Jump to content

முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2013 ஆவணிமாதம் தொடங்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய பதிவே 7 மாதங்கள் இழுபடுது. அந்தப்பெரிய மேம்பாலப் பணி ஆக 4 வருடங்கள்தானே.... :D:lol:

 

நல்ல 'அவதானிப்பு' பாஞ்சு! :)

 

Link to comment
Share on other sites

டங்கு, 19 கி.மீ தூரத்திற்கு முதலில் சாலை அமைக்க அகலமான இடம் வேண்டுமே?

பூந்தமல்லி - சென்னை சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் அமிஞ்சிக்கரை வரை ஏறத்தாழ 12 கி.மீ தூரத்திற்கு சாலையின் நடுவே, அடியில் 15மீ - 20 மீ ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மேலேயே கனரக வாகனங்கள் செல்லும் இன்னொரு மேம்பாலம் அமைக்க முடியுமா..?

பல நாடுகளில் நகரத்தினுள்ளே செல்லும் நதியின் கரையோரமாகவே பாலங்கள் செல்வதை கவனித்துள்ளேன்.

ஓட்டுநர்கள், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான்! :)

நிலக்கீழ் பாதையும், மேம்பாலமும் ஒரே அச்சில் வரும்போது தற்போதைய போக்குவரத்தை "அதிகம் தொந்தரவு செய்யாத கட்டுமானம்" கடினமாகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலக்கீழ் பாதையும், மேம்பாலமும் ஒரே அச்சில் வரும்போது தற்போதைய போக்குவரத்தை "அதிகம் தொந்தரவு செய்யாத கட்டுமானம்" கடினமாகிவிடும்.

 

அதனால் தான் மாற்று வழியாக மதுரவாயலை ஒட்டிச் செல்லும் கூவம் நதியின் கரையோரமாகவே சென்னை துறைமுகம் வரை இத்திட்டத்தின் வழித்தடம் வடிமைக்கப்பட்டு, அப்போதைய சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளிடமும் (இப்போது தடுக்கும் பொதுப்பணித் துறையிடமும் சேர்த்து) தடையில்லாச் சான்றிதழ் (No objection Certificate) வாங்கியே ஆரம்பிக்கப்பட்டது.

 

ஆனால் அம்மையார்தான் "இது மு.க. காலத்தில் ஆரம்பித்த திட்டமாச்சே..!" என வன்மம் கொண்டு ஒப்புக்காக சப்பை காரணம் காட்டி, முதலில் 'ஓ.கே' சொன்ன அதே பொதுப்பணித் துறை மூலம் முட்டுக்கட்டை போடுகிறார். :)

Link to comment
Share on other sites

அம்மா ரொம்ப bad! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

'சென்னைத் துறைமுகம் - மதுரவாயல்' மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு(NHAI) சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னைத் துறைமுகத்தை சுற்றி முழுவதும் நகர்மயமாகிவிட்டதால் இங்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை ரூ.1,800 கோடி மதிப்பில், செயல்படுத்த முடிவு செய்தது.

இந்தப் பாலம் கூவம் நதிக்கரை வழியாக அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. கூவம் நதியின் எல்லைப் பகுதியில் குடிசை வாழ் மக்கள் வசிக்கின்றனர். இதன் வழியே பாலம் அமைத்தால் அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி விரைவு சாலை திட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கூவம் நதியின் வழியாக மேம்பாலம் செல்வதால் நதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, திட்டத்தை நிறுத்த உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 

இந்த வழக்கின் உண்மையப் பார்க்கும் போது, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலை திட்டம் உடனடி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்வதற்கும் இந்த மேம்பால விரைவு சாலைத் திட்டம் தேவைப்படுகிறது. எனவே மேம்பால விரைவு சாலைத் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமான திட்டம்தான். ஆழ்ந்து யோசித்த பிறகுதான் கூவம் வழியாக இந்தத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

திட்ட சாத்தியக் கூறு அறிக்கையை ஆய்வு செய்த பிறகே, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

பருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது திட்டத்தின் சிக்கல்களாக கருதப்படுகிறது. அதே நேரம், இதற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், இந்த மனுவின் கோரிக்கையை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்கிறோம்.

மேலும், இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த உறுதிமொழியின் படி, 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தவிர, கூவம் நீர் தடையில்லாமல் செல்வதற்கு, கட்டுமானப் பணியின் போது அதில் விழும் கட்டடக் கழிவுகளை, தண்ணீர் செல்வதற்கு தடையில்லாத வகையில் அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Thanks: Dinamani.
 

