Jump to content

25ம் ஆண்டு வீரவணக்கம்


Recommended Posts

Lepdinan-Maamaa-Thesakkaarru-600x849.jpg

லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.

21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில்  இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள்.

தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது.

எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன.

தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்டாது.  

தமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் விதைத்த அவலத்தின் தொடராக இந்த மாவீரனின் வீரமரணத்தையும் தமிழீழ மக்களின் மனதில் மீளாத் துயராக விதைத்துச் சென்றது.

தமிழீழ வேள்விவேதத்தில் இலட்சிய உறுதியுடன் இலங்கை - இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.