Recommended Posts

வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில்
அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து
பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு
தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில்
என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம்

விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல்
எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என
எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம்
பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா
நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி


அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து
நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல
இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும்
பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும்
கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க

ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில்
எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய்
ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா
அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என்
வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை

அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில்
போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு
புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன்
இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும்
சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு

மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என்
மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம்
நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன்
அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை
பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய்
எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு

இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும்
என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து
புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் ..!

 

யோகு அருணகிரி .

 

1069240_4500581852461_1424594751_n.jpg

  • Like 7

Share this post


Link to post
Share on other sites

அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில்
போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு
புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன்
இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும்
சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு
///////

 

என்னைப் பொறுத்தவரையில் வளர்சிக்குப் பால்பேதம் கிடையாது . இதில் வேண்டும்என்றே உங்களைத் தாழ்த்துகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது .மேலும் பல கவிதை வடிக்க எனதுது மனங்கனிந்த வாழ்த்துக்கள் அஞ்சரன் :) .

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி அஞ்சரன்

 

அப்படியே  இருந்து விடுவேண்டும் என்பது எல்லோரது விருப்பமும் தான்

ஆனால் அது பெரும் சுயநலமல்லவா?

மற்றவரும் அனுபவிக்க வழி விட்டு

நாமும் பொம்மை  செய்வோம்..........

 

http://www.youtube.com/watch?v=v9s-e5f8MR4

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி  அஞ்சரண்  !

Share this post


Link to post
Share on other sites

கோமகன் அண்ணே அந்த வயதில் எழுத்த கேள்வி

 

இப்ப தெளிவா இருக்குறம் ஏலே :p 

 

நன்றி கருத்துகூறிய  அனைவருக்கும் .

Share this post


Link to post
Share on other sites

ஐயா அஞ்சரன் அசத்திட்டீங்க....பொண்ணுங்க பெரிய மனுசியானா ஒன்றாக விளையாடித்திரிந்த பையன்களைப்பற்றி யாருமே சிந்திப்பதில்லை. உங்கள் எழுத்துகள் அவற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது பாராட்டுகள் உரித்தாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி அக்கா .

Share this post


Link to post
Share on other sites

 பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா

நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி

 

யோகு அருணகிரி .

 

 

இது தான் பிரச்சனை :lol: 

 

கவிதைக்கு நன்றி அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.