Link to comment
Share on other sites

கூவம் வாசிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அதிமுக அமைச்சர் அல்லது பெரும்புள்ளி யாராவது இருக்கிறார்களா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவம் வாசிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அதிமுக அமைச்சர் அல்லது பெரும்புள்ளி யாராவது இருக்கிறார்களா? :rolleyes:

 

Exactly! There you are!! :lol:

 

இத்திட்டத்தின் வழித்தடம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியின் பின்புறமாக வந்து "செல்வந்தர்கள் வாழும் பகுதிகள்" வழியாக எழும்பூர் அடைந்து, சிந்தாதிரிப்பேட்டை வழியாக வந்து துறைமுகம் அடைகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் சில செல்வாக்கு மிக்க அரசியல் புள்ளிகளின் பகுதியும் அடங்குகிறது. :lol:

 

Link to comment
Share on other sites

நாங்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறமாக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாயினும் மக்களின் பணம் இவர்களின் அரசியல் போதைக்காக வீணடிக்கப் படக்கூடாது , ஆட்சிகள் மாறினாலும் தொடங்கிய திட்டங்கள்  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல ஜனநாயகத்துக்கு அழகு...!

 

இப்பொ ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. மெட்றோ கூவத்தைக் குட்டிவிட்டு  கூவிக் கொண்டு போகும்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாயினும் மக்களின் பணம் இவர்களின் அரசியல் போதைக்காக வீணடிக்கப் படக்கூடாது , ஆட்சிகள் மாறினாலும் தொடங்கிய திட்டங்கள்  தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் நல்ல ஜனநாயகத்துக்கு அழகு...!

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் தற்போதைய தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மறுபடியும் முட்டுக்கட்டை போடும்விதமாக உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் இடைக்காலத் தடை வாங்க ஒரு குழுவை அனுப்பியுள்ளதாம். :wub: 

 

தமிழ்நாடு உருப்படுமா? :o

 

 

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு?

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்!

 

Tamil_News_large_923211.jpg

 

'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' (Caveat) மனுத் தாக்கல் செய்துள்ளது.

 

ரூ.1,816 கோடியில்:

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப்பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வதாக, தமிழக அரசு தடை விதித்தால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கின. தமிழக அரசு விதித்த தடையை, கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

 

'இந்த விஷயத்தில், மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யக்கூடாது' என, பல்வேறு வர்த்தக அமைப்புகள், பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தின. முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர்.

 

இந்த நிலையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் விஜயகுமார் தலைமையிலான குழு, டில்லியில் முகாமிட்டுள்ளது. இதை அறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மேல்முறையீடு செய்யும் முன், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தடை விதிக்க வாய்ப்புள்ளது:

சென்னை உயர் நீதிமன்றம், பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சித்து வருகிறது. மேல் முறையீட்டை ஏற்று, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மேல் முறையீடு செய்தால், எதிர் தரப்பான எங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளோம். சாலைப்பணியை எந்த சிக்கலும் இன்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் விருப்பம்.

 

இவ்வாறு, அவர் கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=923211

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

இதை முடிப்பதற்கேனும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவேணும்....இந்த மூதேவி திருந்தாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முடிப்பதற்கேனும் ஸ்டாலின் முதலமைச்சராக வரவேணும்....இந்த மூதேவி திருந்தாது...

 

ஸ்டாலின் வந்தால், மெட்ரோ ரயில் திட்டத்தை... கிடப்பில் போடுவார்.

அதற்கிடையில்... மெட்ரோ ரயில் திட்டத்தை, அம்மா துரித கெதியில்... முடித்து விட வேண்டும்.

 

டிஸ்கி: அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, தி.மு.க. தமிழகத்தை ஆள சந்தர்ப்பமே இல்லை. :)

Link to comment
Share on other sites

திமுக கொள்ளை அடிப்பார்கள்...ஆனால் மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை தடுப்பதில்லை என்று எண்ணுகிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளைக்காரனும் வேண்டாம், அடங்காப்பிடாரிகளும் வேண்டாம் விவேகமான தமிழுணர்வுள்ள தலைவரே வேண்டுமென விரும்பினால், மக்கள் மாக்களாவே இருக்க விரும்புகின்றனர்.

 

வே(தே)சியம் என்ற பெயரில் உரிமைகளும், தமிழர் நிலங்களும் பறிபோய்கொண்டிருக்கின்றன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

மதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு..!

