Jump to content

சம்திங்.... சம்திங்....


Recommended Posts

பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்..... போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு?

கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் "உனக்கும், எனக்கும்".... சம்திங்... சம்திங்... இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்.... இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்....

தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்.... திருமணத்துக்கு வந்தவர் அங்கே இருக்கும் ஒரு கிராமத்துப் பைங்கிளியிடம் மனதை பறிகொடுக்கிறார்..... அண்ணலும் நோக்க, அவளும் நோக்க.... சம்திங்.... சம்திங்....

காதலுக்கு வழக்கம்போல அந்தஸ்தும் ஒரு பிரச்சினை.... வேறு ஒரு பணக்காரர் ஒருவரும் தன் மகளுக்கு பாரின் ரிடர்ன் மாப்பிள்ளையை பிராக்கெட் போட நினைக்க.... கிராமத்துப் பிகரின் ஊரிலும் ஒரு வில்லன் அவளை அடைய நினைக்க.... இடையில் பிகரின் அண்னனும் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என பிகு பண்ண.... எல்லாம் முடிந்து சுபம்....

ஹீரோ ஜெயம் ரவிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப் படம்.... இவர் ஏனோ இவர் அண்ணனின் இயக்கத்தில் தான் நன்றாக ஜொலிக்கிறார்.... நடனம், ஆக்சன் என்று தூள்பரத்துகிறார்.... மெலிதான நகைச்சுவையும் இவருக்குப் பலம்.... ஹீரோயினாக த்ரிஷா.... பாவாடைத் தாவணியில் பாங்காக இருக்கும் ஒரே தமிழ் நடிகை இப்போதைக்கு இவர் தான்.... தைரியமாக முகத்துக்கு குளோஷப் ஷாட் வைக்க முடிகிறது.... நன்றாக நடிக்கவும் செய்கிறார்....

நிறைய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் அசால்ட்டாக படத்தில் கோல் அடிப்பது பிரபுவும், பாக்யராஜும் தான்.... குறிப்பாக பிரபு.... அழகாகியிருக்கிறார்.... சின்னத்தம்பி படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது இந்தப் படத்தில் அவரது தோற்றம்.... இந்த ஜெனரேஷன் நடிகர்கள் அவரிடம் வசன உச்சரிப்பு கற்றுக் கொண்டால் தேவலை.... தங்கை மீது காட்டும் அதீத பாசமாகட்டும், தங்கையை அவமானப்படுத்தும் போது தன் கோபத்தை அடக்கிக் கொள்வதிலாகட்டும் அசத்துகிறார் இளையதிலகம்.... பாக்யராஜூக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் அமர்க்களமாகவே இருக்கிறது.... அவர் நடித்த காட்சிகள் வரைக்கும் அவரே இயக்கிக் கொண்டாரோ என்னவோ? செம கலக்கல்......

படத்துக்கு பெரிய பலம் பாடல்கள்.... தேனாக தித்திக்கிறது.... இசை தேவிஸ்ரீபிரசாத்....

இயக்குனர் ராஜா ரொம்பவும் புத்திசாலி.... காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்திப் போகிறார்.... குறிப்பாக Translition எனப்படும் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடைப்பட்ட பிரேம்களை உருவாக்க இயக்குனரும், எடிட்டரும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.... உதாரணமாக பாரின் அப்பா லண்டனில் இருந்து கிளம்பும்போது பிளைட் வானத்தில் பறக்கிறது.... வானத்தை அப்படியே காட்டுபவர்கள் ஒரு தும்பியையும் காட்டுகிறார்கள்.... அதாவது பாரினில் இருந்து கிராமத்துக்கு வந்து விட்டாராம்.... இதுபோல Technically Sound காட்சிகள் ஏராளம்.....

திரிஷா ஹீரோவை லண்டன் குரங்கு எனச் சொல்லும் காட்சியில் ஆரம்பித்து அதே ஷாட்டில் மணிவண்னன் மற்றும் அவரது குடும்பமும் அறிமுகமாகும் காட்சியை மிக நீண்ட டேக்காக எடுத்திருக்கிறார் இயக்குனர்..... ஏதாவது ஒரு ஆர்ட்டிஸ்ட் டைமிங் மிஸ் செய்தாலே ஏராளமான பிலிம் வேஸ்ட் ஆகும் ரிஸ்க் இருந்தும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சியை இயக்கியிருக்கிறார்.... இசையும், கேமிராவும் அந்தக் காட்சிக்கு துணை செய்கிறது....

