Jump to content

காட்டுக்கோழியும் நாங்களும்


Recommended Posts

நாங்கள் திருமலைக்காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். காட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். காட்டு வாழ்க்கையில் கடினமாக இருப்பது உணவுதான். பசிக்குச் சாப்பிடலாம் ஆனால் சுவைக்கு சாப்பிடுவது என்றால் சற்றுக்கடினம் தான். வேவுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காகவோ சிறு அணிகளாகப் பிரிந்து செல்லும் நேரம், இடையில் உடும்பு அகப்பட்டால் அன்றைக்கு நல்ல சாப்பாடுதான். அல்லது, ஆறு, குளம், என தண்ணீர் தேங்கி நின்று ஓடும் இடமாகப் பார்த்து ஓட்டை வலைகளை வைத்து மீன் பிடித்து சாப்பிடமுடியும்.
 
அணிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சென்றால் பன்றி, மான், மரைகளை வேட்டையாடித் தூக்கி வந்து நல்ல இறைச்சியுடன் சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால், அந்த இடங்களில் இராணுவத்தின் தாக்குதல் ஆபத்துக்கள் இருந்ததால் கூடுமானவரை தவிர்த்து விடுவோம்.
 
காட்டுக்குள் முகாம்கள் அமைக்கும்போது, நடுவில் பிரதான முகாமை அமைத்து, அந்த முகாமைச்சுற்றி சின்ன சின்ன கொட்டில்களில்கள் அமைத்து, சிறு சிறு அணிகளாகப் பிரிந்து தங்கியிருப்போம். அப்படியிருக்கும்போது, சிலர் காட்டுக்கோழி பிடிப்பதற்கான பொறிகளை எங்கையாவது அருகில் வைத்துவிடுவார்கள்.  பொறியை எப்போதும் பார்வை எல்லைக்குள் வைத்துவிட்டு, இடையிடையே சென்று பார்ப்பார்கள். ஏனெனில் காட்டுக்கோழி பொறியில் அகப்பட்டால் கத்தாது என்பதால் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஒருநாள், நானும் என்னுடைய நண்பனும் வேறொரு நண்பனைச் சந்திப்பதற்காக அவனிருந்த கொட்டிலுக்குப் போய்க் கொண்டிருந்தோம். இடையில், கொஞ்சம் வழிமாறிவிட்டோம். ஒருவாறு சமாளித்து, சுற்றி போய்க் கொண்டிருக்கும்போது வழியில் கோழியொன்று பொறியில் அகப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தது. உடனடியாக நாங்கள் நண்பனைச் சந்திக்கிறதை முடிவைக் கைவிட்டிட்டு, நைசா கோழியைச் சமைத்துச் சாப்பிடுவம் என்று முடிவெடுத்தம். 
 
மெதுவாகக் கோழியை கழற்றிக் கொண்டு, வேறு யாரும் எங்களைக் கண்டு பிடிக்க முடியாத இடம் ஒன்றை அருகில் தேடினோம். கனதூரம் போகவும் ஏலாது. பக்கத்தில் ஆற்றுப்பள்ளம் ஒன்று இருந்தது. அது எமது சமையல் வேலைக்கு மறைவாக, பொருத்தமாக இருக்கும் என்பதால் அதில வைச்சு சமைப்பம் என்று தீர்மானித்தோம்.
 
இனி சமைப்பதற்குச் சாமான்கள் எடுக்க வேணும். அது கடினமானதாக இருக்கவில்லை. காரணம், நண்பன் தான் முகாமின் ஸ்ரோர்(களஞ்சியம்) பொறுப்பாளர். நான் கோழியின் காலைத் துணியால் கட்டிவிட்டு பள்ளத்து மணலில் இருக்க, நண்பன் பொருட்களை எடுக்கச் சென்றுவிட்டான்.
 
கோழியின் காலைக் கட்டிவிட்டு ஒரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு, கோழிக்கறி சாப்பிடுகின்ற சந்தோஷத்தோடு நண்பன் எப்போது திரும்பி வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சில்லென்ற காற்று, நல்ல அமைதி, ஆற்றுமணல் என உடலுக்கு நல்ல இதமாக இருந்தது. கொஞ்சம் அசதி வேறு, கோழியைப் பிடித்தபடி ஆற்று மணலில் சாய்ந்திருந்தேன்.
 
