Jump to content

இராவணனுக்கும் வரலாறு இருக்கு..


Recommended Posts

இராவணனுக்கும் வரலாறு இருக்கு..

வாசுதேவன் நாயர்

விகடனில் மலையாள எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதியுள்ள மிக அற்புதமான கட்டுரை:

பாலக்காடு மாவட்டத்தில் கூடலூரில் ஒரு எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. வீடு எனக்குத் தடையில்லாத சுதந்திரம் தந்தது. மலையாள இலக்கியத்தில் வள்ளத்தோளும், செங்கம் புழாவும், எஸ்கே.பொற்றே காட்டின் எழுத்துக்களையும் நான் அப்பவே படிச்சுட்டேன்.

எட்டாவது படிக்கும் போது கதை, கவிதை, கட்டுரை என மூணு எழுதி வெவ்வேறு பெயர்களில் பத்திரிகைக்கு அனுப்பிச்சேன். மூணுமே பிரச்சுரம் ஆச்சு. எல்லோரும் ஆச்சர்யமாக பாத்தாங்க.

விக்டோரியா கல்லூரியில் பிஎஸ்ஸி முடிச்சுட்டு, ஒரு டுடோரியலில் டீச்சரா இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அப்புறம் மாத்ரூ பூமியில் நிருபாராகவும் ஆசிரியராகவும் 32 வருஷம் பணிபுரிந்தேன்.

சினிமா அனுபவம்னு நிறையக் கடந்து வந்துட்டேன். ஆனா பாரதப்பூழா கரைகளில் நான் நடந்து பழகின நாட்கள் தொடங்கி, இன்னைக்கு வரைக்கும் மாறாம இருப்பது ஒண்ணே ஒண்ணுதான். அது எழுதுற ஆர்வம் தான். எழுத்து இல்லைன்னா, இந்த வாசுதேவன் இல்லை.

காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் மரபுகளை எனது படைப்புகள் மத ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் சிதைக்கிறது என்ற குற்றச்சாட்டு என் மீது வைக்கப்படுகிறது. இராமனுகுக்கு ஒரு வரலாறு இருக்குன்னா, இராவணனுக்கும் இருக்கும் தானே?

அவன் பக்க நியாயமும், பிரச்சனைகளும் இருக்கும் தானே? ஒரு படைப்பாளியா எல்லா மனிதர்களின் உணர்வுப் போராட்டங்களையும், உறவுச் சிக்கல்களையும் பார்ப்பது தான் என் படைப்பு.

கண்ணனூர் ஜெயிலில் இருந்த தூக்கு தண்டனைக் கைதி ஒருத்தரைச் சந்திச்சேன். தன்னோட குழந்தைகளையும், மனைவியையும் கொன்னுட்டு, எத்தனையே வருஷம் ஜெயிலில் இருந்த பிறகும் தான் செஞ்சது தப்புன்னு அவர் ஒப்புக்கவே இல்லை.

சிறை எந்த விதத்திலும் அவரை மாற்றவில்லை. அந்த பாதிப்பில் தான் சிபிமலயில் இயக்கத்தில் சதயம் படத்தை செஞ்சேன். மனிதர்கள் பார்க்கத் தயங்குகிற, பார்க்க மறுக்கிற கறுப்புப் பக்கங்கள் ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கு.

அதை இந்தச் சமூகத்துக்கு வெளிச்சப்படுத்திக் காட்டுவதன் மூலம் மனித வாழ்க்கையில் பற்றும் நம்பிக்கையும் ஏற்படுத்துவது தான் ஒரு எழுத்தாளனுடைய வேலைன்னு நினைக்கிறேன்.

கடந்த முப்பதாண்டுகளில் தமிழக, கேரளா மாநில மக்களின் வாழக்கையிலும் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. பொருள் ஈட்ட மலையாளிகள் அரபு நாடுகளுக்குப் போய் கடின உழைப்பால் சம்பாதிச்சு வருவது, அடிப்படையான விவசாயத்தைப் புறக்கணக்கிற சூழ்நிலைக்குத் தள்ளிருச்சு.

ஆதிவாசிகள் மீதான மலையாளிகளின் பார்வை அருவருப்பானது. ஆதிவாதிகளை அவங்களோட பூர்வீக நிலத்திலிருந்து அறுத்து எறிஞ்சிருச்சு கேரளத்தின் அதிகார வர்க்கம். இந்த மலையாள மண்ணின் வளமைக்கு ஆதிவாசிகளின் உழைப்பும் வியர்வையும் இருக்குன்னு புரிஞ்சுக்க மறுப்பது வரலாற்றுக் கொடுமை.

தமிழர்கள், மலையாளிகள்னு ரெண்டு இனமுமே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்துதான் பிச்சனைகளை அணுகுறாங்க. தமிழர்களுக்கு அவங்க கலாச்சார வளமைதான் சொத்து. ஒரு மொழிக்காகப் போராடிய இனம்னா அது தமிழினம் தான்.

