Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1964956_493835390721525_1705108461_n.jpg

 

புதுமுறிப்பு கிராமத்தில் உள்ளஒரு வீட்டில் மாலை நேர காட்சி (14-03-2014)

 

ஈழத்தில்.. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை. அதேவேளை.. புலம்பெயர் நாடுகள் எங்கணும்.. தாயக பல்வேறு பிரபல்ய கல்லூரி பழைய மாணவ.. மாணவிகள்.. பாடசாலையின் பெயரால்.. குடியும்.. குத்தாட்டமும்.!!!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1509672_677042109019623_1949490632_n.jpg


இது வதையா.. வலியா.. விவேகமா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1157396_682024185169639_1267691436_n.jpg

 

 

2009 மே க்குப் பின்.. தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வையுங்க என்று கட்டுரைகள் எழுதிய மேதாவிகளை பலரைத் தெரியும். அதில் பல பேஸ்புக் ஈழத்து வலசுகள் என்பதும் தெரியும். இருந்தாலும் அன்று உந்தச் சலசலப்புகளுக்கு இடங்கொடாமல்.. புலெம்பெயர் தமிழ் இளையோர்... புரட்சிக் கவிஞன் பாரதி மொழிந்த "அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்ற தமிழர் வீர மொழிக்கு அமைய இக்கொடியை தாங்கி நின்றதன் பயன் இன்று... தமிழீழத் தேசியக் கொடியை சர்வதேசம் எங்கும் மக்கள் விரும்பிப் பிடிக்க முடிகிறது. இதுவும் எமது நாட்டுக்கான இனத்துக்கான அங்கீகாரத்தின் ஒரு படிக்கல் தான். !!!!

 

Link to comment
Share on other sites

1075296_733107650063345_433057842_n.jpg

 

1.“வெற்றி என்பது உங்களைத் தேடி வருகிற
சொந்தமல்ல.
நீங்கள் தேடிப்போக வேண்டும்.
ஆனால் நீங்கள் வெற்றி பெற்றதும் உங்கள் சொந்தங்கள்
உங்களைத் தேடிவரும்”

2.உங்கள் முயர்ச்சிகள் வீண்முயர்ச்சி என்று
பலரால் சொல்லப்படலாம்..
நீங்கள் வென்றபின் அது விடாமுயர்ச்சி என்று
அவர்களால் சொல்லப்படும்..

முயற்ச்சிகளை கைவிடாதீர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1981995_491524184285311_343908987_n.jpg

ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது, “அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?” தாய் ஒட்டகம் சொன்னது, “ மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”

ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது, “அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?” தாய் சொன்னது, “மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன”

ஒட்டகக்குட்டி மீண்டும், “அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது, “நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளாது.

ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது, “அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்....!!!

படித்ததில் கண் கலங்கியது !!!  :o

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animaux-17.jpg

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tony-Benn-150314-600.jpg

தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய ரொனி பென் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய 'சிட்னி' முருகனின் தேர்த்திருவிழாவில், 'நேரடி விமரிசனம்' செய்பவர்களில், முதலாவதாக நிற்பவர், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நிறையக் 'கதைகள்' சொல்லியவர் !

 

இவர் யாரென்று சொல்லுவீர்களா? :D 

 

அவுஸ்திரேலிய உறவுகள்...'மூச்'...! :unsure: 

 

1977196_10203379037902008_2000156229_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sorry !

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய 'சிட்னி' முருகனின் தேர்த்திருவிழாவில், 'நேரடி விமரிசனம்' செய்பவர்களில், முதலாவதாக நிற்பவர், நாம் சிறுவர்களாக இருந்தபோது, நிறையக் 'கதைகள்' சொல்லியவர் !

 

இவர் யாரென்று சொல்லுவீர்களா? :D

 

அவுஸ்திரேலிய உறவுகள்...'மூச்'...! :unsure:

 

1977196_10203379037902008_2000156229_n.j

 

ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்ட சிறுவர் நிகழ்ச்சியில்,

வானொலி மாமா என்றழைக்கப்படும் சிவலிங்கம் அவர்களா?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.