சிறிது நேரத்தில், நண்பன் ஒருவருக்கும் தெரியாமல் சமைக்கிறத்துக்கான சட்டி, கத்தி, தூள், உப்பு எண்ணெய் என எல்லாத்தையும்; எடுத்துக் கொண்டு, தெரிந்தவர்களிற்கும் போக்குக் காட்டிவிட்டு வந்த சந்தோசத்தில், ‘டேய் மச்சான் சாமான் கொண்டு வந்திட்டேண்டா’ என்று சொல்லிக்கொண்டு, கொண்டு வந்த சாமான்களோட பள்ளத்திற்குள் பாய்ந்தான்.
 
இவன் பாய்ந்த அதிர்ச்சியில் பயந்துபோன கோழி திடீரென மேல துள்ளிப்பாய, நானும் திடுக்கிட்டு எழும்பிக் கையை விட்டிட்டன். கோழி பறந்திட்டுது. இரண்டு பேரும் எல்லாத்தையும் போட்டிட்டு, கோழியின் கால்கட்டியிருக்கு என்ற நம்பிக்கையில் கோழியைத் துரத்தினோம். அதை எங்க துரத்திறது?, கோழி தெத்தி தெத்தி ஓடிப்போய் நின்றது. அப்ப நான் சொன்னன் ‘மச்சான் நீ அந்தப்பக்கத்தால வா, நான் இதால வர்றன், அப்பிடியே அமுக்குவம் என்று’. அப்படியே மெதுவாய் மெதுவாய் கிட்டப்போக, கோழி பக்கென்று இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று கால்களை மாறி மாறி இழுத்து கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது. 
 
இவர் எங்க போப்போறார் பாப்பம் என நாங்களும் ‘மச்சான் எங்களுக்கு போக்கு காட்டுது, இன்டைக்கு விடக்கூடாது’ என எங்களுக்கும் கடுப்பேற, மீண்டும் கிட்ட நெருங்க இன்னும் கொஞ்சத்தூரம் ஓடிச் சென்று நின்றது. இறுசல்காடு வேற, முள்ளுக்கிளித்து கையில சில இடங்களில ரத்தக் கோடுகள் வேற, ‘தனது முயற்சியில் சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி’ இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்தம். நல்லாக் களைச்சும் போனம், ஆனால் கோழியைப் பிடிக்க முடியவில்லை. 
 
கையில துவக்கும் இல்லை. கோழித் துரத்திக் கொண்டு, முகாம் எல்லையை விட்டு சற்றுத் தள்ளியும் வந்திட்டம். ஆமி வந்தாலும் என்ற எண்ணமே மனதில் வரவேயில்லை. இருந்தாலும் கோழி ஆசை விடவில்லை. மீண்டும் கடைசியா மெது மெதுவா கிட்டச் செல்ல கோழி கழுத்தைத் திருப்பி எங்கட பக்கம் பாத்திச்சு, நாங்கள் கண்ணால் 240px-Flickr_-_Rainbirder_-_Ceylon_Junglசைகை செய்து கொண்டோம் கொஞ்சம் பொறுப்போம் என்று, கோழி எங்கட பக்கம் திரும்பிப்பார்த்து விட்டு பின்பக்கத்தை ஒரு ஆட்டு ஆட்டியிட்டு துள்ளிப் பறந்து மரங்களுக்குள்ள போய் மறைஞ்சிட்டுது.  நண்பன் என்னைப்பார்த்து கடுப்புடன் ‘மச்சான் கோழி திரும்பிப்பார்த்து பின்பக்கத்தை அசைச்சு “Bye” சொல்லிட்டுப் போகுது’ என்றான்.
 
களைச்சுப்போய், நான் அதில இருந்திட்டன். நண்பன் வந்து எனக்கு மேல ஏறி இருந்து ‘எவ்வளவு கஸ்டப்பட்டு இந்தச் சாமான்; எல்லாத்தையும் எடுத்து வந்தனான் என்று தெரியுமா’ என்று குத்தினான். காட்டுக்கோழி காலைக்கட்டியிருந்தாலும் எகிறிக் குதித்து நீண்ட தூரம் பறக்கும் என்பது அன்றைக்குத் தான் தெரியும். ஊரில கள்ளக்கோழி பிடிச்ச அனுபவ வேற இல்லை.
 