 

சென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

 

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

 

 

http://www.dinamani.com/latest_news/2014/03/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-/article2089952.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தகாரர் நேற்றுதான் இரண்டு வருடமாக நின்று போன வேலையை தூசி தட்டி  மறுபடியும் தொடங்கியுள்ளார். இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் அதிகாரிகள், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் இத்திட்டத்தை முடக்கும் விதமாக தடை கோரி மேல்முறையீடு செய்துள்ர்.

 

 

 

Work on elevated corridor resumes...

 

TH03_ELEVATED_EXPR_1775977f.jpg

 

 

Chennai: Work to construct the 19-km-long Chennai Port-Maduravoyal elevated expressway resumed on Monday. The concessionaire, Soma Enterprises Ltd., began clearing the work site at Spurtank Road in Chetpet. This followed a Madras High Court order giving the go-ahead for the project, which had been put on hold by an order of the Public Works Department.

 

National Highways Authority of India (NHAI) chief general manager (technical) and regional officer V. Chinna Reddy said the Rs. 1,815-crore project would take another two years to be completed. “The concessionaire has been instructed to mobilize men and materials and speed up the work. Till the work was stopped in 2012, we were able to complete only 15 per cent of the civil works. The third party consultant to oversee the works has also been asked to ensure that works progress on time,” he said.

 

NHAI sources said it was waiting for the State to hand over the remaining land required for the project and to clear encroachments along the Cooum river. “As per the assurance given to the High Court, we will ensure that there is no hindrance to the water flow in the Cooum during and after construction.”

 

On completion, the expressway will take off from gate 10 of the Chennai Port and end on Chennai-Bangalore Highway (NH 4). It will have two entry ramps on Sivananda Salai and College Road, and two exit ramps on Kamarajar Salai and Spurtank Road.

 

R. Sivanandam, a resident of Nerkundram, expressed a hope that the work would indeed be speeded up. “Even though it might take just four hours for someone to drive down from Bangalore, it takes over an hour and half to reach Parry’s Corner due to traffic. This highway will help reduce congestion on Poonamallee High Road,” he said.

 

http://www.thehindu.com/news/cities/chennai/work-on-elevated-corridor-resumes/article5747376.ece

 

.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Update:

 

மதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு..!

 

சென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

 

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

 

 

http://www.dinamani.com/latest_news/2014/03/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-/article2089952.ece

 

 

 

 

வன்னியன், எனது அறிவுக்கெட்டிய விளக்கம் இது தான்....!

 

உயர் நீதிமன்றம் என்பது High Court போன்றது!

 

உச்ச நீதிமன்றம் என்பது Supreme Court  போன்றது!

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும் ஆகும்! :D

 

அல்லது அதுக்கும் மேல ஏதாவுது இருக்கா? :wub:

 

உங்கட நீதிமன்றங்களின் அமைப்பு, கொஞ்சம் குழப்பகரமாகக் கிடக்கு,  அது தான் கேட்டேன்! :icon_idea:

Link to comment
Share on other sites

உச்சநீதிமன்றம் சொன்னாலும் மாநிலங்கள் அல்வா குடுக்கும் நிலை உள்ளது என நினைக்கிறேன்.. :D உதாரணம் காவிரிப் பிரச்சினை.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்றம் என்பது High Court போன்றது!

 

உச்ச நீதிமன்றம் என்பது Supreme Court  போன்றது!

 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதும், உறுதியானதும் ஆகும்! :D

 

அல்லது அதுக்கும் மேல ஏதாவுது இருக்கா? :wub:

 

உங்கட நீதிமன்றங்களின் அமைப்பு, கொஞ்சம் குழப்பகரமாகக் கிடக்கு,  அது தான் கேட்டேன்! :icon_idea:

 

தில்லி "உச்சநீதிமன்றம்"தான் இறுதியான இடம்.

 

இதிலும் இரண்டுவகைகள் உள்ளன.

ஃபுல் பெஞ்ச் (ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு)

ஆஃப் பெஞ்ச் (மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு)

குவார்டர் கிடையாது...! :lol::)

இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு விதிகளுட்பட்டு மேல்முறையீடு செய்யலாம். வழக்கின் தன்மையை பொறுத்து அவை விசாரணக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேறுபடும். ஆகையால் இம்மாதிரி அரசாங்கம் சார்ந்த பொதுநலன் வழக்குகளை ஜவ்வாக வாய்தா கேட்டே இழுக்கலாம்.

