Jump to content

'வெலிவேரியாவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி?: மனோ கணேசன்


Recommended Posts

'வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

'இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி' என்ற  கருத்துகளை கேட்கும்போது என் உடம்பு புல்லரித்து மயிர்கூச்செறிகின்றது. என் நெஞ்சம் கனக்கின்றது.  என் கண்களில் கண்ணீர் தளும்புகின்றது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

'2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே புலிகள் சண்டையிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

பெருந்தொகை போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய தொடங்கிவிட்டார்கள். அந்த இயக்கம் செயலிழந்துவிட்டது. புலிகளில் சரணடைய வந்தவர்கள் சரணடைந்தார்கள். ஏனையோர் போரிட்டு மடிந்தார்கள்.

ஆனால் அப்போது முள்ளிவாய்க்காலில் சிக்கிக்கொண்டு பெருந்தொகை அப்பாவி தமிழ் மக்கள்  மரண ஓலம் எழுப்பி கொண்டிருந்தார்கள். அப்பாவி தமிழ் மக்கள் சிக்கி தவிப்பதை அறிந்தும் அறியாதது போல், புலிகளை கொல்கின்றோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ்  மக்கள் மீது பல்குழல் எறிகணை இராணுவ தாக்குதல் கண்மூடித்தனமாக  நடத்தப்பட்டது.

அதைதான் உலகம் நிறுத்த சொன்னது. புலிகளை பாதுகாக்க சொல்லவில்லை. அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டாம் என உலக சமூகத்துடன் சேர்ந்து நாமும் சொன்னோம். அதை சொன்ன எங்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றும், புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் இங்கே முத்திரை குத்தி பயமுறுத்தினார்கள்.

இப்போது  'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி' கேள்வி எழுப்பும் ஜேவிபிகூட அன்று கைதட்டி யுத்தத்தை ஆதரித்துவிட்டு எங்களை பார்த்து புலிப்பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டியது.

இன்று பிரதான எதிர்கட்சியான ஐதேக, வெலிவேரிய ரதுபஸ்கல இராணுவ துப்பாக்கி சூட்டை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்று சொல்லுகின்றது. இதைத்தான் நாங்களும் அன்று வன்னி யுத்தம் பற்றி சொன்னோம்.  வன்னியில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நிறுத்த சொன்னோம். அங்கு நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் சொன்னோம்.

இப்போதும் நாம் சொல்கின்றோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. அதேபோல் வெலிவேரிய ரதுபஸ்கல படுகொலைகள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை. முள்ளிவாய்க்காலிலும்,

ரதுபஸ்கலவிலும் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆணையிட்டது யார் என கேட்கின்றோம்.

அன்று ஒன்றும், இன்று ஒன்றும் பேசுபவர்கள்தான் வெட்கப்பட, பயப்பட வேண்டும். நாங்கள் அன்று ஒன்றும், இன்று வேறொன்றையும் பேசவில்லை. நான் ஒருபோதும் அப்படி மாற்றி, மாற்றி  பேச மாட்டேன். கொல்லப்பட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவான நியாயத்தை தான் நான் கேட்கின்றேன். தமிழ், சிங்கள, முஸ்லிம் அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஒரே சமநீதியைதான் நாம் இங்கே ஒருசேர கேட்கின்றோம்.

துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டது யார்? இராணுவ தளபதியா? பாதுகாப்பு செயலாளரா? ஜனாதிபதியா? இந்த கேள்விக்கு இந்த நாட்டு மக்களுக்கு பதில் கூற முடியாவிட்டால் எல்லாம் முடிந்து போய் விடாது.

இதோ, அதோ என்று இந்த மாத இறுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றார். அவருக்கு நீங்கள் இவற்றுக்கான பதில்களை கூறியே ஆக வேண்டும். பதில் கூறினாலும், கூறாவிட்டாலும் இந்த விடயங்கள் இந்த செப்டெம்பரிலும், அடுத்த மார்ச்சிலும் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஒலிக்கத்தான் போகின்றன.

இராணுவத்தை ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீது எத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்ககூடும் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு, கண்களை திறந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்; நான் இங்கே கூறுகின்றேன்.

போர் முடிவுக்கு வந்து விட்ட  இன்று, தமிழ் மாகாணங்களில் இருந்து இராணுவத்தை ஏன் அகற்ற சொல்கின்றோம் என்பதையும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை சிவில் திணைக்களமான பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படையுங்கள் என நாம் ஏன் சொல்கின்றோம் என்பதையும், இனியாவது சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்'  என்றார்.

 

http://goldtamil.com/?p=5233

Link to comment
Share on other sites

நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்துப்படி கடந்த நான்கு வருடத்திலும் பயங்கரவாதிகள் திட்டமிட்டு செயலாற்றி இருப்பது வெலவேரியாவில் மட்டுமே. எனவே யாழ்ப்பாணம் மட்டக்களப்பால் இராணுவத்தை விலக்கி வெலவேரியா போன்ற கோதிப்புள்ள இடங்களில்  போட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இராணுவம் சிங்கள பகுதிகளுக்கு வராவிடால் கோத்தா தற்கொலைக்கு அடுக்கு பண்ணுகிறார் என்பதுதான் வெலவேரியாவில் ஏறபட்ட கலம்பகத்தின் பொருள்.

 

போதுமான இராணுவம் கையிருப்பில் இருந்திருந்தால் இராணுவம் சமாதான முறைகளால் கலவரத்தை அடக்கியிருக்கும். இராணுவ பற்றக்குறையால்த்தான் கலம்பகம் வெடித்த போது அவர்களை அடக்க தடி அடி போன்றவையை பாவிக்காமல் சூடு நிகழ்த்தி இராணுவம் தன்னைதான் பாதுகாத்தது. 


