• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

எங்கே போகிறோம் நாம் எங்கிருத்து வந்தோம் .!

Recommended Posts

நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த  இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும்  செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை

 

வருமானத்துக்கு  மேலக செலவுகளும் பிழைகளுக்கு  நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி  எங்கள சுயங்களை அவர்களுக்கு  விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால் எமது வாழ்வியல் அழிந்து போகும் ஒழிய வேறில்லை வெள்ளைக்காரன் சுகமா கூப்பிட பெயர் பார்த்து வைப்பது முதல் போடும் உடுப்பு வரை அவர்கள் வாசனை  பத்துமாதம் சுமந்தவள் ஆசையாய் ஒரு பெயர் வைக்க முடியுதா.. பிள்ளைகளை எமது கலாச்சரம் பற்றி புரிதலை அறிதலை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது வெட்கமா படுத்து எமக்கு நாலு சபை சடங்குக்கு கூடி போனால் தமிழ் கதைக்க பஞ்சி படுவது தொடக்கி உறவுகளை நலம் விசாரிப்பது வரை போலியான பாவனை

நான் பார்த்தவரை அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் அந்த பெண்பிள்ளை அழகா தமிழ் கதைக்கும் அதை கவனிக்கும் தாய் உடனம் அருகில் வருவர் வந்தவர் சொல்லும் கதை அவளுக்கு தமிழ் அவளவா வராது என்பதே

அழகா கதைத்த பிள்ளை  நடிக்க தொடங்கும் எதுக்கு இந்த வீண் பில்டப்பு எங்களை நாங்கள் உயர்வா காட்ட எவளவு கேவலமான வேலையும் சிரிச்ச படி செய்வம் பணம் உள்ளவர் பார்த்து உறவு முறை சொல்லி கொடுப்பது மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை பின்னாளில் பெண்பிள்ளைகள் உறவுமுறை தெரியாமல் காதல் வயப்படுவது பின்னர் தெரியவருவதும் வெளிநாடுகளில் அதிகமானதா இருக்கு உள்ளநாட்டு  தொடர்நாடகம் எல்லாம் பார்த்து பழகி அதிகமா மாமனை காதலிக்க தொடங்கி இருக்கு ஒரு தலைமுறை இது ஆரோக்கியம் ஆனதா

பத்து தலைமுறை வாழும் அராபியனும் ஆபிரிக்கணும் இன்னும் தன்னை காத்து மொழி காத்து உடைகாத்து நிக்க நாம் ஒரு தலைமுறை வரவில்லை பெயர் மாறி உடைமாற்றி தலைமுடி முதல்வரை மாறி நிக்கிறம் நாம் எங்கிருத்து வந்தம்

 

செல்லமாக கேட்டது எல்லாம் வாங்கிகொடுத்து கஸ்ரம் துன்பம் காட்டாது பிள்ளை வளர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து அடிமாடாய் தேய்த்து சிறுக சேர்த்த பணத்தில் கலியாணம் பண்ணி வைத்தால் கட்டி இரண்டு கிழமையில் வீடில் வந்து நிக்கு டிவைஸ் வேணும் என்று கரணம் சொல்வதுக்கு இல்லை கேட்பது வாங்கிதாறார் இல்லை அவரின் குடுப்பத்துக்கு அடிகடி காசு அனுப்புறார் என்பதே அதிக காரணமா இருக்கு அதுக்கு பெற்றோரும் ஒத்து ஊதுவது தான் கொடுமை

 

நாம் எங்கிருத்து வந்தோம் எங்கள் ஆணி வேர் என்ன எங்கள் கிளைகளின் பரப்பு விழுதுகளின் வலு இவைகளை சொல்லி வளர்க்காது ஒரு கற்பனை கலந்த கனவு உலகில் வாழ்த்து காட்டி நடித்து காட்டி எம் வேசங்களை சரியாய் போடுவரை நாடகம் தொடரும் ஒருநாள் எங்கள் முகமூடி கிழியும்போது எங்கோ போய் புதைக்க போகிறோம் எங்கள் நிஜ முகங்களை .

 

வேட்காவும்....விஸ்கியும் ..வியூட்டி பாலரும்..தான் எனது உலகம் வாழ்வியல் என என்று நாம் இறங்கினமோ அன்றே எம்மை எம்முள் தொலைத்து விட்டு பக்கத்தில் தேடிக்கிடைக்க போவது இல்லை சம்பளம் 30 யுரோ முகம் பேசியர் செய்ய 35 யுரோ ஐந்து யுரோ வட்டிக்கி  வாங்கி மேக்கப் போடும் சமூகம் ஆரோக்கியமானது இல்லை வெளிநடப்பை பார்க்கும் போது ஆதங்கம் தாங்க முடியவில்லை யாரிடம் சொல்வது அதுதான் இங்கின கொட்டி தீர்த்தம் மக்ளே.

