதிப்பு… எக்கச்சக்கத்துக்கு  எகிறலாம்!  

p14.jpg

சரி… மெட்ரோ ரயில் பயணம் எப்படித்தான் இருக்கும்? ஒரு டிரெய்லர் விசிட் அடித்தேன்!

போக்குவரத்து நெரிசல், தூசி, புகை,  கிளுகிளு கிளினிக் நோட்டீஸ்கள், முறுக்கு வியாபாரம் மற்றும் முறுக்குக் கம்பி விளம்பரங்கள்… என எதுவும் மெட்ரோவில் இருக்காது.

ஸ்மார்ட் என்ட்ரி! 

எஸ்கலேட்டர், படிகள், லிஃப்ட் என சகல வசதிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும். சில ரயில் நிலையங்களுக்கு உள்ளேயே நகரப் பேருந்துகள் வந்துபோகும். புறநகர் ரயில்கள்போல ஏகப்பட்ட பெட்டிகள் இருக்காது. மொத்தமே நான்கு பெட்டிகள்தான். அதனால் பிளாட்பாரமும் சின்னதாகவே இருக்கும். புறநகர் ரயில் நிலையங்களின் பிளாட்பார பெஞ்சுகளில் பொழுதுபோகாமல் கதையடிப்பதும், ஜோடியுடன் சிட்டிங் போட்டு சில்மிஷம் செய்யும் கதையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது. பயணத்துக்கான டிக்கெட்  வாங்கினால்தான் பிளாட்பாரத்துக்குள் நுழைய முடியும். டிக்கெட், ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தில் இருக்கும். அதை இயந்திரத்துக்குள் பொருத்தினால்தான், வாயில் தடுப்பு உங்களை உள்ளேயே அனுமதிக்கும். இதனால் ‘வித்-அவுட்’ பயண வாய்ப்பே இல்லை. 

க்யூ ப்ளீஸ்…

மின்சார ரயில்போல அடித்துப் பிடித்து போய் இடம்பிடிக்க முடியாது. ஒரு பெட்டிக்கு நான்கு வாசல்கள். ரயில் வந்து நிற்கும்போதுதான் கதவுகள் திறக்கும். பிளாட்பாரத்தில் கதவு வரும் இடத்தில் கச்சிதமாகத் தடுப்பு அமைத்திருப்பார்கள். லிஃப்ட் வாசல்போல. அங்கே வரிசையாகக் காத்திருக்க வேண்டும். ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், வரிசையாகத்தான் ரயிலுக்குள் போக முடியும்!

ஃபுட்போர்டு இல்லை… ஜன்னல் ஸீட் இல்லை!

ரயிலின் சுவர்களை ஒட்டி நீளமாக இருக்கைகள் இருக்கும். பயண தூரம் குறைவு என்பதால் நிற்பவர்களுக்கே அதிக கோட்டா. கதவுகள் இறுகப் பூட்டிக்கொள்ளும். எனவே, ஃபுட்போர்டு டிராவல் வாய்ப்பே இல்லை. முழுக்கவே ஏ.சி என்பதால் எப்போதும் ஜில்ஜிலீர் பயணம்தான். சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில், பிளாட்பாரத்தைச் சுற்றி கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பயணத்தில் 1,276 பயணிகள் பயணிக்க முடியும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் மெட்ரோவில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தலாம். ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்குப் போகலாம். 

p14b.jpg

மூன்றாவது கண்!

ரயிலுக்குள் சிகரெட், குளிர்பானம், உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு தடா. பான்பராக், வெற்றிலை, மாவா, எச்சில் துப்ப முடியாது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவாகும். எனவே, பாதுகாப்புக்கு உத்தரவாதம்!

எமர்ஜென்சிக்கு என்ன செய்வது?

அவசர, அபாய காலங்களில் ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலி இதில் கிடையாது. பெட்டியில் சில இடங்களில் மைக் பொருத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள சீலை உடைத்து ஓட்டுநரிடம் பேசி விவரம் சொல்லலாம். ஆனால்,  தேவை இல்லாமல் அதை உபயோகித்தால், 1,000 ரூபாய் நோட்டைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அபராதம்! ரயிலின் கதவுகளை ஓட்டுநர்தான் திறக்க/மூட முடியும். அவசரக் காலத்தில் கதவைத் திறக்க, கதவு அருகே ஒரு குமிழ் வைத்திருப்பார்கள். அதன் மூடியை உடைத்து, உள்ளே இருக்கும் சிவப்பு நிறக் கருவியை இயக்கினால் கதவு திறக்கும்.

மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை!

