• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
chinnavan

ஐந்து ஐந்து ஐந்து 555 விமர்சனம்

Recommended Posts

தலைவா ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடிகளால் தீடீர் மாப்பிள்ளையாகி சனிக்கிழமை ரிலீஸானது 555.  தலைவாவிற்க்காக காத்திருந்த நிறைய தியேட்டர்கள் 555 யை ரிலீஸ் செய்திருக்கின்றன.

கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது. இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை என உன்னால் உணர முடிகிறது என அவருக்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், பரத்தின் அண்ணனான சந்தானமும் சொல்ல.. ஆனால் அதை பரத் நம்பமுடியாமல் தவிக்கிறார்.

ஏதோ உருத்தலில் மீண்டும் அந்தப் பெண் இருந்த இடத்திற்கு சென்று பார்க்க, அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கிறது, கூடவே ஒரு கூட்டமும் இவரைத் துரத்துகிறது.  அப்புறம், சண்டை போடுகிறார், சந்தானம் சாகிறார், போலிஸ் துரத்துகிறது, வில்லன் வருகிறார். அந்தக் காதலி உண்மையிலேயே இறந்தாளா இல்லையா, இதன் பின்னணியில் யார், என்ன காரணம் என நமக்கு சொல்லி படம் முடிகிறது. கதையில் சில விசயங்களை சொன்னால் பார்க்க போகும் கொஞ்ச நஞ்ச பேருக்கும் சுவாரஸ்யம் குறையலாம் என்பதால் அதை நீங்கள் வெள்ளித்திரையில் காண்க.

ஒரு படத்திற்கு விளம்பரம் எப்படி செய்வார்கள்? அந்தப் படத்தின் கதையில் அல்லது மேக்கிங்கில் இருக்கும் ஏதாவது சுவாரஸ்யமான  ஒன்றை எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தின் மொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். அப்பவே நாம உசாராயிருக்னும்.  ட்ரைலரை நம்பி மோசம் போயிட்டோம்.

உண்மையில் அட்டகாசமான ட்ரைலர் தான்.  அந்த 1 நிமிடக் காட்சிகள் மட்டும் தான் மொத்தப் படத்திலேயே தேறியிருக்கிறது என்பது தான் பரிதாபம்.

கஜினி மாதிரி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிருப்பாங்க போல.. ஆனால பாவம் இயக்குநர் சசியும் கஜினியைப் போலவே ஷார்ட்டைம் மெமரி லாஸில் கதைக்கு தேவையான பல விசயங்களை மறந்துவிட்டு பரத்தின் 6 பேக்கும், 4 ட்விஸ்டும் போதும் என நினைத்து இறங்கிவிட்டார்.

நாயகன் எதைச் சொன்னாலும் அப்பாவியாய் நம்பும் கேணையான ஹீரோயின் காரக்டர் இங்கும். சில காட்சிகள் ரசிக்கும் படியாய் இருந்தாலும் அதையே இழு இழுவென இழுத்தடித்து கடுப்பேத்துகிறார்கள். அதுவும் அந்த காரில் போகும் போது கிப்டை பிரிக்கும் காட்சி.. உனக்கு பவர் இருக்கு ட்ரை பண்ணு இதுக்குள்ள என்ன இருக்குன்னு கண்டுபுடி.. அப்பத்தான் நம்ம காதல் ஜெயிக்கும்னு ஹீரோயின் கெஞ்சி பரிதவிக்கிறார்.. ஏன்னா பரத்துக்கு அந்த பவர் இருக்கான்னு செக் பண்ணுறதுக்காக அந்தப் பொண்ணோட ஆண்டி போனில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். போன்தானம்மா உன் காதல் அவ்வளவு முக்கியம்னா கண்ஜாடை காட்டிட்டு கிப்ட பிரிச்சுக் காமிச்சுட வேண்டியதுதானே?  வழக்கமான நாயகிகளை போலவே இவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல.. அப்புறம் க்ளைமாக்ஸ்லயும் விடாம உனக்கு பவர் இருக்கு நான் நம்புறேன் என அவர் பிணாத்தும் போது.. அந்த பவர் ஸ்டாராச்சம் வந்து காப்பாத்த மாட்டாராண்ணு நம்மள பீல் பண்ண வச்சுடுறாங்க பாஸ்.

