-
Topics
-
Posts
-
By Ahasthiyan · Posted
நாங்கள் அப்படி சொல்லவில்லை கனம் கோட்டார் அவர்களே. 5 வருட ஓய்வின் பின்பு ராணுவம் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றது ஐயா. -
மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை ஹட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். 10.12.2019 இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்த தேயிலை தினம் தேயிலை தொழிலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே பெருமை சேர்க்கின்ற ஒரு தினம் மட்டுமல்லாமல் இந்த மக்களுடைய எழுச்சி நாள், வெற்றி நாள், அதனை உறுதிப்படுத்தும் முகமாக 2005ம் ஆண்டு சர்வதேச தேயிலை தினத்தை சர்வதேசமே அங்கீகரித்தது. இந்த சர்வதேசம் அங்கீகரித்த பல தினங்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் சர்வதேச தேயிலை தினம் என்பது அது சார்ந்த தொழிலாளர்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். பொதுவாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், கட்சிகளுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த சர்வதேச தேயிலை தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். உழைக்கும் மக்களுக்கு கௌரவிக்க வேண்டும். இதனால் அனைத்து தரப்பினருக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/70819
-
(நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டி அறிக்கையானது இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொபேட் ஜக்காம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரிடமிருந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். மனித அபிவிருத்தி சுட்டியில் கடந்த ஆண்டு 76 ஆவது இடத்திலிருந்த இலங்கை இவ்வருடம் 71 ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றம் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிகளிடம் பிரதமர் ராஜபக்ஷ அவருடைய மகிழ்ச்சியை வெளியிட்டார். அதன்போது இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் அதேவேளை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஐ.நா பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்தனர். இந்நிலையில் இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியின் பிரகாரம் முதலாவதாக நோர்வேயும், இரண்டாவதாக சுவிட்ஸர்லாந்தும், மூன்றாவது இடத்தில் அயர்லாந்தும் உள்ளன. அதேவேளை அமெரிக்கா 15 ஆவது இடத்தையும், இந்தியா 129 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருப்பதுடன், இறுதியாக 189 ஆவது இடத்தை நைகர் பெற்றிருக்கிறது. https://www.virakesari.lk/article/70822
-
இன்றைய உலகில் ஆளுபவர்கள் பலரும் 'பலம்' மிக்க உள்ளவர்கள். (ட்ரம்ப், பூட்டின், வடகொரிய அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர், துருக்கி அதிபர், ... இலங்கை அதிபர்) தமிழர்களுக்கு இன்றுள்ள தலைமைகள் மென்மையான இதயம் உள்ளவர்களாக உள்ளார்கள். அதனால், எமது மக்கள் தான் இன்று உண்மையான புத்தபிரான் போதனைகளை பின்தொடருபவர்களாக உள்ளார்கள் !
-
நன்றி நிழலி. நண்பர் ஒருவருக்கு சென்னை Transit உடன் யாழ்ப்பாணத்திற்கு விமானச்சீட்டு ஓன்லைனில் புக்பண்ண try பண்ணினோம். முடியாமல் உள்ளது. யாராவது ஐரோப்பாவில் இருந்து விமானசீட்டு பதிவு செய்திருந்தால் தளத்தின் பெயரை அறியதரவும். நன்றி.
-