30 விநாடிகள்தான் ஸ்டேஷன்களில் மெட்ரோ ரயில் நிற்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் இறங்க வேண்டும் எனில், பிரத்யேக மைக் மூலம், ‘வரும் ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறங்க வேண்டும். கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்’ என்று ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தால், ஓட்டுநர் கூடுதல் நேரம் வண்டியை நிறுத்துவார்.

உள்ளே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருக்கைகள் உள்ளன. அதன் அருகிலேயே சக்கர நாற்காலியை வைத்துக்கொள்ள முடியும்.

மகளிர் மட்டும்!

நான்கில் ஒரு பெட்டி மகளிருக்கு மட்டும். அதில் கைப்பிடிகள்  தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் சரிபாதி, ‘முதல் வகுப்பு’க்கு. பிற வகுப்புகளுக்கும் முதல் வகுப்புக்கும் குஷன் இருக்கைகள் மட்டுமே வித்தியாசம்! 

p14d.jpg

‘தடக் தடக்’ இல்லை!

மெட்ரோ ரயில் பாதை மீட்டர்கேஜும் இல்லை; பிராட்கேஜும் இல்லை. ஸ்டாண்டர்டுகேஜ். கருங்கல் ஜல்லியின் மேல் தண்டவாளங்கள் போடப்படவில்லை. கடினமான ரப்பர் புஷ் மேல் தண்டவாளங்களை அமைத்திருப்பதால், ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் இருக்காது.

சொற்ப கி.மீ சோதனை ஓட்டமே பரவச அனுபவமாக இருந்தது. மேம்பாலத்தில் உயர உயரக் கட்டடங்களுக்கு நடுவே மெட்ரோ ரயில் வளைந்து நெளிந்து வழுக்கிச் செல்வது… ஆஹா அனுபவம். இனி, சென்னை விடுமுறை பேக்கேஜில் மெட்ரோவும் இடம் பிடிக்கும்!

கொல்கத்தா, டெல்லியில் ஊரின் பெயரையே மெட்ரோவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் பெங்களூரு மெட்ரோவுக்கு ‘நம்ம மெட்ரோ’ என்று பெயர். ஆக, சென்னை மெட்ரோவுக்கு என்ன பெயர் வைப்பார்கள்?

http://senthilvayal.com/2014/09/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F/#more-24584

 

Share this post


Link to post
Share on other sites

Update:

 

 

 

Metro-Rail.jpg

 

சென்னையின் புதிய வசதியான மெட்ரோ தொடருந்து சேவையின் ஒரு பகுதி, இந்த வருட இறுதியில் கோயம்பேட்டிற்கும் ஆலந்தூருக்கும் இடையேயான சுமார் 10 கி.மீ வரை மேம்பால வழியில் இயக்கப்படலாமென செய்திகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் தற்பொழுது கிடைக்கும் செய்திகளைப் பார்த்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை தமிழர் திருநாளாம் பொங்கலுக்குக் கூட பொங்காது போல தெரிகிறது. :unsure::o

இதற்கான காரணிகள் பல கட்ட வேலைகளில் இன்னமும் முழுமையடையாமல் இருப்பதாக தெரிகிறது. மிக முக்கியமாக கோயம்பேட்டிலிருந்து அனைத்து மெட்ரோ ரயிலின் இயக்கங்களை மத்திய இடத்திலிருந்து கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையில்(Master Control Room) மென்பொருட்களின் சோதனையும், அதன் மேற்பதிப்புகளும் இன்னமும் முழுமையாக நிறுவப்படாமை.

மெட்ரோ ரயில்களின் கட்டுப்பாடு மற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஜெர்மனி நிறுவனமான ஸீமன்ஸின் (Siemens) மென்பொருட்களாகும். ஸ்கேடா (SCADA) என்ற தானியங்கி தொழிற்நுட்ப முறையில் இயக்கப்படும் இந்த பொறிமுறையின் சோதனைகளையும், மென்பொருளின் மேற்பதிப்புகளின் மூலம் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சோதனைகளை இன்னமும் இந்த நிறுவனம் முடித்தபாடில்லை.

மேற்கூறிய நிறுவனத்தின் அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர், பெங்களூரிலிருந்து இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு பொறிமுறை துறையினர் அனைத்து பொறிமுறைகளையும் முழுமையாக இயக்கிப் பார்த்து தடையில்லா சான்றிதழ் வழங்கிய பின், தில்லியுலுள்ள மத்திய ரயில்வே அமைச்சு இயக்கத்திற்கான இறுதி அங்கீகாரம் வழங்க வேண்டும்!

ஆக, கூட்டிக் கழித்துப்ப பார்த்தால், அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம்

" ஜிக்கு புக்கு.. ஜிக்கு புக்கு.. மெட்ரோ ரயிலே...
மேம்பாலத்தில் கலக்குது பார் குயிலே...! "

என சென்னைவாசிகள் பாடலாம், ஆடலாம்! :lol:

 

செய்தி மூலம்:

 

இந்தியன் எக்ஸ்பிரஸ்!