வானில் இருக்கும் இரு நட்சத்திரங்களைக் காட்டி ஒரு நட்சத்திரம் நான், இன்னொன்று என் தங்கை என்று பிரபு சொல்வது ரொம்பவும் ஜாலியான கற்பனை... இரு நட்சத்திரங்களுக்கு இடையில் மூன்றாவது நட்சத்திரம் தோன்றுவது சூப்பர்.....

ஒரு அரைச்ச மாவு கதை தான் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பாடல்கள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் ராஜா.....

(http://madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

ம்ம்ம் நல்ல விமர்சனம்....! பாக்கியராஜ் ஏதோ கஸ்ரப்பட்டு உச்சரிப்பது போண்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.... லண்டன் ஆங்கிலத்தில் தவள்ந்து தமிழிக்காக கஸ்ரப்படும் ஒருவர் என்பதுக்காகவா என்பதில் சந்தேகம் இருக்கிறது...!

தொலைக்காட்ச்சி ஒண்றில் பார்த்த விளம்பர படத்தை வைத்து சொன்னதுதான் அது படம் இன்னும் பார்க்க வில்லை... பார்க்கவேண்டும் என தூண்டி இருக்கின்றது விமர்சனம்...!

Link to comment
Share on other sites

காதலுக்காக கதாநாயகன் படும் கஸ்டம் சொல்லில் அடங்காது. நல்ல படம். :P த்ரிஷா ரொம்ப அழகா இருந்தா :P :P :P :P :P

Link to comment
Share on other sites

ம்ம்ம் நல்ல விமர்சனம்....! பாக்கியராஜ் ஏதோ கஸ்ரப்பட்டு உச்சரிப்பது போண்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.... லண்டன் ஆங்கிலத்தில் தவள்ந்து தமிழிக்காக கஸ்ரப்படும் ஒருவர் என்பதுக்காகவா என்பதில் சந்தேகம் இருக்கிறது...!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவருக்கு வயதாகி விட்டது.... பேசும் போது வாய் கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகிறது....

சமீபத்தைய அவரது தேர்தல் கூட்டங்களை நேரில் பார்த்தேன்.... பத்து நிமிடம் பேசினாலே அவருக்கு மூச்சிறைக்கிறது.....

Link to comment
Share on other sites

லக்கிலுக் உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது. படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது. பார்த்துட்டு மிச்சம் சொல்லுறன் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்கள் நானும் கேட்டேன்..நல்லா இருக்கு...ம்ம்...உங்க விமர்சனமும் நல்லா இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் படம் பார்த்தேன். ஒன்டரை மணத்தியாலத்தில் பார்த்து முடித்து விட்டேன் என்றே சொல்லலாம்.

இதே போன்ற கதைகள் ஆயிரம் வந்து விட்டன. திரிசாவுக்காக இன்னும் ஒருக்கா பாக்கலாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரியல் பார்க்கும் பெண்களுக்காக எடுத்த படம் போல் தெரிகிறது.

திருப்பாச்சி சாயல் அடிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபுவும் திரிசாவும் சந்திக்கும் போது ஒரே அழுகைக் காட்சி!

Link to comment
Share on other sites

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவருக்கு வயதாகி விட்டது.... பேசும் போது வாய் கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகிறது....

சமீபத்தைய அவரது தேர்தல் கூட்டங்களை நேரில் பார்த்தேன்.... பத்து நிமிடம் பேசினாலே அவருக்கு மூச்சிறைக்கிறது.....

சரி உங்களை நம்பி அந்த படத்தை பார்க்கலாம் எண்டு முடிவு எடுத்து இருக்கிறன்.... ஏதாவது ஏடாகூடமா ஆச்சு....!

வேற என்ன செய்ய இன்னிமே நம்ப மாட்டன்... :wink:

Link to comment
Share on other sites

யோவ்.. இண்டைக்குத்தான் லக்கிலுக்கு நல்லதெண்டு சொன்னதாலை பாரிஜாதம் இரவல் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன்.. அதுக்கிடையிலை உனக்கும் எனக்குமெண்டு அறுக்கிறியள்.. முதல் இது பாத்து முடியட்டும்.. பிறகு புலிகேசி.. ரெண்டும் நல்லதெண்டாத்தான் சம்திங்..சம்திங்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மதிவதனன் அண்ணனின்ற படத்தை எப்பவுமே நம்பி பாக்கலாம். நானும் என்ர அண்ணன் உக்கிரபுத்திரனும் புலிகேசில புகுந்து விளையாடி இருக்கிறம். ஆற அமர இருந்து பாரும்.