ஆனா சமீப காலமா ஒருவிதமான கலாச்சார பிற்போக்குத்தனம் தமிழகத்தில் பரவலாக பரவிவருது. உதாரணத்துக்கு குஷ்பு விவகாரத்தைச் சொல்லலாம். குஷ்புவுக்கு கோயில் கட்டினவங்களும் தமிழர்கள் தான். துடைப்பத்தோடு அந்தம்மாவை இழிவு படுத்தியதும் அவங்களேதான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. அதைச் சொல்ல அவங்களுக்கு உரிமையும் இருக்கு. அந்த உரிமை குஷ்புவுக்கும் உண்டு. என்னைக் கேட்டா, குஷ்புவுக்குக் கோயில் கட்டினது பைத்தியக்காரத்தனம். அவங்களை இழிவுபடுத்தியது அதை விட முட்டாள் தனம்.

இம் மாதிரி தொடர்ந்து நடக்கிற சம்பவங்கøளால், தமிழர்கள் பற்றிய தவறான அபிப்ராயம் பரவி, அதுவே அவங்க அடையாளமா மாறிவிடும் ஆபத்தும் இருக்கு. இன்னைக்கு உலகம் முழுக்க ரெண்டே விஷயங்களுக்குதான் எல்லா பிரச்சனைகளும் நடக்குது.

ஒண்ணு பெட்ரோலுக்கு. இன்னொன்று தண்ணீருக்கு. ஒரு தேசத்துக்குள்ளேயே எவ்வளவு பிச்சனைகள். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைங்கிறது கேரளா, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வதாராப் பிரச்சனை.

கேரளத்தில் 44 நதிகள் பாய்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் கேரளத்துக்கு நல்ல நீராதாரத்தைக் தரும் வரப் பிரசாதமாக இருக்கு. வருஷம் முழுக்கக் கிடைக்கிற தண்ணீரில் 80 சதவீதம் தண்ணீரைச் சேமிக்காமல் வீணடிக்குது கேரளம்.

மலையாளிகள் உண்ணும் அரிசியும், காய்கறியும் அதிகமாக தமிழகத்திலிருந்து தான் வருது. கேரளாவில் இப்போ முழமையான விவசாயம் இல்லை. ரப்பர், தென்னை மாதிரி பணப் பயிர்களைத்தான் விளைவிக்கிறாங்க.

ஆனா தமிழகத்தில் விவசாயம்தான் ஜீவ நாடியாக இருக்கு. காவிரியில் தண்ணீர் வரலைன்னா, விவசாயம் இல்லாமல் போய் தற்கொலை செய்கிற நிலைமை இருக்குன்னா, விவசாயம் தமிழர்களோட வாழ்வில் கலந்திருக்குன்னு தானே அர்த்தம்.

இப்போ ஆட்சிக்கு வந்திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள், இந்த விஷயத்தில் இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு இல்லாத ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கணும். பாலு மகேந்திரனும், பாரதிராஜாவும் தான் எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவை அழகியலுடனும், மனிதர்களை அவர்களின் சராசரி பலவீனங்களுடனும் அணுகியவர்கள்.

உதிரிப் பூக்கள் மிக மிக அற்புதமான சினிமா. அதே மாதிரி முதல் மரியாதை. புதிய படங்கள் எதையும் நான் பார்க்க வில்லை. அதனால் அதுபற்றி கருத்து சொல்ல இயலாது. ஆனால் ஒன்று படைப்பு, இயக்கம், வாழ்வு, உலகம் எனப் பார்த்தால், எனக்குப் பழைய நினைவுகள் எவ்வளவு முக்கியமோ, அதே போல புதிய கனவுகளும் மிக மிக முக்கியம்.

வருங்காலம் வாழட்டும்!

நன்றி தற்ஸ்தமிழ் (வானவில்)

Link to comment
Share on other sites

கடலடி..பூம்புகார் பற்றியும்..சமீபத்திய சுனாமிக்குப் பின்னான தொல்பியல் ஆய்வுகளின் தொடர்சிகள் சொன்ன சில தகவல்களும்.. உங்களின் பதிவும்..சில வரலாற்று உண்மைகளை வெளிக்காட்ட உதவலாம். :idea:

நன்றி.. உங்கள் பதிவுக்கு..நண்பரே..!

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்று வம்பண்ணா. நான் இராவண வரலாறு என்ற ஒரு புத்துகம் படிச்சனான்

அதுலயும் நிறைய விடயங்கள் இராவணனை பற்றி சொல்லி இருந்துச்சு. எழுதியவர் பெயர்

மறந்துவிட்டேன். ஆனால் அவர் ஈழத்து பேராசிரியர்.

Link to comment
Share on other sites

நன்றி குருவி மற்றும் இரசிகை உங்கள் கருத்துக்களுக்கு. உண்மையில் ஒவ்வொரு விடயத்திற்கும் இன்னொரு பக்கமுண்டென்பதை நாம் சிந்திக்காமல் விடுவதாலேயே பல பிரைச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைகள் தோன்றுகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.