Jump to content

யாழ்கள கவிகளிடம் ஒரு பணிவான கேள்வி .....


Recommended Posts

அச்சு யந்திரம் வர முன்னர் இலக்கியங்களை நினைவுபடுத்திப் பாதுகாக்கும் அவசியம் இருந்தது. இதனால் பாடல்கள் மட்டுமன்றிக் கவிதைகளும் பாடக்கூடியதாக எழுதப்பட்டு வந்தது. இன்று அந்தத் தேவையில்லை.

இப்போது பாடல் இசையின் இலக்கணத்துக்கு கட்டுப் பட்டது என்பது பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரது இசை அல்லது  எழுதும் கவிஞனைக் கவர்ந்த தாளம் அல்லது மெட்டுக்களில்தான் இப்போ பெரும்பாலான பாடல்கள் எழுதப்படுகிறது. கவிஞன் தனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு தாளம்/மெட்டைப் பிடித்து எழுதும்போது இசையமைப்பாளரால் அதே பாடலை பல்வேறு மாறுபட்ட மெட்டுக்களில் பாடமுடியும்.  தாளக்கட்டுக்கு மெட்டுக்கு இடறும் சொற்களை இசைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு கவிஞன் தயங்கத்  தேவையில்லை.

 

இனித் தமிழர் அடிமையென தலைபணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின் வழிதொடர்தல் இல்லை

இனித் தமிழர் மானுடத்தின் விடுதலை என்றெழுந்தார்

இனித் தமிழர் உலகத்தின் விலங்குகளும் தகர்ப்பார்

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

ஜாதி மத பேதமின்றி

செந்தமிழர் கூடி

நீதி நெறியோடு என்றும்

வெற்றி வாகை சூடி

பாங்கொலிக்கும் பள்ளி

பாடும் கோவில் மணிகள்

மங்களமாய் எங்களது

மண்ணில் வாழ்வு எழுக

சிங்களமே ஏன் எமது மண்மீது வந்தாய் - நீ

சிந்தாத செங்குருதி ஏன் சிந்துகின்றாய்

பண்டாரவன்னியன் படை நடந்த காடு

பணியாது ஒரு போதும் ஈழவர் எம் நாடு

வணக்கம் புலவரே உங்கள் யதார்த்தமான கருத்திற்கு மிக்க நன்றிகள் .உங்கள் அனுபவமும்,பாண்டித்தியமும் ,எம்மைப்போல வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு நிச்சயம் தேவை .

 
 
மேலும் நீங்கள் கீழே எழுதிய வரிகள் இசைக்கன்னுடன் பார்த்தேன் .இசை அமைப்புக்கு இலகுவாகவும்,சந்தங்களை ,தாளக்கட்டுக்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது .எங்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .
 
உங்களால் முடிந்தால் மாவீரர் பாடல் ஒன்று எழுதி தரமுடியுமா .என்னில் நாம்  இப்போ அவர்களை வணங்கும் முகமாக ஓர் இசைத்தட்டை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறோம்.
 
நன்றி புலவரே . 

விசுகு சொன்ன கருத்தே.... எனதும், த‌மிழ்ச்சூரிய‌ன். :)

மிக்க நன்றி சிறி அண்ணா உங்கள் கருத்திற்கு.

Link to comment
Share on other sites

கவிஞனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் இந்தச் சச்சரவுகள் அதிகம் த.சூ

எப்போது கவிஞன் காயப்படாமலும் இசைக்கும் இசைஞன் திணறாமலும் இசையமைப்பாளன் சோராமலும் ஒரு பாடல் வெளிப்படுகிறதோ அதுதான் அப்பாடலுக்கான வெற்றியை நிர்ணயிப்பது மட்டுமல்ல சாகாவரம் பெற்ற பாடலாகவும் அமையும்.

வணக்கம் சகாரா அக்கா மிக்க நன்றிக்க உங்கள் யதார்த்தமான கருத்திற்கு .நன்றி அக்கா .

உங்கள் முயற்சிக்கு என்னால் பங்களிக்க முடியாமாயின் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மிக்க நன்றி புலவர் உங்கள் யதார்த்தமான பதிலுக்கு .உண்மையில் என்னை தட்டிக்கொடுக்க நினைக்கும் உங்களைப்போன்றவர்களது கருத்துக்களும், அக்கறைகளும் எனக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது ..........
 
நிச்சயம் உங்கள் பங்களிப்பும் இதில்  இருக்கும் ...........இந்த இசைத்தட்டை வருகிற மாவீரர் நாள் அன்று வெளியிடும்போது உங்கள் உதவிகள் நிச்சயம் தேவைப்படும் ..............உங்களால் கவிதை ,அல்லது இசை சம்பந்தமாக செய்யமுடியும் என்றால் என்னுடன் நிச்சயம் தொடர்புகொள்ளுங்கள் நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழரதும்

சகாராவினதும் கருத்து  மிக  மிக  முக்கியமானவை  தமிழ்ச்சூரியன்

 

அவர்களிடமிருந்து பாட்டுக்கிடைத்தால்

யாழுக்கு  மட்டுமல்ல

தமிழுலகுக்கே  பெருமை  சேர்க்கும் தங்கள்  பாடல்

(விடாதீர்கள் -  கலைத்துப்பிடித்து கறந்து விடுங்கள் :icon_idea: )

Link to comment
Share on other sites

தோழரதும்

சகாராவினதும் கருத்து  மிக  மிக  முக்கியமானவை  தமிழ்ச்சூரியன்

 

அவர்களிடமிருந்து பாட்டுக்கிடைத்தால்

யாழுக்கு  மட்டுமல்ல

தமிழுலகுக்கே  பெருமை  சேர்க்கும் தங்கள்  பாடல்

(விடாதீர்கள் -  கலைத்துப்பிடித்து கறந்து விடுங்கள் :icon_idea: )

உண்மை அண்ணா ,சகாரா அக்கா என்னுடன்  பாடல் சம்பந்தமாய் தொடர்பு கொள்வதென்று கூறியுள்ளார் .காத்திருக்கிறேன் .
 
