Jump to content

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஒளிச்சுமறைப்பான்...தலைவர் சொன்னது தெரிஞ்சால் சொல்லுங்கோவன்......இதென்ன தொடர்கதையே போகுது??? :lol:

அண்ணா இந்த சம்பவம் பற்றி பல பேருக்குத் தெரியும்.முக்கியமாக அரசியற் துறைப் போராளிகள் பல பேர் இருக்கினம்.யாழில் கூட இது பற்றித் தெரிந்த பலர் இருக்கினம்.நான் ஒன்றும் கற்பனையில் கண்ட படி கதை எழுதவில்லை.நம்பிறதும்,நம்பாததும் உங்கட விருப்பம்.அது பற்றி எனக்கு கவலையில்லை.ஆனால் ஒன்றை மட்டும் மனதில் வைத்திருங்கள் உண்மை ஒரு நாள் வெளியே வரும்

Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா எப்ப வன்னி போனார் என்று தெரியாத கூட்டம் எல்லாம்...கதை சொல்ல ஆரம்பிச்சிட்டுங்கள்

Link to comment
Share on other sites

எங்களைப் பொறுத்தவரை அண்ணன் சீமான் அரசியல் ரீதியாக.. ஈழத்தமிழர்கள் மீது கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனை அவர் காப்பாற்றிக் கொள்ளும் வரை அவரை மதிப்போம். ஊக்குவிப்போம்..! அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் அல்லது றோட்டில போறவர்கள் தீர்மானிக்கவோ.. கருத்துச் சொல்லவோ முடியாது. அது அசிங்கம்..! :icon_idea::)

இதுதான் உண்மை நெடுக்ஸ் எமக்கு உண்மையில் யார் உதவுகிரார்களோ அவர்களே முக்கியம். சீமான் தமிழர்கள் ஒன்றிணைக்கும் ஒரு தமிழ்நாட்டு தமிழர் (தெலுங்கனோ மலையாளியோ இல்லை ) மற்றும் அவர் ஒரு முன்னாள் போராளிய கரம் பிடிக்கும் விருப்பம் இருந்தது ஆனால் அந்த பெண் மாட்டேன் என்று விட்டார். அது அவரது தனிப்பட்ட்ட விருப்பம். இப்ப ஒரு தமிழ் பற்றாளரின்  மகளை மணம்  செய்வது தமிழர்களுக்கு நன்மையே . சுமோ அக்காவிற்கு விளக்கம்  கொடுத்த விரிவுரையாளர் தமிழ் தமிழ் என்பதை பிடிக்காமல் இருப்பவராகவோ அல்லது கிந்திய சிங்கள எடுபிடியாவோ இருப்பார். ஆனால் கண்ணுக்கு முன்னாள் சீமான் செய்யும் அரசியல் வேலைகள் அனைவரும் அறிந்ததே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா இந்த சம்பவம் பற்றி பல பேருக்குத் தெரியும்.முக்கியமாக அரசியற் துறைப் போராளிகள் பல பேர் இருக்கினம்.யாழில் கூட இது பற்றித் தெரிந்த பலர் இருக்கினம்.நான் ஒன்றும் கற்பனையில் கண்ட படி கதை எழுதவில்லை.நம்பிறதும்,நம்பாததும் உங்கட விருப்பம்.அது பற்றி எனக்கு கவலையில்லை.ஆனால் ஒன்றை மட்டும் மனதில் வைத்திருங்கள் உண்மை ஒரு நாள் வெளியே வரும்

ஒன்றை தெரியுமென்றால் உடனே சொல்ல வேண்டியதுதானே? இது எமது இனம் போராட்டம் சம்பந்தப்பட்டவிடயம். என்றைக்காவது தெரியவரும் என்று சொல்வதற்கு இது சினிமா அல்ல.

Link to comment
Share on other sites

சீமானை எல்லாம் யார் கணக்கில் எடுத்தது ? யாரையும் கட்டி எப்படியும் வாழட்டும்.