இதெல்லாம் கூட நாம சகிச்சுக்கலாம் பாஸ்.. கடைசில வில்லன்னு ஒருத்தர கொண்டுவந்து அவருக்கு ஒரு ப்ளாஸ்பேக்குன்னு ஒண்ண ஓப்பன் பண்றாங்க பாருங்க.. அங்க தான் பாஸ் ஆக்சுவலா கதையை குழிதோண்டி புதைக்குறாங்க. இவரு சின்ன வயசுல குஜராத்ல ஒரு பொண்ண லவ் பண்ணாராம்.. அந்த கிராமத்து மக்கள் அதை ஏத்துக்காம பிரிச்சு, கௌரவக்கொலைன்னு ரெண்டு பேரையும் கொல்ல பாக்குறாங்க.. அந்தப் பொண்ணு இறந்துடுறா.. இவர தப்பிச்சு சென்னைக்கு வந்து இம்மாம்பெரிய பிஸினெஸ் மேக்னட் ஆகிடுறாரு.. வயசும் ஆயிடுச்சு.. ஒரு இஸ்கூலுக்கு ஏதோ நல்ல காரியம் பண்ண போக அந்த இஸ்கூலுல படிக்குற நம்ம கதாநாயகி எழுந்து ஏன் சார் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கதைக்கு அவசியமான அந்த கேள்வியைக் கேட்க, இந்த பொண்ணைப் பார்த்து நம்ம வில்லன் சாருக்கு பயங்கர ஷாக்கு.. ஏன்னா இந்த பொண்ணு இவரு லவ் பண்ணி செத்துப்போன அந்தப் பொண்ணு மாதிரியே.. உடனே இவளை எப்படியாவது அடைவேன் என அந்த ஸ்கூல் கொடிக்கம்பத்துக்கு கீழேயே கையைத் தூக்கி உறுதிமொழி எடுத்துக்குட்டு, அவளோட அப்பா, அம்மாவ ஒரே ஷாட்ல கொண்ணுட்டு, இந்த ஹீரோயினை தத்து எடுத்து, ஒரு அழகான ஆண்டியை செலக்ட் பண்ணி (அவளுக்கு என்ன வேலைன்னா இந்த பொண்ணை பொருப்பா, யாரையும் லவ்வு கிவ்வு பண்ணிடாம வளக்குறதாம்) காலேஜ் முடிச்சதும் நம்ம வில்லன் சார் ஒரு நல்ல நாள் பார்த்து கல்யாணம் பண்ணிப்பாராம். பூ படம் எடுத்த சசி இப்படி வண்டி வண்டியா பூ சுத்த, நமக்கு மூச்சு முட்ட.. .. என்ன எழவுடா இதுன்னு நாம டென்சனாக உடனே நம்ம மூடை புரிஞ்சுகிட்டு ‘எழவு’ண்ணு ஒரு பாட்டை மியூசிக் டைரக்டர் போட்டு நம்மள இம்ப்ரஸ் பண்றாரு பாருங்க…ப்ப்ப்பா.

இதுக்கு மேலயும் இந்த காதலுக்கு என்ன ஆச்சுண்ணு அவசியம் தெரிஞ்சுக்கணும்னா படத்தை தூக்கறதுக்குள்ள ஓடிப்போய் பாத்து உங்க கலைத்தாகத்தை தீர்த்துக்கங்க பாஸ்.

பரத்திற்கு 6 பேக்கோ 8 பேக்கோ ரெடி பண்ணுவதே குறிக்கோளாய் இருந்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது.. இதுவரை நாம் பார்த்த சினிமா சிக்ஸ் பேக் உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது இவரது உடலில் புடைத்தி நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு நிற்கும் தசைகளும்.

கதாநாயகி மிருத்திகா. இன்னொரு கேரள வரவு. சுவாரஸ்யமான முகமும் முகபாவங்களும்.

இன்னொரு நாயகி எரிக்கா பெர்னாண்டஸ். ஒரு பாடல், சில காட்சிகள் அப்புறம் இரண்டாவது நாயகிகளுக்கே உரித்தான இலக்கணத்தில் செத்துப்போகிறார்.