இராணுவம் தன்னைத்தான் பாதுகாக்க சூடு நிகழ்த்த வேண்டியிருந்ததாகத்தான் நிமால் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காகப்பேசும்  தங்களுக்கு  நன்றிகள் ஐயா

கவனமாக  இருங்கள்

நீங்கள் பேசுவது பேயுடன்

இனவாதப்பேயுடன்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீக்குச்சி உரசித் தொப்பி எரிந்திட்டுது , பின் தடியும் எரியுது , இப்ப கையோட விரலில சுடுகுது!

Link to comment
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகள் என்றவர்கள் துணிவிருந்தால் மகிந்த அரச பயங்கரவாதிகள் என கூறட்டும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிவேரியாவில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் 7 பேர். 40 பேர் காயப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 20 பேரைக் காணவில்லை. இது ஒரு இனவழிப்பு (genocide) என்று சிங்களவர்களே எழுதுகிறார்கள். அப்பாவிகளைத்தாக்கியதால் இது இனவழிப்பாம். அப்படியானால் இன்றுவரை லட்சக்கணக்கான தமிழர்களைக் கொல்கிறீர்களே?? அது எப்படி உங்களால் அழைக்கப்படுகிறது ?

 

இந்தட் தாக்குதலை முன்னின்று நடத்திய பிரிகேடியர் வன்னி யுத்தத்தில் சவீந்திர சில்வாவின் கீழ் இயங்கியவர். சரணடைந்த போராளிகளையும் பொதுமக்களளையும் கொன்றது இவர் தலமையிலான இராணுவக் குழுதான் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று எழுதியுள்ளது.

 

சிங்களவர்கள் இப்போது துள்ளுவார்கள் ஆனால் பின்னர் அடங்கிப்போய்விடுவார்கள். ஏனென்றால் 1971 இலும், 1988 - 1990 காலப்பகுதியிலும் சிங்கள இனத்திலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டபோதும் கூட அவர்கள்: அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்த மனநிலைதான் இவ்வளவுகால தமிழின அழிப்பிற்கும் அவர்கள் எதிர்ப்புக் காட்டத் தவறியது. அவர்கள் ஒருபோதுமே உணரப்போவதில்லை.

 

http://lankaenews.com/English/news.php?id=13794


http://lankaenews.com/English/news.php?id=13790


http://lankaenews.com/English/news.php?id=13792

Link to comment
Share on other sites

விக்கிரமசூரிய (கம்யூனிஸ்ட்) சொல்வது போல் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையை விளங்கப்படுத்த வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. சிங்களவர் தாங்கள் கொல்லப்படும் போதே பேசாமல் இருக்கும் போது தமிழர்கள் மேல் கருணை காட்டுவார்கள் என எதிர்பாக்க முடியாது.

Link to comment
Share on other sites

 இது ஒரு இனவழிப்பு (genocide) என்று சிங்களவர்களே எழுதுகிறார்கள். அப்பாவிகளைத்தாக்கியதால் இது இனவழிப்பாம். அப்படியானால் இன்றுவரை லட்சக்கணக்கான தமிழர்களைக் கொல்கிறீர்களே?? அது எப்படி உங்களால் அழைக்கப்படுகிறது ?

 

இதனால்த்தான் இந்த மொக்கு கூட்டத்தை நான் மொக்கு கூட்டம் என்ற யாழில் பிரபலமான சொல்லை பாவித்து அழைக்காமல் சிங்கள மோடையா என்று அவர்கள் கண்டுபிடித்த சொல்லை பாவித்து அழைப்பது.

 

இனவழிப்பு என்பது ஒரு வரவிலக்கணம் பின்னால் உள்ள சொல்லு. அதை சர்வ தேச சுமூகத்தால் பாவிக்க வைக்க வேண்டுமாயின் நடந்த கொலைகள் அந்த வரவிலக்கணத்திற்க்கு கீழ் வர வேண்டும்.

 

தமிழன் எதை செய்தாலும் அதனில் போட்டி போட வேண்டும் என்பதால் இதையும் போய் இனவழிபென்றோ, போர்க்குற்றமென்றொ அழைக்க முடியாது. இது அரச துருப்பால் ஒரு மாஸ் மேடரக வரும். அதற்கு மேல் போகாது.

Link to comment
Share on other sites

சிங்களவர்கள் இப்போது துள்ளுவார்கள் ஆனால் பின்னர் அடங்கிப்போய்விடுவார்கள். ஏனென்றால் 1971 இலும், 1988 - 1990 காலப்பகுதியிலும் சிங்கள இனத்திலேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டபோதும் கூட அவர்கள்: அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்த மனநிலைதான் இவ்வளவுகால தமிழின அழிப்பிற்கும் அவர்கள் எதிர்ப்புக் காட்டத் தவறியது. அவர்கள் ஒருபோதுமே உணரப்போவதில்லை.

 

 

உண்மையான வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களும், புலிகளிடம் பறித்து பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, சிங்கள இராணுவத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
ஆனால்... ஒன்று, உங்கள் இனத்தில் ஒட்டுக்குழுக்களை உருவாக விட்டு விடாதீர்கள்.
அதுகள் சரியான கெட்ட சாமான்கள். நாங்கள்... அதைக் கண்கூடாக கண்டோம்... காண்கின்றோம்.

Link to comment
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகள் என்றவர்கள் துணிவிருந்தால் மகிந்த அரச பயங்கரவாதிகள் என கூறட்டும் பார்க்கலாம்.

 

நுணாவிலன் அண்ணா!

இந்த உண்மையைக் கூற யாழ்களத்தின் நிர்வாகமே அனுமதிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்க முடியாது!!!!!!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.