ஈழஉணர்வை ஏன் இழுக்கின்றார் என்பது தான் தெரியவில்லை .அப்ப கனிமொழி இன்னும் தோதாக இருக்கும் .

சீமானை கணக்கில் எடுப்பவர்கள் எடுப்பார்கள்.நீங்கள் பேதி குடித்தது போல் அவதிப்பட தேவை இல்லை. 
 
நானும் ஏதோ  அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவில்லை என ஒரு கணம் யோசிக்க கடைசி வரியில் மாட்டு புறோக்கராக முன்பு இருந்தீர்களோ என சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். :D  :D
 
மேலும் ஈழமக்களுக்கு எதிராக சீமான் எப்போ எங்கு குரல் கொடுத்தார் என கூற முடியுமா??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எல்லாம் யார் கணக்கில் எடுத்தது ? யாரையும் கட்டி எப்படியும் வாழட்டும்.

ஈழஉணர்வை ஏன் இழுக்கின்றார் என்பது தான் தெரியவில்லை .அப்ப கனிமொழி இன்னும் தோதாக இருக்கும் .

அதுசரி ஈழ உணர்விற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

அதுசரி ஈழ உணர்விற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

யாழில் இருக்கும் பெரும்பான்மையை விட கூட .

(இங்கிருக்கும் பலரைப்போல் ,நடிக்க தெரியாது அதையும் சொல்லிவிடுகின்றேன் )

Link to comment
Share on other sites

யாழில் இருக்கும் பெரும்பான்மையை விட கூட .

(இங்கிருக்கும் பலரைப்போல் ,நடிக்க தெரியாது அதையும் சொல்லிவிடுகின்றேன் )

நீங்கள் காட்டிக்கொடுக்கா விட்டாலும் உங்கள் சகாக்களால் புலிகளும் தமிழர்கள் பட்ட பாடும் போதும்.  கூட்டமைப்புடன் சேர்ந்த உங்கள்  தோழர் என்ன சகுனி வேலை செய்வாரோ என எண்ணாத நாளில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர்... அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதையளக்கின்றார்களே.. ஒழிய, நம்பும் படியான சான்றுகளைத் தரவில்லை.
அப்படி கதையளப்பவர்களும், புலி வருத்தம் பிடிச்ச ஆக்களாய் இருப்பதிலிருந்தே.. அவர்களின் விசமப் பிரச்சாரத்தை அறியக் கூடியதாக உள்ளது.

திருமணம் என்பது, ஆயிரங்காலத்துப் பயிர்.
அதை தீர்மானிக்க சீமானுக்கு மட்டுமே... உரிமை உண்டு.
ஏன்... நீங்கள் கூட, பள்ளிக்காலங்களில் பக்கத்து வீட்டு இளைஞனையோ... சக வகுப்பு மாணவனையோ அல்லது வேலை செய்யும் காலங்களில் ஒருவனையோ காதலித்திருப்பீர்கள். ஒன்றும் சரி வராவிட்டால்... வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டியிருப்பீர்கள்.

உங்கள் முதுகில், ஊத்தையை... வைத்துக் கொண்டு, மற்றவனில் பிழை பிடிப்பது தவறு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணா... இப்ப தானே சிங்களவனின் கோமனத்தை தூக்கி பிடிச்சதுங்கள் எல்லாம் வந்து சொல்லிக் கொண்டு நிக்குதுங்கள் நாங்கள் கடைசி கட்டத்தில் தலைவருடன் முள்ளிவாய்க்காலில் நின்றோம் என்று...அப்படி சொல்லுறதுவலுக்கு முள்ளி வாய்க்கால் எந்த திசையில் இருக்கு என்று கூடத் தெரியாது.... சிங்களவனின் எச்சிலை நக்கி பிழைக்கிறதுவல் எப்பவும் யாரையும் ஏதாவது சொல்லி கேலி செய்யுங்கள்.....அந்த வரிசையில் இப்ப சீமான் அண்ணா.....முந்தி தேசிய தலைவர் தன்ட பிள்ளையளை பெரிய இடத்தில் படிக்க வைச்சு அப்பாவி பிள்ளைகளை போராட அனுப்புறார் என்று எல்லாம் சொன்னாங்கள்....கடைசியில் தன்ட இனத்துக்காக தன்ட குடும்பத்தையே பலி குடுத்தவர்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர்... அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கதையளக்கின்றார்களே.. ஒழிய, நம்பும் படியான சான்றுகளைத் தரவில்லை.