Link to comment
Share on other sites

இயக்குனர் ராஜா ரொம்பவும் புத்திசாலி.... காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்திப் போகிறார்.... குறிப்பாக Translition எனப்படும் ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடைப்பட்ட பிரேம்களை உருவாக்க இயக்குனரும், எடிட்டரும் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.... உதாரணமாக பாரின் அப்பா லண்டனில் இருந்து கிளம்பும்போது பிளைட் வானத்தில் பறக்கிறது.... வானத்தை அப்படியே காட்டுபவர்கள் ஒரு தும்பியையும் காட்டுகிறார்கள்.... அதாவது பாரினில் இருந்து கிராமத்துக்கு வந்து விட்டாராம்.... இதுபோல Technically Sound காட்சிகள் ஏராளம்.....

விமர்சனத்துக்கு நன்றி லக்கிலூக்..படம் அப்படியே

தெலுங்கை (Nuvvostanante Nenoddantana) கொப்பி பண்ணி

வந்திருக்கிறது.. நீங்கள் குறிப்பிட்ட தும்பி காட்சி, நட்சத்திர கதை கூட

தெலுங்கு படத்தில் வருகிறது..... ஆகவே உங்கள் பாராட்டெல்லாம்

இந்தப் படத்தின் அசலை இயக்கிய பிரபுதேவாவையும்

எடிட்டரையும் சாரும்.. :wink:

படத்தை அப்படியே கொப்பி பண்ணுவதில் இயக்குனர் ராஜா

திறமைசாலிதான்..:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசிசுதா இன்று ஓர் படங்களினை வாடகைக்கு விடும் இடத்தில் இத் தெலுங்குப் படத்தின் டீவீடி வைத்திருந்தார்கள். அதன் கதையும் சம்திங் சம்திங் திரைப்படத்தின் கதையும் ஒன்றாக இருக்க அப்படத்தை வாங்கி வந்திருக்கிறன். இனித்தான் படம் பாக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிது கூட மாற்றமின்றி அப்பட்டமான தழுவல். :lol::lol:

NUVVOSTHANANTE NENODDANTANA

16/09/2005

Director: Prabhudeva

Cast: Abhishek, Chandra Mohan, Dharmavarapu Subramanyam, Gundu Hanmantha Rao, Jayaprakash Reddy, Master Nandu, Narra Venkateswara Rao, Pavala Syamala, Santoshini, Siddartha, Srihari, Trisha, Veda

Reviewer: http://www.sterkinekor.co.za

Rating:

200509160125570.NUVVOSTHANANTE.jpg

Siri (Trisha) and Sivarama Krishna (Srihari) are orphans. Their rich father leaves their mother for another woman. And so their mother dies in distress. With this kind of troubled childhood, Sivarama Krishna (Srihari) takes care of his little sister Siri and makes sure that she gets all the brotherly love she needs. Sivarama Krishna also starts to hate rich people and he wants to make sure that Siri is wed to a poor and hardworking man.

Santosh (Siddardh) is London-settled NRI who lives with his elite parents. He along with his mother visits India to attend a relative's wedding. There he meets Siri, who is a pole apart when it comes to upbringing and family background. The inevitable happens and they fall in love. Santosh's mother who does not approve of this, tries to separate Siddardh from Siri.

Santosh visits Siri's place and asks the permission of Sivarama Krishna for her hand in marriage. Sivarama Krishna refuses his proposal because he does not want his sister to suffer in the environment of money-minded people. Santosh asks Sivarama Krishna to give a chance to prove himself. Sivarama Krishna asks Santosh to work as a labourer in his farm. He also gives 1 acre of land and asks him to harvest more produce than him. The rest of the story is all about how Santosh wins the bet as well as the heart of Sivarama Krishna.

Overview and image: http://www.sterkinekor.co.za

source: http://www.dulce.co.za/moviereview.php?movieid=111

Link to comment
Share on other sites

படம் தெலுங்கு ரீமேக் தான்.... ஆனால் காட்சிகளைக் கூட அப்பட்டமாகத் தழுவியிருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... எப்படியோ ஜெயம் ரவிக்கு ஒரு ஹிட் தேவைப்பட்டது.... அது இப்போது கிடைத்து விட்டது....

Link to comment
Share on other sites

நானும் தெழுங்குப்படத்தினை ஓளிப்பேழையில் பார்த்தனான்.பிறகு அண்மையில் தமிழில் இப்படத்தினைப்பார்த்தேன்.

வசிசுதா சொல்வது போல தமிழில் அப்படியே தெழுங்கில் உள்ளதினை கொப்பி அடித்துள்ளார்கள். கலாபவன் மணியின் நகைச்சுவை சிரிப்பினை மூட்டுகிறது. தூயவனின் மன்னிக்கவேண்டும் ஜெயம் ரவியின் நடிப்பு நன்றாக இருக்கிறது. சிட்னியில் திரையிட்டபோது படத்தின் பெயரில் சம்திங், சம்திங் என்ற வரிகள் நீக்கப்படாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.