வலியுறுத்தாமல்.. கிடைக்கும்.. தருவார்கள் என்று காத்துக்கிடந்தால்.. காற்றுக்கூட கிடைக்காது கோபால். காற்றைக் கூட உள்ளெடுக்க மூச்செனும் இயக்கம் அவசியம்.
ஜோன்சனோ.. எவருமோ.. பிரித்தானியாவுக்கு ஈழத்தில் தமிழர்களின் அரசியல் உரிமையை மீட்டுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதை உணர வைப்பதும் செயற்பட வைப்பதும் மிக அவசியம்.
காரணம்.. எமது நிலத்தை சிங்களவர்கள் ஆளக் கையளித்தது.. பிரித்தானியாவும்.. பிரித்தானியாவின் சேர் பட்டங்களுக்கு அடிபணிந்த கூலித் தமிழர்களும் தான்.
தமிழ் மக்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருக்கப்போகிறது
மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்கக்கூடாது
ஓடும் கப்பலில் பயணிக்கப்பழகணும் என்பது
மிகவும் சுயநலமான சிந்தனை
வரலாற்றில் தன்னை தன் மண்ணை இழக்க விரும்பாத இனத்துக்கு
இவ்வாறான கூற்றுக்கள் சலனங்களை உண்டு பண்ணிவிடக்கூடியதே
மூழ்கப்போகும் கப்பல் தமிழினமாகவும்
ஓடும் கப்பல் சிங்களமாகவும் காண்பித்து
அதில் ஏறிய தனது இன்றைய வாழ்வையும் செல்வத்தையும்
உதாரணமாக காட்டினாராயின்....????????
இன்னொரு முகநூல் பதிவு:
Vadakovay Varatha Rajan
Vadakovay Varatha Rajan
21 h
காற்றாலைகள்
-----------------
அண்மையில் குமரவேல் கணேசன் அவர்கள் காற்றாலைகள் பற்றிய ஓர் பதிவை போட்டிருந்தார் . காற்றாலைகள் பற்றிய எனது கருத்துகளையும் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1970 பதுகளில் தொண்டைமானாற்றில் ஓர் பாரிய காற்றாலை இயங்கியதை சிலர் அறிந்திருப்பீர்கள் .
இலங்கை போன்ற நாலுபக்கமும் கடலால் சூழப்படட நாடுகளுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதம் என நினைக்கிறேன் .
குறிப்பாக தென்பகுதியில் இருந்து மின்சாரத்தை நம்பியிருக்கும் யாழ் குடாநாட்டுக்கு காற்றாலை மின்சாரம் ஓர் வரப்பிரசாதமாக அமையும் .
இதில் உள்ள சாதக பாதகங்களை எனக்கு தெரிந்தமட்டில் பகிர்கிறேன்.
1 பாரிய அணைகட்டுககளைக் கட்டி நீர்தேக்கங்கள் உருவாக்கி அதில் இருந்து மின்சாரம் பெறும்போது ,
A இதற்கு பெரியளவில் காணி சுவிகரிக்கப்படவேண்டும் .இக்காணி சுவிகரிப்பில் பல பொதுமக்கள் தமக்குரிய நிலங்களை இழக்கின்றனர் .
B இந்நிலங்களை வாழிடமாக கொண்ட கானுயிர்கள் பாதிக்கப் படுகின்றன.
C இதனால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் காற்றாலைகளுக்கு இவ்வாறான பாரிய நிலப்பரப்பு தேவையில்லை .
2 டீசல் நிலக்கரி போன்ற , மனிதனுக்கு தேவையான எந்தவொரு மூலப்பொருள்களையும் இவை வேண்டி நிற்பதில்லை .
3 அவாறே சூழலுக்கு தீங்கான எந்தவொரு பொருளையும் இவை விடுவதில்லை .
4 பச்சை வீட்டு விளைவுகளை இவை உருவாக்குவதில்லை .
5 கடல்நீரில் இருந்து நன்நீரை உற்பத்தி செய்யும் போது , நன்நீர் பெற்றபின் செறிவான உப்புநீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுவது போன்று , இங்கு காற்றின் வேகத்தில் பெரிய மாறுபாடு ஏற்படாது .
6 காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி மும்மடியா அதிகரிக்கும் .
7 அமைப்பதற்கான மூலதனத்தை தவிர வேறெந்த மூலத்தனத்தையும் இவை வேண்டி நிற்பதில்லை .
8 பாதிப்புகள் என்று பார்க்கும் போது இவற்றின் சத்தம் பெரிதாக பேசப்படுகிறது .
குடியிருப்புகளில் இருந்து 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் இவை அமைக்கப்படும்போது ,இவற்றின் சத்தம் பெரிதாக கேட்காது .
9 உயரே இருக்கும் மழை மேகங்களை இவை கலைத்து விடும் என்பது அதீத கற்பனையாகும். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பளைப் பிரதேசத்தில் கடந்த வருடங்களில் மழை வீழ்ச்சியில் எந்த மாற்றத்தையும் காணவில்லை .
10 இவற்றின் இறகுகளில் பறவைகள் மோதி இறக்கின்றன என்பது ஏதோ உண்மைதான் .
ஆனால் இது கூட்டமாக வலசை வரும் பறவைகள் வரும் இடங்களிலே இதற்கு சாத்தியப்பாடு அதிகம் .
உள்ளுர் பறவைகள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும் காலப்போக்கில் இவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தம்மை தகவமைத்து கொள்கின்றன .
எனவே எல்லாவற்றுக்கும் குறை கூறிக் கொண்டிருக்காமல் , இக்காற்றாலைகள் அமைப்பத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.