அப்படி கதையளப்பவர்களும், புலி வருத்தம் பிடிச்ச ஆக்களாய் இருப்பதிலிருந்தே.. அவர்களின் விசமப் பிரச்சாரத்தை அறியக் கூடியதாக உள்ளது.

திருமணம் என்பது, ஆயிரங்காலத்துப் பயிர்.

அதை தீர்மானிக்க சீமானுக்கு மட்டுமே... உரிமை உண்டு.

ஏன்... நீங்கள் கூட, பள்ளிக்காலங்களில் பக்கத்து வீட்டு இளைஞனையோ... சக வகுப்பு மாணவனையோ அல்லது வேலை செய்யும் காலங்களில் ஒருவனையோ காதலித்திருப்பீர்கள். ஒன்றும் சரி வராவிட்டால்... வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டியிருப்பீர்கள்.

உங்கள் முதுகில், ஊத்தையை... வைத்துக் கொண்டு, மற்றவனில் பிழை பிடிப்பது தவறு. :)

நன்றி  சிறி

இதற்குள்  நான்   எழுதாதற்கு  காரணமே

சீமானின்  திருமணத்தை   நிர்ணயிக்க  நாம்  யார்???

அவர் ஈழத்தமிழருக்காக  செலவளித்த நேரத்தில்  ஒரு துளிதனும்   செலவளிக்காதவர்கள்

இத்தனை  வயதாகியும் 

இப்பவாவது இந்த முடிவை  எடுத்தாரே என்றுதான்    நல்ல  உள்ளங்கள்  வரவேற்கும்.

அதையே  நானும்  வேண்டுகின்றேன்

விரும்புகின்றேன்

வாழ்க  பல நூறாண்டு

Link to comment
Share on other sites

பிரச்சனை அது அல்ல. சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல எமது பிரச்சனை. 

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் அல்லது றோட்டில போறவர்கள் தீர்மானிக்கவோ.. கருத்துச் சொல்லவோ முடியாது. அது அசிங்கம்..!  :icon_idea:  :)

சீமான் 2016 இல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கபோவதாக சொல்லி இருக்கிறார். அத்துடன் இப்பொழுதே தனது கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார் தமிழ்நாட்டில். தற்பொழுது அவர் ஒரு பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதி. தமிழர்களின் தலைவராக வர முயற்சிக்கும் ஒருவரின் தனிப்பட்டவாழ்வை பற்றி யாரும் கருத்துசொல்லக்கூடாது என்பது அரசியல் புரியாதவர்கள் பேசும் கத்துக்குட்டித்தனப் பேச்சு. தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தலவர் பிரபாகாரனே உதாரணமாய் வாழ்ந்துவிட்டு போனவர்.

அத்துடன் நெடுக்காலபோவான் நீங்கள் இங்கு யாழில் பல இடங்களில் கருணாநிதியின் மூன்று மனைவி மற்றும் பிள்ளைகளின் கேடுகளை எழுதியவர். சீமான் பற்றிய குடும்ப பிரச்சினைகளில் மட்டும் யாருகும் கருத்து சொல்ல உரிமை இல்லை தனிப்பட்ட வாழ்வு என்பது வேடிக்கை. சீமானும் கருணாநிதியும் அரசியலில் இருப்பவர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறி

இதற்குள்  நான்   எழுதாதற்கு  காரணமே

சீமானின்  திருமணத்தை   நிர்ணயிக்க  நாம்  யார்???

அவர் ஈழத்தமிழருக்காக  செலவளித்த நேரத்தில்  ஒரு துளிதனும்   செலவளிக்காதவர்கள்

இத்தனை  வயதாகியும் 

இப்பவாவது இந்த முடிவை  எடுத்தாரே என்றுதான்    நல்ல  உள்ளங்கள்  வரவேற்கும்.

அதையே  நானும்  வேண்டுகின்றேன்

விரும்புகின்றேன்

வாழ்க  பல நூறாண்டு

அவர்களின் புறாமை எரிச்சல் என்ன என்றால்....தேசிய தலைவர நேசிச்சது போல் மக்கள் இவர நேசிக்க தொடங்கிட்டினம்....அதை பொறுத்துக் கொள்ள முடியாத கை கால் ஆக்காத பச்சோந்திகள் இங்கை வந்து வாந்தி எடுக்குதுங்கள்.....100/ 90 விதத்தில் தமிழ் இளைஞர்கள் சீமான் அண்ணாவை ஆதரிக்கிறார்கள்...அதோடு புலத்தில் இருக்கும் முதியோரும் கூட அவர ஆதரிக்கினம்.....!!

Link to comment
Share on other sites

சீமான் யாரைக்கட்டுவதும் விடுவதும் அவர் விருப்பம். ஆனால் அரசியலில் இருக்கும்வரை அவரின் வாழ்வின் ஒவ்வொரு அடியும் ஆராயப்படவேண்டியதே. மக்களுக்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் கவனிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதும்தான் ஜனநாயகத்தின் முக்கியபண்பு. அவர்கள் கைகளில் பதவி வந்ததும் அதை துஸ்பிரயோகம் செய்யாமல் இருப்பதற்கு மக்கள் முன் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும்,அசைவும் பகிரப்பட்டு விமர்சிக்கப்படவேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

கதாநாயகனின் கருத்துடன் என்க்கு உடன்பாடு உள்ளது.. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்..

ஆனால் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. இன்னாரைக் கட்டப்போகிறேன் என இதற்கு முன் சீமான் சொன்னதாக நினைவில்லை.. ஊடகங்கள்தான் சொல்லக் கொண்டன.. குழப்பம் என்று வந்துவிட்டதால் அதனை நீக்க முயற்சிப்பது சீமானுக்கு நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் யாரைக்கட்டுவதும் விடுவதும் அவர் விருப்பம். ஆனால் அரசியலில் இருக்கும்வரை அவரின் வாழ்வின் ஒவ்வொரு அடியும் ஆராயப்படவேண்டியதே. மக்களுக்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் கவனிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதும்தான் ஜனநாயகத்தின் முக்கியபண்பு. அவர்கள் கைகளில் பதவி வந்ததும் அதை துஸ்பிரயோகம் செய்யாமல் இருப்பதற்கு மக்கள் முன் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும்,அசைவும் பகிரப்பட்டு விமர்சிக்கப்படவேண்டியது அவசியம்.

உங்கள்   கருத்தோடு  முரண்பாடு  இல்லை

ஆனால்  இங்கு விமர்சனம்  என்ற வகைக்குள்  என்ன  செய்கிறார்கள்????

புலி  வாந்திக்கு பெயர்  விமர்சனமா????

இவர்கள்  எவராவது சீமானின் நல்லது கெட்டவைகளை  விமர்சிக்கத்தயாரில்லை

அதை  (புலிகளின்  ஆதரவாளர்கள்  செய்வதை) எவ்வாறு புலிகளுக்கு எதிராக  திருப்பலாம்  என்பதே குறி.

அதை  நீங்கள்  புரிந்துள்ளீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 2016 இல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கபோவதாக சொல்லி இருக்கிறார். அத்துடன் இப்பொழுதே தனது கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார் தமிழ்நாட்டில். தற்பொழுது அவர் ஒரு பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதி. தமிழர்களின் தலைவராக வர முயற்சிக்கும் ஒருவரின் தனிப்பட்டவாழ்வை பற்றி யாரும் கருத்துசொல்லக்கூடாது என்பது அரசியல் புரியாதவர்கள் பேசும் கத்துக்குட்டித்தனப் பேச்சு. தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தலவர் பிரபாகாரனே உதாரணமாய் வாழ்ந்துவிட்டு போனவர்.

அத்துடன் நெடுக்காலபோவான் நீங்கள் இங்கு யாழில் பல இடங்களில் கருணாநிதியின் மூன்று மனைவி மற்றும் பிள்ளைகளின் கேடுகளை எழுதியவர். சீமான் பற்றிய குடும்ப பிரச்சினைகளில் மட்டும் யாருகும் கருத்து சொல்ல உரிமை இல்லை தனிப்பட்ட வாழ்வு என்பது வேடிக்கை. சீமானும் கருணாநிதியும் அரசியலில் இருப்பவர்களே. 

அந்த கேவலம் கெட்ட கருணாநிதியோடை சீமான் அண்ணாவை ஒப்பிட்டுக் கதைக்க வேண்டாம்.....சீமான் அண்ணாவே வெளிப்படையாய் சொல்லி விட்டார்...தன்னால் இரண்டு மூன்று ஓட்டு எடுத்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று......ஒரு இனத்தை கூட நின்று அழிச்சுப் போட்டு இண்டைக்கு ஓட்டுக்காக கருணாநிதி தமிழ் ஈழத்தின் தலைவன் என்று போஸ் அடிச்சு ஒட்டி ஓட்டு வேண்டுர நிலமைக்கு வந்து விட்டானே கருணாநிதி அதுவும் முன்னால் முதல் அமைச்சர் ஹா ஹா ஹா ஹா காலம் மாரி போய் விட்டது என்ன....சீமான் அண்ணாவும் ஆட்சியை பிடிக்கிற காலம் வரும்....ஜெயலலிதா சும்மா எல்லாம் தடை போடுரா சீமான் அண்ணாவின் பொது கூட்டத்துக்கு...இதிலை இருந்து என்ன தெரியுது ஜெயவுக்கு குட பயம் வந்து விட்டது அவரின் வளர்சியை பார்த்து....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்தப் பெண் போராளியை மணப்பதாகக் கூறியது பொய் என்கிறார்களோ ??? சீமான் எம் பெண்ணை ஏமாற்றியதையும் மறந்து கூசா தூக்குவோம் வாருங்கள் தமிழர்களே !

உங்களுக்கு அந்தப் பெண்ணை ஏமாற்றிவிட்டார் என்று அந்தப் பெண் உங்களிடம் சொன்னாரா? அந்தப் பெண் தற்போது திருமணமாகி வசிக்கின்றார் என்ற விடயமாவது உங்களுக்குத் தெரியுமா?   உங்களிட்டத்துக்கு ஏன்ன ம** கதை எழுதுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரம் திருமணமாகி இருக்கவில்லை சுமோ அத்தோடு தலைவர் மறுக்க சொன்ன காரணமும் வேறு  

தலைவரோடு நின்று படமெடுக்க வேண்டும் என்டால் இங்கே இருந்து கொண்டு நிறைய காசு உதவி செய்திருக்கலாம்,நிதி சேகரித்து கொடுத்திருக்கலாம்,சினிமா டைரக்டர்,நடிகராக கூட இருக்கலாம் இது கூடத் தெரியாதா பையா :)

 சீமான் தொடர்பாக முன்பு அந்தப் பெண் தொடர்பாக வந்த செய்தியில் சொல்லப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். தெரியாமல் உளறக்கூடாது. அவர் எத்தனையாம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், வடமாட்சியில் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது வரையிலான அனைத்து விடயங்களையும் தரமுடியும். ஆனால் ஏதோ தலைவர் நேரே இவரிடம் சொன்னது போலப் பிதற்றல்.

அப்படித் தலைவரைச் சொன்ன இவர்,அடுத்த பந்தியில் தலைவர் பற்றித் தவறாக எழுதுகின்றார். தலைவரோடு படம் எடுக்க அவர், பணஉதவி, சினிமாக்காரர் என்று தலைவர் தொடர்பாகத் தவறான சிந்தனையை வளர்க்கின்றார். எந்த ஆதாரமும் இன்றிப் பகிரும் இந்த நாய்க்குணத்தைப் படிக்கின்ற யாழ் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்?

எந்த சமயத்தில் தனக்குப் பணம் கொடுத்தவர்கள், நிதி சேர்த்துக் கொடுத்தவர்களோடு நின்று படம் தலைவர் படம் எடுத்தார் என்று விளக்கம் தரமுடியுமா? இதை நிர்வாகம் பெற்றுத் தரவேண்டும். இல்லையெனில் இப்படியான கற்பனைக் கதைகளுக்கு நிர்வாகமும் உடந்தையா என்பது பற்றியும் அறிய விரும்புகின்றேன்

எந்த ஆதாரமும் இன்றி இப்படி அவதுாறாக எழுதும் இவர்களை விட்டு விடுங்கள். ஆனால், இவர்களைப் பற்றி ஏதும் எழுதினால் மட்டும் எச்சரிக்கை, மண்ணங்காட்டி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்ணன் சீமானுடனும் பேசியதில்லை; தலைவருடனும் பேசியதில்லை; முள்ளிவாய்க்கால் எந்தப்பக்கம் என்றே எனக்கு தெரியாது. ஆயுதம் ஏந்தி போராடியதும் இல்லை. தமிழன் என்பது நான் பிறந்த இனம். இது ஒன்றே போதும் என்று நினைக்கின்றேன் இங்கே சிலரிற்கு பதில் எழுதுவதற்கு. 

சீமான் அண்ணா பற்றி எனக்கென்று ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. ஆனால் அதில் பாதிக்குமேல் ஊகங்களில் உருவான கருத்துக்களே. அதனால் நான் அவற்றை இங்கே பதிவிடமுடியாது. அதில் அவரின் மதிப்பை அதிகரிக்கும் ஊகங்களும் உண்டு. 

பொதுவாழ்வில் வந்த பின்னர் ஒருவர் பொது மனிதர் ஆகின்றார் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பது நாகரீகமல்ல. "அவர் அப்படி சொன்னார்... இவர் இப்படி சொன்னார்" என்பது ஆதரங்கள் அல்ல. அந்த ஆதரங்களை காலம் வெளிக்கொண்டுவரும் எனும் போது அந்த காலம் வரை நாம் குற்றச்சாட்டுக்கள் வைப்பதற்கு காத்திருந்துதான் ஆகவேண்டும். 

ஜனநாயகத்தில் பொதுமனிதனை விமர்சிப்பது சரி என்றால் அந்த விமர்சனங்களிற்கு ஆதரம் வேண்டும் என்பதும் ஜனநாயகமே. 

ஒரு வெள்ளை சிவரின் முன் நின்று அதில் இருக்கும் ஒரு சிறிய கறுப்பு புள்ளியை மட்டுமே எமது கண்கள் பார்க்கின்றன... பார்க்கவிரும்புகின்றன. மிகுதி உள்ள வெள்ளை நிறத்தை நாம் கவனிப்பதில்லை. எங்கே குற்றம் பிடிக்கலாம் என்பதில் மல்லுக்கட்டுகின்றோம். 