 

 

Share this post


Link to post
Share on other sites

சென்னை மெட்ரோ இரயில் திட்ட வேலைகளினால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையப் பகுதியிலும், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடப் பகுதியிலும் சடுதியில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இப்பகுதியிலிருக்கும் புராதன சின்னங்களான பழைய கட்டிடங்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து கட்டிடங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இவ்விடத்தில் எதிர்காலத்தில் எப்படி நான்கு இரயில் முனையங்கள் இணைக்கப்படும் என்பதை கீழேயுள்ள படம் விளக்குகிறது.

இணைக்கப்படபோகும் இரயில் முனையங்கள்:

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்
பார்க் டவுன் புறநகர் இரயில் நிலையம்(Sub Urban)
பார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையம் (MRTS)
சென்னை மெட்ரோ இரயில் நிலையம்.

 

 

25i3ep3.jpg

 

 

பட உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

 

.

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

Update:

 

Chennai Metro Rail Phase-I Extension Approved.

 

சென்னை வண்ணாரப்பேட்டை (Washermenpet) வரை உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் (விம்கோ நகர்)
வரை நீட்டிப்பதற்கான அனுமதி கடந்த புதன்கிழமை (நவம்பர், 12) வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம். வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

 

மேலும் சென்னை மெட்ரோ இரயில் சேவை வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் அறிவித்தார்.

 

 

 

metro_2202287e.jpg

 

 

 

இந்து ஆங்கில நாளிதழ்

Share this post


Link to post
Share on other sites

Update:

 

விமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு 2015 டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்..!

 

metro1.jpg     metro2.jpg


சென்னை விமான நிலையம் - எழும்பூர் இடையே அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறினார்.

சென்னையில் ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையிலான சுரங்கப் பாதை பணி சனிக்கிழமை முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் பாலத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

ஷெனாய் நகரில் இருந்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் இடையே முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கம் தோண்டுவதில் இருந்து வெளி வரும் மண் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. சுரங்கப் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 60 சதவீதம் ரயில் நிலையப் பணிகள் சுரங்கத்தில் முடிவடைந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடங்கப்படும்போது திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாக இருந்தது. இப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியாகும். சென்னையில் சுரங்கப் பாதை பணியை மேற்கொள்வது சவாலான விஷயம். இங்கு மண், பாறை என வெவ்வேறு இடங்களில் நிலங்களின் தன்மை மாறுபடும். இதன் காரணமாக சுரங்கம் தோண்டும் டனல் போரிங் இயந்திரத்தின் பிளேடுகள் அதிகமாக சேதமடையும்.

ஜூன் மாதம் சோதனை ஓட்டம்: கோயம்பேடு - எழும்பூர் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும். மேலும் விமான நிலையம் - எழும்பூர் இடையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திலான உயர் நிலை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து அடுத்தாண்டு டிசம்பரில் தொடங்கப்படும். மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை 75 நகரங்களில் தேவைப்படுகிறது. அங்கெல்லாம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கலாம் என்றார் ராமநாதன்.
 

புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள்:

1. மாதவரம் - வேளச்சேரி
2. மாதவரம் - கிழக்கு கடற்கரை சாலை
3. கோயம்பேடு - மயிலாப்பூர் லஸ்

இந்த மூன்று புதிய மெட்ரோ ரயில் திட்டங்களும் ஆய்வில் உள்ளன.

 

 

தினமணி

 

Share this post


Link to post
Share on other sites

metro_1_2243700g.jpg

தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | படம்: க.ஸ்ரீபரத்

 

metro_2_2243701g.jpg

 

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ஷெனாய்நகர் - திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பெரிய இயந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். 2. தண்டவாளம் பதிப்பதற்கு தயார் நிலையில் சுரங்க வழிப் பாதை.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-2016-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article6690619.ece?homepage=true

 

Share this post


Link to post
Share on other sites

Update:  Chennai Metro Rail Project work @ Anna Nagar Ramp

 

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம்-2ல், கோயம்பேடு - அண்ணாநகர் சுரங்க வாயிலின் இறுதிக் கட்டத்தின் திறப்பு, சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் வெளிப்பாட்டை காண ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

 

 

10868214_936305846382607_471165809003135

 

16024411292_0948a2e155_b.jpg

 

15839050679_5f02a077c6_b.jpg

 

10363833_936306013049257_662265822117539

 

15999325206_24dd98c942_b.jpg

 

15405465293_14da4fb03a_b.jpg

 

10857958_936305786382613_800753509231392

 

Source:CMRL FB.

Edited by ராசவன்னியன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites