Jump to content

தேசியத்தலைவர் பற்றி ....! - 02


Recommended Posts

தேசியத்தலைவர் பற்றி - 02
 
2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்தச் சமரை வென்றேயாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. ஏனெனில்  ஓயாத அலைகளில் கிடைத்த தொடர் வெற்றிகள், யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதில் ஆட்டம் கண்டது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியில் இராணுவத்தினர் மேற்கொண்ட 'கிணிகிர' இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தமுடியாமல் கணிசமான இழப்புடன் பின்வாங்கலைச் செய்து முகமாலையில் நிலையமைத்தது ஒரு பின்னடைவாகவே இருந்தது.
 
மறுவளம், இந்த இழப்புக்கள் எல்லாம் இராணுவத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அந்த உற்சாகத்தில் ஆனையிறவைப் பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளைச்  செய்து கொண்டிருந்தது சிங்கள இராணுவம்.
 
தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அக்களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டளைத் தளபதிகள்,  தளபதிகள், களமுனைப் பொறுப்பாளர்கள்  அனைவரையும் தலைவர் கலந்துரையாடலுக்காக அழைத்திருந்தார்.  அங்கு கலந்துரையாடலுக்காக ஒன்று சேர்ந்திருந்த வேளையில், மோட்டர்  ஒருங்கிணைப்புத் தொடர்பான விடயங்களை கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது தலைவர் வந்தார். தலைவர் வரும்போது பானு அண்ணை மோட்டர் ஒருங்கிணைப்பைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தவர்.
 
கலந்துரையாடல் நடைபெற்ற பகுதிக்கு வந்த தலைவர் பானு அண்ணையிடம் என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்க, மோட்டர் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக கதைக்கின்றோம் அண்ணை என்றார். அதற்குத் தலைவர்  ‘அப்ப என்ன இன்னும் மோட்டர் ஓருங்கிணைச்சு முடியவில்லையா?’ எனக் கேட்டு விட்டு அமர்ந்தார்.
 
இயல்பிற்கு மீறிய இறுக்கம் தலைவரின் முகத்தில் காணப்பட்டது.  கலந்துரையாடலை ஆரம்பித்த தலைவர் அண்மையகாலப் பின்னடைவையும் அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி இனி எவ்வாறு சண்டையை எதிர்கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி விளக்கினார். அதில் முக்கியமாக குறிப்பிட்ட விடயத்தின் சராம்சமானது
 
‘‘இந்த சண்டை மிகவும் கடினமானதாக இருக்கும் எல்லோரும் இறுக்கமான யுத்தத்திற்கு தயாராகவேண்டும். எல்லாத் தளபதிகளும் தங்கள் பகுதி லைனுக்குக் கிட்ட நிலையமைத்து இருக்கவேண்டும். அந்தந்தப்பகுதிச் சண்டைக்கு அந்தப்பகுதிக்குப் பொறுப்பானவர் தான் பதில் சொல்லவேண்டும். தங்களக்குக் கீழ் உள்ள பொறுப்பாளர் திறமையாக செயற்படமாட்டார்கள் என்று நினைத்தால் அவர்களை மாற்றுங்கள். அதேவேளை 35975_1313622543_news.jpgஉங்களிற்கு கீழ் உள்ளவர்கள் சரியாக செயற்படாமல் விட்டால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. வழமையாக கட்டளைத்தளபதிகளுடன் தான் சண்டையைப்பற்றிக் கதைத்துவிடுவன். இந்தமுறை நான் உங்களையும் கூப்பிட்டதற்குக் காரணம் உங்களிடம் இந்த பொறுப்பை விடுவதற்காதத்தான். ஒரு பகுதியில் சண்டை நடைபெறும் போது அதில் அப்பகுதிக்கான போராளிகளும் வீரச்சாவடைந்து தளபதியும் வீரச்சாவடைந்து இடங்களும் விடுபட்டால் நான் அதை ஏற்றுக் கொள்ளுவன். இடங்களும் விடுபட்டு போராளிகளையும் வீரச்சடையவிட்டு பொறுப்பாளர்கள் தப்பி வந்து காரணம் சொல்லக்கூடாது. பொறுப்பாளர்கள் நேரடியாக நின்று சண்டையை வழிநடாத்த வேண்டும்”  அத்துடன் தொடர்ந்து சொன்னார்.
 
‘‘நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமட்டன். ஒரு உண்மையான போராளி என்பவன் தனது கொள்கையைில வென்றிருக்க வேண்டும் அல்லது அதுக்காக வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அல்லாதுவிடின் அங்கவீனப்பட்டிருக்க வேண்டும் அதில்லாமல் நாட்டிற்கு நான் முழுமையாகச் செய்திட்டன் என்டு சொல்லமாட்டன்” என்று கூறினார் தலைவர். அப்போது தான் விளங்கியது எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டு வந்தார் என்பது.
 