தமிழ்இன விடுதலையில் தமிழீழ விடுதலையும் தங்கியுள்ளது என்பதை இனியாவது புரிந்து செயல்படலாமே. தமிழீழம் நோக்கிய பயணத்தில் ஒருவன் வேறு பாதையில் செல்கின்றான் என்றவுடன் நாம் அவனை தடுப்பதை விட அவனுக்கு முன்னர் நாம் அங்கே செல்ல முயற்சிக்கலாமே. ஆனால் நாம் அவனை தடுத்துநிறுத்தி நாமும் செல்லாமல் அவனையும் செல்லவிடாமல் செய்கின்றோம். இதனால் யாருக்கு என்ன பயன்? 

பல இயக்கங்கள் இன்றும் தமது பெயரில் "தமீழழம்" என்ற வார்த்தையை வைத்துள்ளன. தமிழீழம் தேவை என்பதால் தானே அப்படி வைத்துள்ளன. ஆனால் அதை நோக்கியா அவர்களின் பயணம் இருக்கின்றது? மாறி மாறி குற்றம் சொல்வதில் காலம் கடத்துகின்றோம். 

தமிழ் இன உணர்வு உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தேவை. அது எம்மிடம் இல்லை என்பதே யதார்த்தம். அதற்கு நாம் உழைக்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு உழைப்பவர்களை "ஆதாரமற்ற" குற்றங்களை கொண்டு தாக்கி நிறுத்தாமல் வழிவிடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

அவர் வன்னியில் இரண்டு வருடங்கள் அண்ணையுடன் இருந்தவர். எம்மிடம் நம்பி அவர் கூறியவற்றை இணையத்தில் கூற முடியாது. ஏனெனில் அவருக்கு அதனால் அச்சுறுத்தல் ஏற்படலாம். எம்மிலும் பார்க்க ஈழ விடுதலையில் ஆசை கொண்ட அபிமானி.

இவ்வளவும் அவரைப்பற்றி  சொல்லியாச்சு

இனி  என்ன  தெரியவேண்டியிருக்கு  அவரை  யாரென்று அறிய???

ஒன்றை  மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு கொள்கை  அரசியல்

பார்வை

இருக்கும்

எமது இலக்கு  நோக்கி  இவர் களை  எவ்வாறு பயன்படுத்தணும்  என்பது எமது இலக்காக  இருக்கணுமே தவிர

தமிழக  அரசியலோ

தமிழக தலைமைகள் பற்றியோ நாம் உட்புகக்கூடாது

அது இதுவரை எம்மை   எங்கு கொண்டு போய்  விட்டது என்பது வரலாற்றுப்படிப்பினை.....

 சீமான் தொடர்பாக முன்பு அந்தப் பெண் தொடர்பாக வந்த செய்தியில் சொல்லப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். தெரியாமல் உளறக்கூடாது. அவர் எத்தனையாம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், வடமாட்சியில் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது வரையிலான அனைத்து விடயங்களையும் தரமுடியும். ஆனால் ஏதோ தலைவர் நேரே இவரிடம் சொன்னது போலப் பிதற்றல்.

அப்படித் தலைவரைச் சொன்ன இவர்,அடுத்த பந்தியில் தலைவர் பற்றித் தவறாக எழுதுகின்றார். தலைவரோடு படம் எடுக்க அவர், பணஉதவி, சினிமாக்காரர் என்று தலைவர் தொடர்பாகத் தவறான சிந்தனையை வளர்க்கின்றார். எந்த ஆதாரமும் இன்றிப் பகிரும் இந்த நாய்க்குணத்தைப் படிக்கின்ற யாழ் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்?

எந்த சமயத்தில் தனக்குப் பணம் கொடுத்தவர்கள், நிதி சேர்த்துக் கொடுத்தவர்களோடு நின்று படம் தலைவர் படம் எடுத்தார் என்று விளக்கம் தரமுடியுமா? இதை நிர்வாகம் பெற்றுத் தரவேண்டும். இல்லையெனில் இப்படியான கற்பனைக் கதைகளுக்கு நிர்வாகமும் உடந்தையா என்பது பற்றியும் அறிய விரும்புகின்றேன்

எந்த ஆதாரமும் இன்றி இப்படி அவதுாறாக எழுதும் இவர்களை விட்டு விடுங்கள். ஆனால், இவர்களைப் பற்றி ஏதும் எழுதினால் மட்டும் எச்சரிக்கை, மண்ணங்காட்டி....