புலவர் அவர்களுடன் நான் தனி மடலில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். 
Link to comment
Share on other sites

எல்லா நிலைகளிலும் மனஉணர்வு  முன்னிலைப்படும் தன்னுணற்ச்சிப் பாடல்கள்தான் பெரும்பாலும் மக்கள் மனசில் நிலைக்கிறது. அறிவு சார்ந்து அறிக்கைகள்போல உள்ள பாடல்கள் பெரும்பாலும் பிரசார தன்மை உள்ளவை.குறித்த தேவைக்கானவை.  அப்படி பிரசாரத்தைக்கூட தன்னுணர்வாக இசைபிசகாமல் எழுதுவது வல்லமை.

 

முன்னர் நானும்கூட கவிஞன் விட்டுக்கொடுக்கக்கூடாது என்றுதான் நினைத்தேன். அதனால்தான் சினிமா வாய்ப்புக்களை ஒதுக்கிவிட்டேன். கவிஞன் கவிதையில் சமரசத்துக்குப் போகக்கூடாது. ஆனால் கவிதை வேறு பாடல்கள் வேறு பாடல் வேறு பாடல் இசை சார்ந்து எழுதுவது என்பதை உணர்தல் முக்கியம்.

 

இசைக்கலைஞனின் எல்லைகளுக்குள் தான் சொல்லவந்ததைப் பொருத்தக்கூடிய மந்திரச் சொற்க்கள் சொற்பஞ்சமில்லாத கவிஞனிடம்  எப்பவும் இருக்கவே இருக்கும்.

இசைஞானம் கற்பனை வளம் உள்ள இசை அமைப்பாளனோடு பணிபுரிய இணங்க வேண்டும். இசைஅமைப்பாளனோடு மோதாமல் இசைந்த சொற்க்களைத் தேடிக்  கண்டெடுக்கவேனும். 

 

ஈழத்து முன்னோடி இசை அமைப்பாளர் கண்ணன் ஒருமுறை என்பாடல் ஒன்றைபார்த்துவிட்டு நூலக புத்தக அலுமாரிமாதிரி இவ்வளவு சொற்க்கள் நிறைந்திருந்தால் இசைக் கலைஞனுக்கு தெரிவு வாய்ப்புக் குறைவு என்று சொன்னார். அது அனுபவ வாக்கு. படலுக்கான வெளியை கவிஞன் இசை அமைப்பாளருடன் தாராளமாக பகிர்ந்துகொள்ளவேண்டும். புறநடைகள் இருந்தாலும் இசைக்கலைஞனுக்கான இடத்தை space ஆக்கிரமிக்காமல் சில வரிகளில் சொல்வதே சிறந்த பாடலாக முடியும். சிலப்பதிகாரம் வாசிக்கும்போது கவிதை வரிக்கும் பாடல் வரிக்குமுள்ள நுட்ப்பமான வேறுபாடுகளை உணரலாம்.

 

தமிழ், உங்கள் மெட்டு ஒன்றை இங்கு போடுங்களேன். 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி புலவரே ..............வெகு விரைவில் மெட்டுடன் உங்களிடம் வருகிறேன்.

நீங்கள் விரும்பினால் வரிகளை எழுதினாலும் ,அதற்கு மெட்டு போடலாம் புலவரே .
 
உங்கள் தனிமடலை ஒரு தடவை பாருங்கள் புலவரே ................மீண்டும் நன்றிகள்.
Link to comment
Share on other sites

  • 1 year later...

யாழ் உறகளுக்கு !!எனக்கு !!நாடகம்  .  நகைச்சுவை நாடகம் .வில்லுப்பாட்டு. தளலயம் .போன்ற படைப்புக்கள்

தேவை!!நிறைந்த படைப்பாளிகளை கொண்ட இணையஉறவுத் தளம்

என்பதால் என் அன்பான கோரிக்கையை சிந்தனைக்யெடுத்து சிந்திக்காது

உதவிபுரிவீர்கள் என்றநம்பிக்கையில் இதையெழுதுகின்றேன் 

உதவ விருதம்பினால் kayanthi@gmail.com தொடர்வுகொள்ளவும்

!!எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வாழ்கையில் ஏமாற்றங்களோ அதிகம் !!

Link to comment
Share on other sites

இந்த திரியில் 5 வில்லிசைக் கதைகள் உள்ளன.

 

https://www.youtube.com/user/tamilamutham2011/videos

Link to comment
Share on other sites

  • 1 year later...

நன்றிகள் நண்பா!!!

ஆனால் எனக்கு யாருடையது என்றாலும் எந்த மேடையிலும்

ஏற்றிடா ஆகங்கள் தேடுகின்றேன் இன்னும் தேடிக்கொண்டே இருக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.