Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என் காதலி(களம் ) ..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள். எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை எனக்கு ஆனால் வயது இல்லை என என்னை போக தடுப்பார் உறவுகள். ஆனாலும் என்னுள் ஆசை தீயாய் எரிய முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பேன். அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள்.

ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன். விளைவு மூன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனாள். அவளை கழட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை. அவளில் வரும் வாசனை ஒரு தனி சுகம். உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள். கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன்.என்னுடன் சுற்றுவது எண்டால் அவளுக்கு கொள்ளை பிரியம். போகும் வழிகளில் மான் மரை அணில் எலி எதுகும் மிச்சம் இல்லை பதம் பார்ப்பாள் அவளை வருடி நடக்கும் பொழுது என் சந்தோஷம் சொல்லி மாளாது.

பெரும் தடுப்பு ஒன்று போட்டு அவளை வைத்து கடும் சண்டை. அவள் என் கைகளில். நான் பக்கத்தில் நின்றால் கடும் வாய்க்காரி. 31பல்லையும் கழட்டி வைப்பாள். மறுபடியும் நான் பூட்டி விட்டால் அதுகும் மீதம் இருக்காது காறி உமிழ்ந்து துப்பி விடுவாள். சண்டையில் இருக்கும் வேகமும் என்னை காப்பற்ற இருக்கும் விவேகமும் அடா போடவைக்கும். ஒரு முறையும் நம்பிக்கை துரோகம் எனக்கு செய்யாதவள். நோய் நொடி என களைப்பு அடையாதவள்.

அவள் எனக்கு கிடைத்தது வரமே என நான் இருக்க ஒருமுறை கடும் சண்டை. அவளின் வாயில் வீக்கம். கூடுதலா பேசி இருப்பாள் போல. வைத்தியரை நாடும்படி எனக்கு கட்டளை வருகிறது. அழைத்து போனேன் சுற்றி பிரட்டி முன்னாள் பின்னால் பார்த்து விட்டு சொன்னார் இனி நீ அவளுடன் வாழமுடியாது உனக்கு இன்னும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்கிறம் போட்டு இரண்டு நாள் கழிய வா என. பெரும் சோகம். என் சந்தோஷம்கள் துக்கம்கள் எல்லாவற்றிலும் கூட இருத்தவள் அவளை எப்படி பிரிவேன் என. ஆனாலும் எதோ ஒரு காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதால் 2 நாள் கழிந்து சென்றேன். ஆச்சரியம் எனக்கே.

ரஷ்சியன் 47வயது காதலியை வாங்கி வைத்து விட்டு ஒரு புதிய அமெரிக்க எம்16 காதலியை காட்டி இனி இவளுடன் வாழ் என சொன்ன போது நான் பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை இனி எந்த சூழலிலும் உன்னை விட்டு நான் பிரியேன் என மனதில் சத்தியம் செய்து அவளை கட்டி அணைத்தேன். கந்தக வாசம் என் நாசியில் பட்டு சிலிர்க்க என் துப்பாக்கி என்னை இறுக்க பிடி என்றது ..!!

 

Link to post
Share on other sites

வாசிக்க தொடங்கும் போதே உண்மையான காதலி  இல்லை என ஊகித்து இருந்தாலும் ஒரு செல்லப்பிராணி என நினைத்தேன்.துப்பாக்கி என இறுதி வரை நினைக்கவில்லை. சுய ஆக்கத்துக்கு நன்றி, அஞ்சரன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ம்ம்....... நல்ல ஆக்கம்! உங்கள் காதலிக்குக் கடைசியாய் என்ன நடந்தது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதல் சில வரிகளுக்குப்பின் சந்தேகத்தில் கடைசி வரிகளைப் போய் படித்துவிட்டேன்.. ஆக்கத்திற்கு நன்றி.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முதல் சில வரிகளுக்குப்பின் சந்தேகத்தில் கடைசி வரிகளைப் போய் படித்துவிட்டேன்.. 

 

 

அட என்னை மாதிரி ஆட்களும் இருக்கினம் தான் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுய ஆக்கம் நல்லாகத்தான் உள்ளது .வாழ்த்துக்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் நாய்க்குட்டியாக்கும் என நினைத்து இறுதிவரை படித்தேன்!

 

அந்த 47 மட்டும் இல்லாவிட்டால், என் தலையில் இருக்கும் கொஞ்ச தலை மயிரையும் இழந்திருப்பேன்! :o

 

நல்ல ஆக்கம், அஞ்சரன்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆக்கம், அஞ்சரன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் கணனி என்று நினைத்து, தொடர்ந்து வாசிக்கும் போது... இறுதியில் தான் தெரிந்தது துப்பாக்கி என்று.
நன்றாக உள்ளது அஞ்சரன். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவுக்கு நன்றி அனைவருக்கும் .........என்னை வைச்சு காமடி கீமடி பண்ணவில்லைதானே :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி என்ன இப்ப எல்லாரும் முன்னாள் போராளியளா இருக்கிறிங்கள் போல.. :rolleyes:

 

முதல் பந்தி முடிந்ததுமே புரிந்து விட்டது, நாய்க்குட்டியை எல்லம் கழட்டி துடைக்கவா முடியும்? பாதிப்பேர் படிக்காமலே கொமன்ட் போடுறாங்கள் போல பாவி பயலுகள்.. :lol::icon_mrgreen::icon_idea:

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவ் ஜீவா அண்ணா கதை கற்பனை கலந்து எழுதபட்டது . :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராத்திரியே எட்டிப் பார்த்துட்டு தலைப்பு காதலி()...என்று இருந்ததால் தொடர்ந்து படிக்காமல் போய் விட்டேன்....இப்போ தான் விமர்சகர்கள் மூலமாக உங்கள் காதலி துப்பாக்கி என அறிந்து கொண்டேன்.தொடர்ந்து எழுதுங்கோ.

Link to post
Share on other sites

அஞ்சரனுக்கு  நல்ல எழுத்து திறமை  உள்ளது . இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் . உங்களுக்கு எனது மனங் கனிந்த பாராட்டுகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கற்பனை ,

நல்லவேளை அதைவிட்டு நாலு பேரை கடிக்கவிடாட்டி நித்திரை வராது என்று எழுதாமல் விட்டீர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரி...... இப்ப உங்கட கடைசிக் காதலி எங்க எண்டு சொல்லவே இல்லை. :rolleyes::)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உங்கடை காதலியை யார் வைத்திருகிறார் :) .உங்கள் சுய ஆக்கத்தை வரவேகிறேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனைவருக்கும் :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து எழுதுங்கள் . உங்களுக்கு எனது மனங் கனிந்த பாராட்டுகள். :icon_idea: 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..கடைசில ஏகே போட்டிசெவினால் போட்டுத்தள்ளீட்டியல் நான் வேறமாதிரி எதிரபாத்து வந்த கற்பனையை :D .. அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்க அலவாங்கு தாசின்ர கதை என்டு நினைச்சிட்டியள்

நல்ல கற்பனை ,

நல்லவேளை அதைவிட்டு நாலு பேரை கடிக்கவிடாட்டி நித்திரை வராது என்று எழுதாமல் விட்டீர்கள்

Link to post
Share on other sites
 • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.