எந்த ஆதாரமும் இன்றி இப்படி அவதுாறாக எழுதும் இவர்களை விட்டு விடுங்கள். ஆனால், இவர்களைப் பற்றி ஏதும் எழுதினால் மட்டும் எச்சரிக்கை, மண்ணங்காட்டி....

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அத்துடன் நெடுக்காலபோவான் நீங்கள் இங்கு யாழில் பல இடங்களில் கருணாநிதியின் மூன்று மனைவி மற்றும் பிள்ளைகளின் கேடுகளை எழுதியவர். சீமான் பற்றிய குடும்ப பிரச்சினைகளில் மட்டும் யாருகும் கருத்து சொல்ல உரிமை இல்லை தனிப்பட்ட வாழ்வு என்பது வேடிக்கை. சீமானும் கருணாநிதியும் அரசியலில் இருப்பவர்களே. 

கருணாநிதி சட்டத்துக்குப் புறம்பான முறையில் 3 மனைவியரைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டித் தான் நாங்கள் தவறான உதாரணமான அவர் எப்படி மக்களுக்கு பிரதிநிதியாக முடியும் என்று வினவினோம். கருணாநிதி காதலிச்சு கைவிட்டதுகள் பற்றி நாங்கள் பேசவில்லையே. அவர் தான் அதனையும் சொல்லி இருந்தார். கட்டினது 3 போக.. காதலிச்சு கைவிட்டதுகள் வேற..!

சீமான்.. ஒன்றும் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே. காதலிப்பதும்.. நிராகரிப்பதும்.. நிராகரிக்கப்படுவதும் தனிப்பட்ட பிரச்சனைகள். திருமணம் முடிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் சட்டத்தை மீறி ஒருவர் திருமணம் செய்தால் அவர் பேசு பொருள் ஆகத்தான் செய்வார். அந்த வகையிலேயே கருணாநிதி அடங்குகிறார்..! அதற்கும் சீமானுக்கும் என்ன தொடர்பு..??! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தில் பொதுமனிதனை விமர்சிப்பது சரி என்றால் அந்த விமர்சனங்களிற்கு ஆதரம் வேண்டும் என்பதும் ஜனநாயகமே. 

ஒரு வெள்ளை சிவரின் முன் நின்று அதில் இருக்கும் ஒரு சிறிய கறுப்பு புள்ளியை மட்டுமே எமது கண்கள் பார்க்கின்றன... பார்க்கவிரும்புகின்றன. மிகுதி உள்ள வெள்ளை நிறத்தை நாம் கவனிப்பதில்லை. எங்கே குற்றம் பிடிக்கலாம் என்பதில் மல்லுக்கட்டுகின்றோம். 

தமிழ் இன உணர்வு உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தேவை. அது எம்மிடம் இல்லை என்பதே யதார்த்தம். அதற்கு நாம் உழைக்காவிட்டாலும் பரவாயில்லை.

அதற்கு உழைப்பவர்களை "ஆதாரமற்ற" குற்றங்களை கொண்டு தாக்கி நிறுத்தாமல் வழிவிடுவோம். 

நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

எந்த ஆதாரமும் இன்றி இப்படி அவதுாறாக எழுதும் இவர்களை விட்டு விடுங்கள். ஆனால், இவர்களைப் பற்றி ஏதும் எழுதினால் மட்டும் எச்சரிக்கை, மண்ணங்காட்டி....

நன்றி

ஜனநாயகத்திலை இது எல்லாம் சகஜம் அப்பா...???   :D 

கோலம் எண்டா புள்ளி வைக்கிறதும்  கோவம் எண்டா அள்ளி வைக்கிறதும் சகஜம் தானே...???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.