முதலில் ஆஃப் பெஞ்ச் மூலம் விசாரிக்க சில வருடங்கள், சாதகமாக இல்லையெனில் ஃபுல் பெஞ்சிற்கு மேல் முறையீடு செய்து மறுபடியும் வழக்கை இழுக்கலாம். :icon_idea:

 

உச்சநீதிமன்றம் சொன்னாலும் மாநிலங்கள் அல்வா குடுக்கும் நிலை உள்ளது என நினைக்கிறேன்.. :D உதாரணம் காவிரிப் பிரச்சினை.. :unsure:

 

உண்மைதான். அரசாங்கம் ஒன்று நினைத்துவிட்டால் ஜவ்வோ ஜவ்வாக பல பொறிமுறைகளில் நடைமுறைப்படுத்தாமல் இழுக்க முடியும்.  :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசை நம்பி பணத்தை போட்ட அந்த கொன்றாக்ர்டார் தான் பாவம். :unsure:  இப்போ பிழைப்புக்கு என்ன செய்கிறாரோ. :icon_idea:

இன்னும் கொஞ்ச காலத்திலேயே அம்மா மெஸ் மாதிரி அம்மா உயர் நீதி மன்றம் வந்தாலும் வரும். :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update: 07/03/2014.

 

 

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு :lol:

 

 

Tamil_Daily_News_31429690123.jpg

 

 

டெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

 

தமிழக அரசு மனு மீது வரும் மார்ச் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82459

 

 

நல்ல முடிவு...!             .bleuconduire.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update: 07/03/2014.

 

 

சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு :lol:

 

 

 

நல்ல முடிவு...!             .bleuconduire.gif

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே.... எதிர்க்கக் கூடியவர்கள், இந்தியாவில் உள்ளார்கள். வன்னியன்.

அத‌னை... எதிர்த்து, வேறு யாராவ‌து ம‌னு தாக்க‌ல் செய்யாம‌ல் இருந்தால்.... என‌க்கும் ச‌ந்தோச‌மே.smiley_dilemma.gif

 

Link to comment
Share on other sites

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

1339826756380049.jpgCFh_I77_CUk_AAAs_F.jpg

இருண்டு கிடந்த திட்டத்திற்கு வெள்ளிசம் கிட்டியுள்ளதோ?

அன்னை செயலலிதாவின் ஈகோவால் கிட்ப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை மறுபடியும் புத்துயிரூட்டி ஆரம்பிக்கும் விதமாக, மத்திய அரசின் நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,(NHAI) விரிவான திட்ட வரைவு ஆலோசனைக்கான(DPR) ஒப்பத்தப் புள்ளிகளை ஊடங்களில் கோரியுள்ளது..

http://www.nhai.org/Doc/22sep17/Technical Evaluation RESULT.pdf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 மாதங்களுக்குள் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு (2 Tier) பறக்கும் சாலை பணிகளை முடிக்க முடிவு..! 😍

இந்தப்பக்கம் சிறீபெரும்புதூர் அருகே பானூர், பரந்தூர் என இரு இடங்களில் ஏதாவது ஒன்றில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய அரசு உதேசித்துள்ளது.

அதேசமயம் முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை மேம்பாலம் வழியாக போக்குவரத்தை ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மறுபடியும் இப்பொழுது புத்துயிர் பெறுவது நல்ல விசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

30 மாதங்களுக்குள் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு (2 Tier) பறக்கும் சாலை பணிகளை முடிக்க முடிவு..! 😍

இந்தப்பக்கம் சிறீபெரும்புதூர் அருகே பானூர், பரந்தூர் என இரு இடங்களில் ஏதாவது ஒன்றில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய அரசு உதேசித்துள்ளது.

அதேசமயம் முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை மேம்பாலம் வழியாக போக்குவரத்தை ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மறுபடியும் இப்பொழுது புத்துயிர் பெறுவது நல்ல விசயம்.

இரண்டாவது விமான நிலையம் அமைத்து  என்ன பலன் காணப்போகிறார்கள் ? ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தால் ஆயிரக்கணக்கான டன்non perishable air cargo  தேங்கியபடியே இருக்கு காரணம் இரவு 7க்கு மேல் எந்த சுங்க அதிகாரியும் வேலை செய்ய தயாராகவில்லை . ஆனால் நான்கு ஐந்து பிளைட் இறங்கும் திருவானந்த புரம் போன்ற விமான நிலையங்களில் 24 மணிநேர சுங்க அதிகாரிகள் கார்கோ கிளியர் பண்ணுகிறார்கள் மதுரையில் விளையும் விளை பொருள்கள் மலையாளியிடமே போகவேண்டி உள்ளது .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.