 

இந்த மாதிரி சமூகத்தில் தான் வாழ்கிறோம் நாம் படம் கதை சொல்லும் .

1186041_4658373757160_289471402_n.jpg

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு அருமையான கருப் பொருளைத் தொட்டிருக்கின்றீர்கள், அஞ்சரன்!

 

தமிழன், தற்பெருமை பேசுவதிலேயே, மற்றவர்கள் தன்னைப் புகழ்வதிலேயே,கண்ணாக இருப்பவன்! எப்பவுமே, ஒரு விதமான போலி வாழ்க்கை தான் அவனுடையது!

 

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, மழையில் நனைந்த தோகை மயிலுக்குத் தனது மேலாடையைக் கொடுத்தான் பாரி என்று ஒரு பக்கம்!

 

என்னைக் கேட்டால், பாரி, முல்லையைப் பேசாமல் விட்டிருந்தால், அது தானாக, இன்னொரு கொம்பைத் தேடிப்பிடித்திருக்கும்! மயிலும், மழையில் நனைந்திருந்தால், அதன் தோகையாவது, கொஞ்சம் கழுவுப்பட்டிருக்கும்!

 

அதே போலத்தான், ஒரு சிலம்புக்காக, மதுரையையே எரித்தாளாம் கண்ணகி! பசுக்கன்றைக் கொன்றதுக்காக, தன் ஒரே மகனையே, தேர்க்காலில் போட்டுக் கொன்றானாம், ஒரு மன்னன்!

 

எமது இந்தக் குணங்களைப் பயன்படுத்தியே, எல்லோரும் எமதினத்தின் மீது, குதிரையோடுகின்றார்கள்! இல்லாவிட்டால், கடாரம் வரை கப்பலோடிப்போனவன், அங்கு தனது மொழியை விட்டிருக்கலாம்! தனது இனத்தை அங்கு பரப்பியிருக்கலாம்! அதைச் செய்யவில்லை! செய்ததெல்லாம், அங்கிருந்து பொன்னும் மணியும் கொண்டுவந்து, தங்கள் மனைவியருக்கு, 'நிலாக்காட்டியது' தான்!

 

இன்றும் அதையே தான் செய்கிறான்! கோயில்களைக் கட்டி வட இந்தியர்களுக்குத் 'தானம்' செய்கின்றான்! கறையான் கட்டிய வீட்டில் 'பாம்பு' வந்திருக்கிற மாதிரி, இன்னும் ஒரு பத்து வருசத்துக்குள் தெரியும், 'கடாரத்தில்' விட்ட அதே பிழையை, இன்று புலத்திலும் விடுகிறான், என்று!

Share this post


Link to post
Share on other sites

சொன்னா நம்பமாட்டிங்கள் இந்த வருடம் மாசி மாதத்தில் இருந்து இன்று வரை என்னிடம் செல்பேசி இல்லை.

கைப்பேசி பாவிக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை. லான்ட் லைனும், ஈ-மெயிலும் தான் தொடர்பாடல். :(

 

நல்லதொரு கருவைக் கதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். :)

 

 

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு சிந்தனை அஞ்சரன் அண்ணா.. அதை அழகாக தந்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..

Share this post


Link to post
Share on other sites

நல்ல விடயத்தை எழுதியிருக்கிறீர்கள் அஞ்சரண். ஆனால் இதில எழுதி என்ன பயன். ஒவ்வொருவரும் இவற்றைத் தானாக உணர்ந்தால்த்தானே திருந்த முடியும்??

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன்,
இது கதையில்லை அன்றாட தமிழ் மனங்களின் ஒருபதியின் யதார்த்தம். நீங்கள் எழுதியுள்ள விலையுயர்ந்த விலாசங்கள் இந்தத் தலைமுறைப் பிள்ளைகளின் மனசில் அறவேயில்லாது போகிற நிலமைதான் வளருகிறது. பம்மாத்தும் போலியும் காட்டியே அற்பன்கள் அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கிறது. இது நிரந்தரமில்லை.

எல்லாத் திமிருக்கும் காலம் ஒருநாள் தன் தீர்ப்பை எழுதும். அன்று தெருவில் நின்று அழுவதும் இதே மனங்களாகவே இருக்கும்.
பகிர்வுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites