Jump to content

விண்டோஸ் 8.1 இயங்குதளம் ஒக்டோபரில் அறிமுகமாகின்றது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

windows-8.1-310513-seithy-150.jpg

உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் முழு மூச்சாக செயற்பட்டு வந்த மைக்ரோசொப்ட் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா பதிப்பினை வெளியிட்டிருந்தது.

தற்போது இதன் முழுமையான பதிப்பினை மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7BN0W7CONpw

http://www.seithy.com/breifNews.php?newsID=90165&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites

உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

http://www.seithy.com/breifNews.php?newsID=90165&category=CommonNews&language=tamil

விண்டோஸ் 8 மாதிரி ஒரு மோசமான இயங்குதளத்தை நான் பார்த்ததேயில்லை. பாவனைக்கு மிகவும் அந்நியமாய் கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி ஒரு உணர்வு.

பயனாளிகள் யாரும் விரும்பவில்லையாதலால் தான் விண்டோஸ் 8 இயங்குதளத்தில், இந்த அவசர பூச்சு வேலைகள்..

இதுவும் 'விஸ்டா' (Vista) மாதிரி வெற்றியடையடையாத, பாவனையாளர்களால் ஒதுக்கப்பட்ட இயங்குதளமாகும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விண்டோஸ் 8 மாதிரி ஒரு மோசமான இயங்குதளத்தை நான் பார்த்ததேயில்லை. பாவனைக்கு மிகவும் அந்நியமாய் கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி ஒரு உணர்வு.

பயனாளிகள் யாரும் விரும்பவில்லையாதலால் தான் விண்டோஸ் 8 இயங்குதளத்தில், இந்த அவசர பூச்சு வேலைகள்..

இதுவும் 'விஸ்டா' (Vista) மாதிரி வெற்றியடையடையாத, பாவனையாளர்களால் ஒதுக்கப்பட்ட இயங்குதளமாகும்.

வணக்கம் அண்ணா நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கோ எனக்கு தெரியவில்லை .........நான் விண்டோ 8 ஐ இசையமைப்பு ஒலிப்பதிவுக்கு தற்போது பயன்படுத்துகிறேன் ....உண்மையில் என் முழு ஆன்மாவும் திருப்திப்படும் வகையில் எனக்கு உதவுகிறது .............வேறு விடயங்களை நான் இதில் முயற்சித்துப்பார்க்கவில்லை .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விண்டோஸ் 8 ல் உள்ள பிரச்சனைகளால் விண்டோஸ்  8.1 யை விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு இனாமாக கொடுக்கப்படும் சென்ற செய்தியும் அடிபட்டது.

Link to post
Share on other sites

வணக்கம் அண்ணா நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கோ எனக்கு தெரியவில்லை .........நான் விண்டோ 8 ஐ இசையமைப்பு ஒலிப்பதிவுக்கு தற்போது பயன்படுத்துகிறேன் ....உண்மையில் என் முழு ஆன்மாவும் திருப்திப்படும் வகையில் எனக்கு உதவுகிறது .............வேறு விடயங்களை நான் இதில் முயற்சித்துப்பார்க்கவில்லை .

வணக்கம் தமிழ்சூரியன்.

இந்த இயங்குதளத்தில் பல பிழைகள் (bugs) இருப்பதாக, குறிப்பாக பலவேறு பயன்பாடுகளுக்கு பொருந்தும் தன்மை(compatibility) பற்றி பொறியியல் பயன்பாடுகளை(Engineering Applications) அளிக்கும் நிறுவனங்கள் அறிக்கை தந்துள்ளன. இது சாதாரண பொதுமகன் பாவிக்கும் வகையில் அல்லது இதுவரை பழக்கப்பட்ட பாவனையாளர்களின் கையாளும் முறையில் இவற்றின் முகப்பகுதிகளும்,(User Interface) இயங்குதளத்தின் உள்ளேயும் அமைப்புகள் மாற்றப்பட்டு சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒரு முழுமையான பதிப்பாக வெளியிடப்பவில்லை என்பதே பாவனையாளர்களின் கணிப்பு.

அதனால் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அவசர அவசரமாக திருத்தம் செய்து ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருக்கும் தன் வாடிக்கையாளர்களுக்கு(Genuine license copy) இந்த திருத்திய பதிவை (Windows 8.1) இலவசமாக தரவிறக்கம் செய்யவும் வழி வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மிக்க நன்றி அண்ணா உங்கள் யதார்த்தமான தகவலுக்கு நிச்சயம் இந்த உங்கள் கருத்துக்கள் எனக்கு பயனுள்ளவை .நன்றிகள் அண்ணா .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு Control Panel மூலம்தான் மென்பொருள்களை நிறுவ முடிகிறது. மற்ற start பக்கம் எந்த புதிதையும் நிறுவுவதை எனது இரண்டு கணனிகளும் நிறுத்திவிட்டன.  அதில் ஒரு கணனியில் 7 மென் பொருள் திருதங்களும் மற்றயதில் 15 திருத்தங்களும் இருப்பத்தாக காட்டுகின்றன அந்த திருத்தங்களை நிறுவ விண்டோஸ் 8ல் எந்த வழியும் இல்லை. 

ஒரு கணனியில் 18 திருத்தங்களும், மற்றய கணனியில் 36 திருதங்களும் விண்டோஸ் - 8க்கும் நிறுவப்பட வேண்டும் என்று காட்டுகிறது. இது தானாக நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனோ நடக்க வில்லை. நான் பல தவைகள் பல உதவிகளை பாவித்து முயன்றுவிட்டேன். ஒருதடவை மைக்குறோசொப்ரிடம் உதவி எடுக்க முயன்று அலுத்துப்போய் விட்டுவிட்டேன். இதில் Intel ன் network adopter's Driver திருத்தப்பட வேண்டும். நான் வீட்டில் wireless நிறுத்திவைத்துவிட்டு எல்லோருடைய கணனிகளையும் wired ஆக போட்டிருந்தேன். இந்த ஒரு பிரச்சனையால் wireless திரும்ப activate பண்ண வேண்டியதாயிற்று.  

Control Panel விண்டோஸ் -8 ன் திருத்தங்களை நிறுவுவதை நிற்பாட்டி விட்டதால் 8.1 யையும் மேலாக நிறுவுமா அல்லது புதிதாக நிறுவவேண்டி வரப்போகிறதா தெரியவில்லை. 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡
    • இங்கு முதல் தடுப்பூசி எடுத்து 3-4 கிழமையில் இரண்டாவது ஊசி போடுகிறார்கள். எனது மகள் இரண்டாவது ஊசியும் எடுத்துவிட்டா. கை கொஞ்சம் நோவாக இருந்தது.அவ்வளவு தான்.
    • இணைப்புக்கு நன்றி நிலாமதி. நல்ல நேர்த்தியாக செய்கிறார்கள் போல. சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும்.
    • மீண்டும் சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்தமுறை என்ன சொல்லி இருக்காங்க பாருங்க – வைரலாகும் வீடியோ இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமாகி இருந்தாலும் அவரது பந்துவீச்சு அனைவரும் கவரும் விதத்தில் இருக்கின்றது. தான் பங்கேற்ற போட்டிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பவீழ்த்தி வருகிறார் சிராஜ். ஒருபக்கம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் சிராஜ் மறுபக்கம் ஆஸ்திரேலிய ரசிகர்களின் சர்ச்சையான இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். கடைசியாக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்கள் அவரை குரங்கு, நாய் என இன ரீதியாக கேலி செய்தனர். அப்போது அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகளவு வைரல் ஆனது.   - மேலும் அப்போதே அவர் களத்தில் இருந்த அம்பயர்களிடம் ரசிகர்களின் மோசமான செயல்பாடு குறித்து புகார் அளித்திருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டும் இனிமேல் இந்த விடயம் மீண்டும் தொடராது என்று கூறியது. மேலும் இந்த விடயம் குறித்து ஆஸ்திரேலிய நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது போட்டியிலும் சிராஜ் ரசிகர்களின் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அதன்படி இன்று துவங்கிய 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ்யை நோக்கி ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் முதுகெலும்பில்லாத புழு என்று அவரை கூறி வம்புக்கு இழுத்தனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   ஏற்கனவே ஆஸ்திரேலிய நிர்வாகமும் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி இனி இதுபோன்ற இனவெறி சீண்டலும், வார்த்தை கேலியும் நடைபெற்றால் நாங்கள் விடமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த தொடர் மோசமான செயல் இந்திய ரசிகர்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://crictamil.in/aus-fans-teasing-again-mohammad-siraj/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.