• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் கூடவுள்ளது. இதன்படி எதிர்வரும் 23 , 24ஆம் திகதிகளில் தமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது   http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-அனைத்து-பா/  
    • ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது   எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும். குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். எவ்வாறாயினும் 1 , 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கும் போது சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதாவது பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபர்களுக்கு 1ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்குவது அர்த்தமற்றதே. அதாவது யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2ஆம் , 3ஆம் விருப்பு வாக்குகளை எண்ணும் போது அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும். இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டு மீண்டும் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2ஆவது விருப்பை வழங்கலாம். இது பிரயோசமானதாக அமையும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவித்தல் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலில்-எப்பட/
    • வந்தால் சுடுவேன் என்கிறாரோ.....! எப்படிப் பயணிகள் வருவார்கள்...?? 
    • ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை- சுமந்திரன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.இதனையடுத்து குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்தாலும் அவரை சந்திக்க தாங்கள் தயாராகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது   http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதித்-தேர்தலில்-யார/
    • அமெரிக்காவில் இந்த இலக்கத்தில் கட்டடமும் உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/666_Fifth_Avenue தவிர உலக அரசியல்வாதிகள் பலரும் இந்த இலக்கத்தை ஏற்றுக்கொண்டு தான் அரசியலுக்கு வருபவர்கள்.