இசை அறிமுகம் சைமன். எழவு என்ற பாடலில் கவனத்தை ஈர்க்கிறார். முதல் மழைக் காலம் பாடல் ரம்மியமாய் இருக்கிறது. இதே போல மற்ற பாடல்களிலும் கவனம் செலுத்தினால் முன்னேறி முன்னணியில் சேரலாம்.

ஒளிப்பதிவாளர் அறிமுகம் சரவணன் அபிமன்பு. படத்தின் ட்ரைலர் உண்மையில் இவரது திறமைக்கான ஷோ ரீல்தான். முதல் ஆக்ஸிடெண்ட் காட்சியிலிருந்து, ஆங்காங்கே தன் தனித்திறமையை பதித்திருக்கிறார்.

இந்தப் படத்தால் பரத்திற்கு மட்டும் லாபம். 6 பேக்கோ 8 பேக்கோ ரெடி பண்ணி, அப்படியே ஹிந்திப் பட சான்சும் வர, சன்னி லியோனியோட தண்ணில விளையாடிகிட்டிருக்கார்.

நடிகர் பரத் சிக்ஸ் பேக்குக்காக எடுத்துருக்கும் அசாதாரண முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது இயக்குநர் சசி கதை, திரைக்கதையில் செலுத்தியிருந்தால் ஒரு வேளை நல்ல ஆக்சன் படமாய் வந்திருக்கலாம்!http://goldtamil.com/?p=6173

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது। யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை। யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்। கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை।  உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்। மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக  சேவைக்குள் உள்ளேற்கப்படடார்।  வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்। அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்। அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல்போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் । இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தான்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது,  இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்। அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும்  , அறிந்தவருமாக இருந்தபடியால்  அதட்கு சம்மதிக்கவில்லை ।  இல்லாவிடடால்  மண்டையில்  போட்டிருப்பார்கள் । இத்துடன்  விடவில்லை। அவரது சாரதிக்கு  பணம்  கொடுத்து  புலிகள்மூலமாக  குண்டுகளை  அவரது வாகனத்தில்  கொழும்புக்கு  அனுப்பி  சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன்  தன்னை  காப்பாற்றியதாக  கூறினார்  । அவர் இரண்டு மாதம்  போலீஸ்   காவலில்  இருக்க  நேரிட்ட்து । அதன்  பின்னர் இது   வரைக்கும்  யாழ்ப்பாணத்தவரே  அந்த கதிரையில்  அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில்  எத்தனையோ  தகுதியானவர்கள்  இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்।  இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே।  மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ  எவன் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।  
  • மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல - திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள். மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் தமது நாடு உலகின் குப்பைத் தொட்டியல்ல என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின்  2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஆனாலும் மலேசியாவும் ஏனைய நாடுகளும் இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மேலும் 110 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளார். http://www.vanakkamlondon.com/மலேசியா-உலகின்-குப்பைத்/ டிஸ்கி : ஹிந்திய ஆட்சியாளர்கள் எல்லாம் யியோ பீயின் இடம் .. ☺️ .. ஒரு றம்ளர் தேத்தண்ணி வாங்கி குடிக்குக .. என்று சொல்ல வந்தன். 😄
  • யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்! யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்.பிரதேச செயலாளர்  சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்க்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அணுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலர் பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கும். இது சம்மந்தமாக ஆராய்ந்த தொடர்ந்து அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்பட்ட பொவதில்லலை என்றும் தெரிவித்திருந்தார். https://jaffnazone.com/news/15518
  • சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் முயன்றவேளை, திமிறிய சேவல், அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 55 வயது வெங்கடேஷ்வர ராவோ மீது பாய்ந்ததில், அச்சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவரின் அடிவயிற்றைக் கிழித்திருக்கிறது. காயம் காரணமாக ஏற்பட்ட ரத்தப் பெருக்கினை அடுத்து அவர் அந்தவிடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். அதிகளவான மக்களைக் கவரும் இந்த சண்டைகளில் பெருமளவு பணம் ஈடுபடுத்தப்படுவதுடன், சூதும் இடம்பெற்று வருகிறது. https://www.9news.com.au/world/india-man-killed-by-blade-wielding-rooster-during-cockfight/a7e2baa9-aa3b-443a-ac03-c7860eb7b4cb