பிறகு என்ன செய்யிறது? கோழியிட்டப் பட்ட அவமானம் காணும் என்று சாமான்களை ஒருதருக்கும் தெரியாம கொண்டு போய் திருப்பி வைச்சிட்டு, திருப்பவும் நண்பனைச் சந்திக்க அவனுடைய கொட்டிலுக்குப் போனோம். அவனும்; ‘ஏண்டா இவ்வளவு லேட்’ என்று கேட்டான். ‘பாதையை மிஸ் பண்ணிட்டம் மச்சான்’ என்று கூறிவிட்டு கதைத்துக் கொண்டிருந்தோம். பசி வயித்தைக் கிள்ளியது.  அவனிடம் ‘என்ன மச்சான். எதாவது அயிற்றம் (சிறு சாப்பாடு) போட்டனியே’ என்று கேட்க, அவன் சொன்னான் ‘மிஸ் பண்ணியிட்டுதடா, பொறியில கோழி ஆப்பிட்ட தடயம் இருக்கு, ஆனால், கோழியைக் காணேல்ல எண்டு பொறி வைச்ச பெடியன் சொன்னான், அது கிடைச்சிருந்த நல்ல அயிட்டம் ஒன்று போட்டிருப்பன்டா’ என்றான்.
 
கோழியைக் கொண்டுபோய் வழியனுப்பி வைச்ச எங்கட வண்டவாளத்தை தண்டவாளத்தில ஏத்தக்கூடாது என கண்களால் பேசிக்கொண்டோம். நல்லகாலம், தெனாலிராமன் சபை கோழி விசாரணை மாதிரி போகாததால தப்பிச்சம். ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு நெருடல் ஊடுருவிச் சென்றது.
 
 
Link to comment
Share on other sites

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாத்தியார், உடையார்.

 

உடையார் நீங்கள் எந்தக் கோழியைக் கேட்கிறீங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாத்தியார், உடையார்.

உடையார் நீங்கள் எந்தக் கோழியைக் கேட்கிறீங்கள்?

ரெண்டுக்கும் ரெண்டு கால்தான் எதுவா இருக்கும் ..?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அழகாக விபரித்துள்ளீர்கள்.
நல்ல பகிர்வு.தொடருங்கள் 
Link to comment
Share on other sites

சிறந்த அனுபவக்கதையைத் தந்த வாணனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

Link to comment
Share on other sites

சிறந்த அனுபவக்கதையைத் தந்த வாணனுக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

 

நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

கோழிக்கதை நல்லாய் தான் இருக்கு :D   இப்படியான கதைகளையும் எழுதுங்கோ வாசிக்க வஆவல்!


 

உடையார் நீங்கள் எந்தக் கோழியைக் கேட்கிறீங்கள்? 

 

 

எந்தக் கோழி எண்டாலும் பறுவாயில்லை நீங்கள் தொடருங்கோ :D  :D

Link to comment
Share on other sites

கையுக்கு எட்டினது குடலுக்கு எட்டவில்லை.. தொடருங்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, அனுபவப் பகிர்வு வாணன். :)

Link to comment
Share on other sites

கோழிக்கதை நல்லாய் தான் இருக்கு :D   இப்படியான கதைகளையும் எழுதுங்கோ வாசிக்க ஆவல்!

 

 

எந்தக் கோழி எண்டாலும் பறவாயில்லை நீங்கள் தொடருங்கோ :D  :D

 

 கருத்துக்கு நன்றி அலைமகள்

 

எனக்குத் தெரிந்த கோழியைப்பற்றி எழுதியிடடன். ‘எந்நக் கோழி எண்டாலும்‘ என்று எதைச் சொல்லியள் என்று புரியேலையே    :unsure:   :icon_idea:

Link to comment
Share on other sites

கையுக்கு எட்டினது குடலுக்கு எட்டவில்லை.. தொடருங்கள்.. :D

 

 

 

கையுக்கு எட்டினது குடலுக்கு எட்டாவிட்டாலும் பரவாயிலலை. இன்றைக்கும் கோழி வெட்ட உக்காந்தாலும் ‘கயிறு விட்ட கோழியின்ற ஞாபகம்‘ கடுப்பேத்துது பிறதர்   :(

 

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றி அலைமகள்

எனக்குத் தெரிந்த கோழியைப்பற்றி எழுதியிடடன். ‘எந்நக் கோழி எண்டாலும்‘ என்று எதைச் சொல்லியள் என்று புரியேலையே :unsure::icon_idea:

என்ன அண்ணே நீங்க எத்தின கோழியல் பிடிச்சிருப்பிங்க சும்மா வெக்கப்படாம எழுதுங்கண்ணே.....:D

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம் நல்லதொரு அனுபவப் பகிர்வு. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

நன்றி வாணன். :)

Link to comment
Share on other sites

என்ன அண்ணே நீங்க எத்தின கோழியல் பிடிச்சிருப்பிங்க சும்மா வெக்கப்படாம எழுதுங்கண்ணே..... :D

 

எனக்கு ஊர்க்கோழி, காட்டுக்கோழி, வான்கோழி  இதுகளைத்தான் தெரியும். காட்டுக்கோழிக்குத்தான் கொஞ்சம் மினக்கெட வேணும். முதல்க் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி அதுக்குப்பிறகு ஒரு அட்டம்ற்றும் பண்ணவில்லை SUNDHAL  :lol:

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வு. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

 

கருத்துக்களிற்கு நன்றி கவிதை

Link to comment
Share on other sites

அங்க தான் அண்ணே நீங்க பிழை விட்டு இருக்கீங்க.... முதல்ல ஊர் கோழிய பிடிச்சு பாத்திட்டு காட்டுக்கோழிய பிடிக்க பொய் இருக்கணும்..... அது கொஞ்சம் திமிர தான் செய்யும் but first அட்டெம்ப்ட் கொஞ்சம் கஷ்டம் தான் எப்பவும் அதுக்காக கோழியே பிடிக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்க கூடா...

All the best :D

Link to comment
Share on other sites

அங்க தான் அண்ணே நீங்க பிழை விட்டு இருக்கீங்க.... முதல்ல ஊர் கோழிய பிடிச்சு பாத்திட்டு காட்டுக்கோழிய பிடிக்க பொய் இருக்கணும்..... அது கொஞ்சம் திமிர தான் செய்யும் but first அட்டெம்ப்ட் கொஞ்சம் கஷ்டம் தான் எப்பவும் அதுக்காக கோழியே பிடிக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்க கூடா...

All the best :D

 

 நான் கதையிலயே சொல்லியிட்டன்  ‘ஊர்ல கள்ளக்கோழி பிடிச்ச அனுபவமும் இல்லை்‘ என்று. கோழிய பொறில சிக்கவைச்சவன் ஒருத்தன். சிக்கவைச்ச கோழியை களவா கழற்றி எடுத்திட்டு ஓடவிட்டதுதான் கடுப்பாயிட்டுது. காட்டுக்கோழி தானா பொறியில சிக்கினாலேயே ஒழிய  எத்தின  அட்டம்ட் பண்ணினாலும் திரத்திப் பிடிக்க ஏலாது பிறதர் :mellow:  உங்கட எழுத்தில ஏதேனும் உள்கூத்திருக்கே :unsure:  

Link to comment
Share on other sites

 கருத்துக்கு நன்றி அலைமகள்

 

எனக்குத் தெரிந்த கோழியைப்பற்றி எழுதியிடடன். ‘எந்நக் கோழி எண்டாலும்‘ என்று எதைச் சொல்லியள் என்று புரியேலையே    :unsure:   :icon_idea:

 

 

ம்............................ எனக்கும் புரியலை வாணன். உடையாரும் நந்தனும் தான் ஏதோ உளறினம். அவையளை எதுக்கும் கேட்டுப் பாருங்கோ!

Link to comment
Share on other sites

ம்............................ எனக்கும் புரியலை வாணன். உடையாரும் நந்தனும் தான் ஏதோ உளறினம். அவையளை எதுக்கும் கேட்டுப் பாருங்கோ!

 

:rolleyes:  எனக்கும் புரியலை, உடையாருக்கும் நந்தனுக்கும் அந்த ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம் :unsure:

Link to comment
Share on other sites

எப்படித் தான் பெயரை பெயரை மாத்தி மாத்தி எழுதினாலும் உங்கட எழுத்து நடை காட்டிக் கொடுக்குது ஒழுங்காக ஒரே பெயரில் வந்து எழுதலாம் தானே எதற்காக பெயரை மாத்தி,மாத்தி வேசங்கள் போட வேண்டும். நான் உங்கள சொல்லல்ல வாணன் நீங்கள் உங்கட விளாட்டை தொடருங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.