Jump to content

நடிகர் மணிவண்ணன் மனைவி மரணம்.


Recommended Posts

கண்ணீர் அஞ்சலி.

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று நினைக்கின்றேன். தன்னுடன் மனைவியும் நோயுற்று இருந்த காலத்திலும் ஈழ மக்களுக்காக மணிவண்ணன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார் என்பதை நினைக்க அவரது நெஞ்சுரம் புரிகின்றது.

 

குறுகிய கால இடைவெளியில் தகப்பனையும் தாயையும் இழந்து தவிக்கும் மணிவண்ணின் பிள்ளைகளிற்கு எமது ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hope_and_honor_wreath.jpg

 

ஓ....கடவுளே... நல்லவர்களை, ஏன் மீண்ணும்.... மீண்டும் சோதிக்கின்றாய்.

தகப்பன் இறந்து, ஒரு மாதமாகவில்லை... தாயையும் ஏன், உன்னிடம் கூப்பிட்டாய்.

மாமனிதர் மணிவண்ணனின், துணைவியாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

அவரின் பிள்ளைகளின் துக்கத்தில், நானும் பங்கு கொள்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

றை பாஸ்கர் அந்தோணி முத்து பகிர்ந்துள்ளார்.

999726_589686981075295_1284111836_n.jpg
/அய்யா மணியண்ணனின் துணைவியார் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

2003 பெட்னா பேரவை விழாவிற்கு அய்யாவுடன் அவரது துணைவியாரும் அமெரிக்கா வந்திருந்தார்கள். நான் அவர்களைவாசிங்டன் சுற்றி காட்ட வாய்ப்பு கிடைத்தது. அருமையான குடும்பம். அன்பானவர்கள். அவர்களை நான் எடுத்தப் படம் இது./

கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.