இந்தக் கலந்துரையாடல் உளவியல்  ரீதியாகவும் மனோதிட ரீதியாகவும் ஒரு மிகையான உந்துதலைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். போராளிகளிற்கு  நம்பிக்கையைக் கொடுத்து மனோதிடத்தை அதிகரிக்கவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கலந்துரையாடலைக் கையாண்டார்.
 
ஏனெனில் தொடர் சண்டைகளால் ஏற்பட்ட காயம், வீரச்சாவு காரணமாக பல அனுபவம் மிக்க போராளிகள் யுத்தமுனையின் பங்களார்களாக இருக்கமுடியவில்லை. எனவே அனுபவம் குறைந்த போராளிகளை வைத்து பலமான சிங்களத்திடம் விடுதலைப்புலிகளின் இயலுமையை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் இருந்தது.
 
ஒவ்வொருவரும் லைனை விட்டு அரக்காமல் சண்டையிடவேண்டும் லைனுக்கு நெருக்கமாக களமுனைப் பொறுப்பாளர்களும் நிற்க வேண்டும் என்பது அங்கு லைனில் நிற்கும் போராளிகளுக்கும் ஒரு மேலதிக தெம்பைக் கொடுக்கும் என உறுதிபட நம்பினார். மற்றும் தன்னுடைய இச்செய்தி அடிமட்டப் போராளிகளிற்கும் அவர்களுடைய நேரடிப்பொறுப்பாளர்கள் ஊடாகச் செல்வது போராளிகளின் மனோதிடத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதைக் கணித்திருந்தார் என்றே கூறவேண்டும்.
 
அத்துடன் முன்னணி நிலையில் இருந்த தளபதி பால்ராஜ் தலைமையில் இரண்டாவது நிலையை அமைத்து அதில் ஒரு சண்டை முனையை ஏற்படுத்தியிருந்தார். இராணுவம் பின்னுக்கு நகர்ந்தாலும் தளபதி பால்ராஜ் அவர்களின் அணி அதற்கான முறியடிப்பைச் செய்யும் என்ற நம்பிக்கையை முன்னரங்கில் இருந்தவர்களிற்கு ஏற்படுத்தியிருந்தார்.
 
அவ்வாறே தீச்சுவாலைச்சண்டை நடந்தேறியது. அதிகாலை ஐந்து மணிக்கு கிளாலி மற்றும் கண்டற்பக்கத்தால் உடைத்துக் கொண்டு முன்னேறி அணிகளை உள்ளடக்கி பொக்ஸ் அமைத்தது இராணுவம். உடைத்தபகுதி நிலைகளைத்தவிர எவரும் நிலைகளை விட்டு பின்நகரவில்லை. காவரலண்களிற்குப்பின் இருந்த களமுனைத்தளபதிகளின் கட்டளை மையங்களில் கூட தாக்குதல்கள் நடைபெற்றன. யாரும் தமது இடங்களை விட்டு அகலவில்லை.
 
இதில் தளபதிகளான சோதியா படையணி சிறப்புத்தளபதி துர்க்கா,சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி கோபித், சாள்ஸ் அன்ரனி சிறப்புத்தளபதி வீரமணி, கிளாலிப்பகுதித்தளபதி போன்றவர்களின் கட்டளை இடங்களிலும் இராணுவம் தாக்குதலை  மேற்கொண்டான். அப்படியான சந்தர்ப்பத்திலும் தங்களது கட்டளைகளையும் வழங்கிக் கொண்டு, தமதிடத்தில் நடந்த சண்டையையும் எதிர் கொண்டனர். குறிப்பாக துர்க்கா அக்காவின் கட்டளையிடத்தை இராணுவம் சுற்றி வளைத்தான். செல்விழுந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டவேளை, தான் நின்ற இடத்தைச்சுற்றி செல் அடிக்குமாறு கூறிவிட்டு அவர்களும் தங்கள் நிலைகளில் இருந்து தாக்குதலை மேற்கொள்ள, இராணுவம் தடுமாறத்தொடங்கினான். இவ்வாறு ஒருவரும் நகராமல் சண்டையைச் செய்தனர்.
 
மூன்று நாள் கடுமையான யுத்தம். காவலரண்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட உலர் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு தீவிரமாகப் போரிட்டு தீச்சுவாலை நடவடிக்கையை வெற்றி கொண்டன புலியணிகள்.
 
தலைவரின் தந்திரோபாயமும் தன்நம்பிக்கையான வழிநடத்தலினதும், இறுக்கமான சூழலைக்கையாளும் திட்டமிடற்பண்பினதும் விளைவாக அமைந்ததுதான் தீச்சுவாலை வெற்றி. 
 
''சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்'' - தலைவர் பிரபாகரன்.
 
Link to comment
Share on other sites

தொடருங்கள் வாணன்! உங்கள் பதிவுகள் மூலம் பல விடயங்களை அறியக் கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்'' - தலைவர் பிரபாகரன்.

 

புலிகளின்  வெற்றிகளுக்கு அவர்களின் இந்த நிலையெடுப்பே காரணம்

மற்றதெல்லாம்  வெகுதூரத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை, பகிர்விற்கு நன்றி ,தொடர்ந்து எழுதுங்கள் வாணன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.