• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
அஞ்சரன்

அவனுக்குள் ..!!

Recommended Posts

அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை.

என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது.

 

பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்டையள் சுழண்டு விழும் (அப்படி நம்ம நினைப்பு ).

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.

 

இது இப்படி இருக்க ரோட்டில நாம போனால் நம்ம பசுபதி ஐயா சொல்லுவாரு பாருடா மன்னர் காளைமாதிரி எப்படி தினவெடுத்து திரியுது எண்டு. குளிக்கிற்மோ இல்லையோ சேட்டு ஐயின்பண்ணிதான் போடுவம். கொலர் கலர் மாறி போனால் லேஞ்சி வைப்பம். பல ஐடியா இருக்கு கைவசம்.

 

சரிவிடுங்க மேட்டருக்கு வருவம். இப்படி போயிட்டு இருந்த வாழ்க்கையில இடையில் வந்தவன்தான் நான் முதலில் சொன்ன அவிச்ச றால் பையன். திடீர் என ஒருநாள் நம்ம ஏரியாக்கு வந்து நிண்டான். யாரு இவன் நம்மளயே குறு குறு எண்டு பார்க்குற பிள்ளைகள் இம்புட்டு அழகான பையன விடுவாளுகளா கோயிலுக்கு நேந்து விட்ட கோழி சேவல் கணக்கா வந்து நிண்டா?

 

நல்லகாலம் வந்தவன் முதல் நட்பை என்னுடன் வைத்தான். அதால நமக்கு பிழைப்பு ஓகே. அவனுக்கு நம்ம ஏரியா பற்றி ஒருநாள் பூரா குளக்கட்டில் இருத்தி வகுப்பெடுத்து நா வறண்டு போனது வேறகதை.

கோயிலுக்கு கூட்டிப்போனால் சாமிய மட்டும் பார்ப்பான். பக்கத்தில் நிக்கும் மாமியை பாரான். எனக்கு ஒரே டவுட்டு இவன் நல்லவனா கெட்டவனா எண்டு. அநியாயத்துக்கு நல்லவனா இருக்குறான் எண்டு அவன் கதை கேட்க முயற்ச்சி செய்தேன்.

 

தன் குடும்ப நிலைமையும் தான் வளர்ந்த கதையும் சொன்னான். இப்படி ஒரு உலகம் மறைவில் இன்னும் இருக்குது என்பதுதான் வேதனை. அவனை மிக கண்டிப்பாக வளர்த்து இருக்குறார் தகப்பனார். தன் ஜாதி பற்று பிறரை மதிக்காத நிலை தங்கள் குடும்பம் தவிர மற்றவர்களுடன் நிமிர்ந்து பேச அனுமதிக்காத தன்மை. வளர்ந்து ஆளாகி பெரியவன் ஆன பின் அவனின் தந்தையின் மரணம் இடம்பெயர்வு இவை இரண்டுமே அவனை ஒரு சமூகத்துக்கு தேவையான மனிதன் ஆக்கி இருக்கு.

 

வெளிதோற்றம் வேறு ஒருவரின் மனநிலையின் பிரதிபலிப்பு வேறு என்பதை அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு கற்று கொடுத்தது. எல்லோருடைய கடந்தகாலம் ஒரு இருண்ட அல்லது சொல்லமுடியாத பக்கத்தை கொண்டே இருக்கு என்பதுதான் ஆச்சரியம் ஆகவே உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறிய சுகந்திரம் கொடுத்து வளருங்கள் பின்னாளில் கஷ்டம் தெரியாமல் வாழ  என்னுடன் இருந்த நட்பு வைத்த காலத்தில் மிக சந்தோஷமா இருத்தான் இப்ப எப்படி இருகுறனோ அவனுக்கே வெளிச்சம் .

 

 

  • Like 5

Share this post


Link to post
Share on other sites
இது இப்படி இருக்க ரோட்டில நாம போனால் நம்ம பசுபதி ஐயா சொல்லுவாரு பாருடா மன்னர் காளைமாதிரி எப்படி தினவெடுத்து திரியுது எண்டு. குளிக்கிற்மோ இல்லையோ சேட்டு ஐயின்பண்ணிதான் போடுவம். கொலர் கலர் மாறி போனால் லேஞ்சி வைப்பம். பல ஐடியா இருக்கு கைவசம்.

 

 

 

ம்ம்... இதுகள் பட்டிக்கு வராத மாடுகள் போல கிடக்கு.. :D

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.////

 

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது  :lol:  :lol: .  சிறிது எழுத்துப்பிழைகள் இருகின்றன கவனத்தில் கொள்ளுங்கள் அஞ்சரன் . உங்கள் அனுபவக் கதைக்கு எனது மனக் கனிந்த பாராட்டுக்கள் தொடருங்கள் :) .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள்.////

 

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது  :lol:  :lol: .  சிறிது எழுத்துப்பிழைகள் இருகின்றன கவனத்தில் கொள்ளுங்கள் அஞ்சரன் . உங்கள் அனுபவக் கதைக்கு எனது மனக் கனிந்த பாராட்டுக்கள் தொடருங்கள் :) .

 

நன்றி கோமகன் எழுத்துப்பிழை கவனத்தில் எடுக்குறேன் :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.